இன்டிகாவின் மறைவும் இடதுசாரிகளின் இழப்புக்களும் !

இன்டிகாவின் மறைவும் இடதுசாரிகளின் இழப்புக்களும் !

எஸ்.எம்.எம்.பஷீர் 

"சரியான செயல்களை செய் , அது சிலரை திருப்திப்படுத்தும் ஏனையோரை ஆச்சரியப்படுத்தும் "                   -மார்க் ட்வைன்



                                                        தோழர்: இண்டிகா குணவர்த்தன
இலங்கையின் அரசியல் வரலாற்றில் நீண்ட கால இடதுசாரி அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பமாகத் திகழ்ந்த பிலிப் குணவர்த்தனாவின் மூத்த புதல்வர் இண்டிகா குணவர்த்தன  சிலதினங்களுக்கு முன்னர் ( 14/09/2015) காலமானார். இவரின் தகப்பன் பிலிப் குணவர்த்தனவும் , தாய் குசுமா குணவர்த்தனவும் இலங்கையில் முதன் முதலில் ஸ்தாபிக்கப்பட்ட  இடதுசாரி கட்சியான லங்கா லங்கா சமசமாஜ கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களாகும். இலங்கையில் சமவுடமை இயக்கங்களின் முன்னோடிகளான இவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போராட்ட கால செயற்பாடுகள் தொடங்கி பின்னாளில் பிலிப் குணவர்த்தன சுதந்திர இலங்கையில் அமைச்சராகவிருந்து ஆற்றிய பணிகள் வரை சாமான்ய உழைக்கும் மக்களின் நலன் சார்ந்தவை. என்பது குறிப்படத்தக்கது.  . அவர் டட்லி சேனநாயக அரசிலும் சில காலம் அங்கத்துவம் வகித்துள்ளார். பின்னாளில் அவரின் கொள்கை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தன. எது எவ்வரெனினும் இவர் வாடகை விவசாயிகள் தொடர்பாக கொண்டு வந்த  நெற் காணிகள் சட்ட மூலம் . துறைமுகம்  பேரூந்து சேவையினை  தேசிய மயமாக்கல் ,  பல நோக்கு கூட்டுறவு சங்க இஸ்தாபிதம் , மக்கள் வங்கி உருவாக்கம் என்பன இலங்கையின் சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பொருத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்த சமூக மாற்றங்களுக்கு அடித்தளமிட்ட பணிகளாகும் .

இவரின் பெற்றோர்கள்   இருவரையும் போலவே இலங்கை நாடாளுமன்றறத்தில் இவரின் சகோதர்கள் இருவரும் , இன்டிகவும்  இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கத்தவர்களாக இருந்தவர்கள் என்பதும் , இவரின் சகோதரர்களான தினேஷ் குணவர்த்தனவும் , கீதாஞ்சனா குணவர்த்தனவும் அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். இவரின் சகோதரர் பிரசன்னா குணவர்த்தன கூட  கொழும்பு மேயராக இருந்துள்ளார்.மொத்தத்தில் இவர்களின் குடும்பமே ஒரு அரசியல் குடும்பமாகும்.

குணவர்த்தன குடும்பத்தின் மூத்த உறுப்பினரான  இவர் தனது 72 வயதில் காலமாகி காலமாகி உள்ளார் . இவர் சிலகாலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தமையால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டாமல் இருந்ததுடன் ஊடகங்களில் கூட இவர் தலை காட்டவில்லை. மீன்பிடி , கல்வி , தகவல் தொடர்பு அபிவிருத்தி , வீடமைப்பு என்று அப்ள அமைச்சுப் பதவிகளை இவர் வகித்துள்ளார். 

இண்டிக குணவர்த்தன தனது தந்தை பிலிப் குணவர்த்தன லங்கா சமசமாஜ கட்சியினை விட்டு நீங்கி உருவாக்கிய  மகஜன எக்சத் பெரமுனவின் இன்றைய தலைவராக இருப்பார் தினேஷ் குனவர்த்தனவாகும். ஆனாலும் இண்டிக இலங்கை கமுனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவே இருந்தார். இண்டிக குணவர்த்தன ஜே வீ பீ உடன் சேர்ந்து கொள்ள விரும்பியதாகவும் , ஆனால்  , அவரை ஜே வீ.பீ தலைவர் விஜேவீர ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றும் ஆனாலும் அவர் ஒரு பொதுவான ஆதரவை வழங்கியதாகவும் முன்னாள் ஜே வீ பீ உறுப்பினர் நினைவு கூர்ந்துள்ளார். இவர் சந்திரிக்கா அரசுடன் இணைந்து ஆட்சியில் அங்கத்துவம் வகித்ததுடன் ஒரு சிறந்த தொழிற் சங்க தலைவராகவும் திகழ்ந்துள்ளார். சந்திரிகா அரசின் தேர்தல் செலவீனங்கள் சம்பந்தமாக  சந்திரிகா அரசின் பின்னர் சில காலம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செலுத்திய பொழுது பல்வேறுபட்ட அரச நிதியினை தேர்தல் செலவுகளுக்கு  செலவிட்டதற்காக விசாரணைகளையும் எதிர் கொண்டார். அவர் சந்திரிக்கா அரசில் முதன் முதலில் நாடாளுமன்றத்தில்  மீன்பிடி அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரின் நியமனம் குறித்து நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தி ஒன்றிற்கு அவர் மறக்காமல் எனக்கு பதில் அனுப்பியிருந்தார்.  உழைக்கும் மக்களின் வாழ்க்கை தளத்தில் இக்குடும்பத்தினர் ஏற்படுத்திய பங்களிப்பு வரிசையில் இன்டிகாவின்  மக்கள் சார்ந்த செயற்பாடுகள் என்றும் நினைவு கூரப்படும் என்பதில் அவரின் அரசியல் செயற்பாடுகளை விமர்சிக்கும் பலரும் மறுதலிக்க முடியாத உண்மையாகும். 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...