(Students who met the death angels )
( மரண தூதர்களை நேரில் சந்தித்த மாணவர்கள்)
2006ற்குப் பின்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்வி கற்ற மாணவர்கள் அனைவரும் தற்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சியை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். பயிற்சிக்காலம் இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களாக இருந்ததது. அவ்வாறு பயிற்சிக்காக செல்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அல்லது நிரந்தரமாக புலிகள் அமைப்பில் சேர்ந்துகொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். தொடக்கத்தில் மாவீரர் குடும்பங்கங்களை சேர்ந்தவர்களுக்கும், போராளிக்குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் விலக்களிக்கப்பட்டிருந்தது.ஆனால் சில காலங்களுக்குள்ளாகவே அவர்களும் நிர்பந்தங்களுக்கு ஆளாகினர். பலர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையே நிறுத்தியிருந்தனர். இளம் ஆண்களும் பெண்களும் வெளியே தலைகாட்டுவதே அரிதாகியிருந்தது. அவர்கள் வெளியே வந்தால் கடத்தி செல்லப்படுவதற்கான ஆபாத்தான சூழ்நிலையே காணப்பட்டது. சில பெற்றோர்கள் வெளியே செல்வதையோ அல்லது வேலைகளுக்கு போவதையோ கைவிட்டு வீடுகளிலேயே பிள்ளைகளுடன் தங்கி தங்கள் பிள்ளைகள் பிடித்து செல்லப்படுவதை தடுக்கலாம் என எண்ணினர்.
கிளிநொச்சியில் நடந்த ஒரு பரிதாபகரமான சம்பவம் சாதாரன பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனந்தபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 18 மற்றும் 20 வயதுகளை சேர்ந்த சகோதரர்களான இரு இளைஞர்களும் இருந்தனர். பாடசாலையில் வைத்து புலிகளால் பிடித்து செல்லப்படுவதை தவிர்ப்பதற்காக பல மாதங்களாக வீட்டில் மறைந்து இருந்தவர்களே அவர்கள். துரதிஸ்டவசமாக புலிகளின் முக்கிய முகாம் ஒன்றின் அருகே அவர்களின் வீடு இருந்தமையால் விமானத்தாக்குதலில் அவர்களின் குடும்பமே கொல்லப்பட்டது. விமானதாக்குதலில் இருந்து தப்பிக்க வெளியே ஓடினால் புலிகளால் பிடித்து செல்லப்படும் நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றவர்களிடம் எமன் இஸ்ரேலிய தயாரிப்பு கிபிர் தாக்குதல் விமானம் வடிவில் வந்துவிட்டான். ஒரு நொடியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவரும் தசைத்துண்டங்களாக பிய்த்தெறியப்பட்டனர்.
அவர்கள் கல்விகற்ற அந்த பாடசாலை அதிபர் புலிகளால் மாணவர்கள் கடத்திச்செல்லப்பட உதவுகின்றார் என குற்றச்சாட்டப்பட்டிருந்தார். இந்த அதிபர் புலிகளின் அதி உயர்தளபதி ஒருவரின் உறவினராகவும் இருந்ததார். பின்னாட்களில் அரசியலில் பிரவேசித்த அவர் இன்று பிரபலமான அரசியல்வாதியாக இருக்கின்றார்.
