கடாபி உண்மையில் ஒரு சர்வாதிகாரியா?


See the source image

Photo: Courtesy: Yahoo


அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் நலன்களுடன் சமரசம் செய்யாமல் தனது மக்களினது தேசிய நலன்களையும், முழு ஆபிரிக்க
மக்களினதும் நலன்களையும் பாதுகாத்து நின்றதன் காரணமாக கடாபி ஒரு
சர்வாதிகாரி எனவும், மனித உரிமைகளை மிகவும் கொடூரமாக
துஸ்பிரயோகம் செய்பவர் எனவும் முத்திரை குத்தப்பட்டு வந்துள்ளார்.
கடாபியின் கீழ் லிபியா எண்ணெய் வளமிக்க ஒரு புகழ்மிக்க நாடாக
இருந்து வந்துள்ளது. லிபிய மக்கள் முழுமையான சமாதானம், மகிழ்ச்சி,
செல்வம் என்பனவற்றை அனுபவித்தனர். மின்சாரம், இலவச மருத்துவம், கல்வி உட்பட பெரும்பாலான எல்லாவற்றையும் கடாபியின் அரசாங்கம் மக்களுக்கு அளித்தது.


அவர் வீட்டு நிர்மாணக் கடன்கள், அரச வங்கிகளிலிருந்து வட்டியற்ற கடன்கள்,
பிரசவ விடுமுறை, விவசாயத்துக்கு மானியங்கள், தானியங்கள், நிலம் மற்றும்
எல்லா வகையான உபகரணங்களுக்கும் மானியங்கள், ஒரு கார் வாங்குவது
உட்பட கட்டணமற்ற வேறு பல அரசாங்க வருமானங்கள் என்பனவற்றை
மக்களுக்கு வழங்கினார். எல்லா தனிப்பட்ட பயணங்களுக்குமான
கட்டணத்தில் அரைவாசியை அரசாங்கமே செலுத்தியது. கடாபி ஒரு பெரிய ஆற்றை உருவாக்கி லிபிய மக்களில் 75 சத வீதமானோருக்கு சுத்தமான குடிநீரை வழங்கியதுடன், அடிக்கடி நாட்டில் ஏற்படும் வரட்சியையும் தடுத்து நிறுத்தினார். உலகிலேயே மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தைக் கொண்டிருந்த இந்த ஆற்றை நேட்டோ படைகள் 2011இல் அழித்தன. 

 

உண்மையில் கடாபிக்கு என்ன நடந்தது? கடாபியின் அபிலாசைகளால் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் குழப்பமடைந்தனர். புதிய USA  திட்டத்தின் அர்த்தம் ஆபிரிக்காவின் ஐக்கிய அரசுகளாகும்
(UNITED STATES OF AFRICA ).  விசேடமாக மத்திய கிழக்கின் பங்குபற்றுதலுடன் கூடிய நிதி நிறுவனங்களாகும். 1992இல் 45 ஆபிரிக்க மற்றும் மத்திய
கிழக்கு நாடுகள் ஆபிரிக்காவுக்கும் மத்திய கிழக்கிற்கும் என செயற்கை
விண்கோள்களை உருவாக்குவது என்ற உடன்பாட்டுக்கு வந்தன. இந்தச்
செயற்கைக் கோள்களையும் தொலைத்தொடர்பு வசதிகளையும்
சீனாவும் ரஸ்யாவும் வழங்க இருந்தன.


இந்தத் திட்டத்துக்கான மொத்தச் செலவு 4.5 பில்லியன் டொலர்கள் எனக்
கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டத்தை ஆரம்பிக்கும் பொழுது 3
பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி தேவைப்பட்டது. எனவே, ஜனநாயக சாம்ராஜ்யத்தின் (Democratic Empire) நல்லாதரவுடன் இலுமினாட்டியினால் (Illuminati )  நடத்தப்பட்டு வந்த சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெறுவது என 45 நாடுகளும்
தீர்மானித்தன.


2007இல் இந்தச் செயற்கைக்கோள் திட்டத்துக்கு உதவுவதற்கு கடாபி
முன்வந்ததுடன், அதற்காக 2.6 பில்லியன் டொலர்களைத் தருவதாகவும்
அறிவித்தார். இது சர்வதேச நாணய நிதியத்தின் வட்டியுடனான கடனைப்
புறம்தள்ளியதுடன், மத்திய கிழக்கில் கடாபிக்கு செல்வாக்கையும்
ஏற்படுத்தியது. அத்துடன் கடாபியின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட நிதி
நிறுவனங்கள் ஆபிரிக்காவுக்கும் மத்திய கிழக்கிற்கும் பலத்துக்கு மேல் பலத்தை அளித்தன. அந்த மூன்று நிதி நிறுவனங்களானவை:


1. கமரூன் நாட்டைத் தலைமையகமாகக் கொண்ட ஆபிரிக்க நாணய நிதியம்.
இந்த நிதியம் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ந்தும் இலுமினாட்டியின் சர்வதேச நாணய நிதியத்தில் தங்கியிருக்க வேண்டிய தேவையை இல்லாதொழித்ததுடன், அதனால் எதிர்காலத்தில் பிரான்சுக்கு
கூடுதலான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.


