இறைமையுள்ள நாட்டின் மீது வெளிநாட்டு தலையீடுகள் ஐ.நா.அறிக்கையை ஏற்க முடியாது


-  இலங்கை சமசமாஜக் கட்சி  பொதுச் செயலாளர் திஸ்ஸ வித்தாரண
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்tissavitharanaடுள்ள அறிக்கை மற்றும் அது தயாரிக்கப்பட்டுள்ள முறை ஆகியவற்றை இலங்கை சமசமாஜக் கட்சி வன்மையாக கண்டிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் வெளி தலையீடுகளை அனுமதிக்காத வகையில் இலங்கையர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமெனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் வாழும் அனைவரும் இன, மத, பேதமின்றி இலங்கையர்க ளென்ற தனித்துவத்துடன் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இன, மத, சாதி, பால் அடிப்படையில் எழக்கூடிய அனைத்து வேறுபாடுகளையும் களைந்து நாம் ஒரு தாய் மக்களாக வாழ வேண் டும். அந்த வகையில் எமது உள்ளூர் பிரச்சினைகளுக்கான தீர்வினை நாம் காண முன்வர வேண்டுமே தவிர அதில் பிற சக்திகள் தலையிடுவதற்கு இட மளிக்கக் கூடாது.

போர்க்குற்ற விசாரணையும் உள்ளூர் விவகாரமே அதனை உள்நாட்டிலேயே தீர்த்துக்கொள்ள முடியும். அதற்கு வெளிநாட்டு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் நாமே அதற்காக கோரிக்கை முன்வைக்க வேண்டும். அதனை விடுத்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு எம்மீது விசாரணைகளை பலவந்தப்படுத் துவது முறையாகாது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அறிக்கையானது ஏதேச்சாதிகார மாக எழுந்தமானத்துடன் தயாரிக்கப் பட்டதொன்று. இதன் சாட்சியாளர்கள் எதிர்வரும் 20 வருடங்களுக்கு விசா ரணைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார் களென உறுதியளிக்கப்பட்டுள்ளனர். அவர்களது சாட்சிகள், சட்ட ஆதாரங் களற்றவை.

இதை தெரிந்துகொண்டே இதனை சாதகமாக பயன்படுத்தி ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு எமது உள்ளூர் விவகாரத்தில் தலையிட்டு தமது போலியான குற்றச்சாட்டுக்களை நிரூபிக் கப்பார்க்கின்றது. இதனை இலங்கை சமசமாஜக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

எமது நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் ஆகியோர் திற மையற்றவர்களென கூறுவது தவறானதாகும்.

இவர்கள் திறமையுடன் செயற்படுப வர்கள். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் தில் கடமையாற்றியதற்கான அனுபவத் தைக் கொண்டவர்கள். வெளிநாடுகளில் பலராலும் அறியப்பட்டவர்கள். எமது நாட்டில் சிறப்பான சட்ட முறைமை உள்ளது. போர்க்குற்றம் தொடர்பில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதற்காக பாராளுமன்றத்திற்கூடாக புதிய சட்டங்களை அறிமுகம் செய்ய முடியும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடந்தது என்ன? நடக்க வேண்டியது என்ன? என்பது தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

புகழ்பெற்ற அமெரிக்க பேராசிரியர் ஒருவர் செனல் - 4 படத்தில் காட்டப்படும் இரத்தம் முதல் அனைத்தும் போலி யானவையென டிஜிட்டல் தொழில்நுட் பம் மூலம் காண்பித்துள்ளார். 104 பக்கங்களைக் கொண்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையானது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை யில் இடம்பெறவில்லை.

யுத்தத்தின் போது ஒருவர் உயிரிழந்தால் 4 முதல் 5 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும் என்றே சர்வதேசம் கூறுகின்றது. அறிக்கையில் குறிப்பிடப்படுவதன்படி 40 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பின் இறுதி கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் முதல் 2 இலட்சம் பேர் வரை துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும். இது நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளின் 3/4 காட்டில்களை நிரப்பியிருக்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அறிக்கையானது முன்னாள் ஜனாதிபதி. பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி மற்றும் தெரிவு செய்யப்பட்ட இராணுவ அதிகாரி களையே இலக்கு வைத்து தயாரிக் கப்பட்டுள்ளமை தெளிவாக விளங்கு கின்ற போதும் அவர்களது பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அதனை சட்டபூர்வமாக நிரூபிக்க வேண் டிய ஆதாரங்களும் குறைவடை கின்றன.  (தினகரன்)
Source: Thenee

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...