“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” தொடர்: பதினொன்று


சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!
                                                                               தொடர்:  பதினொன்று 
எஸ்.எம்.எம்.பஷீர் 
"என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்  என்பதே அரசியல் "     ஹரல்ட் லாஸ்வெல்

முதற் கோணல் முற்றும் கோணல்

காரியப்பருக்கு ஏற்பட்ட க(ச)தி பற்றியும் எழுத முன்னரே காரியப்பரே சில தகவல்களை வெளிப்படையாகவும் சொல்லிவிட்டார்

நிஸாம்: இரவு எடுத்த முடிவை அடுத்த நாள் காலையில் நடைமுறைப்படுத்துவதற்கு திராணியற்ற தலைமைத்துவம் இரண்டு வருடங்கள் கழித்து இதனை நடைமுறைப்படுத்தும் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை.

ஆங்கிலத்தில் சம்பந்தப்பட்டவர் ஒரு விஷயம் பற்றி நேரடியாக அறிந்தவர் கூற கேட்டால் அதை குதிரையின் வாயிலிருந்து கேட்டதாக சொல்லுவார்கள். அந்த வகையில் அவர் பத்திரிக்கையாளர்களின் சில கேள்விகளுக்கு அளித்த பதிலைப் பார்த்தால் அதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.


மேயர் விவகாரம் இந்தளவு தூரம் இழுபறி நிலைக்குச் சென்றதற்கான காரணம் என்ன?

நிஸாம்: இதற்கு 100க்கு 100 வீதம் கட்சியின் தலைமைத்துவம்தான் காரணம் என்று சொல்வேன். நடந்த விளைவுகள் அனைத்திற்கும் தலைமைத்துவம்தான் பொறுப்பெடுக்க வேண்டும்.
மாறாக எந்தவித காரணங்களுமின்றி 5 நிமிடத்தில் எடுக்க வேண்டிய முடிவை இரண்டு நாட்களுக்கு தள்ளிவைத்து இப் பிரச்சினையை எரிய விட்டு இன்று இரு ஊர்களுக்கு மத்தியிலும் நிலையானதொரு பகையை உருவாக்கி விட்டார்கள். 


 துரதிஷ்டவசமாக தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் நடைபெற்ற சில சம்பவங்கள் என்னை வெகுவாகப் பாதித்துள்ளன. கட்சித் தலைமைத்துவம் (தலைவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை) இது விடயத்தில் நடந்து கொண்ட விதம் கவலைக்குரியதாகும்.

உங்களுக்காக பிரசாரம் செய்ததனால்தான் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்குச் சொந்தமான கொம்டெக்நிறுவனம் தாக்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறதே?

நிஸாம்: உண்மையில் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் நிஸாம் காரியப்பருக்காக பிரசாரம் செய்யவில்லை. இந்தப் பிரதேசத்தில் அரசியல் அனுபவமும் ஆளுமையும் கொண்ட ஒருவர் மேயராக வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகத்தான் எனக்காகப் பிரசாரம் செய்தார்.

