ஊடகம் இனியும் பூடகமில்லை ! (1)



                                                                                           எஸ்.எம்.எம். பஷீர்

"நாங்கள் பத்திரிகையாளர்கள் என்ற வகையில் தோல்விகளை பகுப்பாய்வு செய்வதில் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறோம்; ஆனால் வெற்றிகளை பகுப்பாய்வு செய்வதில் அதிகம் சிறந்தவர்களாக இல்லை " . ( “We are very good as journalist at analyzing failures; but we are not so good at analyzing success”- Martyn Lewis ) மார்ட்டின் லூயிஸ் முன்னாள் பீ.பீ.சீ செய்தி வாசிப்பாளர்.





நடுநிலை ஊடகம் என்று ஒருபக்க மேளம் அடித்த ஊடகவியலாளர்கள் அல்லது அரச ஊடகங்களில் எதிர்தரப்பு கருத்துக்களை இருட்டடிப்பு செய்தவர்கள் எனப்பலர் தமது அரசியல் சார்பு நிலையினை வெளிப்படையாக இன்று கட்சி அரசியலில் தம்மை இணைத்து தேர்தலில்போட்டியிடுவதன் மூலம் இனிமேலும் அவர்கள் தம்மை நடுநிலயாளர்களாக நிறுவுவது சாத்தியமில்லை.



அண்மையில்சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களில் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் எனும் அரசியல் கலந்துரையாடல் விவாத நிகழ்ச்சியை வாரந்தோறும் நடத்தும், அந்நிகழ்ச்சியூடாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே நன்கு அறியப்பட்ட யாழ்ப்பாணம் மானிப்பாயை சேர்ந்த ஸ்ரீ ரங்கா ஜெயரத்தினம் இன்று ஐக்கிய தேசியக்கூட்டனியின் வேட்பாளராக மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.



இவ்வருட ஆரம்பத்தில் இவர் மீது மலையகத்திலுள்ள அரச தரப்பு அரசியல் வாதி ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாகவும் அதில் அவரது வாகனமும் சகாக்களும் தாக்கப்பட்டதாகவும் செய்தி மிகுந்த பரபரப்பான செய்தியாக்கப்பட்டது.



உண்மையில் ரங்கா ஒரு நேர்மையான அரசியல் சமூக நலன்களை கருத்தில்

கொண்ட ஊடகவியளாளரா என்ற கேள்விக்கு ரங்காவின் அரசியல் கபடத்தனமானது எனவும் அவர் இரட்டை முகம் கொண்டவர் என்று ஒரு செய்தியும் தமிழ் தேசிய சக்திகளால் நடாத்தபடுவதாக நம்பப்படும் லங்காநியுஸ்வெப் எனும் இணையத்தளத்தில் இவர் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் மகனான நாமல் ரஜபக்சவ்வுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றும் , அவரை அடுத்த ஆட்சி தலைவராக காண விரும்புபவர் என்றும் , ரங்கா தமிழர் மத்தில் தான் ஒரு கதாநாயகன் போல காணப்பட்டாலும் இவர் தமிழ் மக்களை தவறாக வழி நடத்துகிறார் என்று குறிப்பிட்டு அவர நாமல் ராஜபக்சவுடன் சேர்ந்திருக்கின்ற சில புகைப்படங்களையும் பிரசுரித்திருந்தது. ஆனால் ரங்கா மிகக் குறுகிய காலத்தில் தான் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த பொது சன சேவை தொலைகாட்சி புகழ் அனைத்தையும் அண்மைக்காலங்களில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது மற்றும் மலயகத்தாக்குதல் என தான் மக்கள் அனுதாப அலையை திரட்சியுறச்செய்து, அத்தகு ஒரு ஸ்தாபன வடிவம் கொடுத்து திடீரென்று குடிசன முன்னணி (Citizen Front) என்ற அமைப்பினூடாக வெளிப்பட்டு , ஐக்கிய தேசியக் கூட்டுடன் இணைந்து தனது அனுதாப அலை சாதகமாக வீசிய நுவரேலியா மாவட்டத்தில் இன்று போட்டியிடுகிறார்.இவரது மக்கள் சேவையின் நிறம் இப்போது தெளிவாகவே தீட்டப்பட்டுள்ளது. சரி, போகட்டும் , இவர் குறித்து டக்லஸ் தேவானந்தா இவர் ஒரு புலிதொடர்புகொண்டவர் என ஒரு புகாரினை சில வருடங்களுக்கு முன்பு போலீஸ் மா அதிபருக்கு செய்திருந்தார். ஆனால் அப்புகார் வெறுமனே புகாராகவே போய்விடவில்லை மாறாக ரங்காவுக்காக பரிந்து பேசும் பெரிய ஆதரவை ஊடக சமூகத்துக்குள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தியது. எதிர்ப்புக்களால் தனது போபூலாரிடியை- ஜனாபிமானம்- (Popularity )வளர்த்துக்கொண்டவர் இவர். ரவி ராஜ் எம் பீ கொலையின் பின்னர் தனது உயிர்க்கு அச்சுறுத்தல் இருப்பதாக முறையிட்டு பாதுகாப்பு தேடியதுடன் இலங்கை விட்டு இவர் வெளியேறவேயில்லை.



இவருக்கும் புலிகளுக்கும் எதாவது தொடர்பு இருந்ததா என்று நேரிடையாக தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் என்னிடம் அவர் புலிகளின் தலைவர்களுடன் ( கருணா, தமிழ்ச்செல்வன் ) உட்பட மகிழ்வாய் அளவளாவும் பிரத்தியோக புகைப்படம் உள்ளது என்பது மட்டும் போதாது என்றாலும் , ஒருவேளை இது பற்றி கருணா எனும் முரளிதரன் அறிந்திருக்கலாம். நானும் அண்மையில் கருணாவை சந்தித்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரபாகரனை சந்தித்தபோது பிரபாகரன் கூறிய சில விடயங்களை என்னிடம் கூறினார். ஆனால் ரங்கா பற்றி நான் கேட்கவேண்டிய தேவை அப்போது எனக்கு ஏற்படவுமில்லை. என்றாலும் இப்போது ஓன்று மட்டும் தெளிவாகிறது. ரங்கா போன்றவர்கள் தாங்கள் கொள்கை உறுதிகொண்டவர்கள் அல்லது மக்கள் நலனே தமது இலட்சியம் என்று கூறிக்கொண்டு பூடகமாக அரசியல் செய்பவர்கள். தமிழ் தேசிய இணையங்கள், ( புலி சார்பு தளங்கள் உட்பட ) கூறியதுபோல் இரு முகம் மட்டுமல்ல அவ்வப்போது தங்களுக்கு எப்பக்கம் இருக்கிறதோ அப்பக்கம் நின்று பல முகம் காட்டும் வித்தகர்கள் வரிசையில் ரங்காவும் ஒருவர்தான்.

தொடரும்.......
thenee.com www.lankamuslim.lk and  mahavali (March 2010)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...