நிறைவேற்று ஜனாதிபதியின் ஆணையும் நீர்த்துப்போன கள்ளியங்காட்டு முஸ்லிம்களின் பிரச்சினையும்

எஸ்.எம்.எம்.பஷீர்

"சுவாமி விபு லாநந்தர் யாழிசைநூ லோலிக்கும்
மஞ்சாரும் பொழில்மட்டு மாநாட்டில் நிலைக்கும்
வாழ்வுடையோர்க் கவர்மனம்போல் மனவளமும் இனிதே"

                             -புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை-மட்டக்களப்பு கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனியில் முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத்தலமான பிர்தௌசியா பள்ளிவாயல் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக அங்கு ஒரு ஹிந்து தியான மண்டபம் பிரம குமாரிகள் ராஜ யோக நிலையம் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டு இரு வாரங்கள் ஓடிவிட்டன. அது கிளப்பிய சலசலப்பு ஓய்ந்து விட வேண்டும் என்று பலர் எண்ணுவது , கருத்துப்பகிர்வு செய்வது , அதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்றவகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க அங்கு காலங்காலமாக வாழ்ந்த சிலர் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற அங்கலாய்ப்புடன் ஓயாமல் தமது உரிமையை நிலைநாட்ட உறுதியாக செயற்பட்டு வருகின்றனர். ஒரு சமூகத்தின் வழிபாட்டுத்தலம் , ஒரு சமூகத்தின் வரலாறு அடிச்சுவடு தெரியாமல் கள்ளியங்காட்டில் அழிக்கப்பட்டிருக்கிறது,


சில தமிழ் அரச ஊழியர்கள், அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் , சமூக நல்லிணக்கம் குறித்து அக்கறை கொண்டோர் , ஊடகவியலாளர்கள் என பலர் அங்கு ஒரு பள்ளிவாயல் இருந்ததா என்ற கேள்வியை எழுப்புவதும் , அப்படி பள்ளிவாயல் இருந்தது , என்று அவர்களுக்கு பாட்டி கதை சொல்லாமல் , தகுந்த ஆதரங்களுடன் நிரூபித்த பின்னர்.; இருந்திருந்தாலும் அங்கு இப்போது முஸ்லிம்கள் இல்லை , அல்லது முஸ்லிம்களுக்கு வேறு பல பள்ளிவாயல்கள் மட்டக்களப்பில் இருக்கின்றன , வாழைச்சேனை பிரதேசத்தில் ஒரு கோவில் கூட இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு அங்கு ஒரு சந்தை இப்போது அந்த இடத்தை நிரப்பியிருக்கிறது, தாங்கள் இடம்பெயர்ந்து சென்றுவிட்ட பகுதியில் முஸ்லிம் கொலனி மக்கள் தங்களின் புதிய வழிபாட்டுத்தலத்தை உருவாக்கிக் கொள்ளலாம், யாருமே ராஜ யோக நிலையம் கட்டுவது பற்றி ஆட்சேபனையை முன்னரே தெரிவிக்கவில்லை ( இது முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் கதை என்பது வேறு கதை) ; என்றெல்லாம் நியாயம் கற்பிப்பது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பை திட்டமிட்டு மறைக்கும் நடவடிக்கையா என்ற கேள்வியை எழுப்புகிறது.தமிழ் அரச நிர்வாகிகளை , தமிழ் அரசியல்வாதிகளை விட்டு விட்டு பார்த்தால் மட்டக்களப்பு முஸ்லிம் மாவட்ட அரசியல்வாதிகளோ , மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அமைச்சர்களோ மாகான சபை அமைச்சர்களோ அங்கத்தவர்களோ அம்மக்கள் எதிர்பார்த்தவாறு அலட்டிக் கொள்ளவில்லை , அப்பபடி இருக்க ஓரு சிலர் இதனை எதற்காக பெரிது படுத்த வேண்டும் என்ற கேள்வியையும் தமிழ் தரப்பினர் சிலர் எழுப்புகிறார்கள் ; இதற்கான பதிலை சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் தான் சொல்ல வேண்டும். நான் முன்னரே எழுதியது போல் மீண்டும் முஸ்லிம் அரசியவாதிகளின் அரசியலே அவர்களின் அக்கறைக்கு தடையாக இருக்கிறது என்ற செய்தியை மீண்டும் அவர்களின் அசமந்தத்தனம் உறுதி செய்கிறது.

