ஜனாதிபதி தேர்தலில் ஜூரிமார் குழுவின் தீர்ப்பு உள்ளது. அது எப்படி நடைபெற்
றுள்ளது
என்பதை தமிழர் எதிர்ப்பு அல்லது சிங்கள இனவாதி என்று விபரிக்க முடியாத ஒரு
சுவாராஸ்யமான வட்டாரத்தின் கூற்று கீழே தரப்பட்டுள்ளது. திரு.எரிக்
சொல்கைம் சொல்வதை கேளுங்கள்:

“;;;;…..ஸ்ரீலங்காவின்
அனைத்து சிறுபான்மையினரின் மாபெரும் ஆதரவின் காரணமாக தேர்தல் வெற்றி
சாத்தியமாகி உள்ளது. 160 தேர்தல் தொகுதிகளில் 90 தொகுதிகளை திரு.ராஜபக்ஸ
வென்றுள்ளார் மற்றும் சிங்கள ஆதிக்கம் நிறைந்துள்ள கிட்டத்தட்ட அனைத்து
மாவட்டங்களிலும் அவர் முன்னிலை பெற்றுள்ளார். திரு.ராஜபக்ஸ சிங்கள
வாக்குகளில் தோராயமாக 55 சதவிகிதத்தை வென்றுள்ளார். இது சிறிசேன வென்றுள்ள
சுமார் 80 விகிதமான தமிழ் வாக்குகள் மற்றும் பெரும் பகுதி முஸ்லிம்
வாக்குகளினால் ஈடு செய்யப்பட்டுள்ளது. இது திருப்பிச் செலுத்தும் சமயமாக
உள்ளது……” (தெரியாத தேவதையால் வழங்க முடியுமா? எரிக் சொல்கைம், த ஹிந்து,
ஜனவரி15,2015)
எனவே
மகிந்த ராஜபக்ஸ சந்தேகமில்லாமல் நாட்டின் பெரும்பான்மை மக்களின்
பெரும்பான்மையை வென்றிருக்கிறார்: மொத்த 70 விகிதத்தில் 55 விகிதம்.
ஆனாலும் அவர் தோற்று விட்டார். வெற்றி பெற்றவர் பெரும்பான்மையினரின்
பெரும்பான்மையை பெறத் தவறிவிட்டார். ஆனாலும் அவர் வென்றுவிட்டார். பெரிய
அளவுக்கு இந்த ஒத்திசைவற்ற கட்டமைப்பு, வழங்கப்பட்ட ஆணையை ஒரு கோளாறு போலவே
தோற்றமளிப்பதாகவே உணர்த்துகிறது.
தாராண்மை
மற்றும் மிதவாத தமிழ் தேசியவாதியான திரு.எம்.ஏ.சுமந்திரன் சண்டே லீடர்
பத்திரிகையில் அதை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
“
இந்த தேர்தல் தெரிவிப்பது, மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியானது
எண்ணிக்கையில் சிறுபான்மையினராகக் கணிக்கப்படும் மக்களாலேயே
உறுதிப்படுத்தப் பட்டுள்ளது, எனவே அவர்களின் வாக்குப் பலமானது பெரும்பான்மை
சமூகத்தினரது வாக்குப் பலத்துக்கு சமமாக உள்ளது.”
