கருத்தரங்கு தேசம்நெற் பின்னூட்டம் : தேசம்நெற் 27/12/2008

"இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழிலிருந்து  வோல்ரோயரின் (Voltaire) மேற்கோளைக் குறிப்பிட்டு I do not agree with a word you say, but I will fight to the death for your right to say it . வோல்றோயர் (Voltaire) அவ்வாறு சொல்லி இருக்கவில்லை என்றும் அவர்  “ I do not agree with a word you say but I will defend to the death  for your right to say it” இவ்வாறே தெரிவித்து இருந்தார் என்றும் பசீர் சுட்டிக்காட்டினார் "
                           தேசம்நெற் 27/12/2008

அதனைத் தொடர்ந்து தேசம்நெற் பின்னூட்டம என்ற தலைப்பில் சையட் பசீர் உரையாற்றினார். தேசம்நெற் தொடர்பான அறிக்கையில் கையெழுத்திட்டதை அங்கு சுட்டிக்காட்டிய அவர் ஜனநாய சக்திகளிடையே உள்ள முரண்பாடுகள் நேச முரண்பாடுகளாக அமைய வேண்டியதன் அவசியத்தை அங்கு வலியுறித்தினார் . இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழிலிருந்து  வோல்ரோயரின் (Voltaire) மேற்கோளைக் குறிப்பிட்டு I do not agree with a word you say, but I will fight to the death for your right to say it . வோல்றோயர் (Voltaire) அவ்வாறு சொல்லி இருக்கவில்லை என்றும் அவர்  “ I do not agree with a word you say but I will defend to the death  for  your right to say it” இவ்வாறே தெரிவித்து இருந்தார் என்றும் பசீர் சுட்டிக்காட்டினார் இதில் "Fight"  என்பது சேர்ந்து போராடுவது  என்பது அதற்கு இசைவாக இருப்பது என்றும் தெரிவித்தார். சையட் பசீர் மேலும் குறிப்பிடுகையில்  இந்த விடயத்தில் தான் தேசம் (நெற்) தவறு விட்டிருக்கிறது.  தேசம்நெற் "fight"   பண்ணக்கூடாது   "defend"  பண்ண வேண்டும் என்று கூறினார்.
தேசம்நெற்றில் கட்டுரைகள் எழுதிவிட்டு பின்னூட்டங்களை யாரும் எழுதலாம் என்று விட்டுவிட்டதால்தான் இவ்வாறான பிரச்சினை  வருகிறது. எனவும் அவர் குறிப்பிட்டார். 


"
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்  திறனுமின்றி வஞ்சனை செயவாராடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி " என்று கூறி நெஞ்சில் உரமுமின்றி பெயரைச் சொல்லும் தைரியமும் இல்லாதவர்களை எழுத அனுமதிக்கக் கூடாது சிறுவன் என்றோ கயவன் என்றோ காவாலி என்றோ பெயர்களில் உள்ள முகமில்லாதவர்களை  தூக்கி வைக்கும் ஜனநாயகத்தை நாங்கள் வளர்க்கக் கூடாது எனக் குறிப்பிட்டார். அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. என்பதையும் சுட்டிக்காட்டினார் .

லண்டனிலே தமிழ் பத்திரிகைகளின் வரலாற்றில் தேசம் சஞ்சிகையினுடைய பங்கு மற்றைய வெளியீடுகளிலும் பார்க்க மிகக் காத்திரமானது. என்று குறிப்பிட்ட சையட் பசீர் இன்று இன்ரநெற்றில் வெளியாவதன் மூலம் சர்வதேச அளவுக்குச் சென்றுள்ளது. என்று குறிப்பிட்டார். நான் இலங்கைக்கு சென்றிருந்த போது கூட பலர் தேசம் நேர்ர் பார்ப்பதாகக் கூறினார் என்றும் அவர் குறிப்பிட்டார். 
தேசம்நெற் 27/12/2008

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...