ஆனால் அந்த பள்ளிவாயலை அடாவடித்தனமாக கபளீகரம் செய்ததை பற்றிய முறைப்பாடுகள் பல முஸ்லிம் அரசியல்வாதிகளினால். கட்சித்தலைவர்களினால் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது. அரச நிர்வாகிகள் சிலர் தமது நிகழ்சி நிரல்களை நிர்வாக ஆதிக்கத்தைக் கொண்டு நிறைவேற்றியிருக்கிரார்கள். சட்டத்தரணிகள் தமது கடமைகளிலிருந்து தவறியிருக்கிறார்கள். நிறைவேற்று ஜனாதிபதியிடம் நீதி கேட்டு செய்த முறைப்பாடும் அரச நிர்வாகிகளிடம் மட்டக்களப்பில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அரச நிர்வாகிகள் தங்களின் நீண்டகால நிர்வாக இனச் சுத்திகரிப்பு நிகழ்சி நிரலை கண கச்சிதமாக செய்து கள்ளியங்காட்டு முஸ்லிம் மக்களின் வரலாற்றையே கபளீகரம் செய்துள்ளார்கள்.

ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான i இலங்கை குடியரசின் அரசியல் யாப்பு 14. (1) ( உ ) பிரிவு ன்படி உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு பிரஜையும் தனித்தோ அல்லது ஏனையோருடன் கூட்டாகவோ , பகிரங்கமாகவோ அல்லது இரகசியமாகமோ , தனது சமயத்தை அல்லது வழிபாட்டில் கடைப்பிடித்தலில் அனுஷ்டானத்தில், போதனையில் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தும் சுதந்திரமுடையவர்களாவர். ( 14. (1) Every citizen is entitled to - (e) the freedom, either by himself or in association with others, and either in public or in private, to manifest his religion or belief in worship, observance, practice or teaching;) மத வழிபாட்டு உரிமையை ஒழித்திருக்கிறார்கள். அதனை வெறுமனே ஒழித்தது மட்டுமல்லாமல் அந்த ஒழிப்பின் மீது இன்னுமொரு அதையொத்த உரிமையை உறுதி செய்திருக்கிறார்கள்.

( புலிகள் தொடக்கிவைத்த ) முஸ்லிம் கொலனி இனச்சுத்திகரிப்பு முற்றுப் பெற்றுள்ளதா?


புலிகள் இருபதாண்டின் முன் கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனி மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை தொடக்கி வைத்தனர். அதை தமிழ் அரச அதிகாரம் இப்போது இறுதியாய் இரு வாரத்தின் முன் பூர்ணப்படுத்தியிருக்கிறது. திட்டமிட்ட வகையில் நிறைவேற்று ஜனாதிபதியின் கட்டளையை மீறி முஸ்லிம் கொலனி பள்ளிவாயலை -முஸ்லிம் வரலாற்று தடயத்தை - மாற்றியமைத்தவர் யார் யார் . அவர்களின்  பின்னணி என்ன என்பதும் எமது தேடுதலுக்கும் , அனுபவத்துக்கும் உட்பட்டதே. திட்டமிட்ட படிமுறையான வரலாற்று ஆக்கிரமிப்பும் எமக்கு மிகத் துல்லியமாக தெரிந்ததே. ஆனாலும், இந்த பள்ளிவாயல் முஸ்லிம் மக்களின் இருத்தல் தொடர்பில் பல தகவல்களை திட்டமிட்டு புதைக்கும் கைங்கரியத்தில் பலர் ஈடுபட்டு வந்திருப்பது மிகவும் விசனத்துக்குரியது. பிரதேச செயலாளரான திருமதி கலாமதி பத்மராஜா என்பர் முன்னிற்க பின்னணியில் யார் யார் இருந்துள்ளனர் , இருக்கின்றனர் என்பது இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டிய , கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

புலிகள் இருபதாண்டின் முன் கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனி மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை தொடக்கி வைத்தனர். அதை தமிழர்   தரப்பில் பல தகவல்களை திட்டமிட்டு புதைக்கும் கைங்கரியத்தில் பலர் ஈடுபட்டு வந்திருப்பது மிகவும் விசனத்துக்குரியது. பிரதேச செயலாளரான திருமதி கலாமதி பத்மராஜா என்பவர் முன்னிற்க பின்னணியில் யார் யார் இருந்துள்ளனர் , இருக்கின்றனர் என்பது இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டிய , கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

