தவறான முன்னுரிமைகள் புதுடெல்லியை மோசமான பெருந்தொற்று நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளது

 
See the source image 

 Photo: courtesy: pennlive.com

இந்தியாவின் கோவிட் - 19 பெருந்தொற்று நிலைமை கட்டுப்பாட்டை
இழந்துள்ளது. உண்மையில் இது இந்தியா பூகோள அரசியல்
விளையாட்டுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக கோவிட் - 19 சம்பந்தமான
போராட்டத்தில் கவனம் செலுத்துவதை வேண்டி நிற்கிறது. சிஎன்என் செய்திச் சேவை தெரிவிப்பதன் பிரகாரம் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) வரை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 200,000இற்கும் அதிகமான புதிய நோயாளிகள் உட்பட 259,170 கோவிட் - 19 நோயாளிகள் தொகை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 1,700இற்கும் அதிகமானவர்கள் இறந்தும் உள்ளனர். 

டெல்லி முதலமைச்சர் அரவிந் கெய்ரிவால் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்
18) கூறுகையில், டெல்லி வைத்தியசாலைகளில் 100இற்கும் குறைவான அதிதீவிர சிகிச்சைக் கட்டில்களே இருப்பதாகவும், ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள இந்திய மக்கள் பலர் வைத்திய உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள
தட்டுப்பாட்டைக் கண்டனம் செய்துள்ளனர்.


இந்தியா அளிக்கும் முன்னுரிமைகள் தவறானவை. புதுடெல்லி
பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதைவிட பூகோள அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுகிறது. ஒரு
குவாட் (QUAD) அங்கத்தவரான இந்தியா சீனாவை எதிர்ப்பதில் மிகத்தீவிரமாக இருக்கிறது. இந்தியா முன்னர் சீனாவுடன் போட்டி போடுவதற்காக கோவிட் - 19 தடுப்பூசிகளை அன்பளிப்புச் செய்வதில்
அதிக ஈடுபாடு காட்டியது. இப்பொழுது கொவிட் புதிய அலை தாக்கும் நேரத்தில் தடுப்பூசித் தட்டுப்பாட்டில் இருக்கிறது.


அமெரிக்காவின் பூகோள அரசியலை இந்தியா பின்பற்றுகின்ற போதிலும் கூட,கோவிட் - 19 நெருக்கடிகளின்போது இந்தியாவால் மேற்கு நாடுகளின்
உதவியைப் பெறமுடியாமல் இருக்கிறது. இந்தியாவுக்கான தனது பயணத்தை
இரத்துச் செய்துள்ள பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன், தான்
அப்படிச் செய்தது “நியாயமானது” எனக் கூறியிருக்கிறார். அத்துடன் பிரித்தானியா இந்தியாவை பிரயாணத்துக்கான தனது தடைப்பட்டியலிலும் சேர்த்திருக்கிறது.


இந்தியாவுக்கான தடுப்பூசி மூலப்பொருட்களுக்கான தடையை
அமெரிக்கா விரைவில் நீக்கும் என இந்தியா எதிர்பார்க்கின்றபோதிலும், அந்த
வேண்டுகோளை கவனத்தில் எடுப்பதாக மட்டுமே பைடன் நிர்வாகம்
தெரிவித்திருக்கிறது. இந்தியா எப்பொழுதும் தன்னை அமெரிக்க தேர்ச்சில்லுடன் இணைத்து வைத்திருக்கின்ற போதிலும், பிரதான மேற்கு நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டுவதாக இல்லை.இந்தியாவின் இராஜதந்திரமும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஊடகத்
தகவல்களின்படி, இந்தியப் பிரதமர் மோடி இந்திய – ஐரோப்பிய உச்சி
மாநாட்டுக்காக போர்த்துக்கலுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் இரத்தாகி
இருப்பதுடன், அவரது பிரான்ஸ்சுக்கான பயணமும் பெரும்பாலும் கோவிட் - 19
நெருக்கடி காரணமாக மறுதிகதியிடப்படலாம் எனத் தெரிகிறது.


