பிர்தௌஸ் பள்ளிவாசல் மீதெழுப்பிய பிரம்ம குமாரிகளின் இராஜ யோக நிலையம்-முஸ்லிம் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் அரங்கேற்றம் !




எஸ்.எம்.எம்.பஷீர் 


"தவறான புரிந்துணர்வுகளால் துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகின்றன. உண்மையிலேயே அன்பானது தூய உணர்வுகளால் நிறைந்தது. அங்கு எதிர்பார்ப்புகளோ தன்னலமோ, சார்புகளோ, வரையறைகளோ இருக்க முடியாது. ஆகவே அன்பானது குறைகளைப் பார்க்காது பொது நலம் கருதுகின்ற எல்லையற்ற தூய உணர்வுகளால் நிறைந்தது. அன்பை நாம் வழங்கும்போது தான் அதிகரிக்கின்றது. இதனால் நாம் துன்பப்படவோ நம்மால் பிறர் துன்பப்படவோ மாட்டார்கள்.
                                                                - பிரம்மகுமாரி திருமணி- .

கோட்டமுனையில் வாழ்ந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் நகருக்குள் உள்ள இடப்பற்றாக்குறை , அங்கே காணிகள் வாங்குவதில் உள்ள பொருளாதார இயலாமை காரணமாக அரச காணியான கள்ளியங்காடு எனும் பகுதியில் காடு வெட்டி குடியேறிய பகுதிதான் முஸ்லிம் கொலனி எனப்பட்ட கள்ளியங்காடு. கள்ளி மரங்கள் நிறைந்திருந்ததால் இப்பகுதி கள்ளியங்காடு என்ற பெயர் பெற்றிருந்தாலும் முஸ்லிம்களின் குடியேற்றத்தின் பின்னர் முஸ்லிம் தமிழ் சமூகம் அங்கு குடியிருந்தபோது முஸ்லிம் கொலனி என்றே பரவாக அறியப்பட்டு வந்தது. எனினும் பல நூற்றாண்டுகளாக மட்டக்களப்பு புளியந்தீவு, கோட்டமுனை பகுதிகளில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களின் மையவாடியாக கள்ளியங்காடு விளங்கியது, அதுபோலவே ஹிந்துக்களின்  மயானம் , கிறிஸ்தவர்களின் சேமக்காலை ஆகியனவும் அருகருகே கள்ளியங்காட்டில் அமைந்துள்ளன. இங்கே மட்டக்களப்பில் வாழும் மூன்று பிரதான மதத்தை சேர்ந்தோரும் இறந்து போனபின் " சமரசம் " காணும் இடங்கள் அமைந்திருப்பதும் இப்பிரதேசத்தின்ஒரு தனித்துவமாகும். இந்த பள்ளிவாயல் அரசினர் வைத்தியசாலையில் வெளியூரிலிருந்து வந்து வைத்தியம் பெறும் முஸ்லிம் நோயாளிகள் மரணித்தாலோ அவர்களும் அங்கே அடக்கபடுவத்தும் , அப்பள்ளியிலே இறுதி பிரார்த்தனை நடைபெறுவதும் வழக்கமான நடைமுறையாகும். மேலும்  மட்டக்களப்பு புகையிர நிலையத்துக்கு அருகாமையில் இருப்பதால் முஸ்லிம் பயணிகள் பலர் தங்குவதற்கும் இப்பள்ளிவாயல் உதவியிருக்கிறது.  




இலங்கை ஜனாதிபதியின் வட கிழக்கில் உடைக்கப்பட்ட இழக்கப்பட்ட  சகல வணக்க வழிபாட்டுத் தளங்களும் அந்தந்த இடத்தில் புனரமைக்கப்படல் வேண்டும் என்ற பிரகடனத்தை ஒரு பகுதியினர் மீற மறுபுறம் அதனை முஸ்லிம் அரசியல் வாதிகள் பயன்படுத்தாமல் இருப்பது  ஏன் என்ற கேள்வி பூதாகரமாக எம் முன்னே எழுந்து நிற்கிறது. மறுபுறம் மட்டக்களப்பில் கோட்டமுனை  பௌத்த பன்சல , மட்டக்களப்பு ஜயந்திபுர பன்சல  என்பன புலிகள் பிரேமதாசாவுடனான தேனிலவை முறிததவுடன் 1990 ஆம் ஆண்டில்  உடைக்கப்பட்டன . ஜயந்திபுர சிங்களவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள் . ஆனால் அங்கு சிங்கள மக்கள் வர முன்னரே ( திரும்ப ஒரு சிலர் வருவதற்கு முன்னரே) மீண்டும் இவ்விரண்டு பன்சலைகளும் கட்டி எழுப்பப்பட்டன . ஆனால் முஸ்லிம் மக்கள் கள்ளியன்காட்டிலிருந்து பெருமளவில் சென்றுவிட்டார்கள் என்பதற்காக அவர்களின் பள்ளிவாயலை கையகப்படுத்துவது எப்படி. அந்தக் கேள்விக்கான விடையும் இலகுவில் ஊகிக்கக் கூடியதே.    