5 ஆம் திகதி ஆகஸ்து மாதம் 2010 ஆம் ஆண்டு கள்ளியங்காடு முஸ்லிம் கொலனி சமூகம் சார்பாக முன்னாள் முஸ்லிம் கொலனி பள்ளிவாசல் தலைவரூடாக ஜனாதிபதிக்கு கள்ளியங்காடு பள்ளிவாசல் , தொடர்பில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தனர் அதில் அவர்கள் மட்டக்களப்பு பிரதேச செயலாளரின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை குறித்து குற்றம் சாட்டியிருந்தனர். இந்த முறைப்பாட்டிற்கு முன்பு பல்வேறு அச்சுறுத்தல்கள் முறைப்பாடுகள் முதலில் (புலி ஆதிக்க காலத்தில்) புலித் தலையீடு போலீஸ் தலையீடு என்றெல்லாம் பல நடந்தேறியிருக்கின்றன. இங்கே ஜானாதிபதிக்கு எழுதிய கடிதத்தை வாசிப்போருக்கு ( தமிழிலும் இக்கடிதத்தை மொழி பெயர்த்துள்ளேன் - ஓரிரு வசனங்கள்-வரிகள்- தவிர்க்கப்பட்டுள்ளன , கடிதம் அனுப்பியவரின் பெயர் கையொப்பம் முகவரி என்பன கூட , எழுதியவரின் பாதுகாப்பு கருதி தவிர்க்கப்பட்டுள்ளது.)


மேன்மைதங்கிய ஜனாதிபதி. மஹிந்த ராஜபக்ச
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு

5/8/2010

மேன்மை தங்கிய ஐயன்மீர்!

தொடர்பாக : மட்டக்களப்பு கள்ளியங்காடு மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாயல் காணி, பிரம குமாரி ராஜயோக நிலையம் எனும் பெயரில் ஒரு ஹிந்து கோவிலை கட்டுவதற்காக மட்டக்களப்பு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜாவினால் கபளீகரம்

நாங்கள் மேற்சொன்ன விடயம் சம்பந்தமாக பிரதேசிய செயலாளர் , அரச அதிபர், காணி ஆணையாளர்., மட்டக்களப்பு மாநகர மேயர் உட்பட ஏனைய உத்த்யோகத்தர்களுக்கும் முறைப்பாடு செய்திருந்தோம்.,

அதன் பலனாய், மேற்படி கட்டுமானங்களை தடை செய்யும் கட்டளை செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் அக் கட்டளையை புறக்கணித்து கட்டட வேலைகள் ஆரம்பித்துள்ளன. தொன்னூறுகளில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்களை அவர்களின் வாழிடங்களிலிருந்து துரத்திவிடும் இனவாத முயற்சியில் எமது பள்ளிவாயல் முழுமையாக அழிக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் சில மனச்சாட்சியற்ற நபர்கள் பள்ளிவாயல் காணியை சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருந்தார்கள். நாங்கள் மட்டக்களப்பு பிரதேச செயலாளரை அவர்களை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். எங்களின் தாழ்மையான கோரிக்கைக் கெதிராக மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். இச்செயல் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் . இத்தகைய செயலை ஆதரிக்காத அமைதியான சக வாழ்வினை பரிந்து பேசுபவர்கள் அனைவருக்கும் எதிரான செயலாகும்.

நாங்கள் கோவில் அல்லது ஏனைய வழிபாட்டு தலங்கள் கட்டுவதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இது எங்களின் உரிமை .இதனை பாதுகாக்குமாறு மேன்மைதங்கிய உங்களை கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் இந்நாட்டில் இனவாதத்தை என்றுமே ஆதரிப்பவர்கள் அல்ல. பிரதேச செயலாளரே பாரபட்சத்துடனும், இனவாத முறையிலும் செயற்பட்டுள்ளார்.
ஆனால் எங்கே எல்லாமே முரனாகவுள்ளது. நாங்கள் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குழல்களிருந்து அச்சத்தை எதிர்கொண்ட காரணத்தினால் பள்ளிவாயல் காணி உட்பட , எங்களது காணிகளையும் விட்டு வெளியேற வேண்டி நேரிட்டது. எங்களின் மன விருப்பின்படி நாங்கள் ஒரு போதும் வெளியேறவில்லை.

