சிதைக்கப்படும் சதாம் ஹுசைன் கிராமத்தின் கதை !



 
எஸ்.எம்.எம்.பஷீர்

"உங்களை நான் இராக்கியனாக இருக்க வேண்டுகிறேன்,
எனக்கு மரணம் எனத் தீர்ப்பளித்தால்,
என்னை ஒரு பொது குற்றவாளிபோல் தூக்கிலிடக் கூடாது , நான் ஒரு இராணுவத்தினன் என்னை சுடும் படையணியினால் சுட்டுக் கொல்ல வேண்டும்  "
 (  சதாம் ஹுசைன் தன்னை விசாரித்த நீதிபதிகளிடம்  கூறியது) .

ஏறாவூரின் வட மேற்கு எல்லை கிராமமாக அமைந்துள்ள சதாம் ஹுசைன் கிராமத்தின் பெயரை இராக் கிராமம் என்று மாற்றம் செய்யப் போவதாக செய்தி வந்து, அதுவும் அப்படி பெயர் மாற்றினால்தான் இராக் அரசாங்கம் நிறுத்தி வைத்திருந்த உதவிகளை மீண்டும் பெற முடியும் என்ற காரணம் வேறு சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து ஓரிரு தினங்களின் பின்னர் ஏறாவூரிலுள்ள ஈராக் கிராமத்திற்கு இங்கையிலுள்ள ஈராக் தூதுவர் ஹக்தான் தாகா கலப் செவ்வாய்க்கிழமையன்று (29.11.2011) விஜயம் செய்தமை , அங்குள்ள மக்களுக்கு உதவி செய்யப் போவதாக வாக்குறுதியமைத்தமை "மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே" எனும் கதையை சொல்லாமல் சொல்லி நின்றது.


சதாம் ஹுசைன் கிராமத்தின் வரலாறு மிகவும் சுவாரசியமானதல்ல மாறாக மிகவும் சோகமானது , சூறாவளி சூறையாடிய குடிசை வாழ் ஏழை மக்களின் துயரை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு தேர்தல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக அப்போதிருந்த மறைந்த டாக்டர் பாரீத் மீராலெப்பை அவர்களின் இராக் விஜயத்தின் போது அன்று ஆட்சியிலிருந்த சதாம் ஹுசைனிடம் கேட்டு பெற்ற நூறு வீட்டுத் திட்ட உதவியினால் அக் கிராமம் எண்பதுகளில் பூர்த்தி பெற்று அங்கு வாழ்ந்த மக்களுக்கு கையளிக்கப்பட்டது. அந்த நிர்க்கதியான மக்களுக்கு  பாதுகாப்பான குடியிருப்புக்களை அமைத்து கொடுக்க சதாம் ஹுசைன் முன்வந்தது மட்டுமே ஒரு சுவாரசியமான சம்பவம். ஏனெனில்  நாடளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களின் எழுபதுகளின் பிற்பகுதியில் முன்னாள் சபாநாயகராகவிருந்த பாக்கீர் மார்க்கார் தலைமையில் பாக்தாத்துக்கு அரச விஜயம் மேற்கொண்ட குழுவில் சென்றவர்களில் பாரீத் மீரா லெப்பையும் ஒருவராவார் . இராக் விஜயத்தின் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல தேவைகளை அல்லது விவகாரங்களை பற்றி சதாம் ஹுசைனிடம் கேட்டபோதும் , கதைத்த போதும்  பாரித் மீராலெப்பை எதுவுமே கேட்காமல் மௌனமாக இருப்பதை அவதானித்த சதாம் ஹுசைன் , ( அதனை அவர் அவதானித்திருக்க வேண்டும்) , பாரித் மீரா லெப்பையை நோக்கி  , அவர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்று வினவியிருக்கிறார். அப்போதுதான் பாரித் மீரா லெப்பை தனது மனதோடு சுமந்துவந்த தமது ஏழை மக்களின் கூரையற்ற வாழ்க்கை பற்றி சொன்ன போது சதாம் ஹுசைன் , ஏறாவூரின் எல்லைப்புற மக்களின் ஏழ்மையை தமது கண்முன் கொண்டு வந்து , அதுவே தனது தேவை என்று தீர்க்கமாக குறிப்பிட்ட பாரித் மீராலெப்பையின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். பாரித் மீராலெப்பை ஏறாவூருக்கு திரும்பியவுடனே இந்த செய்தியை மக்களுக்கு சொல்லுகிறார் , உறுதி அளிக்கிறார். இவ்வளவுக்கும்  அவர் சதாம் ஹுசைன்  சொன்ன அந்த வாக்குறுதியை நூறு வீதம் நம்புமளவு ஒரு உறுதியான வாக்குறுதியை சதாம் ஹுசைன் அவருக்கு கொடுத்திருந்தார். ஆக மொத்தத்தில் இது ஒரு தனி மனிதன் தமது முதல் நாடாளுமன்ற பதவிக் காலத்தில் தனது மக்களின் துயரை மனதில் கொண்டு ஒரு நாட்டு தலைவனை தனது கோரிக்கைக்கு இசையச் செய்த ஒரு முக்கிய   சம்பவத்துடன்  சதாம் ஹுசைன் கிராம வரலாறும் கருக்கொண்டது. சதாம் ஹுசைன் வழங்கிய நன்கொடைக்காக அந்தக் கிராமத்துக்கு அந்த பெயரை சூட்டி மகிழ வேண்டும் என்பது பாரித் மீரா லெப்பையின் ஆசையாக இருந்தாலும் அந்த கிராம மக்களின் விருப்பும் வேறு விதமாக இருந்திருக்க முடியாது.