1990 ஆம் ஆண்டின் புலி பயங்கரவாதம் கிழக்கின் பல பாகங்களிலும் முஸ்லிம்களை  வேட்டையாடிய போது அதுவரை காலமும் மிக அன்னியோன்னியமாக வாழ்ந்த முஸ்லிம் அச்சத்துக்குள்ளானார்கள் புலிகளின் ஆயுத அடக்குமுறையும் அச்சமூட்டலும்  1990  ஆம் ஆண்டு ஆகஸ்து மாதத்தில்   மட்டக்களப்பின் வடக்காகவும் தெற்காகவும் அமைந்திருந்த ஏறாவூரிலும் காத்தான்குடியிலும் அடுத்ததடுத்து  புலிகள் செய்த படுகொலைகளையும் தொடர்ந்து முஸ்லிம் கொலனி முஸ்லிம்கள்  தாங்களோ அடுத்தது என்ற அச்சத்தில் அங்கிருந்து வெளியேறினர். அவர்களில் பலர் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்குள் சென்று குடியேறிவிட்டனர். அடுத்தடுத்து நடந்த இன முறுகல்கள் , கலவரங்கள் என்பன மேலும் நிலைமைகளை மோசமாக்கியது . கள்ளியங்காட்டில் வாழ்ந்தவர்கள் தங்களின் காணிகளை தமக்கு அறிமுகமான அங்கு வாழும் தமிழர்களுக்கு கிடைத்த விலைக்கு  விற்றுவிட்டு மெதுமெதுவாக தங்களின் இருத்தலுக்கான உரிமைகளை மிக வியாகூலத்துடனும் விரக்தியுடனும் கைவிட்டு சென்றனர். அந்த காணிகள் யாவும் அரச அனுமதிக் காணிகள் என்பதுவும் அவை முறைப்படி சட்டப்படி விற்கப்படக் கூடியதா என்ற  கேள்விக்கப்பால் , அக்காணிகள் விற்கப்பட்டும் வாங்கப்பட்டும் போய்விட்டது.
இக்கிராம பாடசாலையான சாகிரா கல்லூரிபள்ளிவாயல் கட்டடம் என்பற்றில் மட்டுமல்ல சகல அக்கிராம  அபிவிருத்திகளில் சிராஜுதீனும் மற்றும் மறைந்த முன்னாள் மட்டக்களப்பு ஆசியர் கல்லூரியின் உப அதிபரும் பிரஜைகள் குழுத் தலைவருமான மறைந்த எம்.எஸ்.எம்.அசீஸ் ஆகியோர் குறிப்பிடத்த தக்கவர்களாகும்.  மாபெரும மீலாதுன் நபி விழாவும் கள்ளியங்காடு சாகிராக் கல்லூரியில் வாணியம்பாடி தமிழ் துறை பேராசிரியர் அப்துல் ரகுமான் சிறப்பு அத்திதியாக கலந்து கொள்ள எழுபதுகளில் நடைபெற்றிருக்கிறது. சாகிராக் கல்லூரி இப்போது முஸ்லிம் பாடசாலை என்று பெயரளவில் காணப்பட அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்ட முஸ்லிம்களும் காரணமாகும்.  அங்கு முஸ்லிம் மாணவர் ஒருவர் தன்னும் இல்லைஎன்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் அக்கல்லூரியின் பெயரை மாற்றும் செயற்பாடுகளும் இடம்பெற்று வந்திருக்கின்றன.  