இது ஒரு பெரிய விவாதத்தின் மையமாகும் அதை அவர் பின்வருமாறு தெரிவிக்கிறார்:
“
அடிப்படையில் எண்ணிக்கையில் சிறிதாக உள்ள சமூகங்களுக்கும்கூட அதிகாரத்தை
அணுகுவதற்கான வழி சமமானதாக இருக்க வேண்டும். அதுதான் பேரினவாதத்தின்
பிரச்சினை முழுவதும் என்றாகிறது. இந்த தேர்தல் மைத்திரிபால சிறிசேனவின்
வெற்றி எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள மக்களினால் உறுதிப்படுத்தப்
பட்டுள்ளதை காண்பிக்கிறது அதனால் அவர்களின் வாக்குகளின் பலம் பெரும்பான்மை
சமூகத்தின் வாக்குப் பலத்துக்கு சமமாக உள்ளது. நாங்கள் எதிர்பார்ப்பது
என்னவென்றால் மக்கள் சமத்துவமாக சம பிரஜைகளாக நடத்தப்பட வேண்டும் என்பதே
அதன் கருத்து தனிப்பட்ட நபர்கள் என்ற வகையில் இல்லாமல் சமூகங்கள் என்ற
வகையிலும் கூட ஆனால் கூட்டாக வௌ;வேறு சமூகங்களிலும் கூட முடிவு எடுக்கும்
நடவடிக்கைகள் மற்றும் அரச அதிகாரங்களில் மக்களுக்கு சமமான வழிகள் வழங்கப்பட
வேண்டும். மற்றும் நாங்கள் எதிர்பார்ப்பது இந்த தேர்தலில் இந்தக்
குறிக்கப்பட்ட நிகழ்வு, இந்த சமூகங்கள் பிளவுபட்ட வாக்குகள்
வழங்கியிருந்தால் வித்தியாசமான அணுகுமுறைக்கு வழி வகுத்திருக்கும் மற்றும்
அதிகாரத்தில் உள்ள அரசாங்கம், இது ஒரு ஓரியல்பான சமூகம் அல்ல ஆனால்
வித்தியாசமான மக்களை கொண்டுள்ளது என்பதை உணர வேண்டும். வித்தியாசமான மக்கள்
என்கிற வகையில் நாம் ஒருமித்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.” (‘ஒருவரை
ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அனைவரும்
வழங்கியுள்ளோம்’ சண்டே லீடர் ஜனவரி 11 , 2015)
திரு.
சுமந்திரன் சொல்லுவது மிகவும் எளிமையான வாதம். தமிழர் போராட்டம் என்பது
பிரஜைகள் என்கிற வகையில் சம உரிமைகளுக்காக அல்ல – அவரது விரிவான
மறுதலிப்பின் மூலம் ஏதோ ஒன்று ஏற்கனவே அணுகப்பட்டுள்ளது என்பதை அவர்
மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார். அது வேறு ஒன்றுக்காக. அது பெரும்பான்மை
மற்றும் சிறுபான்மையினரின் அரசியல் சமத்துவத்துக்காக. ஒரு ஜனநாயகத்தில் இது
எப்படி சாத்தியமாகும் என்பதை ஒருவர் புரிந்து கொள்ளத் தவறியுள்ளார்.
எனினும் திரு.சுமந்திரன் வெறுமனவே வெளிப்படையானதை தெரிவிக்கவில்லை என்று
சொல்லப்படுகிறது. ஆனால் பாரம்பரிய தமிழ் தேசியம் மற்றும் அதன்
சுதந்திரத்துக்கு முந்தைய கூற்றான ஐம்பதுக்கு ஐம்பது – அது
டி.எஸ்.சேனநாயக்காவால் நிராகரிக்கப்பட்டது – பெயரளவில் கூட்டான
சிறுபான்மையினர் பெரும்பான்மையினருக்கு சமமான அரசியல் பலம் அல்லது அரச
அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதையே அவர் சுட்டிக் காட்டுகிறார்.
திடுக்கிட
வைக்கும் வகையில் தெளிவு படுத்துவது என்னவென்றால் இந்த 2015 ஜனாதிபதி
தேர்தலின் முடிவை சிறுபான்மையினரே தீர்மானித்துள்ளார்கள் என்பதே.
பெரும்பான்மையினரின் பெரும்பான்மை அரசியல் பலத்தை காலாவதியாக்கி
உள்ளார்கள்.
