ராவுல் கஸ்ட்ரோவைக் கொலை செய்ய்யவும் சீ.ஐ.ஏ. திட்டமிட்டது!

See the source image
 Photo: ராவுல் கஸ்ட்ரோ Courtesy: onthisday.com

அமெரிக்காவின் 11 ஜனாதிபதிகள் காலத்தில் கியூபாவின் தலைவராகப் பதவி
வகித்த புரட்சித் தளகர்த்தர் ஃபிடல் கஸ்ட்ரோவை கொல்வதற்கு அமெரிக்க
உளவு அமைப்பான சீ.ஐ.ஏ. 638 தடவைகள் முயற்சி செய்து அதில்
தோல்விகண்ட வரலாறு ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இப்பொழுது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி 1960ஆம் ஆண்டு
ஃபிடலின் சகோதரரும், அவருக்குப் பின்னர் கியூபாவின் ஆட்சிப்பொறுப்பை
வகித்தவருமான ராவுல் கஸ்ட்ரோவையும் (சுயரட ஊயளவசழ) சீ.ஐ.ஏ. கொல்வதற்குத் திட்டமிட்ட விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டனைத் தளமாகக் கொண்டு
செயற்படும் தேசிய பாதுகாப்பு சுவடிகள் ஆய்வுக்கழகம் வெளியிட்டுள்ளது.


அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜோஸ் ராவுல் மாட்டினேஸ் (துழளந சுயரட ஆயசவiநெண) என்பவர் ஒரு விமானி. அவர் ஓட்டிய விமானம் ஒன்றில் 1960ஆம் ஆண்டில் ராவுல் கஸ்ட்ரோ செக்கோஸ்சிலோவாக்கியாவின்
தலைநகரான பிராக்கிலிருந்து கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கு திரும்புவதற்குத் திட்டமிட்டிருந்தார். அந்த விமானியை கூலிக்கமர்த்திய சீ.ஐ.ஏ. அந்த விமானப் பயணத்தின்போது, “விபத்து” ஒன்றை ஏற்படுத்தி ராவுல் கஸ்ட்ரோவைக் கொன்றுவிடும்படி ஆலோசனை வழங்கியிருந்தது.
அந்த விமானியின் இந்தச் செயலுக்காக அவருக்கு சன்மானமாக 10,000
டொலர்களை வழங்கவும் சீ.ஐ.ஏ. ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன்,
எதிர்பாராதவிதமாக இந்தச் சம்பவத்தின்போது அந்த விமானி
உயிரிழக்க நேர்ந்தால் அவரது இரண்டு மகன்களுக்கு பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் சீ.ஐ.ஏ. வாக்குறுதி அளித்திருந்தது.


ஆனால் கடைசி நேரத்தில் சீ.ஐ.ஏ. தனது திட்டத்தைக் கைவிட்டுவிட்டது. அது
சம்பந்தமாக கியூபத் தலைநகர் ஹவானாவில் இருந்த தனது முகவர்களுக்கு சீ.ஐ.ஏ. தலைமையகம் ஒரு செய்தியை அனுப்பி வைத்தது. அந்த தந்திச் செய்தியில் “நடைமுறைப்படுத்த வேண்டாம். விடயத்தை நிறுத்த
விரும்புகிறோம்” (னுழ ழெவிரசளரந. றுழரடன டமைந வழ னசழி அயவவநச) எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானம் பிராக்கிலிருந்து
புறப்பட்டுவிட்டபடியால் ஹவானாவில் இருந்த சீ.ஐ.ஏ. குழுவால் குறிப்பிட்ட
விமானியிடம் இந்தத் தகவலைத் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது.


