பண்டாரநாயக்க தம்பதிகளின் அரசியலும் அவர்களது பிள்ளைகளின் அரசியலும்-புனிதன்

இலங்கை மக்களைப் பொறுத்தவரையில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.
பண்டாரநாயக்க அவர்களின் பெயர் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. அதேபோல சிறீலங்கா சுதந்திரக்கட்சியினரைப் பொறுத்தவரையிலும் கூட அவர் நாமம் மறக்க முடியாத ஒன்று. அதற்கான காரணங்கள் பல என்ற போதிலும் முக்கியமான காரணங்கள் இரண்டு எனலாம்.

ஓன்று அவர் ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தபோதும்ää அக்கட்சி பின்பற்றிய ஏகாதிபத்திய சார்புக் கொள்கைக்கு எதிராக
தேசப்பற்றுள்ளவராக இருந்தார்.

அதன்காரணமாக சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கமான ஐ.தே.கவின் டி.எஸ்.சேனநாயக்க அமைச்சரவையில் தான் வகித்து வந்த சுகாதார அமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு இலங்கை மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை 1951இல்
நிறுவினார்.

கூட்டும் அதைத்தான் செய்கிறது) பொய்ப்பிரச்சாரங்களைச் செய்து பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால்
பின்னர் 17 வருடங்களாக ஐ.தே.க எப்படி நாட்டைச்சீரழித்தது என்பதை
விவரிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

1977 வெற்றி பெற்ற இரண்டாவது அவரது கட்சி மிகக்குறுகிய காலத்தில்
அதாவது 1956 பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அவரது அரசியல் பயணத்தைத் தொடரவிடாது
பிற்போக்கு சக்திகள் அவரை 1959 செப்ரெம்பரில் சுட்டுப் படுகொலை செய்தன. இருந்த போதும் குறுகிய காலமான  வருடங்களில் பண்டாரநாயக்க நாட்டை கணிசமான அளவு ஏகாதிபத்தியப் பிடியிலிருந்தும் நிலப்பிரபுத்துவப் பிடியிலிருந்தும் விடுவிக்கும் நடவடி

அதேபோல அவரது மரணத்துக்குப் பின்னர் கட்சியினதும் நாட்டினதும்
பொறுப்பை ஏற்ற அவரது மனைவி சிறீமாவோ அம்மையாரும் நடந்து
கொண்டார். சிறீமாவோ ஒரு பெண்ணாக இருந்ததுடன் தனது
கணவர் பண்டாரநாயக்க போன்று இங்கிலாந்து சென்று கல்வி கற்றவராக இல்லாதபோதும் துணிகரமாக கட்சியினதும் நாட்டினதும் தலைமைப்
பொறுப்பை ஏற்று உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.
அதைவிட முக்கியமானது வெறுமனே பதவி ஆசைக்காக அவர் நாட்டின் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டவராக இல்லாது தனது
கணவர் ஆரம்பித்து வைத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு
நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பணியை துணிகரமாகவும் இடைவெளி இன்றியும் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். அதனால்தான் பிற்போக்கு சக்திகள் 1962இல் ஒரு இராணுவச் சதியின் மூலம் அவரது அரசைக் கவிழ்க்க
முயன்றனர். ஆனால் தோற்றுப் போயினர்.

ஆனால் பிற்போக்கு சக்திகள் தொடர்ந்தும் முயன்று 1964இல் அவரது அரசு கொண்டு வந்த லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தைத் தேசியமயமாக்கும் மசோதாவில் அவரது அரசைத் தோற்கடித்து வெற்றி பெற்று விட்டனர்.
இருப்பினும் அவர் அரசியலை விட்டு ஒதுங்காது பிற்போக்கு சக்திகளுக்குத்

தலைமைதாங்கிய ஐ.தே.கவுக்கு எதிரான போராட்டத்தைச் சளைக்காது முன்னெடுத்துச் சென்றார். அதன்காரணமாக 1970இல் மூன்றில் இரண்டு
பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார்.
1970இல் அவர் ஆட்சிக்கு வந்த வேளையில் சர்வதேச ரீதியாக எண்ணெய் மற்றும் உணவு பொருட்களில் ஏற்பட்ட விலையுயர்வும் தட்டுப்பாடும்
அவரது அரசைக் கடுமையாகப் பாதித்து மக்களிடமிருந்து அவரது அரசைத்
தனிமைப்படுத்தியது. அந்த நிலைமையை நன்கு பயன்படுத்திய ஐ.தே.க
(இன்று மைத்திரி - ரணில் - சந்திரிகா   கூட்டும் அதைத்தான் செய்கிறது)ää பொய்ப் பிரச்சாரங்களைச் செய்து ய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைக்
கைப்பற்றியது. ஆனால் பின்னர் 17 வருடங்களாக ஐ.தே.க எப்படி நாட்டைச்
சீரழித்தது என்பதை விவரிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

1977 வெற்றி பெற்ற ஐ.தே.கவுக்குத்தலைமைதாங்கிய கேடுகெட்ட ஏகாதிபத்திய பாதந்தாங்கியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனää தனது
அரசுக்கு எவ்விதமான எதிர்;ப்பையும் இல்லாமல் செய்வதற்காகவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஒழித்துக் கட்டுவதற்காகவும் சிறீமாவோ
பண்டாரநாயக்க தனது அரசுடன் இணைந்தால் அவருக்கு வெளிநாட்டமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை காட்டிப் பார்த்தார். ஜே.ஆர். என்ற
அரசியல் குள்ளநரியின் சூழ்ச்சியில் சிறீமாவோ சிக்கவில்லை. அதன் பின்னரே ஜே.ஆர். தனது தந்திரத்தை மாற்றிக் கொண்டுää சிறீமாவோ
மீது கொண்ட கோபத்தால் அவரது குடியியல் உரிமையைப் பறித்து அதன் மூலம் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறித்தார்.
இருந்தும் சிறீமாவோவை அரசியலில் இருந்து ஜே.ஆரால் ஒழித்துக்கட்ட முடியவில்லை.

