"இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்"

"இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்"
                                                                             (உயிர்நிழல் சஞ்சிகையிலிருந்து  )


"இனப் பிரச்சினை என்பதனை எப்போதும் ஒரே பரிமாணத்தில் வைத்துப் பேச முடியாது  பிரச்சினைகளும் தீர்வும் ஒரு சமன்பாட்டுக்கு உடபட்டதல்ல " எஸ்.எம்.எம்.பஷீர்
 
" "இனப்பிரச்சினைக்கான தீர்வும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்"  பற்றிப் பேசிய எஸ்.எம்.எம்.பஷீர் , இனப் பிரச்சினை என்பது ஒரு நிரந்தரமான ஸ்திரத்தன்மை கொண்டதல்ல என்றும் அது அந்தந்த இனங்களின் , மாநிலங்களின் , இன்னும் பண்பாடுகளிற்கேற்ப அதற்கான பரிமாணங்களைக் கொள்ள முடியும்  என்றும் எனவே இனப் பிரச்சினை என்பதனை எப்போதும் ஒரே பரிமாணத்தில் வைத்துப் பேச முடியாது எனவும் பிரச்சினைகளும் தீர்வும் ஒரு சமன்பாட்டுக்கு உடபட்டதல்ல என்றும் கருத்துத் தெரிவித்தார். 


அவர் தொடர்ந்து பேசுகையில் , போராட்ட சக்திகளால்    மட்டுமே எல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன , மக்களினது அல்லது மாற்றுக்கருத்தாளர்களினதோ அபிப்பிராயங்கள் கணக்கெடுக்கப்படுவதில்லை . எனவே தீர்வுகள் திணிக்கப்படும் போது புதிய பிரச்சினைகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழலில் படிமுறைத் தீர்வுகள்தான் சாத்தியம். எந்தத் தீர்வுத்திட்டவாக்கலின் போதும் முஸ்லிம்களை உள்ளடக்கியதாக தமிழர் தரப்போ சிங்களத் தரப்போ சிந்திக்கவில்லை . இலங்கையில் செய்யப்பட்ட சகல ஒப்பந்தங்கள்பற்றியும் அவை ஒவ்வொன்றின்போதும் முஸ்லிம்கள் எவ்வாறு கணக்கெடுக்கப்படாமல் இருந்திருகின்றார்கள் என்பது பற்றியும் குறிப்பீட்டுக் காட்டினார் . மேலும் சிங்கள அரசும் புலிகளும் முஸ்லிம் மக்களைக் குழுக்கள் என்று இப்போது வகைப்படுத்த , வழைமை போல முஸ்லிம் அரசியல்வாதிகளும் மௌனம் சாதிக்க ஒப்பந்தம் அமுலாக்கப்பட்டது.  கிழக்கு மக்களும் முஸ்லிம் மக்களும் தனியலகு கோரி நிற்கும் நிலையில் வெறுமனே தமிழர் கலாச்சாரம் , பண்பாட்டுப் பிரதேசம் என்று பேசிக்கொண்டிருப்பது யதார்த்தமானதா ? "  

நன்றி : உயிர்நிழல் (ஜூலை செப்டம்பர் 2007  இதழ் 26)-  அன்று இலண்டனில் தேசம் சஞ்சிகை நடாத்திய "தமிழ் -முஸ்லிம் இன உறவுகள் கலந்துரையாடல்"  நிகழ்விலிருந்து  

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...