எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்-கள்ளியங்காட்டு பள்ளிவாசல்"தமிழன் என்ற முறையிலும், பிறப்பால் இந்து என்ற முறையிலும் இச் செயலுக்கா வெட்கித் தலை குனிகிறேன். புரிந்துணர்வு, மனிதாபிமானம் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே மனிதம்."
                                                                                                  சஞ்சயன்
வணக்கம்!

அண்மையில் ரவூப் நானா மூலமாக மட்டக்களப்பில் போர்க் காலங்களுக்கு முன்பு மசூதி ஒன்று அமைந்திருந்த இடத்தில் தற்போது ராஜயோகம் என்னுபவர்களுடைய ஆச்சிரமம் பலரின் பலத்த எதிர்ப்பின் பின்னும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல்வாதிகள் இது விடயமாக வாய்மூடி இருப்பதாகவும் அறியக்கிடைத்தது.

மட்டுக்களப்பிலுள்ள எனது நண்பர் ஒருவர் மூலமாகவும் விடயத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன்.தமிழன் என்ற முறையிலும், பிறப்பால் இந்து என்ற முறையிலும் இச் செயலுக்கா வெட்கித் தலை குனிகிறேன். புரிந்துணர்வு, மனிதாபிமானம் இவற்றை அடிப்படையாகக் கொண்டதே மனிதம்.

தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகள் தோன்றுகின்றன என்னும் தமிழர்களாகிய நாம், இஸ்லாமிய நண்பர்களின் மசூதி அமைந்திருந்த இடத்தை கைப்பற்றி, இந்து மத தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட ராஜயோக ஆச்சிரமத்தினரின் வழிபாட்டுத் தளமாக மாற்றிக் கொண்டது மிகவும் வேதனையானதும், கண்டிக்கத்தக்கதுமான செயல்.

நீங்கள் சட்டரீதியாக மேற்கொண்டுள்ள நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன்.


நட்புடன்
சஞ்சயன்
நோர்வே

No comments:

Post a Comment

ஜெய் பீம் – சினிமா விமர்சனம் நவம்பர் 4, 2021 விளிம்புநிலையில் தத்தளிக்கும் உயிர்களை இச்சமூகத்தோடு இறுக்கமாய் இணைக்கும் சட்டத்தின் தொப்புள்கொ...