மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம் -5)


எஸ்.எம்.எம் பஷீர்

புலிகளின் அரசியல் முலாம்பூசப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தியல்களை உள்வாங்கிக்கொண்டு ஹக்கீமின் தலைமையிலான பிளவுபட்ட சிறீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது அரசியலை வடகிழக்கில் தக்கவைக்கமுடியும் என்ற அடிப்படையில்தான் செயற்பட்டு வந்திருக்கின்றது. அத்தகைய அரசியல் கருத்தியல் மாற்றங்கள், செயற்பாடுகள் குறிப்பாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரான அஷரப் அவர்களின் மறைவிற்குப் பின்பே அதிலும் குறிப்பாக சேகுதாவுத் பஸீர், ரவூப் ஹக்கீம் ஆகியோரின் தலைமைத்துவங்கள் உறுதியானபின்பே இந்நிலை கூர்மையடைந்தது.
நோர்வேயின் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான காலகட்டத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நோர்வேயின் அனுசரணையாளர்களால் அணுகப்பட்டனர். அந்நிலையில் ஹக்கீம் எவ்வாறு செயற்பட்டார் என்பது குறித்த செய்திகள் கொழும்பிலுள்ள கிழக்கைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி ஒருவர் ஹக்கீமுடன் நடத்திய விவாதங்கள் குறித்தும் என்னிடம் விபரித்தார். அவ்வாறான சம்பவங்கள் நோர்வேயின் வலைக்குள் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு வீழ்த்தப்பட்டது என்பது பின்னர் தெளிவாக விளங்கியது. அதன்பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் சமாதான செயலகம் மேலும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலமைப்பு சட்ட ஆலோசகரான எம்..எச்.எம் சல்மான் போன்றோரை வேர்கோப் பவுண்டேசன் எனும் இன்னுமொரு வெளிநாட்டு சமாதானச் செயற்பாட்டு நிறுவனம் மூலமாக (Berghof Foundation) சுவிஸ்லாந்திற்கு அழைத்து முஸ்லிம்களுக்கான அரசியல் பிரச்சினைகளை ஆராய்வதனூடாக மொத்த தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டு வடகிழக்கு பிரச்சினைக்கு ஒரு இணக்கப்பாட்டினூடாக தீர்வுகாணும் முயற்சியின் அடிப்படையில் புலம்பெயர் புலி உறுப்பினர்ளும்; கலந்துகொள்ளும் நிகழ்சியினூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம் சமாதானச் செயலகம் நோர்வேயின் நிதி உதவியுடன் அரசியல் நிலைப்பாட்டில் எதிரெதிராக செயற்படுகின்ற சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி என்பனவற்றின் பிரதிநிதிகளை மட்டும் உள்ளடக்கியதாகவும் மறுபுறம் ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகளை உள்ளடக்காததாகவும் “புரிந்துணர்வின்” அடிப்படையில் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். இவர்களுடைய செயற்பாடு குறுகிய அரசியல் நலன்களையும் மறுபுறம் வடக்கு முஸ்லிம்ளிpன் அக்கறைகளை உள்ளடக்காததாகவும் செயற்பட்டது என்ற குற்றச்சாட்டின்மூலம் வடமாகாணத்திற்கான தனியான சமாதானச் செயலகம் ஒன்றினை நிறுவும் நிலைக்கு வடமாகாண முஸ்லிம்கள் சார்பாக செயற்படும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடபகுதி உறுப்பினரான அமைச்சர் றிச்சாட் பதியுதீன் வடமாகாண முஸ்லிம்களுக்கென தனியான சமாதானச் செயலகம் ஒன்றினை நிறுவி செயற்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். முஸ்லிம் சமாதானச் செயலகம் வடமாகாண முஸ்லிம்களுக்கென தனியாக உருவாக்கப்பட்டமைக்கான பிரதான காரணம் என்னவெனில் தொடர்ந்தேர்ச்சியாக வடமாகாண முஸ்லிம்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளாலும், அரசாங்கத்தினாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் 2007 ம் ஆண்டில் வடமாகாண புத்தளம் வாழ் அகதிகளுக்கென வீடமைப்புத் திட்டமொன்றினை அமைக்கும் திட்டத்தினை அமைச்சர் றிசாட் பதியுதீன் ஐ.எம்..