"ஊடக (அ)தர்மம்!" Suthan Nada

தமிழ் ஊடகங்கள் மக்களுக்கு ஒருதரப்பான அரசியல் கட்சிக் கருத்துக்களையே திணிக்க முயல்கின்றன என்பதை இன்றைய சூழலில் வரும் பத்திரிகைகளைப் படிப்பவர்கள் இன்னும் தெளிவாக உணர்வார்கள்
.

இலங்கையில் இனப்பிரச்சினை என்று எதுவும் இல்லை என்றும், தமிழ் மக்களுக்கு 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வைக் கூட வழங்க முடியாது என்ற கருத்தையுமே இப்போதும் கொண்டிருக்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை ஒரு கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்திப் போற்றியிருந்தன நேற்றைய பத்திரிகைகள்.
யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் நஞ்சாக காரணமாக இருந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்ததற்காகவே, சிங்கள அமைச்சர்களையும் பாராட்டி எழுதலாம் என்று இணக்க அரசி யலைக் கொண்டாடுகின்றன தமிழ்ப் பத்திரிகைகளும்.

“யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையப் பிரதிநிதிகள் அமைச்சர் சம்பிக்கவுக்கு இந்தப் பிரச்சி னையை எடுத்துக் கூறினர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், உடனடியாக துரித நடவடிக்கையை மேற்கொண்டார்” என ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சார்ந்த அமைச்சரையும் பாராட்டும் இணக்க மனப்பக்குவத்தைத் திடீரென்று அடைந்திருக்கின்றன யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்.
மக்களுக்கு நல்லது செய்தால் அந்த அமைச்சரை ஊடகங்கள் பாராட்டுவது சாதாரணமானது தான். அதைக் குறைசொல்ல ஒன்றுமில்லை. ஆனால் நடுநிலைப்பண்புக்கு முனையும் ஊட கங்கள், ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும் அந்த அமைச்சர்கள் நல்லது செய்தால் பாராட்டுவதாகவும், தவறானதைச் செய் தால் சுட்டிக்காட்டுவதாகவும்தான் இருக்கும் இருக்க வேண்டும்
.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதற்கு முந்திய ஆட்சியிலும் இதே மின்சக்தி எரிசக்தி அமைச்சராகத்தான் இருந்தார். அதாவது யாழ்ப்பாணம் கிளிநொச்சிக்கெல்லாம் மின்சாரத் திட்டங்கள் பெருமளவுக்கு வந்து வடக்கு மக்கள் பெரும்பயனடைந்த போதெல்லாம் இதே அமைச்சுப் பொறுப்பில் இருந்தவர்தான்.

இவரை மட்டுமல்ல, அந்த ஆட்சியில் நடந்த நல்ல விஷயங்கள் எதற்கும் அதற்குப் பொறுப்பான அமைச்சர்களை தமிழ் ஊடகங்கள் பாராட்டி எழுதியதில்லை. அவை அற்ப சலுகை கள் என்றும் அந்த அற்பங்கள் தமிழ் மக்களுக்கு வேண்டிய தில்லை என்றும் கூறும் ஒரு கட்சி நிலைப்பாட்டையே இங்குள்ள ஊடகங்கள் எழுதின.

இத்தகைய சிறு சிறு பிரச்சினைகள் தீர்வது தமிழ் மக்க ளுக்கு முக்கியமில்லை| இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வகை சொல்லாமல் இருப்பவர்களை தமிழ்மக்கள் எதிரிகளாகத் தான் பார்க்க வேண்டும் என்றுதான் இந்த ஊடகங்கள் சொல்லின. அமைச்சர் சம்பிக்கவும் அவ்வாறுதான் வசைபாடப்பட்டு வந்தார்.

இப்போதும், தமிழ் மக்களுக்குத் தனியாகத் தீர்வெதுவும் தேவையில்லை என்ற அதே நிலைப்பாட்டில் இருக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை அவர் எடுத்த ஒரு நடவடிக்கைக்கா கப் புகழலாம் என்று தோன்றுவது எப்படி? இது ஒரு கட்சிசார் மனநிலையில் இருந்துதானே வரமுடியும்?
அவரது இனவாதக் கொள்கையை ஒரு ஆட்சியில் கண்டு கொள்வதும் இன்னொரு ஆட்சியில் கண்டுகொள்ளாமல் விடுவதும் ஊடகங்களுக்குரிய பொதுவான பார்வையாக இருக்க முடியுமா?

அந்தக் கட்சியில் இருக்கும்போது ஒருவரைத் திட்டுவதும் இந்தக் கட்சிக்கு வந்ததும் அதே நபரைப் புகழ்வதும் அந்தந்தக் கட்சி சார்ந்தவர்களின் இயல்பாக இருக்கலாம். ஊடகங்களும் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமா?


  • Polikainews Visinthan இதுதான் ஊடக அதர்மம் இன்றுள்ள ஊடகவியலாகள் பணத்திற்காக அரசியல் வாதிகளுக்கு பின்புலத்திலிருந்து திரிவுபடுத்தி எழுதுகின்றனர்
   மூலம்  : திரு.சுதன் நடாவின்  முகப் புத்தகத்தில் இருந்து இருந்து 

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...