ஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று
                  

                                                                      எஸ்.எம்.எம்.பஷீர்

நாட்டைவிட்டு வெளியேறிய பத்திரிகையாளர் அமைப்பு (Exiled Journalist Network) பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தை சேர்ந்த போட்காளிஸ் ஹவுஸ் (Portcullis House) எனும் இடத்தில் அக்டோபர் மாதம் பத்தாம் திகதி 2008ல் இலங்கை பத்திரிகையாளர்கள் தொடர்பில் ' இலங்கையில் தொழில் சார்ந்த மனப்பான்மையும் , சமாதான கால செய்திகூறலும் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பும்" ( Professionalism , peace reporting and journalist safety in Sri Lanka) எனும் தலைப்பிலான கருத்தரங்கில் சில சர்வதேச சுதந்திர ஊடகவியலார்களுக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரபல ஊடகவியலார்கள்;, இலங்கையைச்சேர்ந்த சுதந்திர ஊடக அமைப்பு சார்பாக சுனந்த தேசப்பிரிய ஏ .பீ சீ வானொலி தமிழ் சேவையின் நடராஜா குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் எனக்கும் ஒரு கருத்துரையாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட சுனந்த தேசப்பிரிய அப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு பதினோரு பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட விபரங்களை இங்கு வெளியிட்டார், அத்துடன் அவர் அந்த மண்டபத்தில் அவ்வாறு கொல்லப்பட்ட சிலரின் புகைப்படங்களையும் அன்று பார்வைக்கு விட்டிருந்தார். மேலும் அவரது உரையில் அவர் புலிகள் மேற்கொண்ட ஊடகவியலார்களின் கொலைகள் , ஊடகவியலார்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி பெயர் விபரங்களையோ அல்லது அது குறித்து விபரமாகவோ தகவல்களை இவர் வெளியிடவில்லை. வெறுமனே புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச மற்று ஊடக கட்டுப்பாடுகள் பற்றி பொதுவாக எல்லோரும் அவதானித்த விஷயங்களை மட்டும் தொட்டுக்காட்டினார். ஆனால் இவர் குறிப்பாக கொழும்பில் வைத்து புலிகளால் கொல்லப்பட்ட தொலைகாட்சி ஊடகவியலாளரான ரேலங்கி செல்வராஜா , அவரது கணவர்; மற்றும் தினமுரசு எனும் வாராந்த பத்திரிக்கையின் பிரதம ஆசிரியரான பாலா நடராஜ ஐயர் பற்றி ஏன் குறிப்பிடவில்லை , அதற்கு ஏதேனும் மறைமுக நிகழ்ச்சிநிரல் உண்டா என்று நான் சுனந்த தேசப்பிரியவிடம் கேள்வி எழுப்பியபோது; சுனந்த தேசப்பிரிய அப்போதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர்களின் கொலைகள் பற்றி மட்டுமே அங்கு குறிபபிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்,, மேலும் ஏன் அவ்வாறு இரண்டு வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கு அவரிடம் பதிலில்லை..அரசு மீது குற்றம் சாட்டப்பட்ட பத்திரிக்கையாளர் கொலைகளில் தராக்கி சிவராம் பற்றி சுனந்தா குறிப்பிட்டு அவரது புகைப்படத்தை அம்மண்டபத்தில் காட்சிக்கு வைத்தும்; ரேலங்கி செல்வராஜா அங்கு குறிப்பிடப்படாமைக்கு கூறிய பகிரங்க காரணம் அந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரான பத்திரிக்கையாளர்களின் கொலைகளை , கடத்தல்களை மட்டும் தான் குறிப்பிடுவதாக கூறியமை அவரது பொய் முகத்தை தோலுரித்துக்காட்ட மட்டுமல்ல அவரைப்போன்ற பலர் ஒரு குறிப்பட்ட பகுதியினரான சுதந்திர ஊடகவியலாளர்கள் பற்றி மட்டும் அக்கறை கொண்டிருக்கிறார்கள் , யாரின் நலன்களுக்காக வேலை செய்கிறார்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லி நிற்கிறது. ஏனெனில் ரேலங்கியும் அவரது கணவரும் கொல்லப்பட்டது சிவராமுக்கு பின்னர்தான். ஏனெனில் சிவராம் கொல்லப்பட்டு  (28.04.2005) சுமர்ர் நான்கு மாதத்தின் பின்னரே நாடறிந்த பல்துறை ஊடகவியலாளர் ரேலங்கி செல்வராஜாவும் அவரது கணவரும் (12.08.2005) கொல்லப்பட்டனர். அது மாத்திரமல்ல அதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் பாலநடராஜ ஐயர் கொல்லப்பட்டார் (16.08.2004) . முதலாமவர் புலிகளுக்கெதிரான இதயவீணை நிகழ்ச்சிகளுடனும்; பின்னையவர் புலிகளை கடுமையாக விமர்சித்த ஒரே ஒரு தமிழ் வாராந்த பத்திரிக்கையினுடனும் தொடர்புபட்டவர்கள். அன்று யாருமே மறைந்த , எனக்கு நேரடியாக தெரிந்த பழகிய துரதிஷ்டமான உயிரிழப்பை சந்தித்த சிவராமுக்கு பின்னர் நடந்த புலிகளின் கொலையையும் , இரண்டு வருட கட்டுப்பாட்டு போட்டு அதற்கு முன்னர் நடந்த கொலையையும் , மறைத்து புலிகளின் வெளிப்படையான கொலைகளை மூடி மறைத்தது ஏன் என்பது சர்வதேச சுதந்திர பத்திரிக்கையாளர்களின் அமைப்புக்களின் நேர்மைத்தன்மை குறித்தும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.


