“ஊடகம் இனியும் பூடகமில்லை!-பகுதி இரண்டு”








                                                                                                       எஸ்.எம்.எம். பஷீர்


2004ம் அண்டு புது வருடப்பிறப்பினையொட்டி அம்மாத முதல் வார இலண்டன் புலிச்சார்பு பத்திரிகை ஒன்றில் முன்னாள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஒலிபரப்பாளராக பணியாற்றி , அங்கிருந்து இங்கிலாந்துக்கு வந்தபின்னர் , இங்கிலாந்தில் இன்றுவரை பீ. பீ சியின் தமிழோசையில் பகுதிநேர அல்லது ஓய்வு நேர மாற்று அறிவிப்பாளராக பணியாற்றும் சட்டத்தரணியும் , சொலிசிடோருமான விமல் சொக்கநாதன் பிரபாகரனை எவ்வாறு வாழ்த்தினார் என்பதை பார்த்தால் புரியும், இவரெல்லாம் எப்படி நடுநிலை ஊடகவியலாளராக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அல்லது ஊடக தர்மத்தின் குறைந்த பட்ச நியமங்களை கடைப்பிடிக்க இலாயக்கற்றவர்கள் என்பது. சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையின் வடபுலத்தில் வன்னியில் நிலவிய புலியாட்சிக்காலத்தில் இலங்கைக்கு சென்று, வடக்கிலே புலியாட்சி பிரதேசத்துள் சென்று அங்கு "தமிழீழ ஊடகவியலாளர்களுக்கு " ஊடகம் குறித்து பயிற்சிபாசறை நடத்திவிட்டு வந்தவர் இவர். இவர் ஊடக (அ)தர்மத்தை எவ்வாறு பேணியிருப்பார் என்பதை நீங்களே இனி தீர்மானியுங்கள். இவரது பிரார்த்தனை என்னவாயிற்று என்பது ஒரு புறமிருக்க, இவரது இந்த புகழுரைக்கும் புலியுரைக்கும், பொழிப்புரை தேவையில்லை

“ சுயநல சிந்தனைகளை கைவிட்டு , தன் இனத்தின் நல் வாழ்வைச் சிந்தனையில் நிறுத்தி, கடந்த சுமார் 30 ஆண்டுகள் போராடும் எங்களை தலைவனைப் பாருங்கள். அவர் நினைத்திருந்தால் போசாமல் ஒதுங்கிப்போயிருக்கலாம். விடுதலைப்போராட்டும் என்று ஒன்றே இருந்திருக்காது.சிங்களப் பேரினவாதிகளுக்குச் சிம்ம சொப்பனம் (இல்லை மன்னிக்கவும்) புலிச்சொப்பனம் வந்து அச்சுறுத்தியிருக்கமாட்டது!."அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?" என்று மிக நுணுக்கமாக திட்டமிட்டு செயற்படுத்தும் மாபெரும் பொறுப்பு அந்தத் தலைவன் கையில் ! அந்தத் தலைவனே எம்மில் பலருக்கு முதல்வன் ! அவன் காட்டுவதே பாதை. சமாதானம் வந்து விட்டது , வந்து விட்டது என்று ஓய்ந்து விடாமல் ,முன்னர் வழங்கிய ஒத்துழைப்பை விட பல மடங்கு கூடுதலான ஒத்துழைப்பை பொருளுதவியாக, ஆளுதவியாக வழங்கி எங்கள் போராட்டத்தில் வெற்றி காண்போம். இது வெறும் புத்தாண்டு சங்கற்பம் அல்ல. எங்கள் முதல்வனுக்கு நாம் வணக்கத்துடன் வழங்கும் வாக்குறுதி.புத்தாண்டில் வெற்றியை எமக்கு குவிக்கப் போகும் இதய சுத்தியான , எமது பிரார்த்தனையும் அதுவே. “


இவர் இப்படி எழுதிய பின்னர் விமல் சொக்கநாதன், பிரபாகரனை சந்திக்காமல் வந்திருக்கமாட்டார் என்று ஊகிக்க முகாந்திரங்கள் உண்டு. மறுபுறம் இவர் இலங்கைக்கு சென்ற காலத்தில் பிரபாகரனை சந்தித்திருந்தால் பிரித்தானியாவில் பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட இயக்கத்தின் தலைவர் -பயங்கரவாதியை- ஒருவரை சந்தித்து விட்டு வந்திருக்கிறார் என்று கொள்ளலாமா?. மேலும் போராட்டத்துக்கு பொருளுதவியாக ( நிதியுதவி) , ஆளுதவி ( யுத்தத்திற்கு சிறார்களை -"போராளிகளை") வழங்கி உதவக்கோரும் இந்த ஊடக சட்டத்தரணி பயங்கரவாத இயக்கத்திற்கு உதவுபவராக பிரித்தானிய சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவரா? . இவ்வாறான வெளிப்படையான ஆதரவினை பிரித்தானியாவில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதமாக் பிரகடனப்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு வழங்கினால் அவர் கதி என்ன ?


இன்னுமொரு பீ.பீ.சியின் அறிவிப்பாளர் ஆனந்தி குறித்து நான் ஏற்கனேவே எழுதியுள்ளேன். ஆனால் அவரை பற்றி எழுதவது என்பது இப்போது அவசியமில்லை. அதேவேளை ஐ. பீ. சீ எனும் புலிசார்பு ஊடகம் சில வருடங்களுக்கு முன்பு " அல்பிரேட் துரையப்பாவை கொன்றுவிட்டு தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணத்தில் எங்கே ஒளித்திருந்தார்" என்று "அறிவுக்களஞ்சியம்" நிகழ்ச்சி நடத்தி நேயர்கள் பிரபாகரன் கொலையும் செய்தாரா, அது சரி எங்கே ஒளித்திருந்தார் என்று விடை தெரியாமல் தடுமாற அதற்கும் ஐ பீ சீ ஊடகவியலாளர் விடை சொன்னதும் , அண்மையில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை கொன்றவர் புலிகளின் அரவிந்தன் ; அவரது இயக்கபெயர் "விசு" என்று பகிரங்கமாக கொலைக்கதைகளை வேறு எந்த நாககரீக நாட்டில் அச்சமின்றி சொல்ல முடியும்.! இச் சுதந்திரம் பிரித்தானிய சுதந்திரத் திருநாட்டில் தமிழருக்கு உண்டு!. இதுவல்லவா ஊடக தர்மம்.

தொடரும்....
thenee.com, mahavali.com and unmaikal and lankamuslim.com.



No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...