முஸ்லிம் கொலனி (கள்ளியங்காடு) பள்ளிவாயலின் முந்திய கதையும் பிரம்ம குமாரிகள் நிலையத்தின் பிந்திய கதையும்


                                எஸ்.எம்.எம்.பஷீர் 

"வந்தாரை வாழ வைத்து
சொந்த மண்ணில் பிறந்தாரை
சாகடிக்கும் சிங்காரமான
மட்டக்களப்புச் சீமையான்
வேறு என்ன சிரைப்பான்"
                           (  மறைந்த கிழக்கு கவிஞன்  வீ ஆனந்தன்)

கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனி பள்ளிவாயல் முன்னாள் தலைவர் ஒருவர் நிறைவேற்று ஜனாதிபதிக்கு அனுப்பிய முறைப்பாட்டினை அடுத்து ஜனாதிபதியின் செயலாருக்கான , உதவிச் செயலாளர் அன்டன் பெரேரா காணி ஆணையாளர் நாயகத்துக்கு  அந்த முறைப்பாடு தொடர்பில் தலையிட்டு அமுலில் இருக்கும் விதிகள் ஒழுங்குகள்  பிரகாரம் விவகாரத்தை தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். அதன் பிரதி மட்டக்களப்பு பிரதேச செயலாளருக்கு அவசியமான நடவடிக்கைகளுக்கும் முறைப்பாட்டாளருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.


ஜனாதிபதி செயலாளர் அனுப்பிய கடிதம்

காணி ஆணையாளர் நாயகம்
காணி ஆணையாளர் திணைக்களம்
ஜெனரல் கொப்பேகடுவ மாவத்தை
கொழும்பு
மட்டக்களப்பு கள்ளியங்காடு மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாயல் காணியை பலவந்தமாக கைப்பற்றல்
நான் இத்தால் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு முகவரியிடப்பட்ட (  .................. ) என்ற விலாசத்தை கொண்ட திரு. (……………….    )  என்பவரின் மேற்படி விடயம் சம்பந்தமான வேண்டுதலையும் , அதன் உள்ளடக்கங்களுடன் ஒன்றாக  இத்துடன் உங்களுக்கு அனுப்புகிறேன் .அவற்றின் உள்ளடங்கியவை சுய விளக்கம் கொண்டவையாகும்  
இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு அமுலில் இருக்கும் விதிகள் ஒழுங்குகள் பிரகாரம் இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் வேண்டப்படுகிறீர். நீங்கள் இது தொடர்பில் எடுத்த நடவடிக்கை பற்றி  இக்கடிதம் எழுதுபவருக்கு  உங்களின் கடிதப் பிரதி ஒன்றினை  இவ் அலுவலகத்துக்கு   அனுப்புவதுடன் தெரியப்படுத்தலாம். .

அன்டன் பெரேரா
 ஜனாதிபதியின் உதவி செயலாளர்.  
ஜனாதிபதின் செயலாளருக்காக     

பிரதி : மட்டக்களப்பு பிரதேச செயலாளர் 
                                                          அவசியமான நடவடிக்கைகளுக்காக

ஜானதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை பள்ளிவாயல் முன்னாள் தலைவர் கிழக்கு மாகான ஆளுனருக்கும்  அனுப்பியிருந்தார். ஆளுநரின் செயலாளர் "சொல்லப்பட்ட விடயம் உண்மையாகவும் , இங்கு சொல்லப்பட்டதை உறுதி செய்யும் சான்றுகள் இருப்பின் கவுரவ ஆளுனர் உமக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கும்படி என்னை பணித்துள்ளார்." என்று குறிப்பிட்டிருந்தார்.


கிழக்குமாகான ஆளுநரின் கடிதம்

5/03/2010


கிழக்கு மாகான ஆளுனரின் செயலாளர்

மட்டக்களப்பு முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுல் பிர்தௌஸ் காணியில் இருந்து சட்ட விரோத குடியேறிகளை வெளியேற்றும் கட்டளையை செயல்படுத்தவும் , அக்காணியில் கட்டட நிர்மாணத்தை நிறுத்த தடையுத்தரவு கட்டளை பிறப்பிக்கச் செய்யவும் வேண்டுகோள்      
மேற்படி விடயம் தொடர்பாக என்ற முகவரியை சேர்ந்த .. என்பரின்  26/02/2010 ஆம் திகதியிடப்பட்ட , மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்டு கவுரவ ஆளுனருக்கு பிரதி செய்யப்பட்ட கடிதத்தினை இத்துடன் இணைத்துள்ளேன்.
சொல்லப்பட்ட விடயம் உண்மையாகவும் , இங்கு சொல்லப்பட்டதை உறுதி செய்யும் சான்றுகள் இருப்பின் கவுரவ ஆளுனர் உமக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கும்படி என்னை பணித்துள்ளார்.
எஸ். அமிர்தலிங்கம்
ஆளுனரின் செயலாளர்.
கிழக்கு  மாகாணம்
பிரதிகள்
(1)எம்.எச்.எம் அஸ்வர் , ஜானாதிபதியின் அரசியல் ஆலோசகர்
மேன்மைதங்கிய  ஜனாதிபதி

மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறொன்றில்லை என்று ஒரு சிவில் முறைப்பாட்டிலும் தங்களை குற்றவியல் நீதிமன்ற வழக்கில் நிரூபிப்பது போல் நிரூபிக்க வேண்டிய பொல்லாத சூழ்நிலை இந்த கள்ளியங்காட்டு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது என்பதையே இக்கடிதமும் சுட்டிக்காட்டுகிறது. மீண்டும் மட்டக்களப்பு நிர்வாகம் இது குறித்து எடுத்த நடவடிக்கை என்ன , அப்படியானால் பள்ளிவாயல் இருக்கவில்லை என்று உண்மையை தவிர வேறில்லை என்று பொய் சொல்லி அந்த காணியை நிர்வாகம் பிரேம குமாரிகளுக்காக தாரை வார்த்ததா. நிர்வாகம் தனது இன அடிப்படையிலான நிகழ்சி நிரலை ஜானாதிபதியையும் மீறி செய்துள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றன.    

            

இரு தசாபதங்களும் இன வரலாற்று இழப்பும்       

1990 ம் ஆண்டு புலிகளின் அச்சத்தால் அங்கிருந்து முஸ்லிம்கள் வெளியேறியவுடனே பள்ளிவாசல் உடைக்கப்பட்டது. மெதுமெதுவாக பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டது. அது மாத்திரமல்ல முஸ்லிம் மையவாடியின் சுமார் இருபது பேர்ச்சஸ் காணியும் , சாகிரா கல்லூரியை சுற்றி இருந்த காணியும் அத்துமீறி குடியகப்படுத்தப்பட்டன. முஸ்லிம் மக்களின் இருத்தலுக்கு சான்றாக உள்ள சகல சான்றுகளும் மறுதலிக்கப்பட்டன. ஆக பின்னர் நில அளவை செய்து மையவாடியை சுற்றி மதில் கட்டியபோதும் இழக்கப்பட்ட சுமார் இருபது பேர்ச்சஸ் காணியை சுற்றிவர இருந்தோர் கபளீகரம் செய்துவிட்டனர். பள்ளிவாயல் காணியும் மூன்றாக பிரிக்கப்பட்டு இரண்டு அப்குதியை தனியார்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். தமது பள்ளிக்காணி தொடர்பாக புலிகள் செல்வாக்கு செலுத்திய காலத்திலும் முறைப்பாடுகளை பள்ளிவாயல் தரப்பினர் மேற்கொண்டிருந்தனர். ஆனால் புலிகள் ஆக்கிரமித்தோருக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர். பள்ளிவாயல் காணியின் ஒரு பகுதியில்தான் பிரமகுமாரிகள் ராஜயோக  நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஒரு பொது சொத்தான  வக்பு சபையினால் பதிவு செய்யப்பட்ட இஸ்லாமிய சமய வழிபாட்டுத் தளமான பள்ளிவாயல் காணியினை , அச்சட்டத்திற் கெதிராக  ( முஸ்லிம் பள்ளிவாசல்கள் நம்பிக்கை பொறுப்புக்கள் அல்லது வக்ப் சொத்துக்கள் - வக்ப் என்பது நிரந்தரமாக சமய நோக்கத்தற்காக நம்பிக்கை வழங்கப்படும் சொத்துக்கள் ) ஈடு வைத்தல் உரித்து மாற்றம் விற்பனை என எந்த முறையிலும் உடமை மாற்றப்படும் பொழுது அதற்கெதிராக மாவட்ட நீதிமன்றில் வழக்கு வைக்கும் உரிமையையும் வக்ப்   சட்டத்தின்படி  உள்ளது. அந்த வகையிலும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க சில தடைகள் இயல்பாகத் தோன்றும் வகையில் உருவாகின , சில தடைகள் உருவாக்கப்பட்டன. கிழக்கில் காணப்பட்ட யுத்த சூழலும் சிவில் நிர்வாக முடங்குதலும், சட்டத்தரணிகள் சம்பந்தப்பட்ட தரப்பினரின் அலட்சியம் என்பனவும் , மொத்தத்தில் கள்ளியங்காட்டு பள்ளிவாசலை ஹிந்து சமய தியான மண்டபமாக இறுதியில் கொண்டு முடித்திருக்கிறது. 

