Tuesday, 12 April 2011

“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பார்ப்புகளும் -ஒரு சிறு அலசல்”

                                                                                                               எஸ்.எம்.எம்.பஷீர்


"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்கக் கொளல்". ( திருக்குறள் )

இன்று இலங்கையில் அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியுடன் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு அக்கூட்டணியை வெற்றியீட்ட தாங்களும் அதிகம் பாடுபட்டதாக கூறும் சுதந்திரக் கட்சியினரரும் அதன் பங்காளிக்கட்சிகளும் சிலர் அமைச்சர் நியமனங்கள் தேசிய பட்டியல் எம் பீ நியமனங்கள் தொடர்பில் தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக அல்லது தாம் புறக்கனிக்கப்பாட்டிருப்பதாக குறை கூறும் செய்திகளும் வந்த வன்னமுள்ளன. என்றாலும் இதில் விமல் வீரவன்ச வழக்கம்போல் மிகவும் வெளிப்படையாக தமது கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரான முசம்மிலுக்கு எம்.பீ பதவி வழங்கப்படவில்லை என்று தமது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். அவரது எதிர்ப்பில் முன்னாள் சமாதானச் செயலாளர் ராஜீவ் விஜயசிங்கவுக்கு எம் பீ பதவி வழங்கப்பட்டதை ஒரு பகிடியாக கூறி விலைக்கு வாங்கப்படாத அரசியல் ரீதியாக அதிகம் தீவிரமாக பங்காற்றிய முசம்மிலுக்கு எம்.பீ பதவி வழங்கப்படாதது முறையற்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.இது ஒருபுறமிருக்க ஐக்கிய தேசிய முன்னனிணின் நீண்டகால கூட்டணி அமைத்திருந்த "அரச பயங்கரவாதத்துக்கும், பேரினவாத சக்திகளுக் கெதிராகவும் " ஆட்சி மாற்றம் வேண்டி சென்ற ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் இரு வாரத்துள் தமது ஜனநாயக கூட்டணிகளின் தலைவர் ரணில் விக்ரமசிங்க்ஹா தமக்கு தேசிய பட்டியலில் இடம் தராததால் அவரை “துரோகத்தனமான சந்தர்ப்பவாதி” (treacherous opportunist) என்று கடுமையாக சாடியுள்ளார். மறுபுறம் கொழும்பில் அதே தேய முன்னணியில் எம்.பீ யாக தெரிவு செய்யப்பட்ட மனோ கணேசனின் சகோதரர் தேசிய முன்னணியிலுள்ள பேரினவாத சக்திகள் தான் தமது சகோதரருக்கு எம் பீ பதவி வழங்க தடையாக இருந்திருகிறார்கள் என்று ஐக்கிய தேசிய முன்னணிக்குள் திடீரென்று பேரினவாதிகள் இருப்பதாக கண்டுபிடித்து தமது அதிருப்ப்தியை வெளியிட்டுள்ளார். இவர்களது கட்சி இன்னும் ஓரிரு தினங்களில் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை அவர்களே சூசகமாக தெரிவித்து விட்டார்கள்.

அரசியல் இடம்பெறும் மாதிரிகளில் ஒரு சிலரை மட்டும் இங்கு நோக்குவது எமது நோக்கமாகும். அந்த வகையில் பிரபல ஊடக விரோத நடவடிக்கைகளில் அரச ஊடகத்துக்கு மட்டுமல்ல தனியார் ஊடகங்களுக்கும் அச்சுறுத்தலாக செயற்பட்ட மேர்வின் தே சில்வா உதவி ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டுப்புறத்தில் குறிப்பிடுவது போல கள்ளனை பிடித்து விதானை வேலை கொடுத்தது போல இவருக்கு கொடுத்து இவரது ஊடக எதிர்ப்பு செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக அனுமதிப்பது போல் தோன்றினாலும் மறுபுறத்தில் மேர்வினுக்கு ஒரு விசப்பரிசோதனையாக இந்நியமனம் இருக்கலாம்.

