வாழ்க தமிழ்க்குடியும் தமிழ்க்குணமும்-வடபுலத்தான்



என்னதான் அரசாங்கத்தைச் சிலபேர் குறை குறையாகச் சொன்னாலும் Jaffna now2அது செய்திருக்கிற ஆயிரம் நல்ல காரியங்களை ஆரும் மறுக்கேலாது.

ஆனால், இந்த நல்ல காரியங்களை எங்கட தமிழ்க்கண்களுக்கும் தெரியாது. தமிழ் மனசும் பாக்காது. ஏனெண்டால் தமிழ் மனசும் தமிழ்க்கண்ணும் ஊனம் விழுந்ததொண்டு. 

அதால தனக்குப் பிடிக்காதவை நல்லதாக எதைச் செய்தாலும், எவ்வளவைச் செய்தாலும் அதையெல்லாம் அது ஒரு போதுமே ஏற்றுக்கொள்ளாது.

இது ஒரு பேய்க்குணம்தான் எண்டு தெரிஞ்சாலும் இதை அது ஒரு போதுமே திருத்திக்கொள்ளாது.

இப்ப பாருங்கோ, இந்தப் போர் முடிஞ்ச பிறகு எவ்வளவு நல்ல காரியங்கள் நடந்திருக்குது எண்டு.....

இதை ஒவ்வொண்டாய் ஒருக்கால் பாப்பம்.

இப்ப சாவு எண்டது இல்லை.

முந்தியெண்டால் நித்தமும் மரண கண்டம்தான். எப்ப என்ன நடக்கும் எண்டு ஆருக்கும் தெரியாது? அவன் வருவானா? இவன் வருவானா எண்டு  தெரியாமல், செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியிருந்தது. வீட்டுக்க இருந்தாலும் யமன் வந்து படலையைத்தட்டிக்கொண்டிருப்பான். வளர்ந்த பிள்ளைகளை வீட்டில வைச்சிருக்கிறதெண்டதே பெரிய பிரச்சினையும் பெருங்கலக்கமும்.

இப்ப அந்தப் பயமே இல்லை.

அது மட்டுமில்லை. இந்தச் சண்டை முடிஞ்சாப்பிறகு போரில சாகிற பெடி, பெட்டையள் எண்ட இளைய தலைமுறையின்ரை சாவு இல்லையே. அப்பிடிப்பார்த்தால் இந்த அஞ்சு வருசத்திலயும் எத்தினையோ ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கு.

இது ஒரு பெரிய விசயமில்லையோ...!

முந்தி, ஒரு இடத்துக்கு ஒழுங்காகப் போய் வர ஏலாது. வழிக்கு வழி சோதனையும் ஏத்தி இறக்கிறதுமாக ஒரே அமர்க்களமாக இருக்கும். யாழ்ப்பாணத்தில இருந்து கொழும்புக்குப் போறதெண்டால் ஒரு மாசப்பயணம். ஒரு தொகை காசும் செலவாகும். வன்னியில இருந்து வெளிக்கிடவே ஏலாது.

இப்ப ஒரு இரவிலேயே கொழும்புக்குப்போய், அடுத்த இரவு வீட்டில வந்து இடியப்பம் சாப்பிடலாம். வன்னியில எண்டாலும் அப்பிடித்தான். எந்த நேரத்திலயும் எங்கயும் போகலாம் வரலாம். ஆரும் மறிக்க ஏலாது.

முந்தி ஆமிக்காரனைக் கண்டாலும் பயம். காணாவிட்டாலும் பயம்.
Jaffna now-1
இப்ப ஆமிக்காரன் மறிச்சாலும் நிக்காமல் போற பெடியள்தான் கூடுதல். அந்த அளவுக்கு பல்லுப்பிடுங்கின பாம்பாகீட்டினம் ஆமிக்;காரர் எல்லாம்.

முந்தி ஊர்களை விட்டு இடம்பெயர்ந்து கொண்டேயிருக்கவேணும்.
எப்ப குண்டு வீச்சு விமானங்கள் வரும்? எப்ப ஷெல் வந்து விழும்? எண்ட கலக்கம்.

இப்ப ஊர்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிற காலம். விட்டிட்டு ஓடின ஆக்களெல்லாம் திரும்பி ஊர்களுக்கு வந்து தங்கட வீடு வளவுகளைத் திருத்திக் குடியிருக்கிற காலம்.

முந்தி வீடுகளும் கடை தெருக்களும் காடாய்போன காலம். கற்குவியலாகிப்போன கோலம்.

இப்ப ஊர்களும் கடை தெருக்களும் மாடி மனைகளாகிற காலம். நகரமோ போடுது புதுக்கோலம். 

முந்தி குண்டும் குழியுமான தெருக்கள். பாவஞ்செய்தவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைப்போல விழுந்தெழும்பித்தான் அடுத்த வீட்டுக்கே போகவேணும்.

இப்ப காபெற் றோட்டில கண்ணை மூடிக்கொண்டு போகக்கூடியமாதிரி ஒரு மாற்றம்.

முந்தி, கியூவில நிண்டால்தான் வாழ்க்கை.

இப்ப கியூ எண்டால் என்ன எண்டு தெரியாத வாழ்க்கை.

முந்தி இருட்டும் புழுதியுமே வடக்கின்ரை அடையாளம்.

இப்ப வெளிச்சத்தில ஊரெல்லாம் செழிக்குது. நம்பவே முடியாத அளவுக்கு குச்சொழுங்கைக்கும் கரண்ட் போயிருக்கு.

முந்தி முதுகு முறியப் பிள்ளைகள் மண்ணில இருந்துதான் படிக்க வேணும். மழை பெய்தால் பள்ளிப் பிள்ளையும் நனையோணும்.

இப்ப மாடிப்பள்ளிக்கூடங்கள்தான் ஊர் முழுக்க. மண்ணில இருந்த காலம் ஒண்டு இருந்ததா எண்டு கேட்கிற காலம் ஒண்டு வந்திருக்கு.

இப்பிடி ஆயிரம் விசயங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம்.

வாய்க்கால்கள் வெட்டப்பட்டு, குளங்கள் தூர் எடுக்கப்பட்டு, பாலங்கள் கட்டப்பட்டு, வீட்டுத்திட்டங்கள் கொடுக்கப்பட்டு, வாழ்வாதார உதவிகள் செய்யப்பட்டு....

இப்பிடியே எவ்வளவோ நல்ல காரியங்கள் நடந்திருக்கு

ஆனால், வாயைத்திறந்தால் புறணியும் திட்டும் சொல்லிற தமிழKFC--in-Jaffna-3ர்கள் இன்;னும் குருடர்களாகவும் செவிடர்களாகவும் மனநோயாளிகளாகவும்தானிருக்கினம்.

என்ன செய்யிறது, தமிழ்க்குணத்தின்ரை விசேசம் அப்பிடி
அது ஒருநாளும் ஒருதரையும் நம்பாது. ஒண்டையும் ஏற்றுக்கொள்ளாது.

இதுக்கு இவை சொல்லிற சாடடு என்ன தெரியுமோ.. ?

எல்லாம் சரி, ஆனால், அந்தச் சாமான மட்டும் தரேல்லத்தானே... அதாவது அரசியல் தீர்வைத்தரேல்லத்தானே எண்டு ஒரு போடு போடுவினம்.

இவ்வளவையும் ஆண்டு அனுபவிச்சுக்கொண்டுதான் இந்தக் கதை...

வாழ்க தமிழ்க்குடியும் தமிழ்க்குணமும்.

http://www.thenee.com/html/140714-2.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...