மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் –( பாகம் 10) எஸ்.எம்.எம் பஷீர்



                       

1988 சித்திரையில் கிட்டு –பதியுதீன் சென்னைச் சந்திப்பின் குழவினரின் பின்னரும் முன்னருமான நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன. அவற்றில் குறிப்பாக 1987 இறுதிப்பகுதியும், 1988 ன் முற்பகுதியும் புலிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம்களின் இருத்தலை கேள்விக்கு உட்படுத்தின. 1987 நவம்பரில் ஓட்டமாவடியிலும் 30 மார்கழி 1987ல் காத்தான்குடியிலும் முறையே 9 ம் 30 மாக 39 இளைஞர்கள் ஊhகாவல்படையினர் எனக்கூறப்பட்ட இளைஞர்களை ஜிஹாத் உறுப்பினர்கள் எனக்கூறி புலிகள் தாங்கள்செய்த படுகொலைகளையும் அவர்கள்மீது சுமத்தி அவர்களை சுட்டுக் கொன்றனர். காத்தான்குடியில் (4) அப்பாவித் தமிழர்களையும் தங்களது முஸ்லிம் புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் குற்றஞசாட்டியது தவிர தாங்களே 1987 செப்டம்பர் 3 ந் திகதி சுட்டுக்கொன்ற மூதூரின் உதவி அரச அதிபர் ஹபீப் முகமட் அவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனிததனியான நிர்வாகத்தின்கீழேயே செயற்படவேண்டுமென்னும் கருத்தினை முன்வைத்த மூதூர் பா.உ வான ஏ.எல் அப்துல் மஜீத் அவர்களையும் 1987 நவம்பர் 13 ந் திகதி புலிகள சுட்டுக்கொன்றனர்.



இந்தத் தாக்குதலின்பின்னர் இதுதொடர்பில் புலிகள் பத்திரிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களின் கொலையை நியாயப்படுத்தியதுடன் மேலும் அந்த அறிக்கையில் புளொட்(PLOTE) ரொலோ (TELO) , ஈ.பி.ஆர்.எல்.எப் ( EPRLF ) ஆகிய இயக்கங்களையும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் தமிழ்பேசும் முஸ்லிம, மக்களுடன் ஈடுபடுவதாகவும் துரொகத்தனமான செயல்களில் ஈடுபட்டு தங்களது சுயதேவைகளைப் ப+ர்த்திசெய்யமக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எனவே தாங்கள் அவ்வியக்கங்களை தடைசெய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த அறிக்கையில் அதிகமாக முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து இயங்குவதாகவும் அவர்களின் வேண்டுகோளிலும், வற்புறுத்தலிலும். தீவிர பங்கேற்பிலுமே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்கள் முஸ்லிம் மக்களின் வெறுப்பினையும், அதிருப்தியினையும் சம்பாதித்தவர்கள் என்றும் ஆடுகள் நனையும்போது ஒநாய்கள் அழுகின்ற கதைபோல் அறிக்கை விட்டனர்.

கிழக்கில் பரவலாக முஸ்லிம்கள்மீது பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டபோதும் சமூக ஈடுபாடுகொண்ட முஸ்லிம் நபர்கள் வேட்டையாடப்பட்டபோதும் வடமாகாணத்திலும், யாழ்பாணத்தில் பிறந்த இரண்டாவது அரச அதிபரான மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சென்னை சென்ற முஸ்லிம் குழுவினர் இவையெல்லாம் குறித்து வாய் திறக்கவில்லை. மாறாக கல்முனையில் கொல்லப்பட்ட 17 பேரும் புலிகளால் கொல்லப்படவில்லை என்று மட்டும் சான்றுதல் வழங்கினர்.

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற முக்கிய இரு பிரமுகர்களின் படுகொலைபற்றி இவர்கள் வாய்திறக்கவில்லை. இந்த சென்னை விஜயத்திற்கு முன்னர் திரு பதியுதீன் அவர்கள் ஐலண்ட்; பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறான சந்தாப்பத்தில் இலங்கை –இந்திய ஒப்பந்தத்தினை; முஸ்லிம்மக்கள் இயல்பாகவே நிராகரிப்பார்கள் என்றும் ஆனால் அவர்கள் கிழக்கிலே வாழத்தான் வேண்டுமென்ற கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் சிலவருடங்களாக நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தாh.