புதிய அரசாங்கம் அரசியல் அமைப்பு மாற்றங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை சகல தரப்பினருடனும் மேற்கொள்ள இருப்பதாக ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச இன்று ஆல்- ஜசீரா தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருக்கிறார் என்பது இதுவரை காலமும் அதிகம் பேசப்பட்ட பிரேரிக்கப்பட்ட விடயங்கள் அவ்வாறான மாற்றங்களில் உள்ளடக்கப்படுமா என்பதும் ஆவலாக எதிர்பார்க்கப்படும் விடயமாகும். எதிரணியில் இருந்தும் நாட்டுக்கு நன்மை தரும் அரசியல் அமைப்பு மாற்றங்களுக்கு ஆதரவு தெரிவிக்கபோவதாகவே தமிழ் அரசுக்கட்சியும் முஸ்லிம் காங்கிரசும் தெரிவித்திருக்கின்றன. அரசு தரப்பினரதும் எதிர் அணியினதும் இந்த வாக்குறுதி வழமைபோல் அல்லாது உண்மையில் நடைமுறையில் செயட்படுத்தப்படுமா என்பதும் கடந்த கால அனுபவங்களை கொண்டும் எதிரணி என்றால் எதிர்ப்பது தவிர வேறில்லை என்ற அரசியலில் மாற்றங்கள் அது தமது கோரிக்கைக்கு அமைவாக இல்லாதுவிடினும் நாட்டு நலனுக்கு உகந்தது என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்போம்.


இன்னொரு புறத்தில் நாவலப்பிட்டிய வாக்குசாவடிகளில் தேர்தல் மீள நடத்தப்பட்டது குறித்து ஜனாதிபதி ஆத்திரமுற்றிருக்கிறார் என்பதனால் அதற்கு காரணமான ஆளுங்கட்சி போட்டியாளர்கள் குற்றம் புரிந்திருந்தால் அவர்களை "தண்டிக்கவும்" போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் கண்டியில் தேசிய ஐக்கிய முன்னணியில் போட்டியிட்ட காதர் காஜியார் வேறு தமது கட்சியின் மீது ஹக்கீம் முஸ்லிம் இனவாதத்தை பயன்படுத்தியதாகவும் அதனால் தமக்கான தமது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குரிய சிங்கள வாக்குகள் இழ க்கப்பட்டதாகவும் அதனால் மேலதிக பிரதிநிகளை இழந்ததாகவும் ; ஹக்கீம் இன வரம்பு போடும் சூழ்நிலையை கண்டியில் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மனோ கணேசனும் மீள் வாக்களிப்பு நாவலப்பிட்டியாவில் நடைபெற்றபோது ஐக்கிய தேசிய முன்னணி எனும் தேசிய அரசியல் கட்சியில் போட்டியிட்டபோதும் தமிழர் பிரதிநிதித்துவம் மட்டும் பற்றியும் அதை இழந்துவிடக் கூடாதெனவும் தீவிர தமிழ் இனவாத பிரச்சாரங்களை எப்படியும் தான் வென்றுவிட வேண்டும் என்பதற்காக மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசு கருணா எனப்படும் முரளிதரனுக்கு குடிஏற்ற துணை அமைச்சர் பதவியினை வழங்கியுள்ளது யுத்தத்தின் பின்னரான தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் மீள் குடியேற்றம் என்பது கருணா போன்ற முன்னாள் புலி தலைவர்களின் போர் செயற்பாடுகளால் ஏற்பட்ட குடி வெளியேற்றத்திணை மீண்டும் குடியேற்றுவது என்பது குற்றப்பரிகாரமாகவும் அமையலாம் . மறுபுறத்தில் பெரும்பான்மை மக்கள் தங்கள் பிரதேசங்களில் திட்டமிட்டு "குடியேற்றப்படுகிறார்கள்" என்ற முஸ்லிம் காங்கிரசின் தமிழ் கட்சிகளின் குற்றச்சாட்டையும் எதிர்கொள்கின்ற ஒரு சவாலான நிலைமையையும் ஒரு தமிழர் என்ற வகையில் கருணாவுக்கு ஏற்படுத்தும். பல மாற்றங்களை புரியப்போவதாக கூறும் இன்றைய யுத்த பின்னரான அரசு ஒரு புதிய சமூக பொருளாதார அரசியல் சூழலில் ஊழல் மற்றும் அதிகாரதுஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை ஏற்று நாடாளுமன்ற அங்கத்தவர்களையும் தண்டிக்க அவர்களை பதவி நீக்க இறுக்கமான சட்டங்களையும் கொண்டுவருமாயின் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்துக்கு நாட்டை இட்டுச்செல்லமுடியும். அதற்கான பிரேரணைகளை எதிர்கட்சிகளும் முன்வைக்கலாம் அல்லவா?
Thenee, lankamuslims, mahavali

April 2010


No comments:

Post a comment

Biden’s Drone Wars BY BRIAN TERRELL

  On Thursday, April 15, the   New York Times   posted an  article   headed, “How the U.S. Plans to Fight From Afar After Troops Exit Afghan...