Monday, 11 April 2011

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்- 7

.                                                                                                                எஸ்.எம்.எம் பஷீர். பிரபாகரன் தலைமையிலான புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்காவிற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடாந்து (22.02.2002) வன்னியில் சிறுவர்களுக்கான ஆயுதப்பயிற்சியினை மார்ச் மாதம் புலிகள் தீவிரப்படுத்தியமைக்கான ஆதாரங்கள் இவை

சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் லண்டனில் 23 மார்ச் 2002ல் மார்லபோண் லண்டன் கில்ரன் ஹொட்டலில் (Marlebone Hilton Hotel , London)இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து எனது அதிருப்தியினை நான் வெளிப்படுத்தியபொழுது ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களை ரணில் விக்கிரமசிங்க கவனிப்பாரென்றும் ஏனைய சமூகங்களுடன் சமமாக நடத்துவதை உறுதிசெய்வாரென்றும் குறிப்பிட்டாh. ஆனால் இந்தக்கூட்டம் சிறீ.ல.மு.காவினால் ஒழுங்கு யெ;யப்பட்டது என்று உண்மைக்கு மாறாக உறுதியாக குறிப்பிட்டார்.


ஏனெனில் ஹொட்டல் நிர்வாகத்தினர் இக்கூட்டத்தினை ஒழுங்கு செய்தவர்கள் ஐக்கிய ராஜ்யத்திலுள்ள இலங்கை தூதவராலயத்தினர் என்று நிரலிட்டிருந்தனர். மேலும் இக்கூட்டத்தில் இரண்டு அரச சிங்கள அவரின் அமைச்சின் உத்தியோகஸ்தர்களும் இச்சமூகக் கலந்துரையாடல்களுக்கு சம்பந்தமில்லாமல் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் நோர்வேயினது சகல செயற்பாடுகளும் தீவிரமாக ஆராயப்படவேண்டும் இதுகுறித்து இலங்கைபற்றிய தனது ஆய்வொன்றில் (Prof. Alan Keenan) என்ற அரசியல் ஆய்வில் பேராசிரியர் அலன் கீனன் (Prof. Alan Keenan) என்பவர் “ஐ.தே.கட்சி –நோர்வேயினது வியூகம் புலிகளுக்கு இராணுவ சுதந்திர ஆதிக்கத்தை வடகிழக்கில் வழங்கியது, ஐ.தே.கட்சி அரசு பகிரங்கமாக ஒருபோதும் யுத்த நிறுத்தம் தொடர்ந்தவுடனே ஆரம்பித்த புலிகளின் அரசியல் படுகொலைகளையோ, தொடர்ந்த சிறுவர் படைச்சேர்ப்பு, ஆயதக் கட்டமைப்பினையோ அல்லது சட்டமீறலான வரிவிதிப்பினையோ விமர்ச்சிக்கவில்லை”. என்று குறிப்பிட்டுள்ளார். இவர் இலங்கையின் நேரடியாக விஜயம் மேற்கொண்டு தனது ஆய்வுகளை மேற்கொண்டவராவார். மேலும் இவர் புலிகளின் இடைக்கால தன்னாட்சிச்சபைக்கான நிர்வாக சபை (ISGA)குறித்து “பேரில்தவிர இடைக்கால தன்னாட்சிச்சபைக்கான நிர்வாக சபை ஒரு சுதந்திர நாட்டிற்கான திட்டவரைவு” என தெளிவாகக் குறிப்பிட்டவர். புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சமதையாக முஸ்லிம்களின் தேசியத் தலைவரென தம்மை பிரகடனப்படுத்தி ஒப்பந்தத்தில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என்றும் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் என்றும் ஒத்துக்கொள்ளப்பட்ட சரத்தான ”அரசிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையில் ஆரம்பிக்கப்படவுள்ள பேச்சுவாhத்தைகளின்போது முஸ்லிம் மக்கள் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளும் ஒரு தரப்பாக பங்குபற்றுவதென்றும”;. ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இறுதிப் பேச்சுவாhத்தைவரை இடம்பெறவில்லை.

