34வது இலக்கியச் சந்திப்பு -பெர்லின் 2007












பஷீர்: இனப்பிரச்சினைக்கான தீர்வூ என்பது இது ஒரு பக்கப் பிரச்சினையா? ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினையா? ஒட்டுமொத்தமாக தமிழ்த் தரப்பு என்று சொல்லப்படுபவர்கள் என்று இல்லாமல் முஸ்லிம்கள்இ தலித்துகள்இ பெண்கள் என்று சொல்லப்படுபவர்கள் அதாவது பிரச்சினையின்மீது அக்கறை உள்ளவர்களில் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது? தீர்வூகள் என்பவை எவ்வாறு முஸ்லிம்களைப் புறக்கணித்ததோ தலித்துகள் பிரச்சினைகளை உள்ளெடுக்கவிலலையோ அப்போதே அதனை ஒரு ஜனநாயக மறுபபாகத்தான் கொள்ள முடியூம். இப்படி ஒவ்வொரு பகுதியினரதும் அபிலாஷைகளையூம் உள்ளடக்காத தீர்வூகள் வெறும் திணிக்கப்படும் தீர்வூகளாகத்தான் பார்க்கமுடியூம். 




நான் ஒரு முஸ்லிமாகப் பேசுகிறேன். அப்போதிலிருந்து இப்போதுவரையிலுமான சகல பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு மறுக்கப்பட்டுவந்துள்ளது.
இப்போது APRC  - சகல கட்சிப் பிரதிநிதிகள் குழு பெரும்பான்மை அறிக்கை. பிறகு அந்தப் பெரும்பான்மை அறிக்கையில் ஒரு சிறுபான்மை அறிக்கையாக இந்த வடக்கு-கிழக்கு இணைப்புப் பற்றி வருகிறது.இப்போது முஸ்லிம்கள் எங்கே நிற்கிறார்கள்? அவர்களுடைய நிலை என்ன? அவர்கள் தங்களுடைய தரபபில் இருந்து இந்த யூPசுஊ அமைப்பிற்கு ஏதாவது விடயங்களைத் தீர்வூ சம்பந்தமாக வழங்கியூள்ளனரா? கிழக்கு முஸ்லிம் முன்னணி ஒரு அறிக்கையைத் தயாரித்திருபபதாக சில இணையத் தளங்களில் வெளிவந்துள்ளன.


இன அடிப்படையிலான (சிங்கள தமிழ் முஸ்லிம்) தனி அலகுகளை வழங்குவதை அது எதிர்க்கிறது. தமிழ் -சிங்கள - முஸ்லிம் மக்களின் ஒற்றுமை கிழக்கில் உறுதிப்படுத்தப்படும் வகையில் அதிகாரப் பகிர்வூகள் இருக்கவேண்டும்.











படம்:  எஸ்.எம்.எம்.பஷீர் சிவலிங்கம் பரா 


மதசார்பு மதங்களைப் பாதுகாக்க வேண்டும்.எல்லா மதங்களையூம் ஒரேயளவூ முக்கியத்துவததுடன் பாரபட்சமற்றுப் பாதுகாத்தல். சிறீலங்கா முஸலிம் காங்கிரஸ் பெரும்பான்மை அறிக்கை வருவதற்கு முன்பாக ஒரு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். அது உண்மையில் ஒரு ஆபிரிக்கச் சட்டவல்லுநரால் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்களுக்கான ஒரு தனிஅலகை அது வலியூறுத்துகிறது.

வடகிழக்கு இணைப்பு-பிணைப்பு பிரச்சினையை இன்றைக்கு எடுத்தால்  இதற்கு முஸ்லிம்கள் ஒரு தடைக்கல்லாக இருக்கின்றார்கள். எப்படி என்று பார்த்தால்  புலிகளைப் பொறுத்தவரை முஸ்லிம்களை வடக்கில் இருந்து விரட்டியாகிவிட்டது. கிழக்கிலே விரட்டபபோனார்கள். முடியவில்லை. முஸ்லிம்கள் இல்லாதிருநதால் வடக்கு கிழக்கு என்னும் பாரிய பிரதேசத்தை தமிழ் அரசாக இலகுவில் செய்யலாம் என்பது புலிகளிற்கு உவப்பான விடயம்.