அங்கு இலங்கையிலிருந்து வந்து கலந்து கொண்ட நடராஜா குமரகுருபரன் இலங்கையில் கடத்தப்பட்டு ஒரு நாள் முடிவதற்குள் விடுவிக்கப்பட்டவர் என்பதால் அவரது கருத்துக்கள் முக்கியத்துவம் வகித்தன. ஆனால் அவர் தனது உரையில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பற்றி  குறிப்பிடும்போது தமிழ் தேசிய வாத கருத்தியலை ஊடகவியலார் என்பதற்கப்பால் நாசூக்காக வெளிப்படுத்தினார். அதாவது. "பெரும்பான்மை முஸ்லிம்கள் தமிழர்களாயினும் , நிலைமைகள் அங்கு (இலங்கையில்) அவர்களில் சிலர் தங்களது "முஸ்லிம் தேசியவாதம்" ஒன்றை உருவாக்க காரணமாகியது. அதன் ஊடாகவே அதிகமான முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள் தங்களை அடையாளப்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டமை அவரது ஊடகம் தாண்டிய அரசியல் கருத்தியலை முஸ்லிம்கள் தொடர்பில் வெளிப்படுத்தியதாகவே அமைந்தது.


(Although most Muslims are Tamils, the situation made some of them develop their own form of ‘Muslim nationalism’ with which most Muslim journalists identify )
மேலும் பெரும்பான்மை முஸ்லிம் ஊடகவியலாளர்களை முஸ்லிம் தேசியதேசியவாத சிந்தனையாளர்களாக காட்டும் கைங்கரியத்திலும் ஈடுபட்டார் என்றே குறிப்பிடவேண்டும். எனவே அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் நாடு நீங்கிய பத்திரிக்கையாளர் வலையமைப்பின் செயலாளராக செயற்பட்டவர் திருமதி. பேர்ல் தேவநாயகம். இவர் இலங்கையில் சண்டே லீடர் பத்திரிக்கையின் செய்தியாளராக இருந்தபோது ஜூலை 1995ல் ,தான் ஒரு ஆசிரியை என்று கூறி அரசு பத்திரிக்கையாளர்கள்   செல்வதற்கு தடையினை ஏற்படுத்தியபோது, தாண்டிக்குளம் இராணுவ சோதனைச்சாவடியை தாண்டி யாழ்ப்பாணம் செல்லமுற்பட்டு இலங்கை இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டவர். அன்றைய கருத்தரங்கில் புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல , அரச சார்பானவர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வீரகேசரி , தினக்குரல் புலிசார்பாகவும், தமிழ் தேசியம் சார்பாகவும் மாற்று தமிழ் முஸ்லிம் அரசியல் கருத்துக்களுக்கு எதிராக செயற்படுகின்றன என்ற எனது குற்றச்சாட்டை , கூட்டம் முடிந்தப்பின்னர் என்னை