சில அடக்க முடியாத ஸ்ரீ.மு.கா எம் பியான எச்.எம்.எம் ஹரீஸ் மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட கல்முனை மேயர் சிராஸ் மீரஷாஹிப் ஆகியோரின் ஆதரவாளர்கள் என உரிமை கோரும் ஏவல் படையினர் இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் உள்ளதாக ஜமீல் குற்றம் சாட்டினர். ஜமீலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மட்டுமல்ல இளைஞர் காங்கிரசின் தலைவருமாகும். கத்தியுடனும் பொல்லுகளுடனும் சிலர் சுடும் ஆயுதங்களுடனும் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் கூறின. இவர்கள் யாவரும் முஸ்லிம்கள் என்பதும முஸ்லிம் காங்கிரசின் "போராளிகள்"  என்பதும் குறிப்பிடத்தக்கது . அதே நேரத்தில் சென்ற யாழ் மாநகரசபை தேர்தலின் போது  3387  விருப்பு வாக்குகளை பெற்று முதலாம் இடத்தில் தெரிவான துரைராசா இளங்கோ தனது பதவியை விட்டுக் கொடுத்து கட்சியின் ஐந்தாவது இடத்தில் 1250 தேர்வு வாக்குகளை பெற்றிருந்த  திருமதி பற்குனராஜா என்பவர் யாழ் மாநகரசபை மேயராக கட்சியின் முடிவின் மூலம் தெரிவு செய்யப்பட்டார் என்பது  , சத்தமில்லாமல் சண்டையில்லாமல் , ஆயுதம்  தூக்காமல் உயர் தொழில் கல்வி  நிலையத்தை எரிக்காமல் , ஊர்த் துவேசம் கரை  புரண்டோடாமல் ஆர்ப்பாட்டமில்லாமல்ஆரவாரமில்லாமல் செய்யப்பட்ட ஒரு நிகழ்வு.  அதற்கான ஒரு காரணம். அரசியல் அனுவபம் பெரிதாக இல்லாவிட்டாலும் ஆளுமை கொண்ட ஒருவர் பதவி வகிக்க வேண்டும் என்பதுதான். என்று சொல்லப்படுகிறது.

( He accused certain unruly goons who claimed to be party supporters of SLMC Parliamentarian, H M M Harees and the just announced Mayor of KMC, Siraz Mirasahib as behind the attack since they had wanted to create unrest in the area so that the vote bank of the SLMC was under threat if Mirasahib was not named the Mayoral post.
According to area residents, around 50 goons armed with clubs and knives, and some even with firearms had entered the Institute and started attacking impatiently.

During the lead up to the elections, it is learnt that Jameel had campaigned with SLMC’s Chief Candidate and Senior Attorney at Law, Nizam Kariyapper, which had caused jealousy among the other party members. “- The Nation- )


ஹரீஸ் எம்.பீயும் காரியப்பர் மேயராகி செல்வாக்கடைந்தால் அதனை தன்னால் எதிர்காலத்தில் சமாளிப்பது கடினம் என்றும் கருதியிருந்தார். ஆக முஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீமின் , பசீர் சேகு தாவூத்தின் தலைமைத்துவ கட்டுப்பாட்டை பலப்படுத்தி நிசாம் காரியப்பரை ஓரம் தள்ளுவதன் மூலமே தனது கல்முனை நாடாளுமன்ற பதவி எதிர்காலத்திலும் உறுதி செய்ய முடியும் என்றவகையில் அவர் செயற்பட்டார்.

காரியப்பரை ஒரம் தள்ளும் நடவடிக்கை ஒரு தொடர்ச்சியான வகையில் கட்சியின் தலைமைத்துவத்தால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை முன்னரும் வெளிப்படையாக முஸ்லிம் கார்டியன் எனும் பத்திரிகை பின்வருமாறு எழுதியிருந்தது.