வடகிழக்கு இணைந்த இலங்கை –இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியில் எவ்வாறான அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதே முஸ்லிம்களின் கேள்வியாகுமெனவும் குறிப்பிட்டிருந்தார். சென்னை சென்ற குழுவினரின் அரசியல் அடையாளமாக விளங்கிய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியும், புலியும் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார்கள் என்பதுபற்றி பிரபல பத்திரிகையாளரான தராகி எனப்படும் சிவராம் எழுதுகையில் ஐPமுகு னாலும் ஈ.பி.ஆர்.எல்.எப்பினாலும் கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் அதிகபட்ச கட்டுப்பாடுகள் ஏற்பட்டதனால் தங்களுடைய (புலிகள்) இருத்தலுக்கு பாரிய அளவில் முஸ்லிம்கள்மீது தங்கியிருக்கவேண்டிய நிலையை ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு செயற்பாட்டு உறவினை புலிகள் மு.ஐ.முயினருடன் ஏற்படுத்தினார்கள். புலிகளைப் பொறுத்தவரை இந்திய அனுசரணை கட்சியாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை கருதியதுடன் முஸ்லிம்களுக்காக (இஸ்லாமியத் தமிழர்கள); எனத் தாங்கள் குறிப்பிடும் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கென தனித்தொரு ஸ்தாபனத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடாகவே மு.ஐ.வி.முன்னணியினரை மு.காங்கிரஸினருக்கு மாற்றாக புலிகள் திட்டமிட்டிருக்கலாமென தோன்றுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐ.பி.கே வெளியேற்றம் குறித்த கோரிக்கை முஸ்லிம் மக்களுடாகவும் வெளிப்படவேண்டுமென்பதில் புலிகள் அக்கiறாக இருந்தனர். 13 ந் திகதி ஜனவரி 1988ல் பிரபாகரன் இந்திய சமாதானப்படை தங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமெனவும் சமாதானப் பேச்சுவாhத்தை தொடரவேண்டுமெனவும் இந்திய அரசுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறான வேண்டுதலையே த.வி.கூட்டணியின் செயலதிபரான அமிர்தலிங்கம் அவர்களும் இந்திய அரசுக்கு விடுத்தார். இந்தக் கால கட்டத்தில்தான் புலிகளுக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவுகள் அதிதீவிரமான நெருக்கடிக்குள்ளானது. 1037 ஐPமுகு படையினர் புலிகளால் கொல்லப்பட்டதாக புலிகளினால் உரிமை கோரப்பட்டது.

 இவ்விழப்புக்கள் குறித்து அன்றைய ஜனாதிபதியான ஜெயவர்தனா அவர்கள் வடகிழக்கில் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்படுவதில் உள்ள நெருக்:கடியான சூழ்நிலையில் ஐ.பி.கே தொடர்ந்து ஈடுபட்டு வருவதனை பாராட்டியும், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் தமிழ்,சிங்கள, முஸ்லிம் படையினர் ஒருவரும் சாகவில்லை எனவும் அவர்களின் இடத்தினை இந்தியப் படையினர் எடுத்துவிட்டாhகள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் 1987 இறுதிப்பகுதியிலும், 1988 ஆரம்பகால பகுதியிலும் இந்தியாவில் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த கிட்டு மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கும் மறுக்கப்பட்டிருந்hர்.; 1988 சித்திரை முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவாhத்தையின்போது வெளிப்படையாக செயற்படக்கூடியதாக இருந்ததுடன் 1988 பிற்பகுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையிலிடப்பட்டார். அக்கால கட்டத்தில் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தம்மை விடுதலை செய்யுமாறும் சில வேண்டுகோள்களை முன்வைத்து கடிதம் வரைந்திருந்தார்.—   

எஸ்.எம்.எம் பஷீர்

தொடரும்
thenee.mahavalai (27/09/2010)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...