25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் -டி.பி.எஸ் ஜெயராஜ்

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
-டி.பி.எஸ் ஜெயராஜ்
பகுதி - 2
அரவிந்தராஜா என்கிற விசு
யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி பகுதியை சேர்ந்த வதிரியில் உள்ள ஒரு உயர்தர நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் இராசையா அரவிந்தராஜா என்கிற விசு. 1983 ஜூலையில் நடந்த தமிழர் விரோத படுகொலைகளின் பின்னர் அவர் தனது உயர் படிப்பினைக் கைவிட்டு எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தார். எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டாவது தொகுதி அங்கத்தவர்களுக்கு வட இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஜூவாலமுகியில் இந்திய இராணுவம் பயிற்சி அளித்தபோது அதில் ஒருவனாக விசு தனது ஆயுதப் பயிற்சியை பெற்றுக் கொண்டார்;.

amirthalingam nisang3


பயிற்சியின் பின்னர் விசு ஸ்ரீலங்காவுக்கு திரும்பிவந்து அந்த நேரம் வன்னி பிரதேச எல்.ரீ.ரீ.ஈ தளபதியாக இருந்த மாத்தையா என்கிற கோபாலசாமி மகேந்திரராஜாவின் கீழ் பணியாற்றி வந்தார். மாத்தையா வன்னியின் கிளிநொச்சி,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பாக இருந்த அதேவேளை மன்னார் தனியான ஒன்றாக வேறு தளபதியின் கீழ் அப்போது இருந்தது. விசு மாத்தையாவின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராக மாறியிருந்தார்.
1987 ஜனவரி 5ல் எல்.ரீ.ரீ.ஈயின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்புவதை காண முடிந்தது. அதன் சில நாட்களின் பின்னர் ஸ்ரீலங்கா ஆயுதப் படையினர் வன்னியில் இராணுவ தாக்குதலை முடுக்கி விட்டனர். எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை திரும்ப கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தின் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான தயாரெடுப்புகளை அடுத்து இது தொடரப்பட்டது. இந்த முன்னேற்றங்களின் விளைவாக, எதிர்பார்த்துள்ள இராணுவ நடவடிக்கையை எதிர்க்கும் நோக்குடன் வன்னியில் இருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.
விசு மாத்தையாவுடன் சேர்ந்து யாழ்ப்பாணம் சென்றார். பிரபாகரனால் எல்.ரீ.ரீ.ஈயின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட மாத்தையா பீற்றா - 2 என்கிற ஒரு விசேட உளவுத்துறை பிரிவு ஒன்றை உருவாக்கினார். விசு அதற்கு பொறுப்பாக நியமிக்கப் பட்டார். இந்திய இராணுவத்துக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கும் இடையில் யுத்தம் வெடித்ததின் பின்னர், விசு தமிழ் நாட்டுக்கு கடந்து சென்றார். அங்கு அவர் சென்னையில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்தை நடத்த ஆரம்பித்தார்.
சாஸ்திரிகூழாங்குளம்
ஜூன் 1988ல் இந்திய இராணுவத்தின் 8வது மகார் படைப்பிரிவை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரை எல்.ரீ.ரீ.ஈ திரும்ப ஒப்படைத்தது, அவரை அவர்கள் வவுனியா நெலுக்குளத்தில் வைத்து பிடித்திருந்தார்கள். கொழும்ப மற்றும் சென்னை ஆகிய இடங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் சாஸ்திரிகூழாங்குளம் எனும் இடத்தில் நடந்த அந்த கையளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்கள். ‘த ஐலன்ட்’ பத்திரிகையின் பிரதிநிதியாக நானும்கூட அங்கு சமூகமளித்திருந்தேன். அப்போது இந்திய இராணுவ உளவுப் பிரிவில் இணைந்திருந்த நன்கு பிரபலமான ஆய்வாளரும் மற்றும் விமர்சகருமான கேணல்.ஆர்.ஹரிஹரனும் அப்போது அங்கு இருந்தார்.
அப்போதைய இந்திய அதிகாரிகளினால் சென்னையிலிருந்து வவுனியாவுக்கு இரண்டு எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் கஸ்ட்ரோ, அவர் பின்னாட்களில் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புகளுக்கு பொறுப்பான எல்.ரீ.ரீ.ஈ தலைவராக மாறினார். மற்றவர் விசு. இதுதான் விசுவை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்த முதலாவதான ஒரே சந்திப்பு. அவர் பளபளப்பான தோற்றமுடைய உயரமான திடகாத்திர தேகத்தை கொண்டிருந்தார். நாங்கள் சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டபோது, என்னை அங்கு கண்டது மகிழ்ச்சியளிப்பதாக விசு என்னிடம் சொன்னார், மேலும் இந்தக் கையளிப்புக்கு சாட்சிகளாக நானும் இக்பால் அத்தாஸ் அவர்களும் வரவேண்டும் என்று எல்.ரீ.ரீ.ஈ தலைமை விசேடமாக விரும்பியதாகவும் அவர் சொன்னார். விரும்பியதாகவும் அவர் சொன்னார்.
