இன்று கறுப்பு தினம்!

 


ந்திய விவசாயத்தை விவசாயிகளிடமிருந்து பறித்து கார்ப்பரேட் முதலாளிகளிடம் கைமாற்றி விடும் வகையில் நரேந்திர மோடி அரசு மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை அராஜகமாக நிறைவேற்றியது. இதைக் கண்டித்து இதுவரை உலக வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த ஆறுமாதங்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மே 26 ஆம் தேதி முதல் விவசாயிகளின் போராட்டம் ஆறு மாதங்களை பூர்த்தி செய்கிறது.இதையொட்டி நாடு முழுவதும் கறுப்பு தினமாக கடைப்பிடிக்க விவசாயிகள் சங்கங்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளன. இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று ஏழாவது ஆண்டு நிறைவு பெறும் நாளாகவும் மே 26 அமைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த தேசபக்த போராட்டம் வீடுகளில் கறுப்பு கொடியேற்றி கறுப்பு நாளாக கடைப்பிடிக்க வேண்டியது இந்தியமக்கள் அனைவரது கடமையுமாகும். இப்போது கூட போராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு தயாராக இல்லை. மாறாக மாற்றுத் திட்டங்களை முன்வைத்தால்தான் பேச்சுவார்த்தை என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிடிவாதம் பிடித்துவருகிறார். அனைத்து வகையிலும் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு மாற்று என்று எதுவும் இல்லை. மாறாக இந்த சட்டங்களை வாபஸ் பெறுவது ஒன்றுதான் மாற்றாகும். 

வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார திருத்த மசோதா 2021ஐயும் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. வேளாண் விரோத சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காது. வேளாண் சந்தை கார்ப்பரேட்களின் சூதாட்டக்களமாக மாறும். மின்சார திருத்த மசோதா நிறைவேற்றப்படுமானால், மின்துறை முற்றிலும் தனியார்மயமாவதோடு, இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகள் ரத்தாகும். இவற்றை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் அவர்களுக்கானது மட்டுமல்ல, இந்தியாவின் சுயசார்பையும், இறையாண்மையையும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். மேலும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்திய மக்களை பாதுகாக்கும் கடமையிலிருந்து மோடி அரசு தவறிவிட்டது. உலகிலேயே பெரும் நோய்த் தொற்றை மிகவும் மோசமான முறையில் கையாண்டவர் என்ற அவக்கேட்டை பிரதமர் மோடி சம்பாதித்துள்ளார்.

அதிகரித்து வரும் வேலையின்மை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு என எந்தவொரு பிரச்சனைக்கும் பாஜக கூட்டணி அரசால் தீர்வு காண முடியவில்லை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, புதிய கல்விக்கொள்கை, புதிய தொழிலாளர் விரோத சட்டங்கள், சுற்றுச்சூழலை அழிக்கும் சட்டத் திருத்தங்கள் என நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு செல்லும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நாடு ஒன்றுபட்டு போராட வேண்டியது காலம் விடுத்துள்ள கட்டளையாகும்.

-தீக்கதிர்
2021.05.26

Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...