தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு = பாலன் ( வானவில் தை 2015)




கடந்த 5 வருடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு தடவைகள் தமிழ்
மக்களின் நலன்களை ஒட்டுமொத்தமாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பேரினவாத அணிக்கு தாரைவார்த்து தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது.

2009இல் புலிகள் ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டப்பட்ட பின்னர் 2010இல்
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய
பங்கு வகித்தவரும் வடக்கில் இராணுவத்துக்கென உயர் பாதுகாப்பு
வலயங்களை உருவாக்கிய சூத்திரதாரியும் தமிழர்கள் இலங்கையில்
வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகலாமே தவிர உரிமைக் கோரிக்கை
எதனையும் எழுப்பக்கூடாது என ஆணவத்துடன் கனடிய ஊடகம்
ஒன்றுக்குப் பேட்டியளித்தவருமான முன்னாள் இராணுவத் தளபதி சரத்
பொன்சேகவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பகிரங்கமாக
ஆதரவளித்தனர்.


இந்த ஆதரவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவ்விதமான
நியாயத்தையும் கற்பித்துவிட முடியாது.ஏனெனில் சரத் பொன்சேக மனம்
திருந்தி தமிழர்க்கு உரிமைகளைவழங்கலாம் என அந்தத் தேர்தலில்
வாக்குறுதி எதனையும் கொடுத்துவிடவில்லை. குறைந்தபட்சம்
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி கொடுத்தது
போல  நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையை நீக்குவேன்
என்று தன்னும் சொல்லவில்லை. (தற்போதைய ஜனாதிபதி வாக்குறுதி
அளித்தபடி அதை நீக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும்)

இவ்வளவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிவிட்ட புலிகள் தோல்வியடைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றையும் சரத்
பொன்சேக மீது நடாத்தியிருந்தனர்.தற்பொழுது மீண்டுமொரு முறை
ஐ.தே.க. தலைமையிலான பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால
சிறிசேனவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில்
ஆதரித்து அவரை பெற்றி பெறவும் வைத்துள்ளனர்.


இந்த முறையும் தேர்தலுக்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன தமிழர்
பிரச்சினையைத் தீர்ப்பதாக எவ்விதவாக்குறுதியையும் தமிழ் தேசியக்
கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கவில்லை. அதுமாத்திரமின்றி முன்னைய
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தமிழ் கூட்டமைப்பு விடாப்பிடியாக
வலியுறுத்தி வந்த வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்
என்ற கோரிக்கையைப் பொறுத்தவரையிலும் கூட அவர் வாக்குறுதி எதனையும் கூட்டமைப்புக்கு வழங்கவில்லை.பதிலுக்கு தான் பதவிக்கு வந்தால் வடக்கிலிருந்து இராணுவத்தை எக்காரணம் கொண்டும்
அகற்றமாட்டேன் என சிறிசேன தேர்தலுக்கு முன்னர் உறுதிபடக்
கூறியிருந்தார்.

அதுமாத்திரமின்றி ராஜபக்ச அரசாங்கம் புலிகளுடனான இறுதிப்போர் நடைபெற்ற வேளையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை
இனப்படுகொலை செய்ததாக தமிழ் கூட்டமைப்பு தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகிறது. அப்படிப் பார்த்தால் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கும் வரை 10 வருடங்களாக ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும்ää சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராகவும் றுதிப் போரின் போது
வெளிநாட்டுக்குச் சென்றிருந்த ராஜபக்சவுக்குப் பதிலாக இரு வாரங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் செயலாற்றிய மைத்திபால சிறிசேனவும் ஒரு
போர்க்குற்றவாளிதான் எனவே போர்க்குற்றவாளி என ராஜபக்சவை எதிர்த்துக் கொணடு சரத் பொன்சேக மைத்திரிபால சிறிசேன என்ற மற்றைய இரு போர்க்
குற்றவாளிகளைத்தான் இரு தடவைகளிலும் ஜனாதிபதித் தேர்தலில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதமான மனச்சங்கடமும் மனச்சாட்சியும்ää பயமும் வெட்கமும் இல்லாமல் ஆதரித்துத் தன்னை நம்பி வாக்களிக்கும் தமிழ் மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய புலிகள் (அதன் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன்) 2005 ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு
வேட்பாளருக்கும் ஆதரவளிக் மறுத்ததைக் கூட கூட்டமைப்பினர்
கணக்கில் எடுக்கவில்லை. (பிரபாகரன் தொலைந்துவிட்டார் இனி அவர்
வருவதாவது எம்மைத் தண்டிப்பதாவது என்ற துணிச்சல்தான்
காரணமோ என்னவோ?) தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருப்பித்திருப்பி ஒரு குற்றத்தைச் செய்து வருவதை தற்செயலான அரசியல் தவறு என்றோ இது அவர்கள் தெரியாத்தனமாகச் செய்த முதல் தவறு என்றோ ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில் தமிழர்களின் முதல் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரஸ் கட்சி முதல் பின்னர் வந்ததமிழரசுக் கட்சிää அடுத்து வந்த
தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போதைய தமிழ் தேசியக்
கூட்டமைப்பு என அன்றிலிருந்து இன்றுவரை ஒருபக்கத்தில் தமிழர்
உரிமை பற்றிப் பேசிக்கொண்டுமறுபக்கத்தில் சிங்களப் பேரினவாத
ஐ.தே.கவுடன் கூடிக்குலாவிய வரலாறு தமிழ் தலைமைகளுக்கு உண்டு.(அந்த
வரலாற்றை இன்னொரு கட்டுரையில் விரிவாக ஆராய்வோம்).