முஸ்லிம் கொலனியிலிருந்து  1990 ஆம் ஆண்டு காணப்பட்ட பதட்ட நிலையை அடுத்து வெளியேறிச் சென்ற வேறு பிரதேசத்தில் குடியேறிய அன்றைய பள்ளிவாயலின் தலைவர் அதே ஆண்டு மீண்டும் மார்கழி மாதம் 16 ம் திகதி முஸ்லிம் கோலோனிக்கு திரும்பி வந்தபோது அங்கு பள்ளிவாயல் சேதமாக்கப்பட்டு அங்கிருந்த உடைமைகள் கொள்ளையிடப்பட்டிருந்ததை கண்டு மட்டக்களப்பு போலீசில் ஒரு முறைப்பாட்டினை 17ம திகதி மார்கழி மாதம் அதே ஆண்டு செய்தார். அம்முறைப்பாட்டில் சேதாரங்கள் பற்றி மிக விரிவாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

ஒவ்வொரு தடவையும் தமது காணி நிலம் பற்றிக் கவலைப்படாமல் கள்ளியங்காட்டு பள்ளிவாயல் மீட்கும் பணியில் பலர் இரண்டு தசாப்தங்களாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த ஈடுபாடும் அக்கறையும் மெதுமெதுவாக இழக்கப்படும் வகையில் பல செயற்பாடுகளை அரச அதிகார நிர்வாகத்தை பயன்படுத்தி சிலர் திட்டமிட்டே செய்து வந்துள்ளனர். குறிப்பாக அந்த வகையில் அப்பள்ளிவாயல் முன்னாள் நம்பிக்கை பொறுப்பாளர்கள்,  அப்பள்ளிவாயலில் அக்கறையுள்ள அப்பிரதேச மக்கள் முதலில் தங்களின் சுட்டுவிரலை பிரதேச செயலாளரான திருமதி கலாமதி பத்மராஜாவை நோக்கியே நீட்டுகிறார்கள்.
முதன் முதலில் பள்ளிவாயல் காணியின் ஒரு பகுதியினூடாக தனது வாகனப் பாதையாக ஒரு அதன் பின்னால் குடியிருக்கும் அரச உத்தியோகத்தர் ஒருவர் அத்துமீறி அக்கிரமித்துள்ளார். பின்னர் மெதுமெதுவாக நில ஆக்கிரமிப்பு தொடர்ந்திருக்கிறது .  "எங்களது பள்ளிவாசல் வளவை துப்பரவு செய்து முள் வெளி அமைத்து பராமரிப்பதற்கு அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” . இந்த பின்னணியில் என்று ஒரு கடிதம் முஸ்லிம் கொலனி பள்ளிவாசல் நம்பியாளர் சபையினால் கிராம சபை உத்தியோகத்தினரூடாக பிரதேச செயலாளருக்கு  21ம திகதி மாசி மாதம்     2002 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டது.
இவ்வளவில் பள்ளிவாசல் இருந்து வந்திருப்பது விசாரணையின் போது தெரிய வருகின்றது கடந்த ஜூன்  1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயலின் காரணமாக சேத முற்றுள்ளது தற்பொழுது இவ்வளவில் கட்டிடமோ வேலியோ இல்லை என்பதை தங்கள் கவனத்துக்கு அறியத் தருகிறேன்  மேலும் இவ்வளவை புணரமைப்பு செய்வதற்கு ஆவன செய்யலாமென சிபாரிசு செய்கிறேன் என்பதாக என (கிராம சேவகர் :எஸ்.தங்கராஜா   அறிக்கையிட்டுள்ளார். அவ்வறிக்கை குறிப்பிட்ட மேலதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுமேலும் இந்த கிராம சேவகரின்விசாரணையின் பின்னரான அறிக்கையை நன்கு கவனித்தால் ஒன்று புலப்படுகிறது ஒருபள்ளிவாயல் இருந்த தடமே அங்கு இல்லாமல் சுமார் பத்தாண்டுக்குள் அழிக்கப்பட்டிருகிறது என்பதும் ,வாக்கு மூல விசாரணைகளின் மூலம் அங்கு பள்ளிவாயல் இருந்ததை நிறுவ வேண்டிய நிர்ப்பந்தம் பள்ளிவாயல் நிர்வாக சபையினருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதுமாகும்.. 
.
நில   அளவையாளர் த. ராசரத்தினம் வரைந்த கள்ளியங்காடு கிராமத்தின் வரைபடம் பள்ளிவாசல் வீதியையும் பள்ளிவாசல் காணியையும் நன்கு அடையாளப்படுத்துகிறது . இவ்வரைபடம் 1985 ஆம் அண்டு வரையப்பட்டுள்ளது. அங்கிருந்த பள்ளிவாசலில் மின்சார உபயோகத்திற்கான கட்டணங்கள் மட்/ கள்ளியங்காடு முஸ்லிம் கொலனி மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பெயரில் கட்டப்பட்டு வந்துள்ளன என்பது மட்டக்களப்பு மாநகர சபை பதிவுகளில் உள்ளன என்ற விடயங்களையும் , 1979ம் ஆண்டு  தொடக்கம்  1987ம் ஆண்டு வரை செலுத்திய மின்கட்டண  ரசீதுகள்  சில சான்றாக சமர்ப்பிக்கப்பட்டு ஒரு துடைத்தழிக்கப்பட்ட இடத்தை நிரூபிக்கும் துர்ப்பாக்கியம் இந்த பள்ளிவாசலுக்காய் உரிமைக் குரல் கொடுப்போருக்கு ஏற்பட்டிருக்கிறது.  
       
