"மகிந்த ராஜபக்ஸ சந்திரிகா குமாரதுங்கமீது தாக்குதல் தொடுத்துள்ளார்"


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது இணையத் தளத்தில் வாக்காளரின் கவனத்துக்காகMahindaChandrikaப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு அறிவிப்பு, அவரது முன்னாள் சகாவான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பலத்த அடி கொடுத்துள்ளது, சமீபத்தில் வெளிநாட்டு ஊடகத்துக்கு திருமதி குமாரதுங்க வழங்கிய கருத்துக்கள் மொத்தத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு த ஹிந்து பத்திரிகைக்கு திருமதி குமாரதுங்க வழங்கிய நேர்காணலைக் குறிப்பிட்டு ராஜபக்ஸ தெரிவித்திருப்பது, “தற்போது நான் உள்ள சூழ்நிலையில் திருமதி குமாரதுங்கவுக்கு சொல்லக்கூடியது, என்மீது அவருக்குள்ள தனிப்பட்ட குரோதம் அவரது கண்ணை மறைப்பதற்கு அனுமதிக்க வேண்டாம், மற்றும் எங்கள் அங்கத்தவர்களை உலகெங்கும் செல்ல முடியாமல் அவமானப் படவைக்கவும் மற்றும் எங்கள் சொந்தக் கட்சியை தரம் தாழ்த்தவும் அந்த நேர்காணல் மூலமாக வழிவகை செய்துள்ளார்” என்று.

திரு.ராஜபக்ஸவின் முழு அறிவிப்பு
மிகுந்த மனவருத்தத்துடன் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்தியாவில் வைத்து த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய சில குறிப்பிட்ட கருத்துக்களை நான் வாசித்தேன். திருமதி. குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் மற்றும் தற்போது அதன் மத்திய குழுவின் அங்கத்தவராகவும் மற்றும் எங்கள் கட்சியின் துணைப் போஷகரும் ஆக இருந்து வருகிறார், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது வெளிநாட்டு ஊடகங்களிடம் அவர் என்ன சொன்னாலும் அது எங்கள் கட்சி மற்றும் நாடு என்பவற்றில்தான் பிரதிபலிப்பை ஏற்படுத்தும். ஹிந்து உடனான அவரது நேர்காணல் முழுவதிலும்  நான் ஜனாதிபதியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை தோற்கடிக்க முடிந்த மகிழ்ச்சியையும் மற்றும் கழிப்பையும் வெளிப்படுத்தியிருப்பதுடன், அந்தச் சதியில் தான் வகித்த பங்கை அதிகப்படியான ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி; அல்லது பி.ஜே.பி யினைச் சேர்ந்த எந்த ஒரு முன்னாள் தலைவரும் (அல்லது ஒரு மத்திய குழு அங்கத்தவரோ அல்லது பாதுகாவலரோ) தனது சொந்த அரசியல் கட்சி  அந்த வகையில் தோல்வி அடைந்ததை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவதை எந்த ஒரு இந்தியனும் ஒருபோதும் கண்டிருக்க மாட்டான்.

அது மட்டுமே அதிக அவமானத்தையும் தர்மசங்கடத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பனவற்றின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ள போதிலும்,எங்கள் கட்சியை பற்றி அவர் தெரிவித்துள்ள சில விடயங்கள் அவமானத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. அவர் த ஹிந்துவுக்கு தெரிவித்திருப்பது, எனக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி பதவியில் உள்ள ஒருவர் போட்டியிடுவதைப் பார்க்க தனக்கு கஷ்டமாக இருந்தது ஏனெ;றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து  ஊழலுக்கோ அல்லது கொலைக்கோ சம்பந்தமில்லாத தகுதியான ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது என்று.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணை போஷகரும் மற்றும் தற்போதைய மத்திய குழு அங்கத்தவருமான ஒருவர் தனது சொந்தக் கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட போக்கிரிகளும் மற்றும் கொலைகாரர்களும் என்கிற தொனியில் சொல்லியிருப்பது எங்கள் கட்சியை மிகவும் மோசமாகப் பாதிக்கும். தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ள அமைச்சர்கள் சிலர் தங்களை இன்னமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களாகவே கருதுகிறார்கள். இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அவர்களின் கட்சியின் போஷகர் மற்றும் மத்திய குழு அங்கத்தவர் உலகமெங்கும் சென்று அவர்களை போக்கிரிகள் மற்றும் கொலைகாரர்கள் என்று குறிப்பிடும்போது, அமைச்சரவையில் உள்ள  ஐதேக சகாக்களுக்கு அவர்கள் எவ்விதம் முகம் கொடுப்பார்கள்.

தவிரவும் திருமதி. குமாரதுங்க குறிப்பிடும் அநேகமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் அவரது அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மற்றும் அமைச்சர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர் சென்ற பின்னரே நான் கட்சியை பொறுப்பேற்றேன். எனவே அவர் த ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளதின்படி, முழு கொலைகாரர்களும் மற்றும் போக்கிரிகளும் உள்ள ஒரு அரசாங்கத்துக்குத் தான் அவர் தலைமை தாங்கியுள்ளார் என்பதை அவர் ஏற்றுக் கொள்வதைப் போல உள்ளது. இதில் வஞ்சனை என்னவென்றால் திருமதி. குமாரதுங்க குற்றம்சாட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்;களுக்கு எதிரான தவறான நடவடிக்கைகள் எதுவும் நிரூபிக்கப் படவில்லை, ஒரு தவறான காணி கைமாறல் சம்பந்தமாக அவர் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். அது போன்ற தன்மையிலான தீவிர குற்றச்சாட்டுகள் திருமதி. குமாரதுங்கவுக்கு எதிராக உள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக சில குறிப்பிட்ட செயற்பாடுகளை அவர் திரும்ப பெறவேண்டிய சந்தர்ப்;பங்களும் இடம்பெற்றுள்ளன. அப்படியான ஒருவர் உலகமெங்கும் சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்கள் ஊழல்வாதிகள் என்று குற்றம் சாட்டுவதற்கு தார்மீக நெறிமுறை உள்ளதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