ஹாவானா திரும்பிய அந்த விமானி தன்னுடன் தொடர்புள்ள சீ.ஐ.ஏ. முகவரைச் சந்தித்து “நாங்கள் கலந்துரையாடியபடி அந்த விபத்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் வாய்க்காமல் போய்விட்டது” எனத் தெரிவித்திருக்கிறார். சீ.ஐ.ஏவின் இறுதிநேர முடிவு விமானிக்கு எட்டாமல் இருந்தும் ஏதோ சில இடையூறுகளால் அந்த விமானி அந்த “விபத்தை” ஏற்படுத்த முடியாமல்
போனதால் ராவுல் கஸ்ட்ரோ அன்று உயிர் தப்பினார்.


இந்தக் கொலைச் சதித்திட்டம் பற்றிய தகவல்கள் வெளிவந்த நேரத்தில் 89
வயதான ராவுல் கஸ்ட்ரோ தனது இரண்டு தடவைகளிலான ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்து அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். 


இந்த சதித்திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த தேசிய பாதுகாப்பு சுவடிகள்
ஆய்வாளர்களில் ஒருவரான பீட்டர் கோர்ன்புளு (Pநவநச முழசnடிடரா) “இந்த
ஆவணங்கள் கியூபப் புரட்சிக்கு எதிரான கடந்தகால அமெரிக்க நடவடிக்கைகளின் இருண்டதும் வஞ்சகத்தனமானதுமான பக்கங்களை நினைவு+ட்டுகின்றன” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


சீ.ஐ.ஏ. உட்பட அமெரிக்க உளவு அமைப்புகள் கியூபாவின் தலைவர்களை
நயவஞ்சகமான முறையில் கொல்ல முயற்சிகள் மேற்கொண்டது மட்டுமின்றி,
கியூபாவின் புரட்சிகர சோசலிஸ அரசாங்கத்தைத் தூக்கியெறியும்
நோக்கோடு, 1961ஆம் ஆண்டு 1,400 அமெரிக்கக் கூலிப்படையினரை கியூபாவின் ‘பன்றித்தீவு’ என்ற இடத்திலும் நேரடியாகக் களமிறக்கியது.
ஆனால் வீரமிக்க கியூபப் படையினர் அவர்களில் 200 பேரைக் கொன்றதுடன்,
மிகுதி 1,200 பேரைக் கைதும் செய்தனர்.


அதன் மூலம் அமெரிக்காவின் அந்த நேரடிப் படையெடுப்பு வெற்றிகரமாக
முறியடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் போது கியூபப் படைகளுக்கு ஃபிடல் கஸ்ட்ரோ அவர்களே நேரடியாகத் தலைமைதாங்கி வழிநடத்தினார்.
அமெரிக்கா கியூபப் புரட்சி வெற்றிபெற்ற 1959ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை
கியூபாவின் சோசலிஸ அரசாங்கத்தை அழித்து ஒழிப்பதற்கு பொருளாதாரத்
தடையை ஒரு ஆயுதமாகவும், சதி சூழ்ச்சி மற்றும் கொலை முயற்சிகளை
இன்னொரு ஆயுதமாகவும் பிரயோகித்து வருகின்றபோதிலும் சின்னஞ்சிறிய கியூபா தலைநிமிர்ந்தபடி தனது புரட்சிகர சோசலிஸப் பாதையில் உறுதியுடன்
வீறுநடைபோட்டு வருகிறது.


2006ஆம் ஆண்டு ஃபிடல் கஸ்ட்ரோவுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை
அடுத்து, அவரின் சகோதரர் ராவுல் கஸ்ட்ரோ இடைக்கால அதிபராகப்
பொறுப்பேற்றார். தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முறைப்படி அவர் கியூபாவின்
அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 2011ஆம் ஆண்டு முதல் கியூபாவின்
கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
2018ஆம் ஆண்டு வரை கியூபாவின் அதிபராக இருந்தவர், நாட்டின்
வளர்ச்சிக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார். கியூபாவின் புதிய சட்ட விதிப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்பதால், 2018இல் ராவுல் அதிபர் பதவியிலிருந்து விலகினார். இருந்தும், கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து செயல்பட்டார். 

18.4.2021 அன்று நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், ராவுல்
கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார் 

Source: vanavil may 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...