புலிகளின் இணையத்தள பிரச்சாரத்துக்கு புத்திஜீவிகள் கண்டனம்-நவமணி

நவமணி: 19.02.2006

நவமணி செய்தியாளர்

லண்டனிலுள்ள இலங்கை முஸ்லிம் நிலையத்தின் பணிப்பாளரான கிழக்கு மாகான சட்டத்தரணி பஷிரை ஒஸாமா அணியுடன் இணைத்து புலிகளின் இணையத்தளம் பிரசாரம் செய்தததை முஸ்லிம் புத்திஜீவிகள் கண்டித்துள்ளனர்.முஸ்லிம் புத்திஜீவிகள் தமது இனத்துக்காக ஜனநாயக ரீதியில்   குரல் கொடுக்கும் போதும் செயல் படும் போதும் அவர்களைத் தவறாக இனம்காட்ட முயற்சிப்பது நல்லதல்ல என்று கூறப்படுகிறது.
தமிழர்களுக்கு போன்று முஸ்லிம்களுக்கும் பாரிய பிரச்சினைகள் உள்ளன. இவற்றைத் தீர்க்காவிடில் முஸ்லிம்களின் உரிமைகள் , இருப்பு பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகிவிடும். இந்நிலையில் பிரச்சினைகளை வெளிப்படுத்துவோரையும் அவற்றுக்கு தீர்வுக்கான முயற்சிப்போரையும் அடக்கி ஒடுக்க எடுக்கப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மனிதாபிமானத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் இத்தகைய பொய்ப்   பிரச்சாரங்களையும் சதி முயற்சிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்