எப் (I.M.F) என்னும் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்க முன்வந்த போது அதற்கு புத்தளப் பிரதேச அரசியல்வாதிகளும், அப்பிரதேச மக்களும் தடையாக அமைந்தனர். இதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வீடமைப்பு நிர்மாணப்பணிகளை உடனடியாக நிறுத்தியதுடன் அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எழுத்துமூல சம்மதத்தினைப் பெற்றுவருமாறும் அப்போதுதான் நிர்மாணப் பணிகளை தொடரமுடியுமென்றும் ஆலோசனை வழங்கினார். எனினும் அக்கால கட்டத்தில் மஹிந்த அரசில் அமைச்சராக இருந்த ஹக்கீம் புத்தளம் வாக்குகளை தமது கட்சி இழந்தவிடுமென்பதால் அந்த ஆவணத்தில் அவர் கையொப்பமிடவில்லை. இதனைத் தொடர்ந்தே முஸ்லிம் சமாதானச் செயலகம் வடக்கு முஸ்லிம் சமாதானச் செயலகம் என்ற பிளவிற்கு உட்பட்டது. வடகிழக்கு இணைப்பு, பாரம்பரிய பிரதேசக் கோட்பாடுகள் என்பவற்றில் வெளிப்படையான எதிர்ப்பினைக்காட்டிவந்த அமைச்சர் அதாவுல்லா தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பினும் அவர் உள்வாங்கப்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் செயலகத்திலுள்ள எம்.எச்.எம் சல்மானைச் சந்தித்தபொழுது வடகிழக்கு பராம்பரியம் குறித்த கருத்தியல்களையும் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்போல அவர் வலியுறுத்திக் கூறியதையும் இதற்கு எதிரான கருத்தியலை கொண்டிருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் பிரதிநிதியான சட்டத்தரணி அவுல்கலாம் என்பவர் தமது அடிப்படை நலன்களைக்கருதி தாம் சார்ந்திருக்கின்ற கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க முனையவில்லை.
இச்சமாதானச் செயலகத்தின் உள்ளக நிதி தொடர்பான செயற்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தபோது அவைபற்றி நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அஷரப்பின் இறுதி ஹெலிபயணத்தின்போது அவர் சிறீலங்கா.மு.கா என்னும் இனரீதியான அரசியல்கட்சி அவசியமில்லை என அறிவித்து சிறீ. மு.காவிற்கு பிரியாவிடை கூறினார். அவர் புதிதாக ஸ்தாபித்த தேசிய ஐக்கிய முன்னணிமூலம் தனது பதிய அரசியல் பயணத்தினை தொடரும் நிலைப்பாட்டிலும் அதனூடாக 2012 ல் ஒரு முஸ்லிம் இலங்கையின் பிரதமராக வரமுடியுமெனவும் நம்பினார். அஷரப்பினை படுகொலைசெய்த பின்பும் அதனை பகிரங்கமாக கூறமுடியாத சிறீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் என்னிடம் தனிப்பட்டவகையில் நான் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது இது “நாலுகால்களின”; வேலைதான் என அவர் குறிப்பிட்டார். அவரது அரசியல் ஆலோசகரான சேகு தாவூத் பஸீர் தமது தலைவரை சந்திரிகா அரசுதான் படுகொரலை செய்ததென பகிரங்கமாக அரசியல் மேடைகளில் பேசியுள்ளார். இம்மரணம் குறித்து ஆணைக்குழு ஒன்று நியமிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறியபோதும் இதுவரை அதுவிடயம் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினரோ அல்லது அஷரப்பின் பாரியாரோ மேற்கொள்ளவில்லை மறுபுறம் அஷரப் அவர்களைக் கொன்றது புலிகள் தான் என்று வெளிப்படையாக அதாவுல்லா குறிப்பிட்டு வந்துள்ளார். பிரபாகரனை சந்திக்கச்சென்ற விடயத்தில் சேகு தாவூத் பஸீரின் பின்புலச் செயற்பாடுகள் பற்றியும் தான் அதற்கு எதிராக கருத்து முன்வைத்ததையும் பல எதிர்கருத்துக்களில் ஒன்றாக தலைவரைக் கொன்றவர்களை தாம் சந்திக்கமுடியாது என்னும் கருத்தினையும் அவர் முன்வைத்ததாக அறிய முடிகின்றது. ஆனால் ஹக்:கீம் பிரபாகரன் வடகிழக்கு முழவதையும் பெற்றுவிடுவார் தமக்கு ஒன்றும் கிடைக்காது என்னும் அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றினை புலிகளுடன் மேற்கொள்வதற்காக முனைந்தார். இதில் நோர்வேயின் பின்னணிகூட இருந்தது என்பதனை மறப்பதற்கில்லை. ஆனாலும் இந்த ஒப்பந்தம் குறித்து நடைமுறை குறித்த சந்தேகம் எழுப்பப்பட்டபோது பிரபாகரனின் ஆணை வடகிழக்கில் எங்கும் செல்லுமென்று குறிப்பிட்டிருந்தார் ரவூப் ஹக்கீம். அவரது ஆணை எவ்வாறு சென்றது என்பது முஸ்லிம்கள்மீது அவரது ஆணை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.! ஆனால் சிறி.ல.மு.காங்கிரஸின் தலைவரை புலிகள், தமிழ் தேசிய சக்திகள் இலகுவாக கையாளமுடியுமென்பதனை அறிந்து அரசியல்ரீதியாக தமது காய்களை நகர்த்தினர்.
