தமிழ் மக்களிடையே மாற்றம் நிகழ்வது எப்போது?-வானவில் தை 2015




08.01.2015 இல் இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில்
மைத்திரிபால சிறிசேனா வெற்றியீட்டியுள்ளார். இவர்
இலங்கையின் பிரதான ஆளுங்கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா
சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர். ஆனால்
நடந்து முடிந்த தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணியின்
வேட்பாளர்ää சிறீலங்கா சுதந்திரக்கட்சித் தலைவர் மகிந்த
ராஜபக்சவிற்கு எதிராக பொது வேட்பாளராக அதிரடியாக
இவர் நிறுத்தப்பட்டார். இவரது திடீர் வேட்பாளர் நியமனம்



எதிர்க்கட்சிகளின் பொதுத்தெரிவு என்று கூறப்பட்டபோதிலும்
ஐக்கிய தேசியக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிகா
குமாரதுங்க மற்றும் இன்னோரன்ன உள்நாட்டு வெளிநாட்டு
சக்திகளே வேட்பாளர் தெரிவின் பின்னணியில் இருந்தனர்.
முள்ளிவாய்க்கலில் புலிகளுடான யுத்தத்தை முடிவுக்கு
கொண்டுவந்த மகிந்த தலைமையிலான பொதுசன ஐக்கிய
முன்னணி அரசை கவிழ்க்க வேண்டுமென்பதில் கடந்த 5
வருடங்களாக உள்நாட்டு வெளிநாட்டு தமிழர்களில்
பெரும்பான்மையானவர்கள் மிகவும் வெறிப்பிடித்து
அலைந்தனர். இதற்கு தீனி போடுவது மாதிரியாக தமது
நலன்களை மறைமுகமாக பின்னிறுத்தி புலிகளுடான
யுத்தத்தின்போது போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் யுத்தத்தின் பின்னர் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும்
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் மகிந்த அரசு மீது குற்றம்
சாட்டின. அத்துடன் ஐ.நா. மனித உரிமை சபையில்
இலங்கை அரசுக்கெதிராக அமெரிக்கா தீர்மானங்களை
கொண்டுவந்து நிறைவேற்றியது.



இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கை மிகவும் கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ளதாக
காலங்காலமாக சொல்லப்பட்டு வருகின்ற போதிலும்ää அதனது
உள்ளடக்கம் இலங்கையின் ஆளும் வர்க்கத்தினருக்கும்
பெரும் இராணுவ பொருளாதார வலிமை கொண்ட பிராந்திய
உலக வல்லரசுளுக்கும் புரிந்த ஒன்றாகவே இருக்கின்றது.
அதாவது இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தினை தமது
கைக்குள் போடத் துடிக்கும் வல்லரசுகளின் முயற்சிகளை
இலங்கை மக்களில் பெரும்பாலனவர்கள் உணர்ந்தவர்களாக
இல்லையென்பதே இதன் அர்த்தம். தற்போது இலங்கையில்
ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அந்நிய
சக்திகள் இருக்கின்றன என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்ற
போதிலும் இதனை பகிரங்கமாக சொல்லாமல் எல்லா
தரப்பினருமே அடக்கி வாசிக்கின்றனர். ஆட்சி மாற்றத்தை
ஏற்படுத்துவதற்காக ஐ.தேக. தலைவர் ரணில் விக்கிரமசிங்
அமெரிக்கா சென்று படித்துவிட்டு வந்ததும் ஜனாதிபதி
தேர்தலிற்கு முன்னைய தினம் அமெரிக்க வெளியுறவு
அமைச்சர் ஜோன் கெர்ரி மகிந்த ராஜபக்சவுடன்
தொலைபேசியில் கதைத்ததும் சகல ஊடகங்களிலும்
வெளியான செய்திகளே. ஆனால் எந்த ஊடகமும் ரணிலுக்கு
கிடைத்த அறிவுறுத்தல்கள் என்ன ஜோன் கெர்ரி மகிந்தவிற்கு
போட்ட உத்தரவுகள் என்ன என்பது அலசியாராயவில்லை.



இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் அந்நியர்கள்
தீர்மானகரமான பங்கை வகித்தார்கள் என்ற உண்மைகள்
ஒருபுறமிருக்க மகிந்தாவை தோற்கடித்தது தாமே என பல
உள்@ர் சக்திகள் அப்பாவித்தனமாக போட்டிபோட்டு
கூறிக்கொண்டு இருக்கிறார்கள். மகிந்தா 4 இலட்சத்து 49
ஆயிரம் வாக்குகளால் தோல்வியுற்றமைக்கு காரணம் ஜாதிக
ஹெல உறுமய சிங்களவர்களது வாக்குகளால்தான் என்றும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் வாக்குகளால்தான்
என்றும் முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லீம்களின்
வாக்குகளால்தான் என்றும் அறிக்கைகள்விட்டு வருகின்றன.
இலங்கையில் காலத்துக்காலம் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து
கொண்டுதான் இருக்கின்றன. சிறிசேனா ஆட்சியும் ஒருநாள்
கவிழத்தான் போகின்றது. இதனால்தான் மாற்றமென்பது மாற்ற
முடியாதது என்று கூறுவார்கள்.
ஆனால் 66 வருட காலமாக
இலங்கை தமிழர் அரசியலில் மாற்றம் எதுவும் நிகழவில்லை.
எப்போதுமே குறுந்தேசியவாதிகளே பாராளுமன்ற பாதையிலும்
சரி ஆயதப்போராட்டத்திலும் சரிää தமிழரை வழி நடத்தி
வந்தனர் வருகின்றனர். எந்த விதிகளுக்கும் அடங்காத இந்த
தமிழரின் தலை விதியையெண்ணி நொந்து வேகுவதைத்தவிர
வேறென்ன செய்ய முடியும்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...