வடக்கு - கிழக்கு முஸ்லிம்களின் பிரித்தானிய ஒன்றியம் நோர்வே தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு-வீரகேசரி 28/04/2006



தீர்வு ஆலோசனைகளில் முஸ்லிம்களின் நலன்களையும் உள்ளடக்க வலியுறுத்து

வீரகேசரி 28/04/2006

வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரித்தானிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்று பிரித்தானியாவில் உள்ள நோர்வே தூதராலய உயர் அதிகாரிகளை கடந்த   19 ஆம் திகதி வியாழக் கிழமை காலை லண்டனில் சந்தித்து, இலங்கை தேசிய இனப்பிரச்சினை தீர்வு ஆலோசனைகளில் இலங்கை முஸ்லிம்களின் நலன்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இப்பிரதிநிதிகள் குழுவில் எஸ்.எல்.எம்.பாரூக், (கணக்காளர்) எஸ்.எம்.எம்.பஸீர் (சட்டத்தரணி) .எம்.வை எம்.சித்தீக் (பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ) உட்பட பலர் இடம் பெற்றிருந்தனர். 
எந்தத் தீர்வு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் , அவை முஸ்லிம்கள் விடயத்தில் பின்வரும் நான்கு அம்சங்களையும் திருப்திப்படுத்தக்கூடியதாக அமைதல் வேண்டும் என்று நோர்வே தூதரக உயர் அதிகாரிகட்கு விளக்கிக் கூறப்பட்டது.
  • முஸ்லிம்களின் தனித்துவ இன அடையாளத்தை அங்கீகரித்தல் 
  • வடக்கு-கிழக்கு பிரதேசம் தமிழர்களது மட்டுமல்லாது முஸ்லிம்களினதும் பாரம்பரிய பிரதேசம் என்பதை ஏற்றுக் கொள்ளல் 
  • இலங்கை முஸ்லிம்களின் சகல உரிமைகளும் , பாதுகாப்பும் யாப்பு ரீதியாகவும் நிறுவன ஏற்பாடுகள் மூலமும் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும்.
  • அதிகாரப்பரவலாக்கல் அலகொன்று தொடர்பாகவும் இணக்கம் காணப்படுகையில் , அவ்வதிகார அலகினுள்  ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான , சாத்தியமான அளவு அதிகாரத்தை முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் பகிர்ந்தளித்தல்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...