பின்னர்,
தேர்தலுக்குப் பின்னான தேர்தல் வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள தேர்தல்
முடிவுகள் உள்நாட்டு பூகோள அரசியல் மற்றும் பூகோள மூலோபாய பரிமாணங்களின்
படியே உள்ளன. இது 1987ல் மருதானையில் குண்டு வெடிப்பு நடத்தி ஏராளமான
பொதுமக்களிக் மரணத்துக்கு காரணமான ஈரோஸ் எனும் பயங்கரவாத அமைப்பு
பிரசுரித்திருந்த நண்டின் காலைப் போன்ற தமிழீழ வரைபடத்தை எனக்கு நிச்சயமாக
நினைவு படுத்தியது. அந்த வரைபடம் இன ரீதியிலான தமிழ் தேசியத்தை மட்டும்
அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை ஆனால் தமிழ் பேசும் மக்கள் என்கிற வகையில்
அது வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள், மற்றும் இந்திய
வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் என அனைவரையும் தழுவி இருந்தது.
மற்றொரு
சிறிய ஆச்சரியமாக தமிழ் நாட்டிலுள்ள வேலுப்பிள்ளை பிரபாகரனின் தீவிர
ஆதரவாளரும் நண்பருமான ஒருவர் 2015 ஜனவரி 9ம் நாள் தனது வாழ்விலேயே மிகவும்
மகிழ்ச்சியான நாள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“இன்றைய
நாள் எனது வாழ்விலேயே மிகவும் மகிழ்ச்சியான நாள் மற்றும் ஒவ்வொரு தமிழ்
குடும்பமும் மகிந்த ராஜபக்ஸவின் வீழ்ச்சியை கொண்டாடுகின்றன,” என்று
மறுமலர்ச்சி திராவிடக் கழக செயலாளர் வைகோ வெள்ளியன்று தஞ்சாவூரில் வைத்து
இதை தெரிவித்தார்… திரு.வைகோ தெரிவித்தது, திரு.ராஜபக்ஸ ஸ்ரீலங்கா
வாக்காளர்களால் தூக்கி எறியப்பட்டுள்ளார், தமிழர் பெரும்பான்மையாக வாழும்
வடக்கு கிழக்கிலுள்ளவர்கள் மிகப் பெரும்பான்மையாக அவருக்கு எதிராக
வாக்களித்துள்ளார்கள்….” (எனது வாழ்விலே மகிழ்ச்சியான நாள்: ஸ்ரீலங்காவின்
தேர்தல் தீர்ப்பு பற்றி வைகோ, எல்.ரங்கநாதன், த ஹிந்து, ஜனவரி 9, 2015)
இப்போது
தேசிய அடையாளம் பெரும்பாலான பகுதிகளில் வரலாற்று ரீதியாகத் தீhக்கப்பட்டு
வரும் ஒரு முதல் உலக சமூகத்தில் இவை யாவும் ஒரு பிரச்சினையே இல்லை.
அளவுக்கு அதிகம் சமநிலையற்ற விதத்தில் முன்னேறிவரும் ஆசியா, ஆபிரிக்கா
மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற முன்னாள் காலனித்துவ சமூகங்களில்
அப்படியில்லை, அவை யாவும் இன்னமும் மேற்கின் மேலாதிக்க அழுத்தத்தின் கீழேயே
உள்ளன. இலட்சிய ரீதியில் ஸ்ரீலங்காவிலும் அது ஒரு பிரச்சினையாக இல்லை,
ஆனால் அங்கு ஒரு தேய்மானம் உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு என்பன மகிந்த
ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களித்துள்ளன, ஆனால் நாளைக்கே “உங்கள் தெரிவு
ஜனாதிபதி சிறிசேனவுக்கா அல்லது தனியான தமிழ் ஈழத்துக்கா?” என்கிற கேள்வியை
முன்வைத்து ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தினால் வாக்குகள் எப்படி
மாற்றமடையும் என்பதை ஒருவராலும் நிச்சயமாகக் கூறமுடியாது. ( உண்மையாகச்
சொல்வதானால் அது எப்படி மாற்றமடையும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல
முடியும்). ஆகவே ஜனாதிபதி சிறிசேனவின் வெற்றி வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள
பெரும்பான்மையாரால் அதுவும் பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களால்தான்
தீர்மானிக்கப் பட்டது என்பது ஒரு பிரச்சினை இல்லை, அல்லது பழிவாங்கும்
வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவை தவிர்த்து மகிந்த ராஜாக்ஸவுக்கு எதிராக
பயன்படுத்தப்பட்டன, ஏனெனில் அந்த பிரதேசங்கள் அநேகமாக இருபொருள் கொண்ட
சிதைந்து போன தனி மனித அரசியல் அடையாளத்தைக் கொண்டவை – அவர்கள் ஒற்றையான,
கலைக்கமுடியாத, பிரிக்கப்படாத, ஐக்கிய அரசியல் சமூகத்தை சேர்ந்தவர்களா
அல்லது இல்லையா என்பது யாருக்கும் தெரியாது.
