இலங்கையின் எட்டு மாவட்டங்களில் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ்


நாட்டில் தற்போதைய நிலையில் 8 மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவரமாக பரவக்கூடிய அதிக ஆபத்தான நிலை காணப்படுவதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்று தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும், அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென்றும் இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது கொரோனா தொற்று ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு எதிர்வரும் வார நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென்றும் அவர் தெரிவித்தார்.

நாளாந்தம் 100க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல், காலி, நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இம் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவக்கூடிய அதிக ஆபத்தான நிலை காணப்படுகின்றது. எதிர்வரும் வார நாட்களில் கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

இதனைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள அனைத்து மக்களும் மிகவும் பாதுகாப்பான முறையில் செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்று (18.05.2021) மேலும் 2518 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 147,720 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 121145 பேர் குணமடைந்துள்ளதுடன், 25560 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

1015 பேர் இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...