உண்மை முஸ்லிமும் உதவாக்கரை முஸ்லிம் அரசியல்வாதிகளும் (பகுதி இரண்டு)



எஸ்.எம்.எம்.பஷீர்


முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மறைந்த அஸ்ரப்  " எந்தவொரு உண்மை முஸ்லிமின் வாக்கும் யு என்.பீ யின் யானைச் சின்னத்திற்கு போடப் படக் கூடாது." என்று முஸ்லிம்களை உண்மை முஸ்லிம்கள் உண்மையற்ற முஸ்லிம்கள் என்று பாகுபாடு படுத்தும் விதத்தில் அரசியல் பத்வாவை முன்மொழிந்த அந்த பழைய நினைவுகளுடன் இப்பொது முபீன் எனும் போராளி முஸ்லிம்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க முடியாது என்று கட்டளை பிறப்பிக்கின்றார். அதனால்தான் இனிமேல் யாரேனும் தேர்தல்களில் வாக்களிக்கும் போது அவர் உண்மை முஸ்லிமா அல்லது வெறுமனே சகட்டுமேனிக்கு முஸ்லிமா என்ற தீர்மானங்களை எடுப்பவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு தனிமனித மத உரிமையின் மீதான அரசியல் அத்துமீறலாக ஒரு தலையீடாக பார்க்கப்படல் வேண்டும். 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் அல்லது அவர்களுக்கு வாக்களிக்கும் சிங்களவர்களை , ஏனைய தேசியக் கட்சிகளினை ஆதரிக்கும் சிங்கள பௌத்த,   கிறித்தவ மக்கள், அல்லது ஹெல உறுமையினர் உண்மையான சிங்கள பௌத்தன் அல்லது உண்மையான சிங்கள கிறிஸ்தவன் முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்திற்கு வாக்களிக்கக் கூடாது என்றோ அல்லது வாக்களிக்க முடியாது என்றோ சொன்னால் அதில் என்ன பிழை இருக்க முடியம் . ஒருவேளை அதுவே ஒரு பெரிய மத சர்ச்சையினை ஏற்படுத்தும் ஒரு விவகாரமாக அந்த மத இன சமூகத்திற்குள் விஸ்வரூபமெடுத்தால் , அதில் கூட தப்பிருக்க முடியாது அல்லவா! முஸ்லிம் காங்கிரசின் அரசியல் யாப்பிலுள்ள சரத்துக்கள் முஸ்லிம் காங்கிரசை ஒரு தேசியக் கட்சி , எவரும் அதில் இணையலாம் எனும் கோசத்தை திருப்திப்படுத்துமா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.

தனது கட்சி தனித்து போட்டியிடும் என்ற முடிவை எடுக்கும் திராணி முஸ்லிம்களின் தனித்துவமான அதிக பட்ச ஆணை பெற்ற  முஸ்லிம் காங்கிரசுக்கிருக்கவில்லை. இந்தவாறான தலையீடு இன்று நேற்றல்ல முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்தே பிரேமதாசாவுடனான தொடர்புகளுடனே ஆரம்பித்து வந்துள்ளது. அந்த வகையில் ஹக்கீமும் அதனை சிங்கள் மக்களின் வாக்குகளைப் பெற சிங்கள மக்களை பேரினவாத் அரசிற்கெதிராக , முஸ்லிம் பகுதிகளில் கூப்பாடு போடுவதுபோல் கூக்குரலிடாமல் , சிங்கள மக்களுக்கு "ஜனாதிபதியுடனும், முக்கிய அமைச்சர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே இத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்தோம்" என்று கூறி அவரே நாசூக்காக , தவிர்க்கவோன்னாமல் உண்மையைக்  கக்கி விடுகிறார். 