தேர்தல்
முடிவுகளைக் குறிக்கும் வரைபடம் ஈரோசின் தமிழ் ஈழ வரைபடத்தை ஒத்திருப்பது
மட்டுமன்றி மிகவும் சுவராஸ்யமான வகையில் பேராசிரியர் சாமுவெல்
பி.ஹட்டிங்ட்டன் தனது “நாகரிகத்துக்கான மோதல் மற்றும் உலக வரிசையை
மீளமைத்தல்” எனும் நூலில் வழங்கியுள்ள யோசனையை ஒத்ததாகவும் உள்ளது. அவருடைய
மிகப் பெரும் ஆய்வறிக்கையில் பனிப் போருக்குப் பின்னான உலகம்
சித்தாந்தங்களால் அல்லது தேசிய நலன்களால் மட்டும் இயக்கப்படவில்லை ஆனால்
பல்வேறு கலாச்சாரத் தொகுதிகளின் மோதல்களினால் வழி நடத்தப்படுகிறது என்று
கூறி அவற்றை வகைப்படுத்தியும் உள்ளார். இந்தப் பகுதி நன்கு அறியப்பட்டது
ஆனால் அறியப்படாதவை என்று அவருடைய கூட்டு ஆய்வறிக்கையான கலாச்சார தவறுகளின்
வரிசைகள் என்பதில் இத்தகைய மோதல்கள் பல்வேறு கலாச்சார வலயங்கள் அல்லது
அமைப்புகளில்தான் இடம் பெறுகின்றன என்றும் அவருடைய கருத்தை கூறியுள்ளார்.
அவர்
ஸ்ரீலங்காவைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் என்பது உள்ளுர் வாசகர்களில்
மத்தியில் குறைந்த அளவே அறியப்பட்டுள்ளது. அவர், ஸ்ரீலங்காவில்; இந்திய
இந்து கலாச்சார வலயம் அல்லது அதன் செல்வாக்குப் பெற்ற கோளம் மற்றும் பௌத்த
கலாச்சாரம் அல்லது அதன் செல்வாக்குப் பெற்ற கோளம் என்பனவற்றிற்கு இடையே
உள்ள மோதல் அதன் தவறுகளின் வரிசையிலே நடைபெறுகிறது எனச் சொல்லியுள்ளார்.
ஸ்ரீலங்காவின்
தேர்தல் முடிவுகள் பற்றிய வரைபடம், ஜனாதிபதி சிறிசேன வெற்றி பெற்றுள்ள
பிரதேசங்கள் மற்றும் வெளியேறிச் செல்லும் ஜனாதிபதி ராஜபக்ஸ வென்றுள்ள
இடங்கள் என்பன இந்திய இந்து கலாச்சார செல்வாக்குள்ள கோளத்தையும் (வடக்கு
மற்றும் கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு நகரத்தின் ஒரு பகுதி என்பன)
மற்றும் தீவில் பௌத்த கலாச்சார கோளத்தையும் மிக அழகாக ஒத்துள்ளன.