பள்ளிவாயல் காணியில் ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்ற பின்னரும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர்   பள்ளிவாயல் அமைந்திருந்த பகுதியையாகினும் மீண்டும் பெறும்   முயற்சியில் , அக்குறிப்பிட்ட காணியில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே அக்குறிப்பிட்ட பள்ளிவாயல் முன்னர் அமைந்திருந்த காணியிலிருந்து அத்துமீறிய குடியேறிகள் அகற்றப்பட்டார்கள் . என்றாலும் அது நடந்த பின்னர் அக்காணியில் பிரம்ம  குமாரி ராஜ யோக நிலையம் கட்டுவதற்கு கட்டடப்பொருட்கள் குவிக்கப்பட்டன.

வாய்ச் சொல் வீரர்கள்       

இந்த பள்ளிவாசல் விவகாரம் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்  இதுவரை அவருக்கு கள்ளியங்காட்டு பள்ளிவாயல் முன்னாள் தலைவரால் முறைப்பாட்டிற்கு பதில் ஏதும் அனுப்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அனுராதபுர 
"ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன் இப்படியானதொரு லட்சணத்தில் இந்த அரசாங்கத்தில் நான் ஓர் அமைச்சராக இருக்கின்றேன். இதைப் பார்த்துக் கொண்டு என்னால் கோபப்படாமல் இருக்க முடியாது. மு.காங்கிரசின் தலைவருக்கு இவற்றினைப் பார்த்தால் கோபம் வரத்தான் செய்யும்
என்று கூறியவர் 
அனுராதபுர காக்கிச் சட்டைகாரகளுக்கு வழக்கு தாக்கல் செய்துவிட்டாரா இல்லையா என்பது ஒருபுறமிருக்க பள்ளி நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தி மட்டக்களப்பில் வக்ப் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு பள்ளிவாசல் படிப்படியாக உடைக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறதே என்பதை பார்க்கும் போது " நீதி தேவன்" மயக்கத்தில் இருக்கிறார் போலத்தான் தோன்றுகிறது. ஜனாதிபதியின் ஆலோசகரான எம் ஹெச்.எம் அஸ்வர் எம்.பிக்கும் ஆளுநரின் செயலாளர் பள்ளிவாசல் முறைப்பாடு பற்றி அறிவித்திருந்தார் என்று அக்கடிதம் மூலம் அறிய முடிகிறது. ஆனாலும் யாரும் ஒரு துரும்பைத் தன்னும் அசைக்கவில்லை என்பது மட்டும் நன்கு புலனாகிறது.      

சமயப் புரட்சி

அண்மையில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள சமய தலங்களை புனரமைப்பதற்கான நிதி வழங்கும் வைபவம் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போது  முன் எப்போதையும் விட தற்போது நாட்டில் சமயப் புரட்சியொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அனைத்து மதத் தளங்களையும் அபிவிருத்தி செய்யும் தேசிய திட்டத்திற்கு சமாந்திரமாக அத்திட்டம்  முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார் . அப்படியானால் கிழக்கிலே பாரம்பரியமான கள்ளியங்காட்டு பள்ளிவாசல் மீண்டும் புனரமைக்கப்படல் வேண்டும் , ஆனால் பள்ளிவாயல்தான் இருந்த இடம் தெரியாமல் புடுங்கி எறியப்பட்டு அதன் மீது தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதே. அது என்ன புரட்சியா அல்லது அல்லது அப்பள்ளிவாயல் இருந்திருக்கவில்லை அல்லது இருந்தாலும் இப்போது அங்கு முஸ்லிம் குடிகள் இல்லை ( அங்கு முஸ்லிம் மையவாடியில் புதைக்கப்பட்டவர்களைத் தவிர) என்று ஒரு மதப் புரட்டலை செய்திருக்கிறார்களா

