ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்-இறுதிப் பாகம்

எஸ்.எம்.எம்.பஷீர்

1988 ஜனாதிபதி தேர்தல் முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்காரணம் , மாகாணசபைத்தேர்தலின் பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஜே. வீ. பீ தொடக்கம் தெற்கிலே உள்ள தேசிய சக்திகள் முடுக்கி விட்ட தேசிய வாதமும் ( இத் தேசிய வாதம் அரசியல் ரீதியில் இன முரண்பாடு கூர்மையடைந்த ஒரு புள்ளிகளில் ஒன்றாக இந்திய இலங்கை ஒப்பந்தம் அமைந்ததால் சிங்கள தேசிய வாதமாக அடாயாளப்படுத்த பட்டது ) இவ் ஒப்பந்தம் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அரசில் உட்கிடையான கலகத்தை ஏற்படுத்தி அக்கட்சியின் முக்கிய சில உறுப்பினர்களின் எதிர்ப்புக்களுடன் நிறைவேற்றப்பட்டதால் அக்கட்சியிலிருந்து முதலில் விவசாயத்துறை அமைச்சர் காமினி ஜெயசூரிய வெளியேறி இனவாத அடிப்படையில் "சிங்கள ஆரக்சக சந்விதாணய" (Sinhala Araksaka Sanvithaanaya ) என்ற கட்சியினை உருவாக்கினார். இக்கட்சி வழக்கம் போலவே சிங்கள மக்களால் இனவாத கட்சியாக நிராகரிக்கப்பட்டது. இத்தகு முன்னரும் பல சிங்கள தேசிய வாத , இனவாத கட்சிகள் சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டது. அப்படியாயின் எப்படி சிங்கள இனவாத கட்சியாக இன்று அறியப்படும் சிஹல உறுமய எப்படி நாடாளுமன்றத்தில் உள்ளிடும் அளவுக்கு செல்வாக்குப்பெற்றது என்பது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.எனினும் இன வாத ரீதயில் சிறுபான்மை மக்களின் சார்பாக கடின தீவிர கருத்துக்களை முன்வைத்த கட்சிகள் பலமடைந்தாலும் பயங்கரவாதம் தனது நாடளாவிய ஆக்கிரமிப்பினை தமிழ் தேசிய போராட்டம் என்ற வடிவில் ஒரு புறத்தில் விஸ்தரித்ததுடன் மறு புறத்தில் சர்வதேசிய ரீதியில் சிங்கள மக்கள் எதிர்கொண்ட சர்வதேச அப்பிபிராயம், புலிகளின் சர்வதேச ரீதியிலான ஆதரவுத்தளம் காரணமாக நாட்டை கூறுபோடும் நிலைமை ஏற்படுமோ என்ற அச்சம் என்பன "ஹெல உறுமய" தமிழ் தீவிரவாதத்தின் -பயங்கரவாதத்தின் - எதிர் விளைவுதான்.


முஸ்லிம் காங்கிரஸ் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டை முவைத்தாலும் மாகான சபை தேர்தலில் போட்டியிட்டது. இதனால்தான் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெற்றது. அந்த வகையில் , மாகான சபைத் தேர்தலினை தொடர்ந்து உடனடியாக வந்த அடுத்த தேர்தல் ஜனாதிபதிதேர்தலில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அன்று சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்காவை ஆதரிக்க ஸ்ரீமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை ஆதரிப்பது என்று முடிவெடுத்த பின்னர் என்ன நடந்தது .இது குறித்து எழுதும் மருதூர் பசீத் தனது சோனக தேசம் நூலில் குறிப்பிட்டார்.“1998 ஜனாதிபதித தேர்தலானது இதற்கான ஒரு புறச் சூழலை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் சு.க வேட்பாளராகப் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயகாவை ஆதரிப்பது என்று மு கா. வின் உயர்பீடம் முடிவெடுத்திருந்தது. எனினும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் , கட்சியின் உயர்பீட அங்கத்தினர்களுக்குக்கூட தெரியப்படுத்தாமல் ஐ. தே. க.வேட்பாளராக போட்டியிட்ட திரு. பிரேமதாசவிற்கு மு.கா வும் முஸ்லிம்களும் ஆதரவு வழங்குவதாக அஷ்ரப் அவர்கள் பத்திரிகை அறிக்கையின் மூலம் பிரகடனம் செய்தார். இந்த அறிக்கையானது கட்சியின் உயர்பீட அங்கத்தினர்களை வியப்பிற்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கியது. அஸ்ரப் அவர்களின் முடிவு குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என்பது மட்டும் உயர்பீட அங்கத்தினர்களின் அதிருப்திற்கு காரணமாக அமைந்திருக்கவில்லை. முக்கியமாக ஏற்கனவே கட்சியின் உயர்பீடம் எடுத்திருந்த முடிவுக்கு முற்றிலும் மாறானதாக அஸ்ரப் அவர்களின் அறிக்கை அமைந்திருந்ததும் இதற்கு காரணமாக விளங்கியது. 1990 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீமாவை ஆதரிப்பது என்று மு.கா முதலில் எடுத்த முடிவானது , வட , கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை அரசியல்ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. ஏனெனில் அந்த தேர்தலில் சு க தமிழ் காங்கிரசுடனும் , மு காவுடனும் இணைந்து , இனப் பிரச்சினைத தீர்விற்கான ஒரு வேலைத் திட்டத்தை முன்வைத்திருந்தது. வடக்கு கிழக்கில் தமிழ் , முஸ்லிம் , சிங்கள மக்களுக்கென தனித்தனியான அதிகார அலகுகள் உருவாக்கப்படும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாக இருந்தது. இந்த வகையில் வடக்கு , கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த அரசியல் திட்டமானது மிகுந்த முக்கியத்துவமுடையதாக விளங்கியது.. இலங்கையின் இதுவரைகால அரசியல் வரலாற்றில் , வட -கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அந்தஸ்தையும் அரசியல் உரிமைகளையும் அங்கீகரித்த ஒரே ஒரு அரசியல் ஆவணமாக இந்தத் தேர்தல் விஞ்ஞாபணமே வழங்குகிறது.”


அன்று ஜனாதிபதி தேர்தலில் நடைபெற்ற சமபவங்கள் குறித்து நான் முன்னர் ௨௦௮ மத்திய பகுதியில் எழுதிய " வடகிழக்கு மாகான சபைத தேர்தல்களிலிருந்து முஸ்லிம் காங்கிரசின் சுயாதீனத்தன்மை வரை " என்ற கட்டுரையின் சில பகுதிகளை இங்கு இன்றைய ஜனாதிபதி தேர்தல் பின்னணியில் மீளவும் மீட்டுப்பார்க்க நேரிட்டுள்ளது. ( இக்கட்டுரையினை ஆங்கிலத்தில் நான் எழுதி இருந்தேன் இதன் தமிழாக்கம் வேறு ஒரு நண்பர் செய்திருந்தார், அவரின் மொழியாக்க கட்டுரையே இங்கு பிரசுரிக்கப்படுகிறது. )"முஸ்லீம்காங்கிறஸ் ஓர் அரசியற் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டவுடனேயே வடகீழ் மாகாணசபைத் தேர்தலிற் பங்குபற்றியது. இந்தோ-சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகியவுடனே முஸ்லீங்கள் தமிழர்களுக்கு அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள் என்று அஸ்றப் கூறியபோதும் அதை உண்மையாக்கும் முகமாக வடகீழ் மாகாணசபைத் தேர்தலிற் பங்குகொண்டு அதிலே ஒரு காரியாளராகவும் ஆகினார். 1987 இலே முஸ்லீம்காங்கிரஸ் வடகீழ்மாகாணசபைத் தேர்தலிற் பங்குகொள்ளாமல் விட்டிருந்தால் இந்தோ-சிறிலங்கா ஒப்பந்தம் தனது தகுதியை இழந்திருக்கும். ஆதலால் இந்திய அரசாங்கம் முஸ்லீம்காங்கிரஸ்சைத் தேர்தலிற் பங்குகொள்ளும்படி உந்தித்தள்ளி இந்தோ-லங்கா ஒப்பந்தத்தைத் தப்பிப் பிழைக்கச் செய்தது.
சிறீலங்கா சுதந்திரக்கட்சி இந்தோ-லங்கா ஒப்பந்தத்தை எதிர்த்ததால் அது மாகாணசபைத தேர்தலில் பங்குபற்றாமல ;விடவே முஸ்லீம்காங்கிரஸ் யூஎன்பியையும் தமிழ்க் கட்சிகளையும் எதிர்த்துப் போட்டியிடவேண்டி வந்தது. முஸ்லீம் காங்கிரஸ் யூ.என்பி விரோதப் பிரச்சாரத்தை மடைதிறந்து விட்டதோடு அதைநியாயப்படுத்த ;இஸ்லாம் மதத்தைத் துணைக்கழைத்ததோடு அதன் மதத்தண்டனை மரபையும்கூறி யூ என்பிக்கு வாக்களித்தல் பாவமும்(கறாம்) இறைநிந்தனையென்றும் கூறியது.( கறாம் என்பது அரபுமொழியில் தடுக்கபட்டது என்ற மதவியாக்கியானத்தைக் கொண்டது). முஸ்லீம்காங்கிரஸ் தலைமைத்துவம் 1988 தேர்தலில் சிறீமாவோ பண்டாரனாக்காவுக்கு ஒத்தாசை வழங்குவதென்று ஏகமனதாக முடிவெடுத்து சிறீமாவோ பண்டாரனதயக்காவோடு பேச்சுவார்த்தைகளை நடாத்தியது. ஜனாதிபதி தேர்தற்காலங்களில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி வடகீழ்மாகாணத்திலுள்ள தமிழர்களுக்கும் ää முஸ்லீங்களுக்கும் சிங்களவர்களுக்கும் வௌ;வேறான நிர்வாக அலகுகளை ஏற்படுத்தும் பிரேரணையைப் பிரேரித்தது. இந்த வேலைத்திட்டம் கொள்கையளவில் முஸ்லீம் காங்கிரஸ்சாலும் தமிழ்க்காங்கிரஸ்சாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. இந்தத் தேர்தல் அறிக்கை மாத்திரம்தான் வடகீழ்மாகாண முஸ்லீங்களின் உரிமையை அங்கீகரித்தது. ஜனாதிபதி தேர்தலுக்குச் சிலநாட்களுக்கு முன்னர் முஸ்லீங்காங்கிரஸ் தலைமை இந்த நிலைப்பாட்டைப் தன்னிச்சையாகப் புறக்கணித்துவிட்டு முஸ்லீம்காங்கிரஸ் தேர்தலில் நடுநிலமையாக இருக்கப் போவதாகவும் தாம் ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் பிரகடனப் படுத்தியது. கொழும்பில் நடந்த முஸ்லீம்காங்கிரஸ்சின் 8வது வருடாந்த மகாநாட்டிலää; முஸ்லிம் காங்கிரஸ் சிறீமாவோ பண்டாரனாயக்காவுக்கோ றணசிங்கி பிரேமதாசாவுக்கோ ஒத்தாசை வழங்கப் போவதில்லையென்று அஸ்ரப் எழுந்தமானமாகப் பிரகடனப் படுத்தினார். அவரது இந்தத் தன்னிச்சையான எழுந்தமானக் கொள்கைத் திருப்பமானது மத்திய குழு அங்கத்தவர்களையும் ஏன் தேசந்தழுவிய முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களையும் வியாகூலப் படுத்தியது. ஏனெனில் முஸ்லீம் காங்கிரஸ் ஏற்கனவே சிறீமாவோ பண்டாரனாயக்காவுக்கு வாக்களிக்கம்படி முடுக்கியிருந்தது. இருந்தபோதும் ஒரு சிலர் துணிந்து முஸ்லீம்காங்கிரஸ்சின் தலைமைத்துவத்தை ஏன் இப்படியான திடீர் திருப்பம் என்ற கேள்வியைக் கேட்டனர். முஸ்லீம் சமூகத்தின் நன்மைமக்காகத் தலைவரின் உள்ளுணர்வு அப்படியான கொள்கைத் திருப்பத்தை எடுக்க வைத்ததாக முஸ்லீம் காங்கிரஸ்சின் முக்கியஸ்தர்கள் விடையிறுத்தனர். ஒரு சிலருக்கே இந்தத் திடீர் திருப்பத்திற்கான காரணம் தெரிந்திருந்தது. அனேகர் வியாகூலத்தில் பிரமித்துப்;போய் இருக்க விடப்பட்டனர்.
