Thursday, 14 April 2011

ஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)


 எஸ்.எம்.எம்.பஷீர்

                                
                                " நந்தவனத்தில் ஓர் ஆண்டி
                                அவன் நாலாறு மாதம் குயவனை வேண்டி
                                கொண்டு வந்தான் ஒரு தோண்டி
                                 அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி”.


இப்பகுதிக்கட்டுரையியின் முந்தியபகுதியில் முன்னாள் ஸ்ரீ பாலமுருகன்     இளைய அப்துல்லாஹ் என்றபெயரில் முஸ்லிம் மதத்தவராக மாறி வட மாகான முஸ்லிம் மக்களுக்காக புலிகளின் மிலேச்சத்தனமான முஸ்லிம் விரோத செயற்பாடுகளையும் இனப்படுகொலைகளையும் காட்டமாக கண்டிக்காது மேலுக்கு வட மாகான முஸ்லிம் வெளியேற்றம் பற்றி நாசூக்காக கண்டித்தமை தவிர புலிகளின் வேறு எந்தப்படுகொலை தொடர்பாகவோ பொதுவான மக்கள் விரோத செயற்பாடுகள் தொடர்பாகவோ கண்டிக்கவில்லை.
மேலும் வட மாகாணத்தில் சகல மக்களையும் போல் மண்சுமந்த மேனியராய் வாழ்ந்திருந்த முஸ்லிம் மக்களை புலிகள் பலவந்தமாக வெளியேற்றியதை -இன சுத்திகரிப்பு செய்ததை- இவர் தனது நூலொன்றில் செத்த ஆட்டின் உண்ணியாக கழற்றப்பட்டோம் என குறிப்பிட்டது தீபத்தில் பணிபுரிவது பற்றி தான் “முட்டாள்களின் கூடாரத்தில் இருக்கிறேன் ” என்று அவர் கூறியதைவிட முட்டாள்தனமான உதாரணமாகும் செத்த ஆட்டில் (வடபுலத்தில்) “இரத்தம் உறிஞ்சும் உண்ணிகளாக” முஸ்லிம்களை காட்டி இவர் என்ன சொல்லவருகிறார் என்பதை உங்களின் பகுப்பாய்வுக்கு விட்டு விடுகிறேன்.


ஆனால் மறுபுறம் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பற்றியும் எழுதாமல் இருக்கமுடியவில்லை. ஏனெனில் எமது ஊடக ஜாம்பவான்களில் பலர் முஸ்லிம் சமூகத்தின் குரலாக என்ன செய்துகொண்டிருந்தார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் எமக்கு முன்னாள் உள்ள நியாயமான கேள்வியாகும். அவ்வாறான ஒரு பார்வையின் ஊடாகவே “நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட” ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கமுடியும். அவர்களின் தார்மீக பொறுப்புக்களை உணர்த்தமுடியும். உதரணத்துக்கு சில சம்பவங்களை இங்கு கோடிட்டு காட்டவேண்டியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தினகரன் பத்திரிகை ஆசிரியராகவும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராகவும் இருந்தவர் என்.எம். அமீன். இவர் இப்போது நவமணி பத்திரிகையின் ஆசிரியராக உள்ளார்.இவரது தினகரன் ஆசிரிய தலையங்கமொன்று பற்றி கஹட்டோவிட்டையை சேர்ந்த மௌலவி அப்துல் மஜீத் அவர்கள் பிறிதொரு முஸ்லிம்களின் (தமிழ்) பத்திரிக்கையில் பின்வருமாறு தனது தார்மீக கேள்வியினை எழுப்பியிருந்தார்
“புலிப்பயங்கரவாதிகளால் ஈனத்தனமான முறையில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் நினைவுகூரப்பட்ட தினத்தில் தினகரன் தீட்டிய ஆசிரியத்தலையங்கத்தில் ஒர் இடத்தில் தானும் இப்படுகொலைகளை செய்தவர்கள் புலிப்பயங்கரவாதிகள்தான் என்பதை கூறாது மிகக்கவனமாக எழுதப்பட்டிருந்தது. மீடியா போரத்தின் தலைவர்தானே லேக்ஹவுசின் தமிழ் பிரசுரங்களுக்கான பொறுப்பாசிரியர்? இதற்கு மீடியா போரத்தின் பதில் என்ன ? ”
ஆம் அவரது நியாமான ஆதங்கம் புலப்படுகிறது. பொதுவாக தமிழ் மீடியா தொடர்புகளை அதிகம் வைத்திருக்கும் முஸ்லிம் மீடியா ஜாம்பவான்களில் பலர் தமிழ் மீடியா நண்பர்களை நோகாமல் புலிகளின் எதிர்ப்பினை பகிரங்கமாக எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாமல் இவாறான ஊடக ‘ தர்மங்களை” பேணியதுண்டு . இன்னும் சிலர் புலிகளிடம் அல்லது தமிழ் தேசிய வாத யாழ் மையவாத நண்பர்களிடம் இளிச்சவாயர்களாக போவதுமுண்டு. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் காலங்காலமாக தமது வாழ்வாதாரங்ககளை சிங்கள மக்களுக்குள் நிலை நிறுத்திக்கொண்டு வாழும் முஸ்லிம் பிரதேசங்களினை தமது பிறப்பிடமாக வாழ்விடமாக கொண்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலர் கூட தமிழ் தேசிய முஸ்லிம் அடக்குமுறை அரசியல் சக்திகளின் கருத்துக்களை தாம் நன்கு அறிந்துகொண்டும் அவ்வரசியல் சக்திகளின் கருத்தியல்களை அல்லது அவர்கள் தரும் இனிப்பு பூசிய குளிசையாய் ((sugar coated pills) பேரினவாத நோய் தீர்க்கும் நிவாரணிகளாக முன்வைக்கும் “மருந்துகளை” முஸ்லிம்களுக்கான அரசியல் வழிமுறையாக காட்டும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் தமது ஊடக சாதனத்தை பிரயோகித்து தமிழ் தேசிய சிங்கள தீவிர எதிப்பு வாத கருத்தியல்களுக்கும் முட்டுக்கொடுக்கும் செயற்பாடுகளையும் செய்துள்ளனர். இத்தகைய செயற்பாட்டினை அரசியல் ரீதியில் முஸ்லிம் காங்கிரசின் பின்னரான தலைமைகள் முன்னெடுத்து வருவதும் அதற்கான ஊடக பரப்புரைகளை இலங்கையின் பிரபல தமிழ் தேசிய பத்திரிகைகள் என தமக்கு தாமே பட்டமளிப்பு செய்துகொள்ளும் வானொலி, காணொளி ஊடகங்களும் செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கு என தேசிய நாளேடு இலங்கையில் இல்லாதிருப்பினும் அந்த திசையில் பயணிக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியில் உருவான பத்திரிக்கைதான் நவமணி எனும் பத்திரிக்கையாகும் இம்முயற்சியின் வெற்றி மறைந்த அப்பத்திரிக்கையின் ஆசிரியரான ஜனாப் அஸ்வர் என்பவருக்கே உரியது என்றாலும் இவர் தமது நீண்டகால பத்திரிகை தொழில் அனுபவத்தை யாழ் மையவாத சிந்தனைவாதிகளின் கூடாரமான வீரகேசரி பத்திரிக்கையிலே  பெற்று வளந்தவர். அவர்களின் நட்பும் கருத்துக்களும் அஸ்வரின் சொந்த கருத்தை பாதித்திருந்தது என்பதை காட்டுவதுபோல் மட்டுமல்ல தமது சொந்தச்சகோதரர்கள் புலிகளினால் அடக்கி ஒடுக்கப்பட்டு அழிவுகளை சந்தித்து இன சுத்திகரிப்புக்கு உட்பட்டு நிலமிழந்து அகதிகளாய் பல வருடங்கள் ( பிரபாகரன் உயிருடன் இருந்தால் இன்னமும் வட மாகான முஸ்லிம்கள் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பார்கள் ) வாழ காரணமான இலங்கையின் சமூக நெருக்குதலுக்கு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு தடையாகவிருந்த பிரபாகரன் தோற்கக்கூடாது என்று தனது நவமணி ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியதை என்னவென்று சொல்வது
.
"நடக்கின்ற யுத்தத்தில் பிரபாகரன் தோற்கக் கூடாது. அவர் தோற்றால் தமிழர் போராட்டமே தோற்று விட்டதாக பேரினத் தலைவர்களால் கருதப்படலாம். யுத்தம் மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாணலாம் என்று நம்பும் பேரின அரசியல்வாதிகளின் கரங்கள் ஓங்கலாம். தமிழர் மட்டுமல்ல சிறுபான்மையினர் அனைவரும் ஓரங்கட்டப்படும் நிலைமை உருவாகலாம்.” ( நவமணி 22 அக்டோபர் 2006 )
வட கிழக்கு முஸ்லிம் சமூகங்கள் உதவி வேண்டாம் உபத்திரவம் செய்யாதிருந்தால் போதும் என்று கேட்கும் நிலையில்தான் சில தெற்கு பத்திரிககயாளர்கள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலபொழுதுகளில் நடந்திருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரியது. ஆனாலும் மக்களில் பலர் அதனை புரிந்து கொண்டு ஆட்ஷேபித்தவர்களாக தெரியவில்லை. அந்தவகையில் கஹட்டோவிட்ட மஜீத் மௌலவியின் என்.எம் அமீன் எனும் பத்திரிக்கையாளன் பற்றிய கருத்து அந்தவிதத்தில் ஒரு ஊடகவியலாளனை அவனது பொறுப்பு குறித்து கேள்விக்குட்படுத்தும் ஒரு குரலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் வரும்..

..
thenee, lankamuslims, mahavali and unmaikal (May 2010) 

No comments:

Post a comment

Biden’s Drone Wars BY BRIAN TERRELL

  On Thursday, April 15, the   New York Times   posted an  article   headed, “How the U.S. Plans to Fight From Afar After Troops Exit Afghan...