அண்மையில் நீதியமைச்சர் ஹக்கீம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது பருத்தித்துறையில் அமைந்துள்ள ஆங்கிலேயர் காலத்தில் தென் இந்தியா தேவிப்பட்டணம் முஸ்லிம் வர்த்தகர்கள் அங்கு வசித்தபோது நிர்மாணித்திருந்த பள்ளிவாசலையும் சென்று பார்வையிட்டதாகவும் , அப்பள்ளிவாசலை முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அப்பள்ளிவாசலை அப்பகுதி தமிழ் மக்கள் பாதுகாத்து வந்த செய்தியையும் அப்பள்ளிவாசலை புனருத்தாரணம் பண்ணும் வேண்டுகோளையும் அப்பகுதி நகரசபையின் பிரதித்  தலைவர் பத்மநாதன் முன்வைத்ததாகவும் செய்திகள் வந்தன. உண்மையில் யாழ்நகர முஸ்லிம் வியாபாரிகளுக்கு பருத்தித்துறையிலே கடைகள்/வியாபாரத்தளங்கள் சில இருந்தன . யாழ் முன்னாள் பிரதி மேயர் பசீரின் தந்தைக்கும் அங்கு கடை ஒன்று இருந்தது. அங்கு வியாபாரம் செய்த யாழ் முஸ்லிம்கள் அங்கு தொழில் புரிந்துவிட்டு மாலையில் யாழ் நகருக்கு திரும்பிவிடும் வழக்கம் கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கு தொழுகை புரிந்தார்கள் அப்பள்ளியை பராமரித்தார்கள். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னரும் அந்த பள்ளிவாயல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மட்டக்களப்பு கள்ளியங்காட்டு பள்ளிவாசல் அபகரிப்பு முஸ்லிம்களின் வரலாற்றையும் அபகரிப்பு செய்த செயலாகும். எனவேதான் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை கண்ட  இயக்க காலங்களுக்கு இன முரண்பாட்டு காலங்களுக்கு முந்திய "மனவளமும்"   ( மட்டு மாநாட்டில் நிலைக்கும் வாழ்வுடையோர்க் கவர்மனம்போல் மனவளமும் இனிதே ) இராணுவத்தின் தாக்குதல் ஒன்றில் பஸ்ஸில் பயணித்தபோது தற்செயலாக கொல்லப்பட்டு இறந்த நண்பர்  ஆனந்தன் கண்ட  முரண்நகையான மட்டக்களப்பானின் செயல்நிலைக்கும் இடையே உரிமையைத் தேடி கள்ளியங்காட்டு முஸ்லிம்கள் சொந்த மண்ணில் சாகடிக்கப்பட்டுப் போனார்களா! 
------          My No. RDID/1/2/1/2
         

Commissioner General of Land
Dept. of Land Commissioner
General Hector Kobbekaduwa Mw        ,
Colombo - 07
Forcible Seizure of the Batticaloa Kalliyamkadu Masjidul Firthows   Mosque's Land
I forward herewith an appeal together with enclosures addressed to His Excellency the President by Mr…….of  …………….Batticaloa, on the above subject, contents of which are self - explanatory.
You are kindly requested to intervene in this matter and take appropriate action to settle this matter in accordance with the existing rules and regulations. You may inform the writer of the action taken by you in this regard with copy to this office.
Anton Perera
Assistant Secretary to the President for Secretary to the President


Cc:

            1. Divisional Secretariat:
                 Batticaloa                   For necessary action 

------

.
My .No G/EPC/C/CA/1
Secretary of Governor –Eastern Province
Govt. Agent District Secretary
Batticaloa

Appeal for effecting an order to evacuate  illegal settlers form the  Masjithul Firthous Mosque Land Muslim  colony Batticaloa And to make on injunction order to stop  construction of Building in this land

I enclosed herewith the letter dated 26/02/2010 addressed to HE the President with copy to Hon Governor form Mr  (                                          of  ) on the above matter.

Hon Governor has directed  me to inform you to take necessary  action immediately if what is said  is factual and there is evidence to collaborate with this statement  

S.Amiththlingham
Secretary to the Governor
Eastern Province

Copies  M.H.M. Aswar Advisor to   the President  
HE the President

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...