குவைத் மீதான இராக்கின் ஆக்கிரமிப்பு யுத்தம் ஈரான் இராக் எல்லைப்புற யுத்தங்கள் மேற்குலகின் பொருளாதாரத் தடை என இராக் பொருளாதார நெருக்கடிக்கும் வறுமைக்கும் முகங்கொடுத்த காலங்கள் வெளிநாட்டு உதவிகளை இராக் அரசு நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் அது வழக்கமாக வழங்கி வந்த சதாம் ஹுசைன் கிராம பள்ளிவாயல் மற்றும் மதரஸா நடத்த வழங்கிய உதவிகளை கூட நிறுத்தி விட்டது. 
 லைன்ஸ் சஞ்சிகையில் (Lines magazine)  2003 ஆம் ஆண்டு நவம்பரில் நான் எழுதிய “ பெர்மிங்க்ஹாமிலிருந்து  மட்டக்களப்பு வரை”   (From Birmingham to Batticaloa)  என்ற  ஆங்கிலக் கட்டுரையில்  குறிப்பிட்ட சில  பகுதிகளையும் இங்கு மீட்டிப்பார்ப்பது பொருத்தமாகவிருக்கும்    


பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்
 (In the early 1980s, the late Dr. Fareed Meeralebbe, the then Deputy Minister and MP for Batticaloa district, pioneered a free housing scheme for the Muslims among his constituents. During an official visit to Iraq, Dr. Meeralebbe persuaded Saddam Hussein to help the poor Muslims of his birthplace in Sri Lanka. The "Saddam Hussein Village"  was thus erected near the border between Eravur and Thalavai. Coincidentally, in the late 1980s, a mosque in Birmingham in England was also named after Saddam  Hussein following his generous donation towards its construction.

Almost two decades later, things have changed dramatically: Saddam Hussein has been deposed and is being hunted down in the pursuit of the 'War on Terror.' The coalition forces have not stopped with Iraq. They have now forced the trustees of the "Saddam Hussein" mosque in Birmingham to strike out the name of "Saddam Hussein." In a context where the coalition has failed to find either Saddam Hussein or the reputed Weapons of Mass Destruction (WMD), they have turned to the symbolic destruction of Saddam rather than the evasive man himself, commencing with the destruction of his statues in Iraq and then the wiping out his name from a Birmingham mosque.)


