நாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்லுங்கள்"நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியிலான ஆபத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க முடியா விட்டால்  உடனே பதவியை துறந்து நல்லாட்சி அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூட்டு எதிர்கtissa.V்கட்சி அறிவித்துள்ளது.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பில்  எதிரணியின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன் போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பேராசியர் திஸ்ஸ விதாரண கூறுகையில்,

உள்ளுாராட்சி மன்ற தேர்தலுக்கு அச்சப்பட்டு அரசாங்கம் ஜனநாயக விரோதமாக செயற்படுகின்றது.

மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து தேர்தலை நடத்தாது எல்லை நிர்ணயம் முடியவில்லை என காரணம் கூறுகின்றது.

மின் வெட்டில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் அரசாங்கம் தவிக்கின்றது. ஆனால் ஒன்றுமே நடைபெறாதது போன்று பொது மக்களுக்கு போலியான விடயங்களை கூறி பிரச்சினைகளை திசைத்திருப்பி வருகின்றது.

பொருளாதாதார ரீதியில் அரசாங்கம் படுமோசமான நிலையில் உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கண்டுள்ளது.

கூட்டு எதிர் கட்சியின் குழுவினர் ஜெனிவாவில் அமைந்துள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் முறையிட சென்றுள்ளனர். 

 புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பேசி காலத்தை வீணடிக்காது அரசாங்கம் பொது மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வந்தால் அதற்கு ஆதராவாக நாங்கள் செயற்படுவோம்.

இதனை 19 அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வந்த போதே நாங்கள் உறுதிபட கூறி விட்டோம். ஆனால் அரசாங்கம் கூட்டு எதிர் கட்சி மீது அடக்குமுறைகளையே கட்டவிழ்துள்ளது.

இதனை தொடர்நதும் அனுமதிக்க முடியாது. மக்களின் தலைமைத்துவத்துடன் தற்போதைய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம் என்றார்.

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்