எல்.ரீ.ரீ.ஈயின் பீற்றா - 2க்கு தலைவரான இந்த விசுதான் அலோசியசுடன் சேர்ந்து யோகேஸ்வரனைக் காண வைத்தியசாலைக்கு வந்திருந்தார். விசு யோகேஸ்வரனை முன்னமே அறிவார். எல்.ரீ.ரீ.ஈ இரட்டையர்கள் யோகேஸ்வரனிடம் வருகை தந்தபோது முன்னாள் மன்னார் பாராளுமன்ற உறப்பினரான சூசைதாசனும் அங்கு இருந்தார். 55 வயதான முன்னாள் பாராளுமன்ற உறப்பினர் சுகவீனமுற்று வைத்தியசாலை கட்டிலில் படுத்திருந்த வேளையிலும் அந்த இரண்டு புலி உறுப்பினர்களும் அவரிடம் கடுமையாக பேசியதாக அவர் என்னிடம் சொன்னார். வெளிப்படையாக அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதையிட்டு எல்.ரீ.ரீ.ஈ எரிச்சல் அடைந்திருந்தது.
யோகேஸ்வரன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி புல்லர்ஸ் வீதியில் உள்ள வீட்டுக்குச் சென்ற பின்னும் அலோசியஸ் மற்றும் சிவகுமார் ஆகியோர் அந்த வீட்டுக்கே பலமுறை வருகை செய்துள்ளனர். விசு அவாகளுடன் வரவில்லை. அந்த வருகைக்கான வெளிப்படையான காரணம் யோகேஸ்வரனின் உடல்நிலை பற்றி நலம் விசாரிப்பது என்பதாக இருந்தது. இந்த வருகைகள் நீண்ட நேரம் நீடிக்கவில்லை மற்றும் அவை யோகேஸ்வரனை துயரத்திலும் மற்றும் விரக்தியிலும் ஆழ்த்தியருந்தன. இந்த வருகைகளின்போது வேறு எந்த ரி.யு.எல்.எப் அங்கத்தவரும் அங்கிருக்கவில்லை. துரதிருஸ்டமான ஐந்தாவது வருகை நடைபெற்ற ஜூலை 13 1989க்கு முன்பு இவ்வாறான நான்கு சந்திப்புகள் இடம்பெற்றன.
மங்;கையர்க்கரசி
ஒருமுறை அமிர்தலிங்கம் மற்றும் அவரது மனைவி மங்;கையர்க்கரசி அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் வீட்டுக்கு வெளியே ஒரு மாலைநேர நடை பயின்று கொண்டிருந்த சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈயினை சேர்ந்த இருவர் வந்தார்கள். அவர்கள் வேண்டுமென்றே அமிர்தலிங்கத்தை பார்த்து முறைத்தார்கள.; இதை பல வருடங்களுக்கப் பிறகு திருமதி. அமிர்தலிங்கம் கனடாவில் வைத்து என்னிடம் சொன்னார், அவர்களது அச்சுறுத்தும் பார்வையால் கலக்கமடைந்த அவர் தனது கணவரிடம் தனக்குப் பயமாக இருக்கிறது, ஏனெனில் அவர்கள் உங்களைப் பார்த்த விதம் குழப்பம் தருவதாக உள்ளது எனக் கூறினாராம். அதற்கு அமிர் “தவம் (தனது மனைவியை அமிர் செல்லமாக அப்படித்தான் அழைப்பதுண்டாம்) நீ எப்போதும் தேவையில்லாமல் கவலைப் படுகிறாய். அவர்கள் போராளிகள், அதனால் அவர்களது தோற்றம் கடினமானதாகத்தான் இருக்கும். அவர்களை அப்படியே இருக்க விடுவோம்” என மனைவியை கடிந்து கொண்டாராம்.
இதற்கிடையில் சிவசிதம்பரம் சென்னையில் இருந்து கொழும்பு திரும்பினார். எல்.ரீ.ரீ.amir-mankaiஈ தொடர்ந்தும் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோர் வவுனியாவுக்கு வந்து பாண்டிக்குளத்தில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ தலைவரை சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தது. இடைவிடாத புலிகளின் அழுத்தத்தை தாங்க முடியாத யோகேஸ்வரன், அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரை சமாதானப்படுத்தி புலிகளை குறைந்தது கொழும்பிலாவது சந்திக்க வேண்டும் எனக் கேட்டு அதற்கு சம்மதிக்க வைத்தார். யோகேஸ்வரன், நியாயப்படி நினைத்தது, முழுத் தமிழர்களிடையேயும் ஒற்றுமையை எற்படுத்துவதில் எல்.ரீ.ரீ.ஈ ஆர்வமாக உள்ளது, மற்றும் புலிகளுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வருவது ரி.யு.எல்.எப் புக்கும் நன்மை பயக்கும் என்று. யதேச்சையாக எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் சென்னையில் வைத்து கால்பந்து விளையாட்டு பரிபாஷையில், யோகேஸ்வரன் தன் பக்கமே பந்தை உதைத்து கோலைப் போடும் ஒரு மனிதர் எனக் குறிப்பிட்டாராம்.
அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினை கொழும்பில் வைத்துச் சந்திக்கத் தயார் என்று யோகேஸ்வரன் சிவகுமாருக்கு அறிவித்தார். ஒரு சந்திப்பை அவர்கள் வீட்டில் வைத்தே நடத்த ஏற்பாடு செய்யலாம் எனவும் அவர் சொன்னார். புலிகள் இந்த விடயத்தை ஆராய்ந்து அவர்களின் முடிவை அவருக்கு அறிவிப்பார்கள்; என சிவகுமார் யோகேஸ்வரனிடம் சொன்னாராம். 1989 ஜூலை 13 ந்திகதி வியாழக்கிழமை, காலை சுமார் 10 மணியளவில் அலோசியஸ் யோகேஸ்வரனை தொலைபேசியில் அழைத்து அவரது ஆலோசனை எல்.ரீ.ரீ.ஈக்கு சம்மதமாக உள்ளது. கூட்டம் அதேதினம் மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப் பட்டுள்ளதாகத் தெரிவிததார்.
இதை அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரத்திடம் யோகேஸ்வரன் அறிவித்தார். அதில் ஒரு சிக்கல் இருந்தது, அவர்கள் இருவரும் அப்போது இந்திய உயர் ஸ்தானிகராக கொழும்பில் இருந்த லேக்கான் லால் மெஹ்ரோத்ரா, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அன்றிரவு அளிக்கவிருக்கும் இராப்போசன விருந்தொன்றில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த விருந்து இந்திய அமைச்சரவை செயலாளராக கடமையாற்றி பின்னர் பிரதம மந்திரியின் முதன்மைச் செயலாளராhக ராஜீவ் காந்தியின் கீழ் கடமையாற்றும், பிஜி.தேஷ்முக் அவர்களை கௌரவிக்கும் விதத்தில் நடத்தப்படும் ஒன்று. தேஷ்முக் இந்திய பிரதமரின் விசேட தூதுவராக அவரது கடிதமொன்றை ஜனாதிபதி பிரேமதாஸவிடம் கையளிப்பதற்காக அப்போது கொழும்புக்கு வந்திருந்தார். இரண்டு ரி.யு.எல்.எப் தலைவர்களிடமும்  பி.ப 6 மணியளவில் புலிகளைச் சந்தித்து விட்டு நேரத்தோடு துர்துவரின் விருந்துக்கு செல்லும்படி யோகேஸ்வரன் கேட்டுக் கொண்டார். அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள்.
நரேந்திரன் என்கிற யோகி
கிட்டத்தட்ட பி.ப 4 மணியளவில் அலோசியசிடம் இருந்து ஒரு இரண்டாவது தொலைபேசி அழைப்பு யோகேஸ்வரனுக்கு வந்தது. அதில் அலோசியஸ், எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவு தலைவர் நரேந்திரன் என்கிற யோகி அந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளும் சாத்தியம் இருப்பதாக யோகேஸ்வரனிடம் தெரிவித்தார்.யோகி, அன்ரன் பாலசிங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ தூதுக் குழுவை சேர்ந்த இதர அங்கத்தவர்கள் யாவரும்  கலதாரி மெரிடியன் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ அங்கு  பி.ப 6.30 க்கும் மற்றும் 7 மணிக்கும் இடையில் வருவார்கள் முன்பு அறிவித்ததை போல 6 மணிக்கு அல்ல எனவும் அலோசியஸ் தெரிவித்தார். மேலும் அவருக்கு யோகேஸ்வரனிடம் தெரிவிக்க ஒரு வேண்டுகோளும் இருந்தது. பாதுகாப்பு கடமையில் இருப்பவர்களிடம் எல்.ரீ.ரீ.ஈ குழு வந்ததும் அவர்களை மறைவாக உள்ள ஆயுதங்களை தேட நடத்தும் உடற் சோதனையோ அல்லது வேறு சோதனையோ நடத்த வேண்டாம் என்று சொல்லும்படி யோகேஸ்வரனிடம் கேட்கப்பட்டது, ஏனென்றால் யோகியை போன்ற ஒரு தலைவரின் அந்தஸ்துக்கு அந்தச் செய்கை அவரை அவமதிப்பது போல உணரச் செய்துவிடும் என்றும் சொல்லப்பட்டது.
யோகி பேச்சுக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதை கேட்டு யோகேஸ்வரன் மகிழ்ச்சியடைந்தார். அவர் உடனடியாகவே பாதுகாப்பு உதவி கண்காணிப்பாளர் தம்பிராஜா கந்தசாமியிடம் திட்டமிட்டபடி மாலை வரவிருக்கும் எல்.ரீ.ரீ.ஈ குழுவினரை சோதனையிட வேண்டாம், அதனால் அவர்கள் சங்கடப்படுவார்கள் என அறிவுறுத்தல் வழங்கினார். கந்தசாமி இந்த ஆட்களை நம்ப முடியாது ஐயா என மறுப்பு தெரிவித்தார். எதுவும் நடக்காது என யோகேஸ்வரன் அவருக்கு உத்தரவாதம் வழங்கினார். ஒரு மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவரை எதிர்பாhக்கிறோம்,மற்றும் தான் அவமானப்பட்டு விட்டதாக அவர் நினைக்கக் கூடாது.” அவர்கள் எங்கள் விருந்தாளிகள் ஆனபடியால் நாங்கள் அவாகளை மரியாதையாக நடத்த வேண்டும், அவர்கள் அவமானப் படுத்தப்பட்டதாக உணர்ந்தால் எதிர்காலத்தில் அவர்கள் வரமாட்டார்கள் மற்றும் எங்கள் கலந்துரையாடல் தோற்றுவிடும்” என யோகேஸ் அவரிடம் தெரிவித்தார். ஒருவித தயக்கத்துடன் அதற்கு சம்மதித்த கந்தசாமி தனது உதவியாளர்களுக்கும் அதை அறிவித்தார்.
யோகேஸ்வரனும் அவரது மனைவியும் அவர்களுடன் கூட சிவசிதம்பரமும் வீட்டின் மேல்தளத்தில்; குடியிருந்தவேளை, அமிர்தலிங்கம் தம்பதியினரும் மற்றும் மாவை சேனாதிராஜாவும் கீழ் தளத்தில் வசித்துவந்தார்கள். தற்சமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு மூத்த பாரளுமன்ற உறுப்பினராக உள்ள சேனாதிராஜா அப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தின் இளைய மகனான ரவி என்றழைக்கப்படும் பகீரதன் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோர் புதிதாகப் பிறந்துள்ள அவர்களது மூத்த மகனுடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்திருந்தார்கள். அவர்களது புதிய பேரனை அமிர்தலிங்கம் தம்பதியினர் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறார்கள். அவர்கள் 12ந் திகதி திரும்பவும் பிரித்தானியாவுக்கு திரும்பி விட்டார்கள். அமிர்தலிங்கம் அவரது மகன் லண்டனுக்கு போய்ச் சேர்ந்ததும் அழைக்கவிருக்கும் தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
பீற்றர் லீயொன் அலோசியஸ்
நேரம் பி.ப 6.40 ஆன பொழுது எல்.ரீ.ரீ.ஈ மூவர் குழு ஒரு மஞ்சள் நிற சீருந்துவில் வந்தார்கள். எதிhபார்ப்புக்கு முரணாக யோகி பிரசன்னமாகி இருக்கவில்லை. மூன்று புலிகளும் விசு என்கிற இராசையா அரவிந்தாஜா, விக்னா என்கிற பீற்றர் லீயொன் அலோசியஸ் மற்றும் சிவகுமார் என்கிற அறிவு ஆகியோர்களYogeswaran-2ாவர். முன் கதவில் காவலிருந்த காவல்துறை உத்தியோகத்தரான சத்தியமூர்த்தி அந்த மூவரையும் சோதனை செய்யாமல் உள்ளே அனுமதித்தார். அவர்களின் வரவைப் பற்றி கந்தசாமிக்கு சத்தியமூர்த்தி அறிவித்ததும் அவர்களை யோகேஸ்வரனைச் சந்திக்க மேலே அனுப்பும்படி அவர் சொன்னார். விசு மற்றும் அலோசியஸ் மேலே சென்றபோது கீழ் படிக்கட்டின் அருகே அறிவு நிலையுறுத்திக் கொண்டார். யோகேஸ்வரன் மேலே தனது மனைவியுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். புலிகள் வந்துவிட்டார்கள் என அறிவித்தல் வந்ததும் அவர் படிகளில் இறங்கிச் சென்று பாதி வழியலேயே விசுவையும் அலோசியசையும் சந்தித்தார். யோகி வராததையிட்டு யோகேஸ்வரன் ஏமாற்றமடைந்தாலும் விசுவையும் அலோசியசையும் வாழ்த்தி வரவேற்றார். அவர்கள் அமர்ந்து பேசத் தொடங்கினார்கள். சரோஜினி அவர்களுக்கு சாப்பிட ஏதாவது தயாரிக்கச் சென்றார். யோகேஸ்வரன் அங்கிருந்த வேலைக்காரப் பையன் ராஜூ மூலமாக  கீழே, தனது மனைவி, சேனாதிராஜா மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பினார். இந்திய தூதரின் விருந்துக்குச் செல்வதற்காக ஆடையணிந்து கொண்டிருந்த சிவாவும் அமிரும் மேல் தட்டுக்கு சென்றபோது, மங்கையர்க்கரசியும் சேனாதிராஜாவும் தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அமிர்தலிங்கம் தனது மனைவியிடம் அவர்களது மகன் ரவி லண்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு விடுத்தால் தனக்கு சொல்லியனுப்புமாறு சொல்லிச் சென்றார்.  அமிரும் சிவாவும் உள்நுழைந்தபோது இரண்டு புலிகளும் எழுந்து நின்றார்கள். அமிர்தலிங்கம் அவர்களின் தோள்களில் தட்டிவிட்டு அவர்களுக்கு இடையில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்தார். சிவசிதம்பரம் சற்று தள்ளி அமர்ந்து கொண்டாh. யோகேஸ்வரன் எழுந்து சென்று தனது மனைவி தயாரிக்கும் தீன்பண்டங்களுக்கு உதவி செய்யச் சென்று விட்டார். சரோஜினி தக்காளி சான்ட்விச்சுகளும் மற்றும் பிஸ்கெட்டுகளும் கொண்டுவந்தார். அவர்களுக்கு குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்டார். இரண்டு புலிகளும் தங்களுக்க ஏதாவது மென்பானம் வேண்டுமென்றார்கள், அமிர்தலிங்கம் தனக்கு தேனீர் வேண்டுமென்றார், சிவாவும் மற்றும் யோகேசும் தங்களுக்கு எதுவும் வேண்டாமென்றார்கள். சரோஜினி இரண்டு பசன்பழப் பானங்களும் மற்றும் ஒரு கோப்பையில் தேனீரும் தயாரித்து வைத்துவிட்டு தனது அறைக்குப் போய்விட்டார்.
யோகேஸ்வரன் அறிமுகம் செய்து வைத்த பின்னர், தாங்கள் ரி.யு.எல்.எப் தலைவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாக புலிகள் தெரிவித்தார்கள். அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரும் பிரதி உபகாரமாக அதே உணர்வுகளை பிரதிபலிக்கும் சொற்களை தெரிவித்தனர். இரண்டு தலைவர்களும் தமிழ் போராளிகளின் அர்ப்பணிப்ப மற்றும் தியாகம் என்பனவற்றை கண்டு தாங்கள் வியப்பும் மற்றும் மரியாதையும கொள்வதாகத் தெரிவித்தார்கள். இப்போது அனைத்து தமிழ் குழுக்களும ஒன்றாகச் சேர்ந்து தங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்தி ஒரு பொதுவான அணுகுமுறையை தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தால் பெறப்பட்ட நன்மைகள் யாவும் வீணாகி விடும் என மேலும் தெரிவித்தார்கள். எந்தவிதமான அரசியல் ஏற்பாடுகளும் எல்.ரீ.ரீ.ஈக்கு பெருமையளிக்கும் விதத்திலேயே இடம்பெறும் என அமிர்தலிங்கம் புலிகளுக்கு உத்தரவாதம் அளித்தார்.
புலிகளின் தலைமை
இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை தான் புலிகளின் தலைமைக்கு அறிவிப்பதாக விசு சொன்னார். எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பாண்டிக்குளத்தில் வைத்து அவர்களைச் சந்தித்து இந்த விடயங்கள் பற்றி கலந்துரையாட ஆவலாக இருந்ததாகவும் மேலும் தெரிவித்த அவர், “நீங்கள் ஏன் வரவில்லை” என அமிர்தலிங்கத்தை பார்த்து நேரடியாகவே கேட்டார். யோகேஸ்வரனின் சுகவீனம் காரணமாகவும் மற்றும் சிவசிதம்பரம் இந்தியாவுக்குச் சென்றதாலும் விடயங்கள் தாமதமானதாக அமிர்தலிங்கம் பதிலளித்தார். மேலும் பாண்டிக்குளம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியதும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ முகாம் உள்ள வெளிப்படையாக அறியப்பட்ட இடமாகவும் உள்ளதால் அங்கு வைத்து சந்திப்பை நடத்துவது உசிதமான யோசனையாகப் படவில்லை, என்று அமிர்தலிங்கம் மேலும் தெரிவித்தார்.
அப்போது விசு, மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் ரி.யு.எல்.எப் உடன் மேலும் சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாட தயாராக உள்ளதாகவும், ஆனால் அந்த சந்திப்பை ரி.யு.எல்.எப் இன் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நடத்த முடியாது. மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் ரி.யு.எல்.எப்பை மற்றொரு இடத்தில் வைத்து சந்திக்க முடியும் என்றும் தெரிவித்து கொழும்பிலுள்ள ஒரு விடுதியின் பெயரை இரண்டாவது சுற்று பேச்சுக்களுக்காக பரிந்துரையும் செய்தார். அமிர்தலிங்கம் அந்த இடம் பாதுகாப்பானதோ, கட்டுக்கோப்பானதோ அல்லது ஒதுக்குப் புறமானதோ அல்ல எனக்கூறி அந்த ஆலோசனையை நிராகரித்தார். அப்போது சிவசிதம்பரம் கொழும்பிலுள்ள நடுநிலையான ஒரு இல்லத்தில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக சந்திப்பு நடப்பதற்கு முன்னர் அந்த இடத்தை தாங்கள் பார்வையிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் விசு அந்த யோசனைக்குச் சம்மதித்தார்.
உரையாடல் மிகவும் சுமுகமாக நடைபெற்றது. பெரும்பாலான பேச்சுக்கள் அமிர், சிவா இருவராலும் மற்றும் விசுவாலுமே நடத்தப்பட்டன. யோகேஸ்வரன் மற்றும் அலோசியஸ் ஆகியோர் பொதுவாக மௌனமாக இருந்தனர். ஒரு கட்டத்தில் அமிர்தலிங்கம், எல்.ரீ.ரீ.ஈ ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பவேண்டிய காலம் இதுதான், என மென்மையாக குறிப்பிட்டார்.”ஜனநாயகம் என்பது இளைஞர்ளாகிய உங்களுக்கு பழைய ஒரு பாணியாக தோன்றக்கூடும், ஆனால் தயவு செய்து வயதானவர்களாகிய நாங்கள் உங்களுக்கு சொல்வதையும் நீங்கள் கேட்கவேண்டும்” என சிவசிதம்பரம் குறிப்பிட்டார். அரசாங்கம் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ இடையே நடக்கும் பேச்சுக்களின் முன்னேற்றம் எப்படி உள்ளது எனக் கேட்டபோது “இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு பேசி வருகிறார்கள்” என விசு வேடிக்கையாகச் சொன்னார். இது அனைவரிடத்தும் சிரிப்பை வரவழைத்தது.
இதற்கிடையில் கீழ் தளத்தில் சில பரபரப்புகள் இடம்பெற்றன. கீழே காத்திருந்த அறிவு என்கிற சிவகுமார் பி.ப 7 மணிக்குப் பிறகு குழப்பமடையத் தொடங்கினார். அவர் தனது கடிகாரத்தை பார்ப்பதும் அமைதியற்ற முறையில் பரபரப்புடன் அங்கும் இங்கும் செல்வதுடன் அடிக்கடி ஆவலாக மேலே பார்ப்பதுமாக இருந்தார். அங்கு கடமையிலிருந்த காவலர்களில் ஒருவருக்கு சிவகுமாரின் நடத்தையில் சந்தேகம் தட்டியது. அவரது பெயர் நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவ,  அவரது சொந்த இடம் கோகாலை மாவட்டத்தில் உள்ள ஹெட்டிமுல்லவில் உள்ள அக்கிரியாகல ஆகும். நிஸ்ஸங்க மகாவலி அமைச்சினால் அமிர்தலிங்கத்தின் பாதுகாப்புக்காக வழிமொழியப் பட்டு அழைக்கப்பட்டவராவார்.
தம்பிராஜா கந்தசாமி
நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவ மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சிவகுமாரை வலுக்கட்டாயமாக சோதனையிட்டதில் அவரிடத்தில் ஒரு கிறனைட் மற்றும் உபயோகிக்க கூடிய துப்பாக்கி ரவைகள் என்பன இருப்பதைக் கண்டார்கள். இது பற்றி தம்பிராஜா கந்தசாமிக்கு அறிவிக்கப்பட்டது. சத்தியமூர்த்தியின் பாதுகாப்பில் சிவகுமாரை விட்டுவிட்டு, நிஸ்ஸங்கவும் கந்தசாமியும் மெதுவாக மேலே சென்றார்கள். கந்தசாமி படிகளின் உச்சியில் நின்ற அதே சமயம் நிஸ்ஸங்க பல்கனி பக்கமாகச் சென்று  பிரதான அறையில் உள்ளே இருப்பவர்களுக்கு தெரியாத வண்ணம் அங்கேயே நின்று கொண்டார். அவர்கள் இருவரும் உள்ளே நடந்து கொண்டிருக்கும் கலந்துரையாடலை குழப்ப விரும்பவில்லை ஆனால் சிவகுமாரிடத்து கிறனைட் மற்றும் ரவைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் எச்சரிக்கை அடைந்திருந்தார்கள்.
உள்ளே இயல்பான நிலையில கலந்துரையாடல்; தொடர்ந்து கொண்டிருந்தது. மற்றும் அப்போதுதான் அது நடந்தது. நேரம் கிட்டத்தட்ட பி.ப7.20. விசு தனது பானத்தை அருந்தி முடித்துவிட்டு வெற்று கண்ணாடிக் குவளையை மேசையில் வைப்பதற்காக எழுந்தார். பின்னர் அவர் திரும்பி அமிர்தலிங்கத்தை பார்த்து “ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள் புலிகளாகிய நாங்கள்தான் அரக்கர்கள் என்று ஆனால் உண்மையில் நீங்கள் எல்லோரும்தான் உண்மையான அரக்கர்கள்” என்று சொன்னார். ரி.யு.எல்.எப் இன் மூவரும், விசு கேலி செய்கிறார் என்றே நினைத்தார்கள். அமிரும் சிவாவும் புன்னகை செய்த அதே சமயம், யோகேஸ்வரன் சத்தமாக சிரித்தார். உடனே விசு ஒரு துப்பாக்கியை உருவி அமிர்தலிங்கத்தை நோக்கிச் சுடத் தொடங்கினார். யோகேஸ்வரன் சத்தமிட்டபடி தனது கதிரையில் இருந்து எழுந்தார். அலோசியஸ் ஒரு துப்பாக்கியை வெளியே எடுத்து அவரை நோக்கி சுட்டார். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த சிவசிதம்பரம் அதிர்ச்சியடைந்து எழுந்து நின்றபடி ‘வேண்டாம், வேண்டாம்…’ என சத்தமிட்டார். விசு அவரை நோக்கி சுட்டபோது அது அவரது வலது தோளில் பாய்ந்தது.
துப்பாக்கி சூட்டு சத்தத்தை கேட்ட நிஸ்ஸங்க உள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே என்ன நடக்கிறது என்பதை கண்டதும் பலகணியின் கண்ணாடி ஊடாக அவர் சுட ஆரம்பித்தார். அவர் சுட்டு அவாகள் இரவரையும் காயப்படுத்தினார். அப்போது விசுவும் அலோசியசும் வெளியே ஓடினார்கள். கந்தசாமியும் துப்பாக்கி சூட்டு சத்தத்தை கேட்டிருந்ததால் துப்பாக்கியால் சுட்டபடி அவர்களை நோக்கி ஓடிவந்தார். காயமடைந்த விசுவும் அலோசியசும் திருப்பி சுட்டபடி  படிகளில் இறங்கி கீழே ஓட முயற்சித்தார்கள், ஆனால் நிஸ்ஸங்கவிடம் இரண்டாவதாக மற்றொரு துப்பாக்கியும் இருந்தபடியால் சுற்றி வந்து சுட ஆரம்பித்தார். அவாகள் இருவரையும் அவர் கொன்றார். துப்பாக்கி சத்தத்தை கேட்டதுமே சத்திய மூர்த்தி சிவகுமாரை இழத்துப் பிடித்துக் கொண்டார். சிவகுமார் அவரிடமிருந்து விடுபடுவதற்காக கட்டிப் புரள ஆரம்பித்தான். தன்னை சுதந்திரமாக்கிக் கெண்ட அறிவு என்கிற சிவகுமார், முன்னர் தன்னிடமிருந்து பறித்தெ:டுத்த கிறனைட்டை கைப்பற்ற முயற்சித்தான்;. அவன் அதை எட்டுவதற்கு முன்பே ஓடி வந்த நிஸ்ஸங்க அவனை சுட்டு காயப்படுத்தினார். அப்போது சிவகுமார் ஓட முயற்சித்தான் ஆனால் நிஸ்ஸங்க திரும்பவும் சுட்டு அவனை கீழே வீழ்த்தினார். கொலைகாரர்கள் மூவரும் நிஸ்ஸங்கவினால் ஸ்தலத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
பாஸ்டர்ட்ஸ், பாஸ்டர்ட்ஸ்
மங்கையர்க்கரசி, சரோஜினி மற்றும் சேனாதிராஜா ஆகியோர் துப்பாக்கிச் சுட்டு சத்தம் கேட்டு பின்பக்க படிக்கடடு வழியாக மேலே ஓடினார்கள். இரத்தம் வழிந்தோட சலனமற்று அமிர்தலிங்கம் தனது ஆசனத்திலேயே இருந்தார். அவர் இறந்ததை அறியாத அவர் மனைவி அவரது தலைக்கு பின்னால் ஒரு சிறிய குஷன் தலையணையை வைத்து அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டார். இரத்த வெள்ளத்தின் நடுவே நிலத்தில் கிடந்தபடி செத்துக் கொண்டிருந்த யோகேஸ்வரன் “பாஸ்டர்ட்ஸ், பாஸ்டர்ட்ஸ்” என்று ஆங்கிலத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார், அவரது அருகில் சரோஜினி மண்டியிட்டு அமர்ந்தார். சிவசிதம்பரம் பேச்சற்று வெறித்துப் பார்த்தபடி சுவரோடு சாய்ந்து கிடந்தார். அம்புலன்ஸ் வண்டிகள் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றன.
கொழும்பு சட்ட வைத்தியஅதிகாரி மருத்துவர் சல்காடோ, அமிர்தலிங்கம் மீதான பிரேத பரிசோதனையை நடத்தியபிறகு, தலையிலும் மார்பிலும் ஏற்பட்ட காயங்களால் மரணம் சம்பவித்ததாக அறிவித்தாh. துணை மருத்துவ அதிகாரி மருத்துவர் எல்பிஎல்.அல்விஸ் யோகேஸ்வரன் மீதான பிரேத பரிசோதனையை நடத்திய பிறகு இதயத்திலும் ஈரலிலும் துப்பாக்கி ரவையினால் எற்படுத்தப் பட்ட காயங்களின் விளைவாக மரணம் ஏற்பட்டதாக அறிவித்தார். சிவசிதம்பரம் உயிர் பிழைத்தார் மற்றும் அந்த மோசமான இரவில் என்ன நடந்தது என்பதற்கான ஒரே சாட்சி அவர். அதற்கு பல வருடங்களுக்குப் பிறகு 2000 ஆண்டில் சிவா மரணமடைந்தார்.
இதுதான், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், வெற்றிவேலு யோகேஸ்வரனுடன் சேர்த்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட சோகமான கதை. லசந்த விக்ரமதுங்க, இந்த சம்பவம் பற்றி அப்போதைய எதிர்கட்சித் தலைவர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு அறிவித்ததும், அவர் அவசர அவசரமாக யார் இதை செய்தார்கள்? எனக் கேட்டார். அது எல்.ரீ.ரீ.ஈ எனச் சொல்லப்பட்டதும் ஆறுதலடைந்து நிம்மதி பெருமூச்சு விட்ட திருமதி. பண்டாரநாயக்க, எந்த ஒரு சிங்களவரும் அவரை கொலை செய்யாதது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றாராம். அநேக சிங்களவர்கள் அமிர்தலிங்கத்தின் அரசியலை வெறுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் யாரும் அவரைக் கொல்லவில்லை. முன்னர் அவரை ஒரு பெரிய வீரன் எனக் கருதிய தமிழ் இளைஞர்களாலேயே அவர் கொல்லப்பட்டார்.
நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவMrs. Amirthalingam
இந்த துயரம் தோய்ந்த படுகொலை சரித்திரத்தில் ஒரே வீரனாக கருதப்படுபவர் சிங்கள காவல்துறை உத்தியோகத்தரான நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவ, அந்த மூன்று கொலைகாரப் புலிகளையும் அவர் சுட்டுக் கொன்றார். அதுதான் சம்பத்துடன் தொடர்புடைய அனைத்து புலி கொலையாளிகளையும் சுட்டுக் கொன்ற முதலாவது சம்பவம், சிலவேளைகளில் ஒரே ஒரு சம்பவமாகவும் இருக்கலாம். எனினும் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் அகிய இருவரையும் தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்று அவர் ஆழமான வருத்தம் அடைந்திருந்தார்.
அமிர்தலிங்கத்தின் இரண்டாவத மகன் பகீரதன் இங்கிருந்து பிரித்தானியாவுக்கு பறப்பட்டுச் சென்றது ஜூலை 12ல். நிஸ்ஸங்கவும் அவருடன் கட்டுநாயக்கா விமானநிலையத்துக்கு கூடச் சென்றிருந்தார். அவருக்கு பிரியாவிடை சொல்லும்போது, அப்பாவை பற்றி; கவலைப்பட வேண்டாம் என்று மகனுக்கு உத்தரவாதமளித்ததுடன் தனது உயிரைக் கொடுத்தாவது அவரைப் பாதுகாப்பேன் எனவும் நிஸ்ஸங்க சொல்லியிருந்தார்.
ஜூலை 13ல் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டு விட்டார். பகீரதன் மரணத்தின் பின் ஜூலை 15ல் ஸ்ரீலங்காவுக்கு திரும்பி வந்தார். விமான நிலையத்தில் அவருக்காக காத்திருந்த நிஸ்ஸங்க அவரது காலில் விழுந்து, அவருக்கு வாக்கு கொடுத்தபடி அமிர்தலிங்கத்தை பாதுகாக்க முடியாமற் போனதுக்காக தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டாராம். இதை என்னிடம் சொல்லும்போது பகீரதனின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
அமிர்தலிங்கம் கொலை செயயப்பட்ட 21 வருடங்களின் பின் சப்பிரகமுவா மாகாணத்தில் உணர்ச்சிப் பிரவாகமான ஒரு மிள் சந்திப்பு நடைபெற்றது. திருமதி அமிர்தலிங்கம் மற்றும் கலாநிதி பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோர் நிஸ்ஸங்க திப்பொட்டுமுனுவவை சந்திப்பதற்காக கேகாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார்கள். நிஸ்ஸங்க இப்போது ஓய்வு பெறறுவிட்டார் மற்றும் அவரது மனைவியான சியாமளா பிரமீளா குமாரி, தாயையும் மகனையும் வரவேற்றார். திருமதி அமிhதலிங்கம் மற்றும் பகிரதன் ஆகியோர் நிஸ்ஸங்கவை கட்டித் தழுவியதுடன் மற்றும் அவரைக் கண்டு வாய்விட்டு அழுதார்கள்.
அந்த துயரமான குறிப்புடன் எனது கட்டுரையை நிறைவு செய்கிறேன்.nanri: Thenee ( http://www.thenee.com/html/amirthalingam.html)

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...