கள்ளியங்காட்டு அரசியல்

முஸ்லிம்கள் கள்ளியங்காட்டில் குடியேறி வாழ முன்னரே முஸ்லிம் மையவாடிக்கு முன்பாக கொட்டில் வடிவில் ஒரு சிறு பள்ளிவாயல் அங்கு இறந்தவர்களுக்காக செய்யப்படும் ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்தது என்று அறியப்படுகிறது.  கோட்டமுனை முஸ்லிம்கள் காட்டை   அழித்து குடியேறிய பின்னர் கள்ளியங்காடு முஸ்லிம் கொலனி என்று அறியப்பட்டது. அரசாங்கம் அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கிய போது,   முன்னாள் எம் பீ மார்க்கான் மார்கார் அவர்களுக்கான அரச அனுபதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுத்தார் . அதன்  பின்னரே 1965 ஆம் ஆண்டில்  முஸ்லிம்கள் தங்களுக்கான பள்ளிவாயலை அங்கு உத்தியோக பூர்வமாக கட்டி எழுப்பினர். அன்றிலிருந்து கள்ளியங்காடு முஸ்லிம் கொலனியின் தேவைகளை மறைந்த முன்னாள் அமைச்சர் பாரிட் மீராலேப்பையும் கவனித்துள்ளார். எனினும் முஸ்லிம் கொலனியில் அமைக்கப்பட்ட சாகிரா கல்லூரியின் வளர்ச்சிக்காக மறைந்த கலாநிதி பதியுதீன் மகுமூத் மட்டுமல்ல மட்டக்களப்பின் சுதந்திரக்கட்சி அரசியல் அதிகாரியும் (Political Authority) எம்பியுமாக செயற்பட்ட ராஜன் செல்வநாயகம் தனது நிதி ஒதுக்கீட்டில் கணிசமான உதவிகளை வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் செல்லையா ராஜதுரை கூட அங்குள்ள முஸ்லிம் மக்களின் தேவைகளை அவ்வப்போது நன்கு கவனித்து வந்துள்ளார் .மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டமுனை முஸ்லிம் கொலனி , புளியந்தீவு வாழ் முஸ்லிம் தமிழ் மக்களுக்கிடையே எந்தக் காலத்திலும் இன முறுகளோ , சண்டை சச்சரவுகளோ இடம் பெறவில்லை.  இரு சமூகங்கலும் மிகவும் அன்னியோன்னியமாக பல்வேறுபட்ட இன முறுகல் ஆயுத அடக்குமுறை நிலவிய காலங்களிலும் இணைந்து வாழ்ந்ததற்கு மட்டக்களப்பு நகரம் ஒரு நல்ல உதாரனமாகும். 

அப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளை பொறுத்தவரை அலி சாகிர் மௌலானா , ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி , சேகு தாவூத் பசீர் ஆகியோர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல , அவர்களில் குறிப்பாக ஹிஸ்புல்லா சேகு தாவூத் , அலி சாகீர் மௌலானா தமிழ் வாக்குகளை கருத்திற் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என்று எனது விசாரிப்புக்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது   குறிப்பாக சேகு தாவூத் பசீர் ஈரோசில் இருந்த கால நண்பர் ஒருவர் மூலம் கள்ளியங்காட்காட்டில் தமிழ் வாக்குகளை பெற்று வருவதாகவும் கடந்த தேர்தளிலும் அங்கு அவருக்கு அளிக்கப்பட தமிழ் வாக்குகள் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களை விட அதிகமானவை என்றும்  தகவல்கள் கூறுகின்றன. தமது தேர்தல் வெற்றிகளை மட்டும் உறுதி செய்வதில் உரிமைகளை அடகு வைக்கும் வங்குரோத்து நிலைக்கு இவர்களின் அரசியல் சென்றுவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. இந்த பள்ளிவாயலுக்கு பதிலாக பிரம்ம குமாரி ராஜ யோக நிலையம் நிறுவப்படுவதை தடை செய்து அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முதலில் ஒத்துக் கொண்ட தமிழ் சட்டத்தரணி ஒருவர் பின்னர் தான் சார்ந்த மத நிறுவனத்திற் கெதிராக செயற்பட  முடியாது என்று பின்வாங்கிக் கொண்டார். எனினும் இது சம்பந்தமாக மட்டக்களப்பின் மேயராகவிருக்கும் சிவகீதா பிரபாகரன் (சத்திய மூர்த்தி) அக்கட்டடத்தினை- பிரேம குமாரி நிலையத்தை- கட்டுவதற்கு ஒரு மூன்று மாத தடையினை ஏற்படுத்தி சம்பந்த பட்ட முஸ்லிம் மக்களின் பிரதிநிகள் அது தொடர்பில் தகுந்த நடவடிக்கை  எடுப்பதற்கு ஆவன செய்துள்ளார் . இது மட்டக்களப்பில் நீதி நிலை நாட்டப்படுவதற்கு  ஒரு பெண்மணி தனது அதிகாரத்தை பயன்படுத்தி செயற்பட்டுள்ளார். என்பதையும்  கோடிட்டுக் காட்டுகிறது


