
( திருமணதோஷத்தால் பீடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும்)
பொதுவாக ஒரு வயதுவந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு தோசத்தினார் பீடிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டு சாத்திர சம்பிரதாயப்படி தோஷநிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.
2006 நடுப்பகுதியில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணதோசமும் ஏற்பட்டது. தமது கட்டாய ஆள் சேர்ப்புக்கு ஏதுவாக 2006 ஜூன் மாத்ததின் பின்னர் நிகழ்ந்த திருமணங்களை சட்ட விரோதமானவை எனகூறி தடைசெய்ததுடன், ஆண்களின் திருமணவயது 40 ஆகவும், பெண்களின் திருமணவயது 35 ஆகவும் உயர்த்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும் உண்மையில் 2006ன் பின் கிளிநொச்ச்சி முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, வவுனியா வடக்கு மக்களுக்கு திருமணம் என்பது இலகுவாக நடக்ககூடிய ஒன்றாக இல்லை. இச்சட்டம் தற்காலிகமானது என புலிகள் கூறினாலும் அது மிக இறுக்கமாக கடைபிடிக்கப்பட்டதனால் திருமணம் செய்ய விரும்பியோருக்கான திருமணதோஷமாக அது இருந்த்தது. 35 வயதை எட்டிய பெண்களும், 40 வயதை தொட்டுவிட்ட ஆண்களும் கூட திருமணம் செய்துகொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கினர்.
திருமணம் செய்ய வேண்டும் என்றால் தோஷ நிவர்த்தியாக அவர்கள் தமிழீழ் அடையாள அட்டை அல்லது போர் பயிற்சி எடுத்ததற்கான சான்றிதல் அல்லது போராளி, மாவீர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் எனநிரூபிப்பதற்கான ஆதாரம்,அல்லது எல்லை படையை சேர்ந்தவர் என்பதற்காக சான்று, அல்லது முன்னாள் போராளி என்பதற்கான ஆதாரம் இவற்றில ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
எனினும் ஆரம்மத்தில போராளி, மாவீரர் குடும்பங்களை சேர்ந்த இளம்வயதினருக்கும் , முன்னாள் போராளிகளுக்கும் திருமணம் செய்துகொள்வதில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளிலில் விலக்களிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிலநாட்களுக்குள்ளாகவே அவையும் நீக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன.
தமிழீழ அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கோ அல்லது திருமணம் செய்துகொள்வதற்கோ புலிகளின் போர்பயிற்சியை பெற்றுக்கொள்ள வேண்டிருந்தது. காலப்போக்கில் இந்த போக்கு கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் நீட்டிக்கப்பட்டது.
ஒரு மனிதனின் அடிப்படை பிறப்பு உரிமையான தனது இனத்தை பெருக்கும் இனப்பெருக்க செயற்பாடுகள்கூட கிளிநொச்சி முல்லைத்தீவில் வாழ்ந்த மக்களுக்கு மறுக்கப்பட்டு அவர்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் முற்றாக பறித்துவிட்டு மறுபுறத்தில் தமிழ்மக்களின் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் அவர்களின் ஏகபிரதிநிதிகள்தாங்கள் போராடிக்கொண்டிருப்பதாக புலிகள் உலகிற்கு கூறினர்.
No comments:
Post a Comment