(“The exclusion of Nizam Kariapper from the national list MP has created confusion among the party supporters and they say Rauff Hakeem has intentionally done this in order to preserve his leadership in the party for ever. They also say Rauff Hakeem is in the habit of sidelining or eliminating people in the SLMC who are capable due fear of him being removed from the leadership and always keep with him people who he thinks incapable. An eminent lawyer and a prominent figure in the Sri Lanka Muslim Congress (SLMC) holding the post of deputy secretary general of the party has been deprived not being nominated as MP from the national list by the leader of the party Rauff Hakeem.” -Muslim Guardian -21 April 2010 )
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியல் எம்.பீ பதவிக்கு மிகத் தகுதிவைந்த நிலையில் காணப்பட்ட நிசாம் காரியப்பருக்கு பதிலாக , தமது தலைமத்துவத்துக்கு சவாலாக இருக்க முடியாத , தமக்கு ஏவல் புரியும் , திறமையற்றவர்களை எப்போதுமே தமக்கு பக்கத்தில் வைத்திருக்கும் வகையில் ஹக்கீம்  செயற்பட்டு வந்திருக்கிறார் என்பதை உறுதி செய்யும் வகையில் எழுதியிருந்தது. அது பற்றி தனிப்பட்ட தொடர்பாடல்கள் மூலமும் இக்கட்டுரையாளர் நன்கு  அறிவார். கிழக்கில் தனது தலைமைத்துவத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பவராக மிக நீண்ட காலத்துக்கு முன்னரே காரியப்பரை அடையாளம் கண்டு கொண்ட ஹக்கீம் அதற்கெதிரான வியூகங்களை வகுப்பதில் மிகத் தீவிரமாக செயற்பட்டார் , அவரின் அந்த திட்டத்துக்கு ஆரம்பத்தில் . மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் சேகு தாவூத் பசீர் மற்றும் ஹசன் அலி ஆகியோராகும். சேகு தாவூத் பசீர் சென்ற தேர்தலைத் தவிர எந்த தேர்தலிலும் ஜெயிக்கவில்லை , ஹசன் அலிக்கும் தேர்தல் வெற்றி மூலம் எம்.பீ யாகும் வாய்ப்பில்லை எம்பதால் இவர்கள் இருவரினதும் தலைமைத்துவ விசுவாசத்துக்காக அவர்கள் தேசியப்பட்டியல் எம்.பீயாகும் வாய்ப்பு கிடைத்து வந்திருக்கிறது. ஆனால் சட்டத்துறையில் மட்டுமல்ல கட்சியின் பல மட்ட செயற்பாடுகளிலும் திறனை வெளிப்படுத்திய காரியப்பரை சென்ற தேர்தலில் எம்.பீ யாக்காமல் தடுத்தது மட்டுமல்ல அண்மையில் நடந்த கல்முனை மாநகராட்சி தேர்தலில் எப்படியும் காரியப்பர் முன்னணியில் வருவதை தடுக்கும் வகையில் சேகு தாவூத் மூலம்  சம்மாந்துறை பிரதேர்ச வாதம் கிளறப்பட்டது. காரியப்பர் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் எதிபார்த்தவாறு தேர்வு வாக்குகளில் முதலாம் இடத்ததை பெற முடியவில்லை. அதற்கான கள நிலவரங்களை அடையாளம்  கண்டு வேலைத்திட்டங்கள் , இயக்க அனுபமுள்ள (ஈரோஸ்) சேகு தாவூத்தின் உதவியுடனும் ஹாரீஸின் உதவியுடனும் முன்னெடுக்கப் பட்டதாக உட்கட்சி வட்டார செய்திகள் கசிந்தன.அஸ்ரப் மரணித்த போது தலைமை வெற்றிடம் நிரப்பும் சூழலில் ஹக்கீம் வெற்றிபெற முடிந்தாலும் இப்போது சூழ்நிலை மிகவும் மாறுபட்டு காணப்படுகிறது. அன்று நிசாம் காரியப்பர் கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிட  முனையாததற்கு  இப்போது வெளிப்படையான காரணத்தையும் சொல்ல முன் வந்துள்ளார்.  அண்மையில் தனக்கு எதிராக தலைமைத்துவம் செயற்பட்ட விதம் காரியப்பருக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்பதால் உடனடியாக உணர்ச்சி வசப்பட்ட வகையில் அவர் கருத்துக்களை தனது கட்சி தலைவருக் கெதிராக தெரிவித்ததுடன் சில நாட்களின் பின்னர் நிதானமாக அரசியல் மழுப்பளுடன் கருத்துக்களை   தெரிவித்தமையும் புலப்பட்டது.

“2000 ஆம் ஆண்டில் தலைவர் அஷ்ரப் மரணித்த போது அரசியல் கிரீடமென்பது முட்களினாலானது என்று தெரியும். அதனால்தான் அன்று உங்களை விட்டும் ஒடினேன். அன்று அதற்கான முதிர்ச்சி இருக்கவில்லை. இன்று அதற்கான முதிர்ச்சியுடன், உங்களுடன் இருந்து செயற்பட எண்ணியுள்ளேன். அரசியல் தலைமை என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையாயின் அரபு நாடுகளில் நடப்பதுதான் இங்கும் நடக்கும். குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் அரசியல் செய்ய வந்தவர்கள் அதனை மறந்து செயற்படக் கூடாது.