இச்செயற்பாடு நோர்வேயின் அனுசரணையுடன் இலகுவாக்கப்பட்டது. அதற்கான பின்புலக்காரணம் புலிளைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் புலிகளது அவர்களது தயவில்தான்; வாழவேண்டுமென்னும் நிலைப்பாட்டினை அவா கொண்டிருந்தார். ஏனெனில் அவர் என்னிடமே 1990 களின் பிற்பகுதியில் ஹக்கீம் புலிகள் நினைத்தால் கிழக்கிலிருந்து முழு முஸ்லிம்களையும் வடக்கிலிருந்து வெளியேற்றியதுபோல் வெளியேற்றலாம் எனக் குறிப்பிட்டார். தமிழ் தேசியவாதக் கருத்தாக்கிரமிப்புக்கள,; செல்வாக்குகளுக்கு உட்படுத்தப்பட்ட ஹக்கீம் 1989 தேர்தலுக்குப் பின்னர் அஷரப் அவர்கள் கைவிட்ட சிங்களப் பேரினவாதக் கருத்தியலுக்கு மீண்டும் உயிர்கொடுத்தர். பேரினவாத சிங்கள எதிர்ப்புக் கருத்தியல்களிலும், தமிழ் தேசியவாதிய சக்திகளுடன் நெருக்கமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். தெற்கிலே உள்ள மூன்றில் இரண்டுபங்கு முஸ்லிம்களின் அரசியல், அபிலாசைகளை பொருட்படுத்தாது தனது கிழக்கு அரசியல் தளத்தினை மட்டும் சிறீ.மு.கா ஊடாக உறுதி செய்யும் செயற்பாட்டில் தீர்க்கமாக செயற்பட்டு வந்துள்ளார். அதுகுறித்து அவரது கருத்து வெளிப்பாடுகளில் ”சிங்களப் பேரினவாதத்திற்கு அடிமையாகி தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை காட்டிக்கொடுக்கவோ, மளினப்படுத்தவோ மு.கா முயலாது” என்றும் தமிழ் தெசியக் கூட்டமைப்புடன் அரசியல் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் பல தடவை மேற்கொண்டுள்ளார். இன்னிலைப்பாட்டிற்கு எதிரான முஸ்லிம் அரசியல் சக்திகளை சமாதான முயற்சிகளுக்கு எதிரான சக்திகளாக அடையாளங்காட்டி வந்திருக்கின்றார். 2004 ம் ஆண்டு பெப்ருவரியில் மு.கா.வின் ஊடக அறிக்கை ஒன்றில் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தை இரண்டாகக் கூறுபோட கோரும் அதாவுல்லா அணியினர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு விரோதமான ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு துணைபோன நு.ஆ கட்சியினர் என்பவருக்கு எதிராக தாம் போட்டியிடுவதாக சிறீ.ல.மு காங்கிரஸ் தலைவா குறிப்பிட்டிருந்தாh. முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிளவுபட்டவர்களையும் துரோகிகளாக தண்டிக்கப்படவேண்டியவாகளாக புலிகளுக்கு நிகரான அரசியல் கருத்தியல்களையும், சொற்பதங்களையும் பிரயோகித்து வந்துள்ளார். புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சர்வதேச அனுசரணையாளர்களான நோர்வேயும், ஏனைய சமாதான தொண்டர் நிறுவனங்களும் வடகிழக்கு இணைந்த பாரம்பரிய பிரதேச அரசியல் அபிலாசைகளுக்கு ஹக்கீம் கைப்பொம்மையாக செயற்பட்டு வந்திருக்கிறார். ( தொடரும் )
May 2009
Thenee, lankamuslims,unmaikal,and mahavali

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...