இலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்கள்!


இலங்கையில் 2012இல்
மேற்கொள்ளப்பட்ட ஒரு குடிசன
மதிப்பீட்டின்படி, நாடு முழுவதும்
22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ்
பௌத்த குருமாரும் இருப்பதாகத்
தெரிய வந்துள்ளது. இவர்களில் 470
பேர் வடபகுதியில் இருக்கின்றனர்.2013இல் யாழ்ப்பாணத்தில்
ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்ரீ நந்தராம ’ என்ற
தமிழ் பௌத்த தம்ம பாடசாலையில்
80 தமிழ் பிள்ளைகள் கல்வி
கற்கின்றனர் எனவும் தெரிய
வந்துள்ளது. சமீபத்தில்
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக்
கட்சியின் மாத்தறை மாவட்ட
உறுப்பினர் புத்திய பத்திரான கேட்ட
கேள்வியொன்றுக்குப் பதில்
அளிக்கையிலேயே, அமைச்சர் கயந்த
கருணதிலக இத்தகவலை
வெளியிட்டார்.

செய்தி மூலம்: வானவில் இதழ் 63

No comments:

Post a Comment

சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் காலமானார்

  செப்டம்பர் 16, 2022 சி ரேஷ்ட ஊடகவியலாளரும், ஈழத்து முக்கிய திறன் ஆய்வாளர்களில் ஒருவருமான கே.எஸ். சிவகுமாரன் காலமானார். 1936 ஒக்டோபர் 01ஆம்...