அவர் மீண்டும் முன்னையை விட அதிக பலத்துடன் அரசியலில் எழுச்சி பெற்றது வரலாறு. இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகிறது.
பண்டாரநாயக்கவும் சரி வருக்குப் பின்னர் அவரது மனைவி சிறீமாவோவும் சரி என்ன நெருக்கடிகள் வந்தபோதும் தமது ஏகாதிபத்திய எதிர்ப்பையோ அல்லது ஏகாதிபத்திய அடிவருடிக் கட்சியான ஐ.தே.கவுக்கான எதிர்ப்பையோ ஒருபோதும் கைவிடவில்லை.

ஆனால் அவர்களது பிள்ளைகளின் அரசியல் வரலாறோ அவர்கள் வகுத்த
அரசியல் பாதையிலிருந்து தலைகீழாகச் சென்று முடிந்திருக்கிறது.
சிறீமாவோவுக்குப் பின்னர் பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் வாரிசாக வர வேண்டிய அவரது மகன் அனுர பண்டாரநாயக்க தனது தந்தையினதும் தாயினதும் பரம அரசியல் வைரியான ஐ.தே.கவில் சேர்ந்து தமது குடும்ப அரசியல் கௌரவத்தை மட்டுமின்றி தனது வாழ்வையும் அழித்துக்
கொண்டார். அவரது தவறான போக்கே தாயார் சிறீமாவோவின்
மரணத்துக்கு காரணமாக அமைந்தது என்ற அபிப்பிராயமும் அரசியல் வட்டாரங்களில் உண்டு.

(2000 ஆண்டுப் பொதுத்தேர்தலில் அனுர ஐ.தே.கவில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டார். இது சிறீமாவோவுக்கு ஒரு தர்மசங்கடமான நிலையைத்
தோற்றுவித்தது. அவர் ஐ.தே.கவுக்கு எதிரி என்றாலும் மகன் அக்கட்சியில்
போட்டியிடுவதால்ää மகனில் அமோக பற்றுதல் கொண்ட அவர் மகனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். எனவே தான் செய்யக்கூடாத வேலையைச் செய்ய வேண்டியää அதாவது ஐ.தே.கவின் யானைச்
சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தனது மனச்சாட்சிக்கு எதிராக வாக்களித்ததாலோ என்னவோ அவர் தனது தொகுதியான
அத்தனைகலவுக்குச் சென்று வாக்களித்துவிட்டு திரும்பி வரும்
வழியில் அவர் உயிர் பிரிந்துவிட்டது)

அனுர சென்ற பாதையிலேயே இப்பொழுது பண்டாரநாயக்க தம்பதிகளின் மகளான சந்திரிகாவும் செல்லத் தொடங்கியுள்ளார். தனது காலஞ்சென்ற கணவர் விஜயகுமாரதுங்கவுடன் சேர்ந்து சிறீலங்கா மக்கள் கட்சி என்ற
ஒரு கட்சியை ஆரம்பித்த சந்திரிகாவை அவரது கணவரை ஜே.வி.பியினர் சுட்டுப் படுகொலை செய்த பின்னர் தாயார் சிறீமாவோ திரும்பவும் சிறீலங்கா
சுதந்திரக் கட்சிக்குக் கொண்டு வந்து நாட்டின் ஜனாதிபதி என்ற உயர் பதவியையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால் அதையெல்லாம் மறந்த
சந்திரிகா இன்று தனது குடும்ப வாரிசுகளுக்கு அரசியல் அந்தஸ்து பெற்றுக்
கொடுப்பதற்காக தமது குடும்பத்தின் அரசியல் எதிரியான ஐ.தே.கவுடன் சந்தர்ப்பவாத ரீதியில் கரம் கோர்த்துள்ளார். பண்டாரநாயக்கவும் அவரது மனைவி சிறீமாவோவும் தொடக்கி வைத்த ஏகாதிபத்திய எதிர்ப்புää ஐ.தே.க எதிர்ப்பு என்ற அரசியல் மரபை எப்பொழுது அவர்களுடைய பிள்ளைகள் கைவிட்டார்களோஅப்பொழுதே அவர்கள் பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் வாரிசுகள் என்ற தகுதியையும் இழந்துவிட்டார்கள். எனவே
சந்திரிகாவின் தற்போதைய சந்தர்ப்பவாத அரசியல் பயணம் தொடர்ந்து செல்லுமா என்பது சந்தேகத்துக்கு உரிய ஒன்றாகவே இருக்கின்றது.


வானவில்ää தை 2015
11
https://manikkural.files.wordpress.com/2015/01/vaanavil-47-48-49_2015.pdf

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...