நீதி....நீதி....நீதி- பொ.செல்வநாயகம். ஹட்டன்மரணித்த மலையக சிறுமி ஹிஷாலினிக்கு நீதி வேண்டுமென்பதிலே எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் , சில விடயங்களை சிந்திக்க வேண்டிய கடப்பாடு சிறுப்பான்மை சமூகத்துக்கு உண்டு.

ஹிஷாலினி என்பவர் மரணித்த நேரத்திலே 16 வயதை பூர்த்தி செய்திருந்தார்.

ஆனால் , 12 வயதிலேயே கொழும்புக்கு வேலைக்கு சென்றிருந்தார்.

இந்த நான்கு வருட இடைவெளியிலே , கடைசி ஆறு மாதங்கள் மாத்திரமே முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வீட்டிலே அவர்  பணியாற்றியுள்ளார்

அதற்கு முன்னைய காலத்திலே வேறு இடங்களிலேயே அவர் பணி புரிந்துள்ளார்.

அவர் ரிசாத் வீட்டிலே வேலைக்கமர்த்தப்பட்டு ஏழு மாதங்களே .
ஆனால் , கடந்த இரண்டு வருடங்களாய் ரிசாத்தின் குடும்பமே பல சோதனைகளை சந்தித்து வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையிலே , அவர்களே இன்னொரு சோதனையை இழுத்திருப்பார்களா என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டும்.

அத்தோடு , ஹிஷாலினிக்கு நாட்பட்ட பாலியல் தொடர்புக்கள் உள்ளதாகவே அறிக்கைககள் கூறுகின்றன.

அப்படியானால் அவர் கொழும்புக்கு வந்த 4 வருடங்களை ஆராய்வதா ?
ரிசாத் வீட்டிலே இருந்த கடைசி ஏழு மாதங்களை ஆராய்வதா ?

அது மாத்திரமல்ல , ஹிஸாலினியின் அம்மா இரண்டாம் தடவையாக ஒருவரை மணமுடித்துள்ளார்.
இப்போதும் அவரோடேயே வாழ்கிறார். இந்த சம்பவத்தின் பின்பே ஹிஷாலினி கொழும்பு வந்துள்ளார்.

அம்மா மறுமணம் முடித்தமையால் ஹிஷாலினிக்கு என்ன பிரச்சினைகள் என்றும் விசாரிக்க வேண்டும்.

இதையெல்லாம் வைத்து பார்க்கிற நேரம் , ஹிஷாலினி வாழ்விலே பல நெருக்குவாரங்கள் இருந்தேயுள்ளது.

அவர் மனதளவிலே பாதிப்பான ஒருவராகவே இருந்தும் இருப்பார்.

மனம் பாதிப்பாகி Depression லே இருப்போரே தற்கொலை முயற்சிகளையும் செய்வதுண்டு.
இதுவே ஹிஷாலினிக்கும் நடந்துள்ளது.அவர் விடயத்திலே சரியான விசாரனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவளின் அம்மா இரண்டாம் தடவை திருமணம் செய்த காலத்திலே இருந்து , இவள் கொழும்புக்கு வந்தது , பணி புரிந்தது , என்று நீண்ட விசாரணை தேவை.

கடைசி ஏழு மாதங்களை வைத்து மட்டும் விசாரணைகள் நடைப்பெறுவதானது , அரசியல் நோக்கமுடையது மட்டுமல்லாது , பல உண்மைகள் புதைந்து போகவும் வழி வகுக்கும்.

இங்கே ஊடகங்களும் , சமூக ஊடகங்களும் மாத்திரம் நீதிபதிகளாகாது , உண்மையான நீதி நிலைநாட்டப்படல் வேண்டும்.

மனோ கணேசன் , ராதா கிருஷ்ணன் , வேலுக்குமார் போன்றோர் அவர்களின் அரசியல் இயலாமையை ரிசாத் மூலம் நிமிர்த்த முயலக்கூடாது.
இழந்த செல்வாக்கை தூக்கி நிறுத்த ரிசாத்தை பகடையாக்க முடியாது. ஹிஷாலினி போல மலையக பெண்கள் பலர் கொழும்பிலே வேலைகளில் உள்ளனர். முடிந்தால் அவர்களுக்கும் வழி செய்ய வேண்டும்.

இறுதியாக , ஹிஷாலினியை ரிசாத் வீட்டிலே சேர்த்தவர் தரகர் கிடையாது.

ஏற்கனவே ஐந்து வருடங்கள் ரிசாத் வீட்டிலே பணியாற்றிய ஒரு பெண்ணின் தந்தையே , ஹிஷாலினியை அங்கு சேர்த்து விட்டுள்ளார்.

அப்படியானால் , ஏற்கனவே அந்த பெண் எப்படி ஐந்து வருடங்களை அங்கு நல்ல விதமாய் பூர்த்தி செய்தார் என்றும் யோசிக்க வேண்டுமே ?

தனது மகள் ரிசாத் வீட்டிலே , நல்ல விதமாய் ஐந்து வருடங்களை கழித்தமையினால் தானே , அந்த தந்தை இன்னொரு பெண்ணான ஹிஷாலினியை சேர்த்திருக்கிறார்.

இதையெல்லாம் நாம் யோசிக்க வேண்டும்.

அவரும் கூட , ஹிஷாலினி எப்படியான கட்டத்திலே இருந்த நேரம் , அவரை ரிஷாத் வீட்டிலே சேர்த்தார் என்றும் விசாரிக்கப்பட வேண்டும்.

நம்மை பொறுத்தளவிலே ஹிஷாலினி விடயத்திலே ஆரம்பம் முதல் கடைசி வரையும் விசாரனை தேவை.

மாறாக , கடைசி கட்டங்களை மாத்திரம் வைத்து , அரசியல் நாடகமாடுவதையும் , வெவ்வேறு விடயங்களையும் கிரியேட் செய்வதையும் கண்டிக்கிறோம்.

ஏற்கனவே , சிங்களவர்களிடம் ரிசாத்தை காட்டி செல்வாக்கை அதிகரித்த இந்த அரசு , ஒன்றாகவுள்ள சிறுப்பான்மை மக்களையும்  சிதறடிக்கிறதா என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டும்.

உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாது சிந்திப்போமாக


No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...