“பெரும் சனத்தொகை கொண்ட இந்தியாவால் இத்தொற்றை விரைவாக
கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதுடன்,உலக அளவில் பெருந்தொற்றை ஒழிக்கும் கடைசி நாடாகவும் இந்தியா இருக்கக்கூடும்” என ஃபூடான்
பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கைகள் கழகத்தின் ஒரு பேராசிரியரான லின் மின்வாங் “குளோபல் ரைம்ஸ்” பத்திரிகையிடம் தெரிவித்தார்.
“இந்தியாவின் கோவிட் - 19இற்கு எதிரான போராட்டம் குழப்பமாக
இருப்பதுடன், பெருந்தொற்றின் உண்மையான நிலைமை பற்றி அந்த நாடு
கணிப்பீடு செய்ய முடியாமலும் உள்ளது” என லின் குறிப்பிட்டார்.


இந்தியாவின் பெருந்தொற்று நிலைமை ஒரு கட்டத்தில் முன்னேற்றகரமாக இருந்தது. ஆனால் புதுடெல்லியும் மக்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பெரிய அளவிலான ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடத்தியதால் இந்தியாவால் இரண்டாவது அலையைத் தடுக்க முடியாமல் போய்விட்டது. உதாரணமாக, ஏப்ரல் மாதத்தில் இந்திய மதத் திருவிழாவான கும்பமேளா என்ற நிகழ்வுக்கு
இலட்சக்கணக்கான இந்தியர்கள் சென்றதுடன், கோவிட் - 19 நெருக்கடிகள் வளர்ந்துவந்த சூழலில் அரசியல்வாதிகள் பெரியளவிலான தேர்தல் கூட்டங்களையும் நடத்தினார்கள்.

சீனாவும் இந்தியாவும் சனத்தொகை கூடிய நாடுகளாக இருந்தபோதிலும், கோவிட் -19இற்கு எதிராக அவை நடத்திய போராட்டங்களின் பெறுபேறுகள்
மாறுபட்டவை. இந்தியா கடந்த வருடம் சீனாவில் ஏற்பட்ட கோவிட் - 19 பற்றிய
சீன அனுபவத்தைக் கற்றுக்கொள்ளத் தவறியது மட்டுமின்றி, குறைந்தபட்சம்
அதை ஒரு முன்னெச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளவில்லை. உதாரணமாக, இந்த நோய் ஏற்பட்ட சூழலில் சில இந்திய ‘வாடகைக் குதிரைகள்’ சீன மருத்துவ நிறுவனங்களைக் குறிவைத்ததுடன், சில
இந்திய ஊடகங்கள் பெருந்தொற்றைப் பயன்படுத்தி சீனாவைப் பிளவுபடுத்தும் நோக்குடன், உலக சுகாதார அமைப்பில் தாய்வான் தீவு அங்கத்துவம் பெற புதுடெல்லி ஆதரவளிக்க வேண்டும் எனவும் நியாயம்
பேசின.


இந்தியா தான் ஒரு மிகப்பெரிய சக்தியாக வரவேண்டும் என பேராசைப்படுவதை வைத்துக்கொண்டு இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயத்தைக் கொண்ட நாடு என மேற்குலகால் சிலாகிக்கப்படுவதுண்டு.
ஆனால் இந்த நிலையை அடைவதற்கு இந்தியா பூகோள அரசியல்
விளையாட்டுகளிலும் சித்தாந்தத்திலும் தங்கி நிற்பது உதவியாக இருக்க முடியாது. இந்தியா உண்மையில் நிச்சயமாக தனது தேசிய பலத்தை வளர்க்கவும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் வேண்டும்.
அல்லது இந்தியா குறைந்தபட்சம் மக்களின் வாழும் உரிமையையாவது பாதுகாக்க வேண்டும்.


-குளோபல் ரைம்ஸ்ஸ் (ஏப்ர்ரல் 20)

Source: vaanavil may 2021




No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...