புலிகள் திட்டவட்டமாகவே ஒப்பந்தமீறல்கள் செய்தது மட்டுமல்ல முஸ்லிம்களை மூன்றாம் தரப்பாக எச்சந்தர்ப்பத்திலும் அங்கீகரிக்கவில்லை. மறுபுறம் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சௌகரியமாக இதனை மறந்துவிட்டு பத்திரிகை அறிக்கைகளில் தமது சவால்களை காட்டிவந்தனர். இவ்வாறான சூழ்நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தளமானது ஏகபோக உரிமைக்குரலானது மேலும், மேலும் நெருக்கடிக்குள்ளானபோது நோர்வேயின் செயற்பாடுகளில் முஸ்லிம்கள் தொடர்பான மூன்றாம்தரப்புப் பிரச்சினை அதிலிருந்து வெளியேறியபிரிவினரால் தீவிரமாக முன்வைக்கப்பட்டபோது; இந்நிலைப்பாட்டினுடைய சிக்கல்களை உணர்ந்துகொண்ட நோர்வே அரச ஒரு அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டது. ஹக்கீம பாலசிங்கத்தை லண்டனில் சந்திப்பதற்கு எற்பாடு செய்யப்பட்டது.

நோர்வேயின் ஏற்பாட்டில் ஹக்கீம் பாலசிங்கத்தை லண்டனில் சந்திப்பதற்கு எற்பாடு செய்யப்பட்டது. ஹக்கீம் பாலசிங்கத்தை சந்திக்கமுன்பு அன்றைய தினம் என்னை சந்துத்துவிட்டே சென்றார்.ஆயினும் எங்களது சந்திப்பு தனிப்பட்டதாவே அமைந்தது.அவர் எதிர்கொள்ளப்போகும் பேச்சுவார்த்தை குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. ஆனால் பின்னர் முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுவிட்டதென்றும் பாலசிங்கத்துடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததென்றும் ஹக்கீம் எவ்வித ஆதாரமுமற்று வெளிப்படையான எதிர்த்தரப்பு (புலிகள்) உறுதிப்பாடுமின்றி கருத்துக்களை முன்வைத்தார். பாலசிங்கம் இறந்தபொழுது பிரபாகரனுக்கு சமமாக அனுதாபச் செய்தியினையும் ஹக்கீம் வெளியிட்டார். “அதாவது பாலசிங்கம் சிறந்த புத்திஜீவி, தத்துவ வித்தகர், யாக்கிரதையான பேரம்பேசுபவர், ராஜதந்திரி, தமிழ் தேசியவாதி, புலமையாளர், முஸ்லிம்களின் குரலை ஆர்வத்துடன் செவிமடுத்த தமிழ் தேசத்தின் காதுகள், அரசியல் தத்துவஞானி” என்று குறிப்பிட்டார்.

 பிரபாகரன் பாலசிங்கத்தினை தமிழ் தேசத்தின் குரல் என்று விதைந்துரைக்க ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் குரலுக்கு செவிமடுத்த காதுகள் என்று வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பொழுது செவிடாய் இருந்த காதுகள்பற்றி விதைந்துரைத்தார்.மேலும் இவரே தமிழ் செல்வன் இறந்தபோதும் அவர்களுக்கிடையிலான உறவு குறித்து சிலாகித்து பாராளுமன்றத்திலே அனுதாபம் தெரிவித்தவராவார்.

இலங்கை அமைச்சர்களில் இருவரே பிரபாகரனை சந்தித்துள்ளார்கள் இவ்விரண்டு சந்திப்புக்களும் ஐ.தே கட்சி ஆட்சியிலிருந்தபொழுதே நடைபெற்றிருக்கின்றன 18 ஏப்ரல் 1990 ம் ஆண்டு முன்னாள வெளியுறவு அமைச்ர் ஏ.சி.எஸ் ஹமீத் அவர்களுக்கு பின்னர் சந்தித்தவா ரவூப் ஹக்கீமாகும் ஆனால் முன்னையவரின் சந்திப்பு பிரேமதாசாவின் தூதினை எடுத்துச்செல்ல பின்னே வரும் சந்திப்பு தமது சுய அரசியலை ஸ்திரப்படுத்துவதற்கும் நோர்வே அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவதற்குமாகும்.

(தொடரும்)

July 15, 2009
thenee.com,lankamuslims.com.mahavalai and unmaikal


No comments:

Post a comment

"நுனி நாக்கில் தேசியம், அடி நாக்கில் அதிகாரப்பசி!

“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைக த ள்  தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார்  ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை ...