"தீண்டாமைக் கொடுமையும் தீமூண்ட நாட்களும்" -இராமன். யோகரட்ணம்


தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் புலம்பொயர்ந்த பின்னரும், தனது வயோதிப காலத்திலும்கூட தமிழ் மக்கள் மத்தியிலே வேரோடிக்கிடக்கும் சாதியத்தின் கொடுமைகளையும், அதற்கு எதிரான கருத்துக்களையும் அம்பலப்படுத்தி வந்தவர். சிங்களப் பேரினவாதம் என்று பேசப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை எமக்கு அருகிலேயே உள்ள இனவாதம் எனும் சாதியமே எனக்கு மிக கொடுமையாக தெரிகின்றது என கனடாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பகிரங்கமாக உரையாற்றியவர்.


தோழமையோடும் நட்போடும் எல்லோரையும் அரவணைக்கும்தோழர் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களது இயல்பு என்னை மிகவும் கவர்ந்தது.
"தீண்டாமைக் கொடுமையும் தீமூண்ட நாட்களும்" எனும் எனது நூல் வெளியீட்டு நிகழ்வில் லண்டனிலும், யாழ்ப்பாணத்திலும் தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய சம்பவமானது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பேறாகவே நான் கருதுகின்றேன்.
தங்கவடிவேல் மாஸ்டரின் சாதியத்துக்கெதிரான போராட்ட அனுபவங்களை அவர் இருக்கும்போதே நூல் ஆக்கும் முயற்சிகள் பலனளிக்காது போனது மிக வருத்தம் தருகின்றது. ஒரு காத்திரமான பொக்கிசமான அவரது அனுபவங்கள் பதிவில் இல்லாதது, எதிர்காலத்தில் சாதியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பலவீனமாதாகவே அமையும் என்பதாகவே நான் கருதுகின்றேன். எனவே அவரோடு மிக நெருக்கமானவர்கள் எவராயினும் எதிர்காலத்தில் அவரது சமூகப்போராட்ட அனுபவங்களை பதிவாக்கவேண்டும்.
தங்கவடிவேல் மாஸ்டர் அவர்களின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இராமன். யோகரட்ணம்
LikeLike ·  · 

No comments:

Post a Comment

UK Health Secretary “wilfully negligent” for ignoring warnings that pandemic is overwhelming National Health Service- by Tony Robson

In his Downing Street press briefing Wednesday, Conservative Health Secretary Sajid Javid dismissed warnings made by health professionals th...