2. நைஜீரிய நாட்டைத் தலைமையகமாகக் கொண்ட ஆபிரிக்க மத்திய வங்கி. இதன் மத்திய நாணயத்தின் காரணமாக ஆபிரிக்கா தொடர்ந்தும் அமெரிக்க
டொலரையோ அல்லது யூரோவையோ பயன்படுத்தும் நிலையை இல்லாதொழிக்கும்.


3. லிபியாவினால் உருவாக்கப்பட்ட முதலீட்டு வங்கி. இந்த வங்கி ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் முதலீடுகளைக் கையாளும். ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் இந்த மூன்று நிதி நிறுவனங்களையும் உருவாக்கும் நடவடிக்கைகளை அங்கீகரித்த
அதேவேளையில், ஐரோப்பாவில் இருந்த சாம்ராஜ்யங்களும் ஜனநாயகங்களும் இந்த நடவடிக்கை தங்களது நலன்களுக்குப் பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் என்ற காரணத்தால் கவலையடைந்ததுடன், அதை
வன்மையாகவும் எதிர்த்தன. விசேடமாக உலகின் பிரதான ஊடகங்கள், குறிப்பாக அமெரிக்க ஊடகங்களும் அவற்றின் கூட்டாளிகளும் சர்வாதிகாரிகள் போல கடாபி தனது சொந்த மக்களையே கொல்கிறார் என்றும், அதனால் லிபிய மக்கள் அவருக்கு எதிராகக் கிளர்ச்சி
செய்ய வேண்டும் எனவும் பொய்யான பிரச்சாரங்களை உலக அரங்கில்
அவிழ்த்துவிட்டனர். கடாபி ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த நேரத்தில் அவர்கள் கடாபியின்
நண்பர்களுக்காக எனச் சொல்லி “பூக்கள் புரட்சி”யை ஆரம்பித்தனர்.


இந்தச் சூழ்நிலையில் 2011இல் “சர்வாதிகாரியுடன் போர், மனித உரிமைகளைப் பாதுகாத்தல்” என்று உலகத்துக்குச் சொல்லிக்கொண்டு
நேட்டோ லிபியா மீது தாக்குதல் தொடுத்தது. லிபியாவின் சட்டபூர்வமான
அரசாங்கப் படைகள் மீது பிரான்ஸ் முதலில் விமானத் தாக்குலைத்
தொடுத்ததுடன், அமெரிக்காவும் பிரித்தானியாவும் பின்னர் அதில்
இணைந்து கொண்டன. கடாபி படுகொலை செய்யப்பட்ட பின்னரான 10 ஆண்டுகளில் லிபியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி ஒவ்வொரு நாளும் பெரும் அழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. லிபியா இப்பொழுது இரண்டு பகுதிகளாக பிளவுண்டுள்ளது. கிழக்கு லிபியாவை ரஸ்ய ஆதரவு பெற்ற பெங்காஸியை தளமாகக் கொண்டு ஜெனரல் காலிஃபா கப்ஃரார் வழிநடத்தி வருகிறார். மேற்கு லிபிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் தளம் கொண்டுள்ள திரிபொலியை தளமாகக் கொண்டு அமெரிக்க ஆதரவுடன் செயற்பட்டு வருகிறது.


நாடு இப்பொழுது தம்மை மத்திய மற்றும் மதவாத சக்திகள் என்று
சொல்லிக்கொள்ளும் கிளர்ச்சிக் குழுக்களின் செயற்பாட்டுத் தளமாக
மாறியுள்ளது. நாட்டின் உள்கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டு, பொருளாதாரம் அதளபாதாளத்தை அடைந்து, மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 42 வருடங்கள் ஆட்சியில் இருந்த தமது தலைவர் கொலை செய்யப்பட்டதையிட்டும், ஒரு மகத்தான ஜனநாயக சாம்ராஜ்மாக இருந்த தமது நாடு இன்று ஒரு யுத்தகளமாக  மாறியிருப்பதையிட்டும் லிபிய மக்கள் மிகவும் துக்கமடைந்த
நிலையில் உள்ளனர்.


Source: vaanavil May 2021


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...