மா மழையே! , மாமுனியே !


எஸ்.எம்.எம்.பஷீர்

மாமுனியே உன்  குறளை - நீ
முற்றிலும் மறுக்க வேண்டும்! 

மழையோ வாழாவெட்டியாய்  
மண்ணினை மறந்து வாழ ,

வானமோ எரித்துக் கொட்ட
வையமோ வறண்டு போக ,

வாராதோ மழையென்றென்ன
வானத்தை பார்த்து நின்றார்
வறட்சியோ வதனம் கொள்ள,  

புக்ககம் சென்றவ ளெல்லாம்    
புருஷரைத் தொழுதால் மட்டும்,

மழையே  நீ "பெய்" யென்றென்றால்  
மழை ஆங்கு பெய்ய வேண்டும்! ,

அல்லையேல் கணவன் சொல்லை
அனுதினம் அசட்டை செய்யும்
அணங்குகள் அகல வேண்டும். 

மழையே நீ பெய்வதென்றால்
நாம் மாதவம் செய்தல் வேண்டும்

மழையே நீ மாதர் தம்மை
மண்ணிலே மறக்க வேண்டும்

மங்கையர் முன் மண்டியிட்ட
மன்னவர் சொல்ல வேண்டும்
மழை அங்கு பெய்ய வேண்டும்

மாமுனியே உன்  குறளை - நீ
முற்றிலும் மறுக்க வேண்டும்!   திருக்குறள் :   "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை."

பொழிப்புரை: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்