அஸ்றப்பும் சேகு ;இஸ்சாடீனும் சிறீமாவோ பண்டாரனாயக்காவோடு கலந்துரையாடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் குள்ளத்தனமாக யூஎன்பி ஜனாதிபதி வேட்பாளரான றணசிங்கி பிரேமதாசாவோடும் இரகசியப் பேச்சுக்களை நடாத்தினர். ஜனாதிபதித் தேர்தலில் தாம் நடுவுநிலையாக இருக்கப்போவதாக முஸ்லீம் காங்கிரஸ் பிரகடனப் படுத்தியிருந்த போதும் இரகசியமாகப் பிரேமதாசாவின் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்யும்படி செய்திகள் எல்லாப் பிரதேசசபைகளுக்கும் 1989 இல் தேர்தலிற் போட்டியிட இருந்தவர்களுக்கும் மத்தியகுழு அங்கத்தவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் தனது கொள்கை மாற்றத்திற்கான இரகசியத்தை அஸ்றப்பால் பாதுகாக்க முடியவில்லை. அவர் புத்திகூர்மையற்று அந்த இரகசியத்தை பிரசித்தமாக வெளியிட்டு விட்ட்டார். பிரேமதாசா அவருக்குத் தொலைபேசியினூடு தொடர்பு கொண்டு 'அஸ்றப் நீங்கள் என்னை வெற்றியீட்டப் பண்ணியதற்காக நான் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன். உங்களுடைய ஒத்தாசை இல்லாதிருந்தால் நான் ஒருபொழுதும் ஜனாதிபதியாகி இருக்க மாட்டேன்." இதைக் கேள்வியுற்ற அந்தச் சந்தர்ப்பத்தில் கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஓர் இரட்சகரிடமிருந்து ஓரு மதபோதனையைச் செவிமடுத்த உணர்ச்சியோடு 'அல்லாஹ_ அக்பர்"(அல்லாவே பெரியவன்) என்று கூச்சலிட்டனர். பின்பு அஸ்றப் கூறினார் அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் 12:12 என்ற வெட்டுவீதமில்லாமல் அதை 5 ஆக்கி விகிதாரத் தேர்தல் முறையின்கீழ் அதிக முஸ்லீம்கள் பாரளுமன்றத்திற்குப் போவதற்கு ஒத்துக் கொண்டதாகக் கூறினார். இந்தப் படக்காட்சிகள் எல்லாம் இப்பொழுது பெருமளவு மாறிவிட்டபோதும் ஹக்கீம் போன்றவர்கள் தொடர்ந்து அஸ்றப்பை ஒரு புனித மனிதனாகக் காட்டுகிறார்கள். அஸ்றப்பின் கவிதைகள்கூட பொதுவான முஸ்லீம்களிடையே அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் தலைமை வணக்கமென்பது இஸ்லாத்திற்கு எதிரானது. 1989 பெப்ரவரிப் பாராளுமன்றத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நாட்டின் இரணடு பிரதான கட்சிகளுக்குமெதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இருந்த போதிலும் அஸ்றப் யூஎன்பி முஸ்லீங்களின் நலன்களுக்கு எதிரான கட்சியென்று கருதியதோடு ஜனாதிபதித் தேர்தலில் சிறீமாவோ பண்டாரனாயக்கியைக் கழுத்தறுத்த போதும் இப்பொழுது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் சாரத் தொடங்கினார். பாரழுமன்றத் தேர்தலிலே 'எந்த உண்மையான முஸ்லீமும் யானை அடையாளத்திற்கு வாக்களிக்க மாட்டான் " என்று அஸ்றப் பிரகடனப் படுத்தினார்.( இஸ்லாம் மதத்தின் பிரகாரம் உண்மையான முஸ்லீம் என்பது தீர்க்கதரிசியின் போதனைகளைக் கடைப்பிடிப்பதாகும். அவர்களை அரபு மொழியில் அல் மூமினும் என்று அழைப்பார்கள். குhரானிலுள்ள ஹ_யுறத் 49 உண்மையான முஸ்லிங்களைப் பற்றி விஸ்தரிக்கிறது)