சிங்களவர்களால் தமிழர்கள் எவ்வளவூ துக்ரம் ஒடுக்கப்படுகிறார்கள் என்று தமிழ் மக்கள் கருதுகிறாரகளோ அந்தப் பரிமாணத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாது தமிழர்களால் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதை முஸ்லிம்கள் உணர்கின்றார்கள். இது வரலாறு கடந்து வந்த பாதை. தமிழ்பேசும் மக்கள் என்றவரையறைக்குள் தங்களை அடையாளம் கண்டுகொண்டிருந்த முஸ்லிம்கள் ஏன் அதிலிருந்து மெதுமெதுவாக விடுவித்துக்கொண்டு ஒரு தனி அடையாளத்தைக் கோரும் நிலைக்கு வந்தார்கள் என்பதை வரலாற்றுரீதியான சம்பவங்களைக் கொண்டு பார்க்கவேண்டும். தமிழீழக் கோரிக்கைப் போராட்டத்திற்குத் தங்களை இணைத்துக் கொண்டு போராடப் புறப்பட்ட எத்தனையோ முஸ்லிம்களைப் புலிகள் பலி கொடுத்தருக்கிறார்கள். இது மிகவூம் கொடுமையானது. எனவே இவர்களை இருட்டடிப்புச் செய்துவிட்டு நாங்கள் எந்த ஒரு தீர்வூ பற்றியூம் பேசமுடியாது.





ஒவ்வொரு இலக்கியச் சந்திப்பிலும் வடக்கில் இருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியதற்கான கண்டனத்தைத் தெரிவிக்கிறௌம். இங்கு தீர்மானங்களை நாங்கள் தொடர்ச்சியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனறால் இத்தனை வருட காலமாக எதுவூம் நடக்கவில்லை என்பதும்  யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் பாரம்பரிய நிலங்கள் விலைபோய்க் கொண்டிருக்கிறது என்பதும்தான். இது புலிகளின் வெற்றி என்று தமிழர்கள் ஒருவேளை கொள்ளலாம். கிழக்கிலும் எத்தனையோ வழிகளைப் பிரயோகித்து இப்படியான ஒரு வெளியேற்றத்துக்கு முயற்சித்தார்கள். ஆனால் இன்று இராணுவத்தின் வெற்றியினால் அப்பகுதி மக்கள் இப்போது நிம்மதியாக மூச்சு விடுகின்றார்கள். இதை நான் இந்த இடத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேணடும். (மூதுக்ர் வெளியேற்றம் பற்றிய ஆவணக்கட்டுரையை க்வவி:ஃஃரலசைனிணாயட.உழஅஃப்யவாஇஎரபயட.க்வஅஇல் பார்வையிடலாம்) யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாத தமிழர்கள் சிங்களவர்களை அரக்கர்களைப்போன்று பார்க்கும் தன்மையை உருவாக்கி இருக்கறௌம். இனி முஸ்லிம்கள் பற்றியூம் அப்படியானதொரு நிலையைத்தான் தொடர்ந்து வந்த இந்த வரலாற்றுப்பாதை வழிவகுப்பதை எதிர்காலத்தில் காணமுடியூம். முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் அவர்களிடம்

தமிழ்பேசும் மக்கள் என்று சொல்லி எடுக்கப்படும் எந்த முடிவூகளையூம் திணிப்பதை அனுமதிக்கமாட்டோம். எங்களுடைய இறுதி மூச்சுவரை இதற்கான ஜனநாயகப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுவோம்.

நன்றி: உயிர்நிழல் ஜூலை -செப்டம்பர் ; 2007

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...