Monday, 11 April 2011

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம் -11)                                  எஸ.எம்.எம் பஷீர்


ராஜிவ்காந்திக்கு கிட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்து, 03 .அக்டோபர் 1988  ம் ஆண்டு, எழுதிய கடிதத்தில், இந்திய, இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்குவதாக மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். புலிகள் வழக்கமாகவே  ஒப்பந்த மீறுதலை எதிர்தரப்பினரிடம் சுமத்தி, தங்களது நிலைப்பாட்டிற்கான நியாயப்படுத்தலை சர்வதேசமயப்படுத்தி  தமது ஆதரவு தளத்தினை தக்கவைப்பதற்குமான காரணங்களை முன்வைத்தே , இந்த ஆதரவு கோரிக்கையும் வழக்கம்போல் மறைமுகமாகவே வழங்கப்பட்டது. சமாதானப்படையினை, சண்டைப்படையாக்கிய பின்னர் எவ்வாறு தமது யுத்தநிறுத்த கடமையை தாங்கள் என்றுமே மீறவே இல்லை என காலத்துக்கு காலம் இலங்கை அரசுடன் தமது அழிவின் விளிம்புவரை செய்துவந்ததுபோல் புலிகள் தாங்கள் யுத்த நிறுத்தங்களுக்கு ஆதரவாக பின்னோக்கி கூறுகின்ற வகையில்தான், இவ்வாறு கிட்டுவினாலும் சூசகமாக இந்திய அரசிடம் கடிதத்தில் ஆதரவு வழங்குவதாக கூறப்பட்டு இருந்தது. இக்கடிதத்தில் கிட்டு “தொடர்ந்து நாம் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டோம். பேச்சுவார்த்தைகளில் எமதுஇயக்கத்தில் பிரதிநிதிப்படுத்திய என்னை கைதுசெய்து, சிறையில் அடைத்ததின் மூலம், சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் தடுக்கப்பட்டன. பின்னர், இந்திய அரசு தன்னிச்சையாக, 10 நாள் போர்நிறுத்தம்  அறிவித்தமை மாத்திரம் இணக்கமான தீர்வு ஒன்று உருவாவதற்கு  போதுமானதாகவும் இருக்கவில்லை. இதுவரையில் என்னுடன் சிறையில் இருக்கும் சக தோழர்களையும், விடுதலை செய்ய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு; எமது தலைவர் வே.பிரபாகரன் அறிவித்திருந்தார் .
இது தொடர்பாக, எவ்வித  நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்படாமலேயே  போர்நிறுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.. நாம் சமாதானத்துக்கு எதிரானவர்கள் அல்ல. நிரந்தர சமாதானம் ஒன்றையே நாம் வேண்டி நிற்கிறோம். சமாதான தூதுவனாக, அழைத்து செல்லப்பட்ட எமது தோழர்  ஜொனி  அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டார். சமாதான தீர்வொன்றை காண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்த, நானும், எனது தோழர்களும், காரணம் எதுவுமின்றி  கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டோம். எம்மீது ஆதாரமற்ற பொய்யான , கற்பனையான, குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இருந்தன. மேலும் அக் கடிதத்தில் குறிப்பிடுகையில் நாம் ஒருபோதும் இங்குள்ள எமது அலுவலகத்தை  மூடி விடும்படியோ, அல்லது இங்கு இருந்து வெளி ஏறும்படி , கேட்கப்படவில்லை. மேலும், 1987 ம் ஆண்டு, அக்டோபரில் இந்திய இராணுவத்துடனான தூரதிர்ஷ்ட வசமான மோதல்கள் ஆரம்பித்ததிலிருந்து நாம் வெளியேற முடியாதவாறு, வீடுகளை சுற்றி பொலிஸ்காவல் போடப்பட்டு இருந்தது.” மேலும் குறிப்பிடுகையில், தமது விடுதலைக்காக, சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக தாங்கள் தீர்மானித்து இருப்பதை அறிவித்து; இரண்டு கோரிக்கைகளை இந்திய அரசுக்கு, விட்டிருந்தார்.
1 இந்திய மண்ணில்  நாம் ஏதாவது குற்றம் செய்திருந்தால், அக்குற்றம் என்ன என்பதை வெளிப்படுத்தி  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவேண்டும்..
2 அவ்வாறு வழக்கு தொடர முடியாதாயின் , எம்மை விடுதலைசெய்து தமிழீழத்தின் எமது போராளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்., என கோரியிருந்தார்.
அந்நிகழ்வு குறித்து  “தினமணி” பத்திரிக்கை, இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது, விடுதலைப்புலிகளை ஒதுக்கிவிட்டு,  தேர்தல் நடத்திவிடலாம்  என்று, ராஜிவ்காந்தி கூறுகிறார்.  