யார் இந்த பிரம்ம குமாரிகள்

ராஜ யோகம் எனபது நவீன இந்துமத தியான வழிபாட்டு முறையும் பயிற்சியும் கொண்ட ஒரு ஆத்மீக இயக்கம் . இது   1930 ஆம் ஆண்டில் இந்தியாவில் உருவாகி  உலகின் பல பாகங்களிலும் தனது கிளைகளை அமைத்து செயற்பட்டு வருகிறது . இலங்கையில் மாத்திரம் சுமார் இருபத்தெட்டு கிளைகளையும் பிரம்ம குமாரிகள் மத்திய நிலையம் ஒன்றையும் கொழும்பு தெகிவளையில் அமைத்து செயற்பட்டு வருகிறது. பிரம்ம குமாரிகள் என்றால் "பிரம்மனின் புத்திரிகள்" ( சிருஷ்டிக்குரிய கடவுள் பிரமன் )  என்று அர்த்தத்தை கொண்டிருப்பினும் நடைமுறையில் இந்த இயக்க அங்கத்தவர்கள் ஆண் பெண் அனைவரும் பிரம்ம குமாரிகள்  என்று அழைக்கப்படுவதும் , அதிகளவில் பெண்களே இவ்வியக்க கிளைகளுக்கு தலைவியர்களாக இருப்பதும் நடைமுறையிலுள்ளது.


இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த , மற்றும் கைது செய்யப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சமூகத்தில் மீண்டும் சகஜ வாழ்க்கையில் ஈடுபடுத்தும் வகையில் நடத்தப்படும் மறுவாழ்வு பயிற்சி நடவடிக்கைகளில்  ஒன்றாக  பிரம்மா குமாரிகளின் கொழும்பு மத்திய நிலையம் வாழ்க்கையின் பெறுமானம் பற்றியும் சுய மேம்பாடு பற்றியும் தியானமுறையுடனான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அவ்வாறான நிகழ்ச்சியொன்று அண்மையில் கொழும்புபில் நடைபெற்ற போது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரம்மா குமாரி திருமணி  சொன்ன வார்த்தைகள் இக்கட்டுரையின் மேற்கோளாக இங்கு தரப்பட்டதன் நோக்கம் என்னவென்றால்   அன்பைக் கொண்டு   துன்பத்தையும் துயரத்தையும் களைந்து பொது நலம் பேணுவதாகும். இவ்வாறான அன்பு போதனையை கொண்டு பிறருக்கு துயரம் நீக்க வேண்டிய ஒரு ஸ்தாபனம் அங்கு வாழ்ந்த , மிகக் குறைந்தளவேனும் அங்கு வழிபடச் செல்கிற அல்லது அங்குள்ள முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்படுகிற மக்களுக்காக பிரார்த்தனை செய்யப்படுகிற ஒரு முஸ்லிம் வழிபாட்டுத தளத்தை தகர்த்தெறிந்து  , அதன் மேல் தனது நிறுவனத்தை விரோதத்துடன் அமைத்துள்ளது. .

அன்பைப்  போதிப்பது இப்படித்தானா? ஒரு சமூகத்தின் அடிப்படை மனித உரிமையை நிமூலமாக்கிவிட்டு அன்பை எப்படிப் போதிப்பது , சக சீவியத்தை சவ்ஜன்யத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது. அப்படியொரு மண்டபத்தை அன்பையும் தியானத்தையும் போதிக்க பிரம்ம குமாரிகள்  பள்ளிவாசல் காணியை  கபளீகரம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கமாட்டார்கள் என்ற எடுகோளை வைத்துக் கொண்டு பார்த்தால் . பிரம்ம குமாரிகள் சமூகங்களிடையே  அன்பை நிலைநாட்ட தங்கள் பேரால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட ஆநீதியை களைய ஆவன செய்வார்களா அந்த காணியை மீண்டும் பள்ளிக்கு வழங்குவார்களா ?. முடிந்தால் அந்தக் கட்டடத்தையும் கூட அவர்களின் நல்லெண்ண அடையாளமாக மீண்டும் முஸ்லிம்களுக்கு  வழங்கினால் இந்து மதத்தின் பெயரால் செய்த மத ஆக்கிரமிப்புக்கு பரிகாரமாகக் கூட அமையலாம். !


