முஸ்லிம் சகோதர மக்களுக்கு!....சிவசெல்வம் செல்லத்தம்பி விந்தன்


   சிவசெல்வம் செல்லத்தம்பி விந்தனின் முகப் புத்தகத்தில் இருந்து  
 1. முஸ்லிம் சகோதர மக்களுக்கு!....

  முள்ளிவாய்க்கால் அவலங்களில் இருந்து
  தப்பித்து வந்த எம் தேசத்து வட பகுதி மக்களுக்காக
  நாங்கள் கொழும்பு வீதிகளில் இறங்கி நின்று
  நிவாரணப்பொருட்களை சேகரித்திருந்தோம்.
  அப்போது, வெள்ளவத்தை தமிழர்களை விடவும்
  முள்ளிவாய்க்கால் மக்களுக்காக அள்ளி
  வழங்கியவர்கள் முஸ்லிம் சகோதர மக்களாகிய
  நீங்களே....
  சிங்கள சகோதர மக்களும்
  அள்ளித்தந்தார்கள்.
  நான் நேரில் நின்று பார்த்தேன்....
  குருதி கொப்பளித்து கொடுந்துயரில்
  ஓடி வந்த எம் தமிழ் உறவுகளுக்கு
  நீங்கள் கொடுத்த பேராதவுக்கு நான்
  நன்றி செலுத்துகின்றேன்...
  இப்போது நீங்கள் படும் அவஸ்தைகளால்
  நன்றியில் நனைகின்றன எங்கள்
  ஈர விழிகள்!....
  புலிகளின் குறுந்தமிழ் தேசியம் உங்களை
  கொன்றொழித்து,...
  பொதுபலசேனவின் பேரினவாதம்
  உங்களை கொழுத்தி அழிக்கிறது....
  நீங்கள் தாங்கும் வதைகள்
  என் மீதும் வலிக்கிறது.
  நெருப்பை சுமக்கும் இந்த துயர்கள்
  நிறுத்தப்பட வேண்டும்..

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்