இப்போது பிரதேச செயலாளர் நீங்கள் உங்களின் காணிகளை விற்று விட்டீர்கள் , அவற்றினை திரும்ப கேட்கும் உரிமை உங்களுக்கில்லை என்று கூறுகிறார். எவ்வாறெனினும் , நாங்கள் எங்களின் பள்ளிவாயல் காணியை ஒருபோதும் விற்கவில்லை. அவர்கள் எங்களுக்கு இலட்சங்களை தர அணுகியபோது எங்களின் பள்ளிவாயல் காணியை ஒருபோதும் நாங்கள் வழங்க இணங்கவில்லை. பிரதேச செயலாளர் இந்தக் கனிகளை இரகசியமாக உரித்து மாற்றம் செய்து விட்டார் என அஞ்சுகிறோம். இவ்வாறே சாகிரா வித்தியாலயத்துக் குரிய காணிகளும் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு குடிகொள்ளப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் மையவாடியும் கூட இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஆகவே கள்ளியங்காட்டு முஸ்லிம் சமூகத்தினராகிய நாங்கள் மேன்மை தங்கிய உங்களை எங்களின் பளிவாயல் காணியையும் ( ) எங்களின் காணியையும் மீட்டுத் தர உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம் நாங்கள் எங்களின் அங்குள்ள பிறந்த இடங்களில் மீள் குடியேற மிக ஆவலாய் இருக்கிறோம். எங்களுக்கு பாரம்பரியமாக உடமையாகவிருந்த காணிகளை நாங்கள் மீளப்பெறுவதை அனுமதிக்காத மட்டக்களப்பு பிரதேச செயலாளரின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை இது. மேன்மை தங்கிய நீங்கள் முஸ்லிம் கொலனியிலுள்ள எங்களின் காணிகளில் நாங்கள் மீள் குடியேறவும் எங்களின் பள்ளிவாயலை நிர்மாணிக்கவும் உதவி (கோருகிறோம்). இந்த பிரச்சினை தொடர்பான 26.02.2010  ஆம் திகதி இடப்பட்ட கடிதப் பிரதியையும் , இது தொடர்பிலான போலீஸ் முறைப்பாட்டு பிரதியையும் இத்துடன் இணைத்துளோம்.


முஸ்லிம் கொலனி சமூகம் சார்பாக

முன்னாள் முஸ்லிம் கொலனி பள்ளிவாசல் தலைவர் .
-----------------------------------------------------------

His Excellency The President Mahintha Rajapaksa
Presidential Secretariat
Colombo

Your Excellency Sir.

MOSQUE REGISTRATION NO. R1302/BT7152


REF:- FORCIBLE SEIZURE OF THE BATTICALOA KALLIYAMKADU MASJIDUL FIRTHOWS MOSQUE'S LAND TO BUILD A HINDU TEMPLE BY THE NAME BRAMMAKUMARIS RAJAYOGAM , PERPETRATED BY THE DIVISIONAL SECRETARY . BATTICALOA MRS. KALAMATHY PADMARAJAH
We had complained about the above matter to the Divisional Secretary, the Government Agent. Land Commissioner, the Mayor of the Batticaloa Municipal Council and other officials.
As a result an injunction order was made prohibiting the above construction but again the Construction works has started ignoring the order. During the terrorist activities of the 90”s. our above Mosque was fully destroyed in a racist attempt to chase an ay the Muslims from our residences. In this period some unscrupulous persons had illegally occupied the Mosque land and we had requested the Divisional Secretary , Batticalao to remove the persons out. In contrary to our humble appeal the Divisional Secretary has acted in an irresponsible manner. This is an act against particular religions and all those who advocate peaceful coexistence would never support this act.
We are not against building a Kovil or any other religious place of worship. But this is our right and we beg Your Excellency to protect it. We never support racism in this country. It is the Divisional Secretary herself who has behaved in a discriminatory and racist manner.

It is a rule that the land of the crown should not be transferred to non blood relations. We are aware that the Government has strictly noticed that any land that was transferred due to the terrorism such transfer would be invalid. But here everything is in contrast. We had to leave our lands including that of the Mosque due to the threats we faced from the barrels of guns of the terrorists. We never left our lands on GUI- own disposition.
Now the Divisional Secretary says that you have sold your lands and you have no right to ask them back. However we never sold our Mosque Land. When they approached to offer us millions, we never agreed to give our Mosque land. We fear that the Divisional Secretary has secretly transferred the possession of this land. Likewise the lands of the BT/Zahira Muslim Vidayalaya also have been encroached and occupied by force. Even the Muslim cemetery is invaded now.

Therefore we the Muslim Community of the Kalliyankadu Muslim Colony beg Your Excellency to help recover our Mosque land and the lands of Muslims forcibly taken ( ) . We are very much eager to resettle in our birth places there, it is an ethnic cleansing effort by the Divisional Secretary, Battitaloa not to allow us to regain our traditionally possessed lands. All of us are eagerly awaiting Your Excellency's assistance to resettle in our lands and rebuild our Mosque in the Muslim Colons-. Batticaloa. We are enclosing herewith copies of the letter regarding this issue dated 26.02.2010 and the copy of the Complaint made to the Police regarding this matter.

Yours ever truly,
On behalf of the Muslim Colony Community.

Sgd:

Former President of the Muslim Colony Mosque.

----------------------------------------------------------------------------------
இக்கடிதம் கிடைத்ததும் ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுத்தார் , பின்னர் நடந்த சம்பவங்களுடன் தொடரும்வரை

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...