தற்போதய மாகாணசபைத் தேர்தலில் யார் யூஎன்பியின் சின்னமான யானைக்கு வாக்களிக்கவில்லையோ அவர்கள் உண்மையான முஸ்லீம்கள் ஆகார்கள் என்று ஹக்கீம் கூறக் கூடும். அவரது அண்மைக்கால (உம்றா)சின்ன யாத்திரை நாடகமும் அதைத்தொடர்ந்த பாரளுமன்றப் பதவியை இராஜினாமாச் செய்ததும் அவரையோர் பாராளுமன்றப்பதவியைக்கூடத் தியாகம் செய்த தலைவர் என்று காட்டுவதோடு அவரை ஒரு மத நம்பிக்கையுள்ள அர்ப்பணிப்போடு கூடிய முஸ்லீம் என்று காட்டுவதற்காகவுமாகும். இந்த மதக் கடமைகள் எல்லாம் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்களின் கட்சி வியாபாரம் ஆகும். அதனூடே அவர்கள் சொந்தப் பிரதேச முஸ்லிங்களை மாத்திரமல்ல எத்தனையோ மைல்களுக்கு அப்பால் வசிக்கும் முஸ்லீங்களையும் இதனூடு நம்பவைக்கிறார்கள். முஸ்லீம்காங்கிரசின் ஒவு;வொரு நகர்வுகளையும் மதக் கிளைக் கதைகளோடு தொடர்பு படுத்தி அவர்களைப் புனிதர்களாக்குவதற்கும் சில முஸ்லீம்கள் இருக்கிறார்கள். இதை எழுதுபவர் ஓரு குறிப்புரையை அவதானித்தார். ஒரு பலமான முஸ்லீம்காங்கிரஸ் அங்கத்தவர் ஹக்கீமின் உம்றா யாத்திரையையும் அவரது மாகாணசபைத் தோதலில் பங்குபற்றுதலையும் பற்றிக் கூறும்பொழுது 'சர்வ வல்மைபடைத்த இறைவனான அல்லா மதிப்புக்குரிய றவ் ஹக்கீமையும் அவரது குழுவையும் வெற்றிக்கு ஆசீர்வதிப்பாராக என்று வாழ்த்தியதோடு அதை புனித தீர்க்கதரிசியான மோசஸ்சை அவர் எதிர்கொள்ளும் எல்லாச் சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய பாதுகாப்புக்கும் போகும் வழிக்கும ;வெற்றிக்குமாக ஆசீர்வதித்ததை ஒப்பிடுகிறார். இங்கே சவாலாகப் பிள்ளையான் பாறஓவும் வடகீழ்மாகாண தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் உவமிக்கிறார்.
ஜனாப் அஸ்ரப்; அவர்களுக்கும் முன்னய ஜனாதிபதியான சந்திரிகா குமாரத்துங்காவுக்கும் இடையயே நடைபெற்ற முரண்பாட்டை அடுத்து அஸ்றப் அவர்கள் மெக்காவுக்குப் பறந்து உம்றா தொழுகை செய்துவிட்டு அங்கிருந்து ஒரு நீண்ட கடிதமொன்றை எழுதி சிங்கள முஸ்லீம் காங்கிரஸ் அங்கத்தவரான அசிதா பேரேராவுக்குத் தொலைநகல் செய்து தனக்காக ஜனாதிபதியிடம் சொல்லச் சொன்னார். முஸ்லீம் காங்கிரஸ்சின் முதிர்ந்த அங்கத்தவர் ஒருவர் அஸ்றப் சந்திரிக்காவுக்கு எழுதிய கடிதம் ஒர் இலக்கியப் பெறுமதி வாய்ந்தென்று கூறினார். அவர் மேலும் கூறுகையில் மற்றய உச்சியிலுள்ள எல்லா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்களைவிட அஜிதா பெரேராவே தகுதி வாங்தவர் என்றும் 2000 ஆண்டு கல்முனையில் நடந்த ஒரு தேர்தற் பிரச்சாரக் கூட்டத்தில் அஜிதா பெரோராவே மிகவும் நம்பகம் வாய்தவர் என்றும் கூறினார். அஜிதா பெரேரா சானக அமரத்துங்காவின் லிபரல் கட்சியிலிருந்து முஸ்லீம் காங்கிரஸ்சில் சேர்ந்தவராகும். இருந்தபோதும் அஜிதா முஸ்லீம் காங்கிரஸ்சைப் பலப்படுத்துமுகமாக தனது பாராளுமன்றப் பதவியை ;இராஜினாமாச் செய்தார். அவரது கடைசிப் பாராளுமன்றப் பேச்சு அவரது தாராளவாத உள்ளத்தைப் பிரதிபலிக்கும். 'நான் கட்சி பலமடைய வழிதிறந்து விடுவதற்காகவே இராஜினாமாச் செய்கிறேன்" அவர் முக்கியமான சமுதாயச் சேவைகளான சுகாதாரமää; போக்குவரத்து மற்றும் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவும் மக்கள் முன்னணி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தவராகும்.
