அமெரிக்க கடற்படைத் தளத்தில் மயங்கி விழுந்த இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர!


diego garcia1
சீனாவின் தென்கடல் பகுதியில், அமெரிக்க போர் விமானம் பறந்த பிரச்சினை, அந்தப் பகுதியில் போர் மேகம் சூழும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தென் கடற்கரை, சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மிகுந்தது. ஆகவே, போர் விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ள, சீனாவின் தென் கடல் பகுதியில் அமெரிக்காவின் படைக் கண்காணிப்பு விமானம் அண்மையில் வந்து கண்காணித்தது.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச வர்த்தகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே, அக்கடல் பகுதி மீது பறந்து 
கண்காணித்ததாக அமெரிக்கா அளித்த ‘பெரியண்ணன்’ தோரணை பதில், சீனாவிற்கு ஆத்திரமூட்டியுள்ளது. இதனால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகம் சூழத் துவங்கியுள்ளது.


இப்போர் துவங்கினால், இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் பாதிக்கப்படலாம். ஏனென்றால், இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகே உள்ள அமெரிக்காவிற்குச் சொந்தமான, ‘டியாக்கோகார்சியா’ கடற்படைத் தளத்தை அமெரிக்கா முழுவீச்சில் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
அமெரிக்கா அங்கு பிரமாண்டமான கடற்படைத் தளத்தை அமைத்துள்ளது. அங்கு போர் விமானங்கள் தரையிறங்க விமான ஓடுபாதை, செயற்கைக்கோள் தொலைத் தொடர்பகம், ரடார் நிலையம் உட்பட அனைத்து நவீன வசதிகளையும் அமைத்துள்ளது. அணுசக்தியில் இயங்கும் நவீன போர்க் கப்பல்களை நிறுத்துவது மற்றும் பராமரிப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தும் பணிகள் இந்தத் தீவில் அண்மையில் தொடங்கியுள்ளன.
இலக்கைக் குறிவைத்துத் தாக்கும் நவீன போர் விமானங்கள், மின்னல் வேகப் படகுகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை கடந்த சில நாட்களாக இங்கு குவிக்கப்படுவதாகவும், அணுசக்தியில் இயங்கும் பிரமாண்டமான விமானம் தாங்கிக் கப்பல்கள் டியாகோகார்சியா துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும், இலங்கை இராணுவ தலைமையகத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து இலங்கை கடற்படை உசார்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையுடன் சீனா இராணுவ ரீதியிலான நெருக்கம் வைத்திருப்பதால், சீனாவால் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு போர்ட் சிற்றி உள்ளிட்ட பிரமாண்ட அமைவிடங்கள் மீது அமெரிக்கரின் கடற்படையோ, விமானப்படையோ குண்டு வீசித் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.
ஆகவே, போர் தொடங்கினால் இலங்கையின் கடற்பகுதிக்கு அருகே தமிழகக் கடலோரப் பகுதியில் உள்ள இராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை மற்றும் கேரளா மீனவர்கள் மீன்பிடித் தொழிலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய நிலை உருவாகலாம் என, இந்தியக் கடலோரக் காவற்படை அதிகாரி ஒருவர் nதிவித்தார்.
இலங்கைக்கு அருகே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்காவின் டியக்கோகார்சியா தீவு கடற்படைத் தளத்திற்கு அண்மையில் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, அங்குள்ள போர் விமானங்கள், கப்பல்களைப் பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வந்த அமெரிக்க கடற்படையின் ‘சி-2’ ரக விமானத்திலிருந்த அதிகாரிகள் அழைத்ததால், இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேரத்ன,
இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா மற்றும் அதிகாரிகள் அந்த விமானத்தில் ஏறினர்.
விமானத்திலிருந்து அவர்கள் இறங்கிய பின்னர்தான் தெரிந்தது, இவர்கள் வந்த விமானம் அமெரிக்க கடற்படையின், ‘யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன்’ என்ற பிரமாண்ட விமானம் தாங்கிக் கப்பலில் இறங்கியுள்ளது என்பது.
அணுசக்தியால் இயங்கும் அக்கப்பலின் விமான ஓடுதளத்தில் 90 போர் விமானங்கள், ஹெலிகாப்டாகள் நின்றிருந்தன. 60 – 62 பணியாளர்கள், மாலுமிகள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றும் இக்கப்பலின் விமான ஓடுதளம் 333 மீட்டர் என அமெரிக்க கடற்படை அதிகாரி விளக்கிக் கொண்டிருந்த போதே, அமைச்சர் மங்கள சமரவீர திகைத்துப் போய் மயங்கி விழுந்துவிட்டார்.
அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் சக அமைச்சர்களிடம் கூறுகையில், “இதுவரை ஆங்கிலத் திரைப்படங்களில் மட்டுமே பார்த்த காட்சிகளை டியாகோகார்சியாவில் நேரில் பார்த்த போது அதிர்ச்சியில் மயங்கிவிட்டேன்” என்றார்.
இலங்கை – சீனா நட்புறவு அதிகரிப்பதையும், நெருக்கமான போக்கையும், அமெரிக்கா மற்றும் இந்தியா விரும்பவில்லை.
‘சீனாவுடன் இலங்கை நடபுறவாக உள்ளதால், அமெரிக்காவின் டியாகோகார்சியா இராணுவத் தளம் மற்றும் அதன் பலத்தை இலங்கைக்கு உணர்த்தவே, இலங்கை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அமெரிக்கா அழைத்துச் சென்று காட்டியுள்ளது’ என, இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
(மேற்குறிப்பிட்ட கட்டுரை ‘கலைமகள்’ சஞ்சிகையின் 2015 யூலை இதழில் வெளியான ‘அமெரிக்கா – சீனா இடையே போர் வெடிக்குமா?’ என்ற கட்டுரையின் முக்கியமான பகுதிகளாகும்)
source: vaanavil 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...