லன்டன் மாநாட்டில் எச்சரிக்கை..." உதயன் ( இலண்டன் - செப்-அக்டோ 2006)"லன்டன் மாநாட்டில் எச்சரிக்கை  
இலங்கையில் மனித உரிமைகளை மீறுபவர்கள்
சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்
"
 
குறிப்பாக முஸ்லிம் பிரநிதியான சையட் பசீர் பேசும்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு குழப்பி அவரது உரையை இடைநிறுத்தினர்

இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் மனித உரிமைகளை மதிக்காது அதனை மீறினால்  சர்வதேச நீதிமன்றத்தில் யுத்தக் குற்றங்களுக்காக நிறுத்தப்படுவார்கள் என்ற எச்சரித்த  சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் தங்கள் தரப்பினரை வலியுறுத்தவேணடும் என்று கேட்டுக் கொண்டன.  ஓகஸ்ட் 5ல் சர்வதேச மன்னிப்புச்சபையும் (Amnesty International ) மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch  ) இணைந்து ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் அவ்வமைப்புகள் இதனை வலியுறுத்தின.  இலங்கை இனப் பிரச்சினைக்காக சமாதனச் தீர்வில் புலம்பெயர்ந்தவர்களையும் ஈடுபடுத்தும் முதலாவது நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.


Amnesty International Human Rights Action Centre ல் இடம்பெற்று இந்நிகழ்வில் பேராசிரியர் Philip Alston  இன் UN Special Rappporteur on Extrajudicial ,Summary or Arbitrary Executions அறிக்கை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது ஓக்ரோபரில் ,ஐ நா வில் சமர்ப்பிக்கபடவுள்ள இவ்வறிக்கை இலங்கை அரசின்மீதும் விடுதலைப்புலிகளின் மீதும் சர்வதேச அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது .
இப்பொதுக் கூட்த்தில் பல்வேறு அரசியல் தலங்களில் இருந்தும் 250 பேர்வரை கலந்து கொண்டனர் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும்  விடுதலைப்புலிகளின் ஆதரவுச் சக்திகளாக அல்லது விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்களாக காணப்பட்டனர் ஒரு சிறிய பிரிவிளர் பெரும்பாலும் இலங்கையை தாயகமாக கொள்ளாதவர்கள். நடுநிலையாளாகளாக இருந்தனர். இவர்களது கருத்துக்களும் பெரும்பாலும் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதாகவே அமைந்திருந்தது.

சுமுகமாக இடம்பெற்ற இக் கூட்டத்தொடரில்  புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதனையும் மீறி விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் மதி என்பவர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முற்பட்ட பொழுது தங்களை மிரட்டுவதற்க்கும் கேவலப்படுத்துவதற்குமே இதனைபயன்படுத்துகிறார்கள் என்று கூறி பெருத்த கோஷம் எழுப்பப்பட்டது. அனைத் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் பாதுகாவலரால் அழிக்கப்பட்து. அதனைத் தொடர்ந்து கூட்டம் சுமுகமாக இடம்பெற்றது.

பேச்சாளர்களின் உரைகள் முடிந்த பார்வையாளர்களின் கேள்வி நேரத்திற்கு வந்த பொழுது சபையில் பெருமளவு  கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. ஆறிக்கையை ஒட்டியும் பேச்சாளர்களின் உரையை ஒட்டியும் கேள்விகளை கேட்கும்படி தலைவர் கேடடுக்கொண்ட போதும் பெரும்பாலனவர்கள் தமது அரசியல்  நிலைப்பாட்டை அங்கு வெளிப்படுத்த முயன்றனர் ஆனால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பேசும்போது எதிர்பாளர்கள் எதிர்த்து கோஷம் எழுப்ப எதிப்பாளர்கள் பேசும்போது ஆதரவாளர்கள் எதிர்த்து கோஷம் எழுப்பினர். குறிப்பாக முஸ்லிம் பிரநிதியான சையட் பசீர் பேசும்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு குழப்பி அவரது உரையை இடைநிறுத்தினர் . அதனால் சபையைவிட்டு வெளியேறியவரை சிலர் சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.  அவரை மீண்டும் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோதும் பலருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டி இருந்தால் அவர் பேசவில்லை.

இப்பொதுக் கூட்டம் இலங்கை அரசியல் எவ்வளவு தூரம் பிளவுபட்டுள்ளது என்பதையும் ஜனநாயகம் மற்றையவர்களின் கருத்துக்கு மதிப்பளித்தல் என்ற அடிப்படை அம்சங்களே ஏற்றுக்கொள்ளப்படாத போக்கையும் வெளிப்படையாக காட்டியது மேலும் தமிழ் மக்களிடேயே உள்ள அரசியல் பிளவையும் அதன் முனைப்பையும் இது வெகுவாக  வெளிப்படுத்தியது.
பெரும்பாலும் அனைவருமே திருத்தங்கள் தேவைப்பட்டாலும் பேராசிரியர் Philip Alston இன் UN Special Rappporteur on Extrajudicial ,Summary or Arbitrary Executions அறிக்கையை வரவேற்றனர். எழுத்தாளர் சூரியப்பிரகாசம் மற்றும் விடுதலைப்புலிகளின் தீவிர அதாரவளாரகளாக அறியப்பட்ட கவுன்சிலர் மிஸ் மான்  ஒருபேப்பர் ஆசிரியர் கோபிரட்ணம் ஆகியோரும் அவ்வறிக்கையை வரவேற்றனர்.

நன்றி: உதயன் (செப் -அக்டோ 2006)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...