இரட்டை கோபுரத்  தாக்குதலின் பின்னர் சதாம் ஹுசைனை கொன்றொழிக்க வேண்டும் தமது பொம்மை ஆட்சியை இராக்கில் கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தை அமுல்படுத்த அல்கைதாவையும் ஹுசைனையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சம்பந்தப்படுத்தி  கொல்லின் பவல் (Colin Powel ) போன்ற அமெரிக்க அரச கொள்கை வகுப்பாளர்கள் குற்றம் சாட்ட , பேரழிவு ஆயுதங்களை கொண்டிருப்பதாக கூறி ஐயனா நாவன்னா வையும் (UNO) அடக்கி வைத்து ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அமெரிக்காவும் ஐக்கிய ராச்சியமும் இப்போது போர்க் குற்றங்கள் தொடர்பில் வாதப் பிரதிவாதங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். 
அந் நாடுகளின் தலைவர்களாகவிருந்த   ஜார்ஜ் புஷ் (George Bush) , அந்தோணி டோனி ப்ளையர் (Anthony Tony Blair) ஆகியோரை முன்னாள் மலேசியா பிரதமராகவிருந்த மஹாதிர் முஹம்மது தொடக்கி வைத்த கோலாலம்பூர்  யுத்த குற்ற விசாரணை மன்றினால் 22 நவம்பர் மாதம் 2011 தமக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடிப்படையாக் கொண்டு விசாரணை செய்து முடிவில் இவர்களை இப்போது சமாதானத்தின் எதிரிகளாக , யுத்தக் குற்ற குற்றவாளிகளாக   தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு முரண்நகையாக  சதாம் ஹுசைன் நகர் கிராமப் பெயர் மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது.        


சதாம் ஹுசைன் கிராமத்தின் மீதான பயங்கரம் (Terror on the Saddam Hussein Village )


சதாம் ஹுசைன் கிராமம் புலிகளின் 1990ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் இலக்குகளில் ஒன்றாக விருந்தது. நித்திரையிலிருந்த அப்பாவி ஏழை   முஸ்லிம் மக்கள் மிலேச்சத்தனமாக  துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படாமல் புலிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அந்த படுகொலையின் வடுக்களை அந்த கிராமம் இன்றும் சுமக்கிறது. பயமுறுத்தப்பட்ட கிராம வாசிகள் அங்கிருந்து தற்காலிக அகதி முகாம்களில் ஏறாவூரில் தஞ்சமடைந்தனர். அண்மைக் காலம் வரை அவர்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்த அகதிகளாக ஏனைய வெளியேற்றப்பட்ட உறுகாமம் , இழுப்பட்டிச்சேனை, கரடியனாறு போன்ற பிரதேச அகதிகளுடன் வாழ்ந்துவந்தனர்.   முரண் நகையாக சதாம் ஹுசைன் மக்கள் மீது தாக்குதல் நடத்திய புலிகள்  பின்னர் அமெரிக்க முன்னாள் செயலாளர் மடலின் அல்ப்ரைத் ஆல் 10/08/1997 ஆம் ஆண்டு அயல் நாட்டு பயங்கரவாத இயக்கமாக  பிரகடனப்படுத்தப்பட்டு , தொடர்ந்து ஈராண்டுக் கொருமுறை அவ்வடையாளப் படுத்தல்  புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  

( The Saddam Hussein Village had become one of the targets of the terror of the LTTE in 1990. Innocuous poor Muslims who were fast asleep were brutally butchered by the Tigers without the sound of a gun being fired, and the village still bears the scars of the massacre. The villagers were terrorized, and had to evacuate their houses and shelter in makeshift refugee camps in Eravur. Until recently they have lived as 'internally displaced' people together with those refugee populations who were expelled from Rugam, Iluppatichenai, Kardiyanaru, etc. Ironically the LTTE, the attackers of the Saddam Hussein Village, was itself later designated as also a foreign terrorist organization in the US by former Secretary of State Madeline Albright in October 1997, a designation which has been renewed every two years ever since. )