திருமதி. குமாரதுங்க மேலும் சொல்லியிருப்பது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 2005 – 2015 வலை ஒரு பொலிஸ் இராச்சியமாக இருந்தது, அதனால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டை முறியடிப்பதற்கான தமது சதிமுயற்சியில்  தொலைபேசி அழைப்புகளை கண்காணிப்பதை தவிர்ப்பதற்காக விசேட மென்பொருளான வைப்பர் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டது என்று. எனது அரசாங்கம் எந்த தொலைபேசி அழைப்பையும் கண்காணிப்பதை ஒருபோதும் செய்ததில்லை. அப்படி நாங்கள் செய்திருந்தால் அதே உபகரணம் தற்போதைய அரசாங்கத்திடம் கிடைத்திருக்க வேண்டும்.

அத்தகைய உபகரணங்களை தனிப்பட்ட ரீதியில் கொண்டுவந்து இயக்க முடியாது. மீண்டும் ஒருமுறை திருமதி. குமாரதுங்க பொருத்தமற்ற விதத்தில் பொலிஸ் அரசாங்கம் பற்றி பேசியுள்ளார். ஏனென்றால்  எமது ஞ}பகத்தில் உள்ளவரை மிகவும் அடக்கு முறையான அரசாங்கம் ஒன்றை அவர் நடத்தியுள்ளார். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் உள்ள அங்கத்தவர்கள், கலைஞர்களான றூகாந்த குணதிலகா மற்றும் சந்திரலேகா பெரேரா ஆகியோரை அவர்களது சொந்தப் பிள்ளைகளின் முன்பாக தொந்தரவு செய்து அச்சுறுத்தியதற்காக நீதி மன்றத்தால் தண்டிக்கப் பட்டுள்ளார்கள். இந்த செயலை மேற்கொண்ட பந்தகானே சஞ்சீவ போன்ற பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் அவரது பாதுகாப்பு பிரிவில் முக்கிய அங்கத்தவர்களாக  இருந்ததாக பத்திரிகைகள் மூலமாக விரிவாக அறிவிக்கப் பட்டிருந்தன. திருமதி. குமாரதுங்கவின் இது சம்பந்தமான பல மீறல்களை இங்கே விபரிக்கலாம்.

திருமதி. குமாரதுங்கவிடம் இருந்து 2005ல் நான் பொறுப்பேற்றபோது பெயரளவில் ஒரு தனிநாடு இந்த நாட்டில் இருந்தது. நாட்டின் மூன்றிலொரு பகுதியை பயங்கரவாதிகள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு தசாப்தமாக நாடு அபிவிருத்தி என்பதை அரிதாகவே அடைந்திருந்தது. எனது ஆட்சிக் காலத்தின்போது நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நான் அக்கறை கொண்டிருந்தேன் என்பதை சொல்வதில் நான் பெருமை அடைகிறேன். பயங்கரவாதிகள் அழிக்கப் பட்டு நாடு அபிவிருத்தி அடைவதை நான் கண்டேன். எனது அரசியல் எதிரிகளை தண்டிப்பதிலோ அல்லது உலகம் முழுவதும் சென்று எனது கட்சியை களங்கப்படுத்தி எனது நாட்டுக்கு அவமானப்படுத்துவதில் எனது நேரத்தை செலவிடவில்லை. திருமதி குமாரதுங்காவின் அறிக்கை எங்கள் செலவில் எதிரியை பலப்படுத்தவே செய்யப்போகிறது என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அங்கத்தவர்களும் நினைவில் கொள்ளவேண்டும். நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்தவே வேலை செய்ய வேண்டும் அதை பலவீனமாக்க அல்ல.

1980களில் திருமதி. குமாரதுங்க, கட்சி மற்றும் தனது சொந்த தாயாருக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை உடைத்துக் கொண்டு வெளியேறினார், ஆனால் நான் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் கூட நின்று கட்சியை பாதுகாத்தேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பனவற்றுக்கு எதிராக 2005, 2010 மற்றும் 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் அவர் வேலை செய்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில்கூட அநேக மக்கள் மற்றொரு கட்சியிலிருந்து போட்டியிடும்படி என்னைக் கேட்டுக் கொண்டபோதும் நான் கட்சியை பற்றி எண்ணியதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டுச் செல்லவில்லை, ஆனால் திருமதி. குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணிக்கு எதிராக யானைக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொண்டார். தற்போது நான் உள்ள சூழ்நிலையில் நான் செய்யக்கூடியது,திருமதி குமாரதுங்கவிடம் என்மீது அவருக்குள்ள தனிப்பட்ட குரோதம் அவரது கண்ணை மறைப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று சொல்வதையே, அதற்கான காரணம் அவர் ஒரு முன்னாள் தலைவர் மற்றும் இணை போஷகரும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய மத்திய குழு உறுப்பினருமாக உள்ளார் மற்றும் அவர் எங்கள் அங்கத்தவர்கள் உலகமெங்கும் செல்ல முடியாதவாறு அவமானத்தை ஏற்படுத்தவும் மற்றும் கட்சியின் தரத்தை தாழ்த்தவும் அவரது கருத்துக்கள் மூலமாக வழியேற்படுத்தி உள்ளார்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
SourceL Thenee.com 

No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...