ஹிஸ்புல்லா முதிர்ச்சி அற்று கட்சிக்களித்த வாக்குறுதியை மீறியதாக கூறி "தான் இப்போது முதிர்ச்சி அடைந்து விட்டேன்"  என்று கூறி கட்சியில் மீண்டும் திட்டமிடப்பட்ட வகையில் இணைந்து கொண்டார் , இணைக்கப்பட்டார் , தொடர்ந்து பதவில் இருக்க அனுமதிக்கப்பட்டார். இப்போது காரியப்பரும் தனக்கு இரண்டு வருடத்தின் பின்னர் கிடக்கப் போகும் மேயர் பதவி பற்றி இப்போது தலைமைத்துவத்தை . கிராமிய பழமொழியில் "தனக்கு  தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்கும் " என்பது சொல்வது போல்  தான் வழக்கு பேசிய அந்த இரண்டாண்டு பதவி மாற்ற நிலையை ஒத்த நிலையை எதோ ஒரு விதத்தில் எதிர்கொள்ளும் போது தான் இப்போதைய தலைமைத்துவத்தை குற்றம் சாட்டுகிறார் காரியப்பர் . ஆனால் முந்திய  தலைமைத்துவம் எப்படி செயற்பட்டது என்பதும் சற்று ஆழமாக பார்க்கப் பட வேண்டிய ஒரு விடயமாகும்.  மறக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் போல் வழக்கமாக இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை , குரானை ஹதீஸை தங்களின் சப்பைக்கட்டு அரசியலுக்கு ஆதராமாக சொல்ல தவறமாட்டார்கள்.

ஆனால் நிசாம் காரியப்பர் யாரை சொல்லி யாரை எச்சரிக்கிறார் என்பது சாமான்யர்களின் ஊகங்களுக்கே உட்பட்ட விடயம். அதேவேளை தலைவராக தான் இப்போது கிரீடம் சூட்டிக்கொள்ள தேவையான முதிர்ச்சியை அடைந்திருக்கிறேன் , எனவே என்னை நீங்கள் தலைவராக முடி சூடலாம் என்பதை மிக வெளிப்படையாகவே நாசூக்காக  தெரிவித்துள்ளார். .

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் இன்றைய ஆட்சியிலுள்ள அரசுடன் சேர்ந்து செயற்பட்டு தாம் எதிர்கொள்ளும் நீண்ட  அரசியல் இடைவெளியிலிருந்து தம்மை பாதுகாக்கும் நிலைப்பட்டை  எடுத்த முஸ்லிம் காங்கிரசினர் , எந்த எந்த பதவிகளை பேரம் பேசலாம் என்ற முயற்சியில் ரவூப் ஹக்கீம் மஹிந்த ராஜபக்ச  அவர்களுடன் நெருக்கத்தை பேண , பசீர் சேகு தாவூத்  பசில் ராஜபக்ச பசில் ராஜபக்சவின் நெருக்கத்தை நாட , இப்போது நிசாம் காரியப்பர் கோட்டபாய ராஜபக்சவை நெருங்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆக இப்போதுள்ள ஆட்சியில் தமக்கென தனிப்பட்ட செல்வாக்கை நிலை நிறுத்தி தம்மைத் தாமே வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றார்களா என்ற கேள்வியும் எமக்கு அன்று தனிப்பட்ட வகையில் அஸ்ரப் பிரேமதாசாவுடன் கொண்டிருந்த நட்பினையும் , அதனால் தன்னையும் கட்சியையும் வலுப்படுத்திக் கொண்ட நிகழ்வுகளையும் நினவு கொள்ளச செய்கிறது.

தொடரும். 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...