கட்சியின்  கீதம் "பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் னிர்ரஹீம் " என்று மட்டும் கட்சி யாப்பு சொல்கிறது. அதன் பொருள் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் " என்று சொல்வதால் கட்சியின் கீதம் படிக்கப்படும் பொழுது சிங்கள தமிழ் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அதனை அவ்வாறு முஸ்லிம்கள் போல் சொல்ல விரும்புவார்களா? என்ற ஒரு சின்னஞ் சிறிய கேள்விக்கப்பால் கட்சியின் யாப்பில் இருக்கும் பல விடயங்கள் முஸ்லிம் அல்லாத ஏனைய மத இன முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு அவர்களின் நம்பிக்கையைப் பொறுத்தவரை பென்னம் பெரிய கேள்வியாக அமையப் போகிறது. முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கே தமது கட்சி யாப்பு தெரியாத போது மற்றைய மத இனத்தவர்களுக்கு அது தெரியப்படுத்தப்பட மாட்டாது, இலங்கையில் அரசியல்  கட்சிகளில் சேர்பவர்கள் அவர்கள் சேரும் அரசியல் கட்சிகளின் யாப்பை கொள்கைகளை படித்து நன்கு அறிந்து தெளிந்தா கட்சிகளில் சேர்கிறார்கள். சிலவேளை ஆட்சி அதிகார சபைகளில் அங்கத்துவம் வகிக்கும் பலருக்கே தங்களின் கட்சி யாப்பு தெரியாமலிருக்கலாம் !! அப்படித்தான் இப்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிங்களப் போராளிகளும் முஸ்லிம் காங்கிரசின் மதம் தொடர்புபட்ட யாப்பின் அம்சங்களை தெரியாமல் , தெரிய வேண்டிய அவசியமில்லாமல் (கொள்கைக்காகவா சேர்கிறார்கள்)  இப்போது கிழக்கு மாகான சபையில் போட்டியிட கட்சியில் சேர்ந்திருக்கலாம்  அது மட்டுமல்ல  இந்த முஸ்லிம் காங்கிரசின் தனித்த தேர்தல் போட்டி  உண்மையில்  முக்கியத்துவம் வாய்ந்தது. பேரினவாத பௌத்த பிக்கு ,  அமரபுர மகா நிக்காய சங்கசபாவின் அணுநாயக்கர் தொடங்வல தம்மரத்ன தேரர்,   சிற்றின்பவாத முஸ்லிம் காங்கிரசின் பிக்கு போராளியாக மாறி வேறு பிரச்சாரம் பண்ணுகிறார். இதைவிடச் சாதனை என்ன வேண்டும். சரி பிக்குவை அரசியல் உயர் பீடத்தில் அங்கத்துவராக்கலாமா ? அப்படிடியே மசூரா கவுன்சிலில் தீர்மானம் மேற்கொள்ளும் ஒருவராக வைத்துக் கொள்ளலாமா ? , இன்னும் ஒரு படி மேலே சென்று நாங்கள் இன வாத கட்சியே இல்லை என்று முஸ்லிம் காங்கிரஸ் நிரூபிக்க பௌத்த பிக்குவை தவிசாளராக அல்லது முன்னர் மறைந்த மருதூர் கனிபோல் ஒரு சிரேஷ்ட தலைவராக ஆக்கலாமா? பிக்கு நியாயபூர்வமாக அப்படியான ஒரு பதவியைக் கோரினால் (ஏனெனில் முஸ்லிம் காங்கிரசில் பதவிகளுக்கு ஜனநாயகத் தேர்தல் இல்லை -(கட்சியின் தலைமைத்துவம்  கடாபிசதாம் ஹுசைன், ஹோஸ்னி முபராக் போன்றோரின் இலங்கை பதிப்பு) பிக்குவின் காதில் பூச் சுற்ற முடியாது ( அவர் தமிழரல்ல ) குல்லாப் போட முடியாது (அவர் முஸ்லிம் அல்ல) ஏற்கனேவே மொட்டையடித்திருக்கிறார் . எனவே அவருக்கு மொட்டயடிப்பதற்கும் அவசியமில்லை.

அஸ்ரபின் காலத்தில் , அதாவது 5/7/1992   அன்று உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி யாப்பு அத்தியாயம் ஆறு , உறுப்புரை 6.9 பொலிட்பீரோ ( Politburo ) எனப்படும்   இன்றைய உயர்பீடத்தையொத்த கட்சியின் தீர்மானமெடுக்கும் உறுப்பினர்களின் தற்றுணிவைப் பயன்படுத்தி  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா போன்ற வெளி ஸ்தாபன பிரதிநிகளை மஜ்லிஸ் எ சூராவில் அழைத்து கலந்தாலோசிக்க இடமிருந்தது, இப்போது அப்படியாக வெளியார் நிறுவன பிரதிநிகளை மஜ்லிஸ் எ சூராவிற்கு ( Majlis-e-Shoora) அழைக்கும் சரத்துகள் புதிய ஹக்கீமின் திருத்த கட்சியின் யாப்பில் ( 15/5/2011) நீக்கப்பட்டிருக்கிறது, அப்படியானால் உலமாவிற்கே கட்சியின் தீர்மானம் மேற்கொள்ளும் சபைக்கு வர சந்தர்ப்பம் இல்லை , அதனையும் ஹக்கீம் நீக்கிவிட்டார்.  இந்த லட்சணத்தில் பிக்கு எந்த வகையிலும் உள்நுழையவே முடியாது. ( இன்னும் வரும் )

குறிப்பு : உலமா என்றால் மத அறிஞர் 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...