ஐ.தே.கவுடன் தமிழ் தலைமைகளின் இந்தக் கூடிக்குலாவல் தற்செயலான
ஒன்றல்ல. அதன் அடிப்படையாக இருப்பது இன வேறுபாடுகளைக் கடந்த வர்க்க ஐக்கியம். அதாவது சிங்கள பெரு முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐ.தே.கவுக்கும் தமிழ் முதலாளித்துவப்
பிற்போக்கு சக்திகளைப் பிரதிநிதித்துவம் தமிழ் தலைமைகளுக்கும் (இன்று அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு) இடையிலான வர்க்க நலன் சார்ந்த
அரசியல் ஐக்கியமாகும்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இன்னொரு
முதலாளித்துவக் கட்சியாக இருந்த போதிலும் அக்கட்சியுடன் தமிழ்
முதலாளித்துவத் தலைமைகள் ஒருபோதும் அரசியல் கூட்டு
வைத்ததில்லை. அதற்குக் காரணம் சிறீலங்கா சுதந்திரக் கட்சி
ஏகாதிபத்தியத்தை எதிர்க்கின்ற தேசபக்தியுள்ள தேசிய முதலாளிகளைப்
பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சி என்றபடியால் ஏகாதிபத்திய சார்பான
தமிழ்த் தலைமைகளால் அதனுடன் ஒருபோதும் கூட்டுச்சேர முடியாது.
தம்மை ஒத்த ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.கவுடன்தான் அவர்களால்
கூட்டுச்சேர முடியும்.

அதனால்தான்ä ஒரு மேதினத்தின் போது தமிழ் தேசியக்  கூட்டமைப்புதொழிலாள வர்க்கத்தின் பரமவைரியான ஐ.தே.கவுடன்
யாழ்ப்பாணத்தில் கூட்டாக மேதினம் கொண்டாடியதுடன் கூட்டமைப்பின்
தலைவர் இ.சம்பந்தன் வெட்கம் மானம் ரோசம் ஏதுமின்றி ஐ.தே.க.
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இலங்கையின் தேசியக் கொடியான
சிங்கக் கொடியையும் கூட்டாகத் தூக்கிப் பிடித்தார்.

இந்த மாதிரியெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எவ்வித
பயமுமின்றித் துரோகம் செய்வதற்குக் காரணம்‘தமிழ் மக்கள் ஒரு மந்தைக்
கூட்டம் நாம் என்ன சொன்னாலும் மறுப்பேதும் இன்றித் தலையாட்டுவார்கள்

என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையின் எண்ணம்தான்.
இனிமேலாவது தமிழ் மக்கள் தமக்கு வெளியில் உள்ள புற எதிரிகளைத்
தேடுவதற்கு முன்னர்ää தமக்குள்ளேயே ஒளிந்து நின்றுகொண்டு கழுத்தறுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற துரோகத்தனமான எதிரிகளை இனம் கண்டு களை எடுக்க வேண்டும். அதைச் செய்யாத வரை இன்னுமொரு நூறு வருடங்கள் போனாலும் தமிழ் மக்கள்
விமோசனம் பெற முடியாது.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...