இதை எழுதுபவர் 1989 இல் மட்டக்கிளப்பில் ஒரு வயதான சூஃபி மனிதனோடு இலாவகமாகக் கலந்தரையாடும்பொழுது அவர் மிகச் சந்தோஷமாக மரச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்ததையும் குhரானில் 'சிட்ரத் அல் முந்தகாவில்" மரத்தைப் பற்றி விவரிக்கப் பட்டிருப்பதையும் பற்றிக் கூறினார். முஸ்லீம் காங்கிரஸ்சின் சகதி அரசியல் எவ்வாறு மரச் சின்னத்தைப் புனிதமாக மாற்றியிருக்கிறதென்றதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
வடகீழ்மாகாணசபைத் தேர்தலின் பின்விளைவுகள்:-
இருபது வருடங்களுக்கு முன்னர்ää அப்பொழுது றவ் ஹக்கீம் ஒரு முஸ்லீம் காங்கிரஸ் அங்கத்தவராகக்கூட இல்லாத நாட்களில் முஸ்லீம் காங்கிரஸ்சின் அங்குரார்ப்பண அங்கத்தவர்கள் உயிராபத்தை விலைக்குவாங்கி வடகீழ் மாகாண சபைத் தேர்தலிற் பங்கு கொண்டு போட்டியிட்டனர். பிரேமதாசாவுக்கும் புலிக்குமிடையே நடந்துகொண்டிருந்த தேன்நிலவைப் பேணுமுகமாக முஸ்லீங்கள் புலியின் கருணையில் மாத்திரம் தப்பிப் பிழைக்க விடப் பட்டிருந்தனர். புலி வாழைச்சேனைää மூதூர்ää தோப்பூர் முஸ்லீங்களைக் கொன்று குவித்த காலமான றணில் பிரதமராக இருந்த நாட்களில்ää றணில் தனது சமாதான ஒப்பந்தத்தைப் பாதுகாக்க மாத்திரம் கவலைப் பட்டாரே ஒழிய முஸ்லீம்களதும் மற்றவர்களதும் உயிர் போவதையல்ல.
ஜனவரி 30ää 1990 இல் முஸ்லீம் காங்கிரஸ்சின் 70 அங்கத்தவர்கள் புலிகளால் கடத்தப்பட்டனர். பிரேமதாசா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் புலியோடு கதைத்து அவர்களுள் 50 முஸ்லீம்களை விடுதலையாக்கினர். அந்த அவல நாளில் கல்முனை பொலிஸ் பாசறை புலிகளால் சுற்றிவளைக்கப் பட்டதைத் தொடர்ந்து வடகீழ் மாகாணசபை அங்கத்தவர் மொகமட் யூனுஸ் லெப்பே முகமட் மன்சூர்(முஸ்;லீம் காங்கிரஸ்) கொல்லப் பட்டனர். ஜனாப் வை.எல் எம்;;.மன்சூர் புலியால் அவரது வீட்டில் சுடப்பட்டு இரத்தம் பெருகவிடப் பட்டார். அவரைப் புலிகள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். அதையடுத்து அவரது உடலம் புலிகளால் பிடுங்கிச் செல்லப் பட்டு எவர்க்கும் தெரியாத ஓரிடத்திற்குக் கொண்டுசெல்லப் பட்டது. அந்தத் தலைவிதி தத்தளித்த நாளில் புலி வேறு 5 நோயாளிகளை ஒரு தனியார் மருத்துவ மனையில் சுட்டுக் கொன்றதோடு மேலும் 10 பேரையும் ஒரு டாக்டரையும் கடத்திச் சென்றனர். இவர்களுள் முன்பு புலியின் அட்டூளியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அடங்குவர். புலி முஸ்லிம் காங்கிரஸ்சைத் தடைசெய்தது. அதையடுத்து முஸ்லீம் காங்கிரஸ் தானைத் தளபதிகள் பாதுகாப்பின் நிமித்தம் கிழக்கைவிட்டு தெற்கிற்குக் குடிபெயர்ந்து அங்கு தமது இரணடாம் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

The danger of US-China war and Australia’s anti-democratic election laws-by Peter Symonds

The new anti-democratic election laws in Australia, aimed at deregistering so-called minor parties, go hand in hand with the efforts of the ...