இலங்கையில் 5 நாட்களில் 100க்கும் அதிகமான கோவிட் மரணங்கள்


லங்கையில் 5 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான கோவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 9ஆம் திகதி நாட்டில் கோவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்து 801 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 120 கோவிட்-19 மரணங்கள் பதிவாகியதுடன், மரணங்களின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.

10 ஆம் திகதி 26 மரணங்களும், 11 ஆம் திகதி 23 மரணங்களும், 12 ஆம் திகதி 18 மரணங்களும், 13 ஆம் திகதி 24 மரணங்களும், 13 ஆம் திகதி 29 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 921 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, இலங்கையின் கொவிட்-19 மரணங்களின் சதவீதமானது, 0.67 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச கோவிட்-19 மரணங்களின் சதவீதம் 2.07 ஆக பதிவாகியுள்ளது. உலகளவில் பிரேஸிலில் கொவிட் மரணங்களின் சதவீதம்  அதிகமாகும். 2.79 சதவீதமாக பிரேஸிலில் கோவிட் மரணங்கள் பதிவாகின்றன.

பிரான்ஸில் 1.84 சதவீதமாகவும், அமெரிக்காவில் 1.78 சதவீதமாகவும், இந்தியாவில் 1.09 சதவீதமாகவும் கொவிட்-19 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கோவிட்-19 தரவு தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் எந்தவித ஒவ்வாமையும் காணப்படாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அந்த தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் நான்கு வாரங்களுக்கு மக்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர், அனைத்து நெருக்கடி நிலையையும் எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்கு சுகாதார வழிகாட்டல்களே சிறந்த தீர்வாகும் என தெரிவித்துள்ள அவர், வீடுகளுக்கு வைரஸை கொண்டு செல்லும் வகையில் செயற்பட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கி இலங்கைக்கு நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளது.

உலக வங்கி, இலங்கைக்கு 80.5 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் உலக வங்கியின் இலங்கை அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அவசர நடவடிக்கைகள் மற்றும் அதற்கான சுகாதார கட்டமைப்புகளை தயார்படுத்தும் செயற்திட்டங்களுக்குமென உலக வங்கியால் வழங்கப்படும் இரண்டாவது நிதியுதவி இது என்றும் தெரிவித்துள்ளது.

இரண்டாவது தடவையாக வழங்கப்படும் மேற்படி நிதியுதவி உலக வங்கியினால் தடுப்பூசி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முறைமைக்கிணங்க தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் அதனை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கவும் ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக உலக வங்கியின் இலங்கை அலுசலகம் தெரிவித்துள்ளது.


Source: chakkram.com

 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...