இலங்கையின் வடகிழக்கு மாகாணசபை தேர்தலில், போட்டியிட வேட்புமனுத்தாக்கல், திங்கள் அன்று துவங்கியது.. ஆனால், ஈழ  புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, எட்டு மாவட்டங்களில் , ஆறு மாவட்ட அதிகாரிகள், தேர்தல் பணியில் பங்கேற்க முன்வரவில்லை. மேலும், அப்பத்திரிகையானது இந்திய- இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் சமீபத்திய பத்துநாள் போர்நிறுத்தம் வரை, இந்தியஅரசு தன்னிச்சையாக எடுத்த  நடவடிக்கைகள் எல்லாம், வெற்றிபெறாமல் போனதற்குரிய காரணம், எதிராளியின் செயலை சரிவர கணிக்க தவறியதாகும்., இந்திய அரசு அறிவிக்கும் சலுகைகள் எல்லாம், , ஈழப்புலிகளை சிறுமைபடுத்துவதாக இருக்கின்றது.” மேலும், இப்பத்திரிகை “காலவரையறையற்ற போர்நிறுத்தத்தை அறிவித்து, கிட்டு முதலான விடுதலைப்புலிகளை விடுவித்து, நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும்.”  இதில் முக்கியஅம்சம் என்னவென்றால், “தினமணி” த.வி. கூ முன்வைத்துள்ள திட்டத்தை இந்திய அரசு பரிசீலிப்பது உதவியாக இருக்கும் என்பதை கோடிட்டு காட்டி இருந்தது.
தமிழகத்தில் பல்வேறுபட்ட  தொப்புழ்கொடி ஆதரவினைதிரட்டும், நடவடிக்கைகளுக்கும் தமிழீழ ஆதரவாளர்களால் முடுக்கி விடப்பட்டன.. ஆனால், இந்த பின்னணியில் கட்டுரையாளர், புலிஅல்லது இந்திய இலங்கை ஒப்பந்த தொடர்பான செயல்பாடுகள் குறித்து, வரலாற்றுரீதியாக, விரிவாக இதை ஆய்வுசெய்கின்ற, நோக்கத்திற்காக,  எழுதவில்லை. மாறாக, அன்றைய கால கட்டத்தில் இங்கு நடைபெற்ற சம்பவங்களில்  சிலவிடயங்கள் தவிர்க்க முடியாமல், சொல்லப்படவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டிருப்பது என்பதினாலேயாகும். 1985  இல் ஒரு பின்னோக்கிய நிகழ்வாக கிட்டுவினுடைய செயல்பாடு ஒன்று பார்க்கப்பட வேண்டியுள்ளது.  சுதுமலையில் இலங்கைராணுவம் புலிகளுடைய ஆயுதகிடங்கை அழிப்பதற்கு முற்பட்டவேளையில், டெலோ உறுப்பினர்கள் ராணுவத்தோடு போரிட்டு அவைகளை பாதுகாத்து கொடுத்ததாகவும், அவ்வாறு புலிகளின்உயிர்களையும், ஆயுதங்களையும்,  பாதுகாத்ததாகவும், அவ்வாறு பாதுகாத்ததிற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், கிட்டு, “எங்கள் உயிரை காக்க தோளோடு  தோள் நின்ற டெலோவை வாழ்நாளில் மறக்கமாட்டோம்” என்று  பத்திரிக்கை அறிக்கையில் பல நாட்கள் குறிப்பிட்டதாகவும், யாழ்ப்பாண செய்திஒன்று கூறுகின்றது. இவ்வாறான கிட்டுத்தான் பின் ஈவு, இரக்கமின்றி, டெலோ உறுப்பினர்களையும், அதன் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தையும், சுட்டுக்கொன்றவராகும்.  கிட்டுவின் நன்றி தெரிவித்தல் டெலோவை அழிப்பதாகவே அமைந்தது.
முக்கியமாக, 1988 ஜனவரியில், பிரபாகரன் இந்திய இலங்கை உடன்பாடுகுறித்து; இந்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோள், இந்த நிலைப்பாட்டினுடைய ஆரம்பகாலம் 1987  அக்டோபர் தொடக்கி, ஒருவருடத்தின் பின்னர் ஏற்பட்ட பல்வேறுபட்ட புலிகளுக்கும், இந்தியப்படைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை, கோடிட்டுகாட்டுகின்ற, பலஅம்சங்களை கொண்டிருந்தது.  ஜனவரி 13 இல் இந்திய அரசுக்கு பிரபாகரன்  விடுத்த மனுவில் எல்லாவித ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, சமாதான பேச்சு வார்த்தையை தொடருமாறு கோரியிருந்தார்.
அம்மனுவில் தாங்கள் ஏற்றுக்கொண்டதுபோல்  இடைக்கால நிர்வாக சபை  (Interim Adminsitrative Council) தமது பெரும்பான்மை உறுபினர்களை கொண்டு நிறுவப்பட்டால்  தங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதாக கூறியிருந்தார். மேலும் எதிர்கால பேச்சு வார்ததைகளில் தாமே முக்கிய பாத்திரத்தினை வகிக்க வேண்டுமென்றும், ஏனைய தமிழ் குழுக்களின் கட்சிகளின் பிரதிநித்துவத்தினை புறம்தள்ளும் , ஏகபோக உரிமையினை வலியுறுத்தும் கோரிக்கைனை வெளிப்படையகவே முன்வைத்திருந்தார்.ஆனால் மறுபுறம் இந்திய அரசும் புலிகளும் பேசவேன்றுமேன்றும்;அமைக்கப்படும் இடைக்கால நிர்வாக  சபையில் எல்லா தமிழ் குழுக்களும் அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்றும்  த.வி கூ. தலைவர் . அமிர்தலிங்கம் அவர்கள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் இடைக்கால நிர்வாக சபை தொடர்பில் எட்டப்பட்ட .(  28.09.1987)  ஒப்பந்தத்திற்கு ஒருபடி மேலே சென்று தமது கட்சிக்கு வழங்கப்பட்ட இரண்டு இடங்களை விட  ஏனைய தமிழ் குழுக்களை உள்வாங்கியதாக இடைக்கால நிர்வாக  சபையில் சபை அமையவேண்டும் என்பதாகும்.
(தொடரும்)
thenee.com, mahavali.com(27/09/2009) 

No comments:

Post a Comment

Sri Lankan crisis and chaos not by chance, but by design - Prof. Tissa Vitarana

October 27, 2018, 12:00 pm   Today Sri Lanka is facing its biggest crisis since independence. It is not only an economic crisis, but ...