ராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார் – ரவி சுந்தரலிங்கம், ASATiC ஸ்தாபகர்

ஜனாதிபதி வேட்பாளர்களில் ராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார் – ரவி சுந்தரலிங்கம், ASATiC ஸ்தாபகர்
ஜனாதிபதி வேட்பாளர்களில் ராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார் – ரவி சுந்தரலிங்கம், ASATiC ஸ்தாபகர் கட்டுரைகள், சோதிலிங்கம் ரி, நேர்காணல் | JANUARY 5, 2015 8:15 PM ravi asaticஜனாதிபதி வேட்பாளர்களில் மஹிந்த ராஜபக்ச மட்டுமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் குறைநதபட்சமாவது பேசியுள்ளார் என ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும் Academy of Science and Arts for Tamils in Ceylon – ASATiC அமைப்பின் ஸ்தாபகருமான ரவி சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளாhர்.

ஜனவரி 3 2015இல் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நேர்காணலில் ரவி சுந்தரலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க எடுத்த முடிவை வன்மையாகக் கண்டித்த ரவி சுந்தரலிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் சொத்தாக இருக்கின்ற போர்க்குற்றங்களை; போர்க் குற்றவாளிகளுக்கு அரசியல் அந்தஸ்தை வழங்கி, தமிழ் மக்களின் அரசியல் சொத்துக்களை அழிப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் அவரை போர்க்குற்றத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றி இருந்தது. அந்த தைரியத்தில் தான் சரத் பொன்சேகா எந்த உயிர் இழப்பும் இல்லாமல் தாங்கள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக யாழ் மண்ணில் வைத்துத் தெரிவித்துள்ளார் என்றும் ரவி சுந்தரலிங்கம் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார். மைத்திரிபாலா சிறிசேனவோடு ஒப்பிடுகையில் மஹிந்த ராஜபக்ச உண்மையைப் பேசுவதாகக் குறிப்பிட்ட ரவி சுந்தரலிங்கம், யாழில் ராஜபச தெரிந்த பிசாசான தனக்கே வாக்களிக்க கேட்டள்ளார் என்பதைச் சுட்டிககாட்டினார். ரவி சுந்தரலிங்கம், இது அவர் உண்மையை உணரத் தலைப்பட்டு இருப்பதையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார். 13வது திருத்தச் சட்டம் பற்றிக் குறிப்பிட்ட ரவி சுந்தரலிங்கம், மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கின்ற சிங்ஹெள உறுமயவின் சம்பிக்க ரணவக்க, தான் மஹிந்த ராஜபக்சவுடன் இருந்து வெளியேறியமைக்குக் காரணம் அவர் 13வது திருத்தச் சட்டத்தை நீக்க முன்வராதது தான் என்று கூறியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார். இது மைத்திரிபால சிறிசேன அணி தமிழ் மக்களுக்கு உள்ள குறைந்தபட்ச உரிமையையும் இல்லாமற் செய்கின்ற நிலைக்கு செல்லாம் என்பதையே காட்டுவதாகத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா, எல்ரிரிஈ, சர்வதேசம் அனைவருமே யுத்தக் குற்றவாளிகள் எனத் தெரிவித்த ரவி சுந்தரலிங்கம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களை அடிமையாக வைத்திருக்கின்ற மஹிந்த ராஜபக்சவுக்கா? அல்லது எங்களை சர்வதேசத்திற்கு pimp – மாமா வேலைக்கு பயன்படுத்துகின்ற மைத்திரிக்கா வாக்களிக்க வேண்டும் என்று கேட்டால் அடிமையாக இருப்பதற்கே புள்ளடியிடுவேன் எனத் தெரிவித்தார்.
மூலம்: http://thesamnet.co.uk/?p=62317

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...