பெர்மிங்க்ஹாமிலிருந்து  மட்டக்களப்பு வரை

நான் எழுதிய பெர்மிங்க்ஹாமிலிருந்து  மட்டக்களப்பு வரை  (From Birmingham to Batticaloa)  என்ற  ஆங்கிலக் கட்டுரையில்  சதாம் ஹுசைனின் கிராமப் பெயர் மாற்றப்படும் என்று  எதிர்வு கூறியிருந்தேன். (http://www.bazeerlanka.com/2011/04/war-on-terror-from-birmingham-to.html ) ஒரு வேளை புதிய பயங்கரவாதத்தின் மீதான யுத்தம் சதாம் ஹுசைனை தேடுவதில் மிக விரைவில் மட்டக்களப்பிலுள்ள ஏறாவூருக்கும் விரியும் என்று (    Maybe the new 'War on Terror’ will soon spread all the way to Eravur in Batticaloa in its search for Sadam Hussain ) குறிப்பிட்டிருந்தேன். அக்கட்டுரையின் தலைப்பும் அதனடிப்படியிலே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனெனில்  1980 களின் பிற்பகுதியில் பெர்மிங்க்ஹாம் எனப்படும்  பிரித்தானியாவிலுள்ள நகரொன்றில் பள்ளிவாயல் ஒன்று நிர்மாணிப்பதற்கு சதாம் ஹுசைன் மிக தாராளமான நன்கொடை வழங்கியிருந்தார். இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தவுடன் அங்கு பேரழிவு ஆயுதங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை சதாம் ஹுசைனையும் கூட உடனடியாக கண்டு பிடிக்க முடியவில்லை. யுத்தத்துக்கான காரணத்தையும் நிரூபிக்க முடியவில்லை , அவர்களின் அந்த சாக்கில் செய்யப்பட்ட யுத்தத்தில் தமது எதிரியான சதாம் ஹுசைனையும் வெற்றி கொண்ட சூட்டோடு கொல்லவும்  முடியவில்லை   என்பதால் அவரின் சிலையை உடைத்தனர் , அதன் பின்னர் சதாம் ஹுசைனின் பெயர் எங்கெல்லாம் இருக்கிறது அங்கெல்லாம்  அதனை நீக்கி அளிக்கும் பணியில் அந்தோணி டோனி பிளேயர் (Anthony Tony Blair ) குழு பெர்மிங்க்ஹாம் பள்ளிவாசல் ஒன்று சதாம் ஹுசைன் பெயரில் இருப்பதைக் கண்டு அப்பெயரை உடன் நீக்குமாறு பள்ளிவாயல் நம்பிக்கை பொறுப்பாளர்களை கட்டாயப்படுத்தினர். அந்த பின்னணியில் நானும் ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்துக்கும் பெயர் நீக்க சொல்லி வருவார்கள் என்று குறிப்பிட்டேன். ஏனெனில் அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க்ஹா ஜார்ஜ் புஷ்ஷுக்கு இராக் மீதான யுத்த வெற்றிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் சடுதியாக அன்றைய அரசு கவிழ்ந்ததால் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆட்சிக்கு வந்த இலங்கை சுதந்திரக் கட்சி அரசு  அமெரிக்காவுக்கோ பிரித்தானியாவுக்கோ ஜால்ரா போடும் அரசல்ல. அவர்கள் அப்பெயரை மாற்றச் சொல்லி எப்போதும் சதாம் ஹுசைன் மக்களை கேட்கவில்லை , மாறாக அமெரிக்காவின் இராக்கிய பொம்மை ஆட்சியாளர்கள் தங்களின் எஜமான விசுவாசத்தை காட்டவும் , இன்று மேலோங்கியுள்ள ஷியா ஆட்சி அதிகாரம் ஒரு சுன்னி முன்னாள் ஆட்சி தலைவரின் பெயரை நீக்கவும் இப்போது அங்குள்ள மக்களின் பொருளாதார நெருக்கடி   நிலையை சாதகமாக  பயன்படுத்திக் கொண்டு கையூட்டு வழங்கி பெயர் மாற்ற காரியம் செய்திருக்கிறார்கள். அதற்கு ஏறாவூர் பிரதேச சபை தீர்மாணம் நிறைவேற்றியிருக்கிறது, அந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் வர்த்தமான பிரகடனம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை சதாம் ஹுசைன் கிராம மக்கள் நடத்திய பெயர் மாற்றத்திற்கெதிரான   ஆர்ப்பாட்டம் அந்த மக்களின் அடிப்படை உரிமை பற்றிய விவகாரம் இது என்பதை உறுதி செய்கிறது. அவர்களின் குரலுக்கும் கோரிக்கைக்கும் எதிராக செயற்பட ஏறாவூர் பிரதேச சபைக்கு அதிகாரம் கிடையாது. யாரோ அந்த பள்ளி தொடர்பானவர்கள் மீண்டும் இராக்கிய அரச தூதுவராலயம் நன்கு செயற்படுவதை உணர்ந்து அங்கு சென்று பெயர் மாற்றும் பேரத்தை செய்தே உதவிகளை பெற முயற்சித்திருக்கிரார்கள் .