காணிக் கபளீகரம்
இந்த பிரம்மா குமாரிகள் இராஜயோக நிலையம் அங்கு எழுப்பப்பட முன்னர் முஸ்லிம் மையவாடியின் காணியை கூட அதன் அருகாமையில் வாழ்ந்தவர்கள் மெதுமெதுவாக கபளீகரம் செய்து வருகிறார்கள்   என்ற குற்றச்சாட்டை இக்கட்டுரையாளரிடம் அப்பிரதேச மக்கள் ௨௦௦1 ஆம்    ஆண்டு தெரிவித்தனர் , என்பதுடன் அதற்கான சுற்று மதில் ஒன்றை கட்டித்தருமாறு ஒரு வேண்டுகோளை ஹிஸ்புல்லாவிடம் ஒரு தேர்தல் ஆதரவுக்கான நிபந்தனையாக வேறு அம்மக்கள் விடுத்திருந்தனர். ஆனால் ஹிஸ்புல்லாஹ் அம்மக்களின் வாக்குகளை சூறையாடியதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை .மையவாடி சுற்று மதில் கட்டுப்படாமலே இருந்தது. பின்னர் அமீர் அலி ௨௦௦4 ஆம் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பின்னர் , அவரே அம் மையவாடியை நில வரைபு செய்து (survey) சுற்று மதிலை கட்டிக் கொடுத்தார். முஸ்லிம் மக்கள் அங்கிருந்து பாரியளவில் சென்றுவிட்டதால் பள்ளிவாயலை கபளீகரம் செய்யும் முயற்சியில் மண்முனை  வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் தமிழ் பெண் அரச நிருவாகியொருவர் அரச அதிகாரத்தை பயன்படுத்தி இந்த அனுமதிப்பத்திர(Permit)  மாற்றத்தை  செய்துள்ளார். அப் பள்ளிவாயலுக்கு  மாற்றுக் காணி ஒன்றை பூநோச்சிமுனை என்ற கிராமத்தில் , கள்ளியங்காட்டு முஸ்லிம்கள் பலர் சென்று குடியேறி விட்டதனை   சாட்டாகக் கொண்டு ஒதுக்கி இருப்பதாக அந்த பெண் ஊழியர் கூறியுள்ளார். இது தொடர்பில் தொடர்ச்சியாக போராடிவரும் முன்னாள்  கள்ளியங்காடு கிராம   அபிவிருத்தி சபை செயளாரான சிராஜுதீன்  பல தடவைகள் இப்பெண்மனியுடன் தர்கித்து அதனை ஏற்க மறுத்ததுடன் தமது மத சமூக உரிமை மறுக்கப்படுவதாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனம் உட்பட சகல சமூக மத நிறுவனங்கள் ஊடாக , தமது மக்களின் பள்ளிவாயல்  தொடர்பான அக்கறைகளை சகல மட்டங்களிலும் முன்னெடுத்துள்ளார்.

இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த , மற்றும் கைது செய்யப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சமூகத்தில் மீண்டும் சகஜ வாழ்க்கையில் ஈடுபடுத்தும் வகையில் நடத்தப்படும் மறுவாழ்வு பயிற்சி நடவடிக்கைகளில்  ஒன்றாக  பிரம்மா குமாரிகளின் கொழும்பு மத்திய நிலையம் வாழ்க்கையின் பெறுமானம் பற்றியும் சுய மேம்பாடு பற்றியும் தியானமுறையுடனான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அவ்வாறான நிகழ்ச்சியொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரம்மா குமாரி  சொன்ன வார்த்தைகள் இக்கட்டுரையின் மேற்கோளாக இங்கு தரப்பட்டதன் நோக்கம் என்னவென்றால்   அன்பைக் கொண்டு   துன்பத்தையும் துயரத்தையும் களைந்து பொது நலம் பேணுவதாகும். இவ்வாறான அன்பு போதனையை கொண்டு பிறருக்கு துயரம் நீக்க வேண்டிய ஒரு ஸ்தாபனம் அங்கு வாழ்ந்த , மிகக் குறைந்தளவேனும் அங்கு வழிபடச் செல்கிற அல்லது அங்குள்ள முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்படுகிற மக்களுக்காக பிரார்த்தனை செய்யப்படுகிற ஒரு முஸ்லிம் வழிபாட்டுத தளம்  பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது. அதற்கு மேலாக தங்களின் போதனை மடபத்தை -தியான ஆஸ்ரமத்தை - அமைத்துள்ளார்கள். அன்பு போதிப்பது இப்படித்தானா? ஒரு சமூகத்தின் அடிப்படை மனித உரிமையை நிர்மூலமாக்கிவிட்டு அன்பை எப்படிப் போதிப்பது ? சக சீவியத்தை சவ்ஜன்யத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது ? அப்படியொரு மண்டபத்தை அன்பையும் தியானத்தையும் போதிக்க பிரம்ம குமாரிகள்  பள்ளிவாசல் காணியை  கபளீகரம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கமாட்டார்கள் என்ற எடுகோளை வைத்துக் கொண்டு பார்த்தால் . பிரம்ம குமாரிகள் சமூகங்களிடையே  அன்பை நிலைநாட்ட தங்கள் பேரால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட ஆநீதியை களைய ஆவன செய்வார்களா ? அந்த காணியை மீண்டும் பள்ளிக்கு வழங்குவார்களா ? முடிந்தால் அந்தக் கட்டடத்தையும் வழங்கினால் இந்து மதத்தின் பெயரால் செய்த மத ஆக்கிரமிப்புக்கு பரிகாரமாகக் கூட அமையலாம். !



சுமார் இருபது வருடங்களுக்கு பின்னரும் வடக்கிலிருந்து  புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தங்களின் இடங்களுக்கு  செல்லமுடிந்த போது தங்களின் பள்ளிவாயல் ஒஸ்மானியா பாடசாலை போன்ற இடங்களை புனரமைத்து அங்கு செயற்படுகின்றனர். அண்மைக்காலமாக கிழக்கில் இன சவ்ஜன்யத்தை பேணும் நிலைமைகள் மிக ஆரோக்கியமாக கிழக்குக் மாகான முதலமைச்சரால் முன்னெடுக்கப்படும் வேளையில் இந்த பள்ளிவாயல் திட்டமிட்ட வகையில் கையகப் படுத்தப்பட்டதன் பின்னணி என்ன. பிரம்ம குமாரி நிலைய திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு முதலமைச்சர் அச்சுற்றுப்புறத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் அக்கறைகளை , அங்கு அழிக்கப்பட்ட பள்ளிவாயலை அறிவாரா அல்லது இது குறித்து அவர் என்ன செய்யப் போகிறார் அல்லது என்ன சொல்லப் போகிறார்  என்பதை  கிழக்கு மாகாணத்தில் அவரின் சமூக நல்லிணக்க அணுகுமுறையில்  நம்பிக்கை கொண்ட மக்கள் காத்திருக்கிறார்கள். கிழக்கின் முஸ்லிம் அரசியல் வாதிகள் சட்டநிபுணர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதையும்  எதிர்பார்த்து முஸ்லிம் கொலனி மக்கள் காத்திருக்கிறார்கள். 

பிரம்ம குமரிகள் ராஜ யோக தியான இயக்கம் போல் முன்னரே இலங்கையில் சுவாமி விபுலானந்தர் இராம கிருஷ்ண பரமகம்சரின் இந்து மத சீர்திருத்த முறைகளை ஏற்று தனது இந்தியக் கல்வியை முடிந்து துறவியாகி இலங்கை வந்து மட்டக்களப்பு கல்லடியில் காடுவெட்டி சிவானந்த வித்தியாலயத்தையும் , இராமகிருஷ்ண மிசன் ஆஷ்ரமத்தையும் கட்டி அங்கு தமிழ் சிங்கள முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் சிங்கள மொழியும் பௌத்த மதமும்  இஸ்லாமும் போதிக்கப்படல் வேண்டும் என்றும் முஸ்லிம் மாணவர்கள் தங்களின் நோன்புகளை நோற்கவும் ஒழுங்கு செய்யப்படல் வேண்டும் என்றும்  ஒழுங்கு செய்த ஒரு தியான இயக்க சிஷ்யரின் -விபுலாந்தரின்- முன்னுதாரணம் இங்கே இன்னுமொரு நவீன இந்து மத தியான  வகுப்பினரால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தனது மான்மியத்தை காக்குமா? அல்லது இது வெறும் பத்திரிகை செய்தியாகி பழசாகிவிடுமா.
http://www.bazeerlanka.com/

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...