1958
மற்றும் 1970 ல் லெபனான் தொடங்கி, 60 களின் பிற்பகுதியில் மலேசியாவில்
வெளிப்பட்டதுடன் மற்றும் தற்சமயம் அரபு சமூகங்களை பீடித்து வரும் சன்னி -
ஷியா சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை கலவை வரை , ஆட்சிகளிடையே உள்ள
அதிகார அடித்தளத்தில் ஊடுருவியுள்ள சமச்சீரற்ற தன்மையை மேலும் சிக்கலாக்கி
உள்ளது அத்தகைய சமச்சீரற்ற உள்நாட்டு பூகோள அரசியல் பாணி, மற்றும் எல்லை
தாண்டிய இடைமுகவாக்கம் மற்றும் பலவீனமான மத்திய அரசு கட்டமைப்புகளின்
மையவிலக்கு இயக்கவியல் என்பனவே, இவைதான் இத்தகைய முனைவாக்கம் ஏற்படக்
காரணம் என்பதை நிரூபிக்க மலையளவு உயரத்துக்கு ஆதாரங்கள் உள்ளன. நிறைவேற்று
ஜனாதிபதி முறையை ஒழித்தல் அல்லது கடுமையான தண்டித்தலை மேற்கொள்வதுடன்
ஏற்கனவே பாதி வழிவரை வந்துள்ள அரசியல் மீள்கலவையின் கலிடியாஸ்கோப்
நடவடிக்கை வாயிலாக இந்தக் காரணிகளின் குவிதல் ஸ்ரீலங்கா அரசியலின் வடக்கு –
தெற்கு மற்றும் உள்ளக – வெளியக அச்சானது சமரசத்துக்கு இடமில்லாத விரோதப்
போக்குடைய முரண்பாடுகளின் ஒரு பண்பாக மாற்றமடையும், ஒரு முன்னாள்
மாவோயிஸ்ட் ஆன ஜனாதிபதி சிறிசேன இதைச் சரியான வழியில் கையாள்வதற்கு அவருடைய
மாவோயிஸ்ட் சித்தாந்தத்தின் பழைய அறிவு நிச்சயம் தேவைப்படும்.
சிறிமாவோ
அம்மையாரின் குடியியல் உரிமைகளை வெறுமே பறித்தது, 1980 களில் அமைப்பை
ஸ்திரமாக்கவோ அல்லது நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவோ உதவி
செய்யவில்லை, மற்றும் உண்மையில் இதனால் இனம் மற்றும் கருத்தியல் ஆகிய
இரண்டும் முரண்பாடுகளின் மேலதிக அமைப்பு வரிசைக்கு உயர்த்தப்பட்டன, மகிந்த
ராஜபக்ஸவை அபத்தமான திடீர் புரட்சி முயற்சியுடன் தொடர்பு படுத்தும் எந்த
தீமையான செயலும் புதி;ய நிருவாகத்திற்கு கிடைத்துள்ள ஆணையின்
பற்றாக்குறைக்கு பாலம் போட முடியாது. எப்படியிருந்தாலும்; இப்போது
தேர்ந்தெடுக்கப்படாமல் அலரி மாளிகையில் குடியேறியுள்ள ஐதேக
அரசாங்கத்துக்கு, அதனுடன் கூட்டு சேர்ந்துள்ள ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற
உறுப்பினர்கள், ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உருமய என்பன அடிப்படையில் ஒரு
பாதுகாப்பு கவசம் போல சுற்றி நிற்கின்றன, அத்தகைய தொலைநோக்கற்ற ஒரு
நடவடிக்கையை ஸ்திரமற்ற முறையான கட்டமைப்பு வளங்களுடன் மட்டுமே சேர்க்கலாம்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்மூலம் : http://www.thenee.com/html/190114.html
No comments:
Post a Comment