சீனா – 2050: ஆதிக்கவாதியல்ல, ஆனால் தலைவர்!


சீனா 2030இல் நான்கு விமானந்தாங்கி கப்பல்களைக் கொண்டிருப்பதுடன்,
2050இல் 8 முதல் 10 வரையிலான கப்பல்களைக் கொண்டிருக்கும். இது ஒரு
பெரிய எண்ணிக்கையாகும்.2019 வரை சீனா 335 யுத்தக் கப்பல்களைக்
கொண்டிருந்தபோதும், அவற்றின் தரம் தாழ்வானதாகும். லீ குவான் யீ
(முன்னாள் சிங்கப்பூர் பிரதமர்) ஒருமுறை கூறும்போது, “சீனா இப்பொழுதும்
தாழ்ந்த நிலையிலேயே உள்ளது.


ஆனால் அடுத்து, அதற்கும் அடுத்து, அதற்கும் அடுத்து, சீனா உயர்வாகவும்
பலமாகவும் இருக்கும்” என்றார். டெங் ஸியாவோபிங் ஒருமுறை அறிவுரை
கூறும்போது, “அவர்களிடம் (மேற்குலகிடமிருந்து) கற்றுக் கொள்ளுங்கள், அவர்களைப் பிரதி பண்ணுங்கள், பின்னர் அதைச் செழுமைப்படுத்துங்கள், பின்னர் அவர்களை முந்துங்கள், அதன் பின்னர் அவர்களைத் தோற்கடியுங்கள்” எனச் சொன்னார்.


லீ குவான் யீன் கூற்றுப்படி, 2050இல் சீனா அமெரிக்காவுடன் சமாமான
நிலையையும் பலத்தையும் பங்கிட்டுக் கொள்ளும். அத்துடன், சீனா
முதலிடத்துக்கு வரவே விரும்புகிறதே தவிர, கௌரவமான அங்கத்தவராக
இருக்க விரும்பவில்லை என அவர் கருதுகிறார். அதேநேரத்தில், சீனாவின்
தந்திரோபாயம் மற்றும் முதல்தரமான திட்டம் என்பனவற்றின் அடிப்படையில், 2035இல் பொருளாதாரம், நவீன தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் என்பனவற்றில் தொழில்நுட்ப ரீதியாகவும், இராணுவ
ரீதியாகவும் நடுத்தரமான செழுமையை அடைந்துவிடும். மாபெரும் தேசிய
புத்துயிரூட்டல், முன்னேறிய தொழில்நுட்பம், புனர்நிர்மாணம்
என்பனவற்றினூடாக 2050இல் சீனா நாகரீகம், முன்னேறிய கலாச்சாரம்,
உலகத்தரம் வாய்ந்த இராணுவம் என எல்லாத்துறைகளிலும் பலமான,
சக்திவாய்ந்த மாபெரும் நவீன சோசலிஸ நாடாக மாறிவிடும்.


2050இல் சீன இராணுவம், குறிப்பாக சீன கடற்படை தென் சீனக் கடலில் இருந்து பசிபிக், இந்திய மற்றும் அரேபியக் கடல்கள், என உலகம் முழுவதும் கடல்களில் ஆதிக்கம் செலுத்தும். சீனாவின் ஆதிக்கம் ஆபிரிக்கா வரை வியாபித்திருக்கும். சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் மூன்றில் இரண்டைக் கடந்துவிடும்.


சரித்திர ரீதியாக சீனா உலகின் மற்றைய பகுதிகளை வெற்றி கொள்ளவோ,
காலனியாக்கவோ அல்லது உலகை இராணுவ பலத்தின் கீழ் வைத்திருக்கவோ ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால் மானிட அதிகாரக் கோட்பாடுகளின் மூலம் பூமியை மகத்தான ஒற்றுமையின் கீழ் உருவாக்குதையே சீனா விரும்புகிறது. சீனாவிடம் மற்றவர்களை அடிமைப்படுத்தும் கலாச்சாரம் இல்லை, ஆனால், அதனிடம் கற்றுக் கொள்வதற்கும் பங்கிடுவதற்குமான
மாபெரும் கலாச்சாரங்கள் உண்டு.
 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...