சந்தித்த சுடரொளி பிரதம ஆசிரியர் (இவரும் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர்) தான் அப்படியல்ல என்று கூறி , நான் அதனால்தான் அவரது பத்திரிக்கை பற்றி குறிப்பிடவில்லையோ! என்று வியந்தபோது , அப்படியிருக்கலாம் என்று கூறி நான் நகர்ந்து விட்டேன். ஆனால் இவ்வாறு அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட சம்பாஷனை குறித்து முன்னாள் தவிர புலி ஆதரவாளராகவிருந்து, அவர்களுடன் முரண்பட்டு , அவர்களை அப்போது (இப்போதல்ல) எதிர்த்து வந்தவரிடம் கூற நேரிட்டபோது , அவர் சொன்னார். வித்தியாதரன் அவரை அணுகி புலியை எதிர்க்காமல் அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் ஏனெனில் அவர்கள்தான் தமிழர்களின் சரியான பிரதிநிகள் என்று புலிகளுக்கும் அவருக்குமிடையில் ஒரு புரிந்துணர்வை உருவாக்க , தப்பபிப்பிராயம் நீக்க முற்பட்டார் என்று என்னிடம் கூறினார். எனக்கு இச்செய்தி ஒன்றை தெளிவாக சொல்லியது தமிழ் தேசியம் பேசும் ஊடகவியலாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் புலி என்ன எந்தப் பிசாசையும் தங்கள் மனட்சாட்சியை புறநதள்ளிவிட்டு ஆதரிப்பார்கள் என்பது இன்றுவரை எனது அனுபவமாகவிருக்கிறது.

தொடரும் ....
thenee.com.lankamuslims and mahavali (March 2010)

இதற்கு ஏற்றால் போல குருபரனும் அரசியல் தஞ்சம் பெற்று பிரித்தானியாவுக்கு வந்து விட்டார்."பிரித்தானியாவிற்கு வந்த பின்னரே இங்கு வைத்து குருபரன் புகலிடம் கோரி உள்ளார். இவரை இங்கு அழைக்க காரணமானவர்கள் இவருக்கு புகலிடம் பெற முடியும் என்பதற்காக , அதற்கான ஆலோசனை வழங்கி , இவரை அழைத்திருக்க வேண்டும். மேலும் "அரசால்" கடத்தப்பட்டு விடுவிக்கப் பட்டதாக அந்த நிகழ்வில் பகிரங்கமாக சொன்ன வித்தியாதரன் இலங்கை சென்று மிகவும் பலமாக அரசை எதிர்த்ததையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும் , நாடகங்கள் பலவிதம் !! பத்திரிக்கையாளர்கள் பொய் எழுதுவது , பேசுவது மட்டுமல்ல பிரித்தானிய அரசை அல்லது மேற்குலக எஜம்மானிய அரசுகளை நன்கு ஏமாற்றவும் தெரிந்தவர்கள் . பாவம் பொதுமக்கள் இவர்களின் பொய்களை விழுங்கி வாழிடமே இழந்தவர்கள்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...