ஆக சதாம் ஹுசைன் கிராமத்தைச் சேர்ந்த சில  நபர்கள் அங்கு வாழும் மக்களின் அரசியல் அதிகாரம் வழங்கப்படாத நிலையில் செய்திருக்கின்ற இந்த தீர்மாணம் , சதாம் ஹுசைனின் பெயரை மட்டுமல்ல அந்த கிராமத்தின் தோற்றக் கதையை , அங்கு புலிகள் செய்த இனச் சுத்திகரிப்பை என ஒரு வரலாற்றையே குழி தோண்டி புதைக்கும் கைங்கரியத்தை ஏறாவூர் பிரதேச சபை செய்திருக்கிறது.

இந்தப் பெயர் மாற்றம் தொடர்பாக எடுத்துள்ள தீர்மானம் கிராமத்திலுள்ள சகலரின் ஒட்டுமொத்த தீர்மானமென அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாயல் தலைவரான முகம்மட் லெப்பை அப்துல் வத்தீப் தெரிவித்திருந்தார். அப்படியானால் அதே பள்ளிவாயலில் ஜூம்மா தொழுகையை முடித்துக் கொண்டு பீ பீ சீ தமிழோசை வரை சதாம் ஹுசைனுக்கு நன்றிகடன் பட்டதாக குரல் கொடுத்த சதாம் ஹுசைன் கிராம மக்கள் அந்த "ஒட்டு மொத்த தீர்மானத்தில்"  பங்கு கொள்ளவில்லையா ,? அக்கிராம மக்கள் பலரின் உரிமையை மறுத்து , அலட்சியம் செய்து தீர்மாணம் எடுத்தவர்கள் யார் ? அம் மக்கள் தங்களின் போராட்டத்தில் வேற்றி பெறுவார்களா ? சதாம் ஹுசைன் கிராமம் பல தலைமுறைகளின் பின்னர் அதனோடு பின்னிப்பிணைந்த சரித்திரத்தை வெறுமனே ஒரு சங்கதியாக்கி விடுமா  ? இனிமேல் சிறிய குக்கிராமப் பெயர்களையும் தீர்மானிக்கும் சக்திகளாக மேற்குலகும் அதன் ஏவலாட்களும்  இருக்கப்  போகிறார்கள் எனபதனையும் இப் பெயர் மாற்றுச் சம்பவம் கட்டியம் கூறி நிற்கிறது.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...