புலிகளால் கட்டயமாக பிடித்து செல்லப்பட்டு சில நாட்களில் பயிற்சிகளின் பின் தொழில்முறை இராணுவத்துடன் போரிடுவதற்காக போர்களங்களில் விடப்படுவதை தவிர்ப்பதற்கு கிளிநொச்சி முல்லைதீவில் வாழ்ந்த மக்களுக்கு கிடைத்த ஒரு துருப்புச்சீட்டு திருமணங்கள். கட்டய ஆட்சேர்ப்பை ஜூன் 2006ல் புலிகள் தொடங்கியபோது திருமணம் செய்துகொண்டவர்களை பிடித்துசெல்வதை தவிர்த்திருந்தனர். எனவே இதனை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக்கொள்ள நினைத்த பெற்றோர்கள் தங்கள் இளவயது பிள்ளைகளுக்கு அவசரமாக திருமணம் முடித்துவைத்தனர். திருமண வயதை எட்டாதவர்களுக்கு கூட திருமணங்கள் இரவோடு இரவாக செய்யது வைக்கப்பட்டன. தங்கள் பெண்பிள்ளைகள் கர்ப்பிணியாகிவிட்டால் அவர்களை புலிகள் பிடித்து செல்ல மாட்டார்கள் என்று அவர்கள் நம்பினர். ஆனால் இவர்களின் நம்பிக்கை நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.
சுதாகரித்துக்கொண்ட புலிகள் 2006 ஆகஸ்டில் ஒரு கட்டளையை பிறப்பித்திருந்தனர். அதாவது 2006 ஜூன் மாத்ததின் பின் செய்யப்பட்ட அனைத்து திருமணங்களும் செல்லுபடியற்றவை என்பதாக அந்த அறிவிப்பு இருந்த்தது. அத்துடன் ஆண்களின் திருமண வயது வரம்பு 40 ஆகவும் பெண்களின் திருமணவயதுவரம்பு 35 எனவும் கட்டளை பிறபித்திருந்தனர். அவ்வாறு திருமணம் செய்துகொண்ட இளம் ஆண்களும் பெண்களும் அவர்களின் வீடுகளுக்குள் அத்து மீறி நுழைந்த புலிகளால் பிடித்துச்செல்லப்பட்டனர். சந்தர்ப்பம் கிடைத்தால் 2006 ஜூனுக்கு முன்பு திருமணம் செய்தவர்கள் கூட இரவோடு இரவாக கடத்தி செல்லப்பட்டனர். கருவுற்றிருத இளம் பெண்கள் கருக்களைப்பு செய்ய்ப்பட்டு பயிற்சிக்காக் அனுப்பபட்டுகின்றனர் என பெற்றோர் தமது இயலாமையை கோயில்களில் கடவுளர்களிடம் முறையிட்டுவதை தவிர அவர்களிடம் வேறு தெரிவுகள் இருக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மக்களிடையே மிகுந்த கவலையையும் பதட்டத்தையும் உருவாக்கியது.
இந்த சூழ்நிலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மக்களிடையே மிகுந்த கவலையையும் பதட்டத்தையும் உருவாக்கியது.
(மணக்களுக்கு கிடைத்த திருமண பரிசு )

இரண்டு நாட்களின் பின் மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வந்த புலிகள் மணமக்களை காணாது மிகவும் ஆத்திரமடைந்து மணமகளின் தங்கையையும் மணமகளின் தம்பியையும் பிடித்து சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்தபோன அந்த மணமகன் பெபிரவரி04ல் தற்கொலை செய்துகொண்டார். சரியாக திருமணம் முடித்து 14வது நாள் பாடசாலை ஆசிரியரான அந்த மணமகன் இறந்துபோயிருந்தார்.
பிடித்து செல்லப்பட்ட மணமக்களின் உடன் பிறப்புக்கள் பயிற்சிக்காக அனுப்பபட்டு சில நாட்களில் மணமகனின் தங்கை காயங்களுக்குள்ளாகிவிட்டிருந்தார். மணமகளின் சகோதரன் போரில் கொல்லப்பட்டுவிட்டிருந்தார். தமது மூத்த சகோதரர்களின் திருமணத்தை காண கொழும்பில் இருந்து நடக்கும் விபரீதத்தை அறியாமல் வந்தது இங்கே வாழ்க்கையை இழந்துபோயினர் அந்த மணமக்களின் சகோதரர்கள்.
இந்த துன்பியல் செய்தி புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் காட்டுத்தீ போன்று பரவியது. பொதுமக்கள் மத்தியில் இதற்கு கடும் விசனம் எழுந்தாலும் அதனை வெளிப்படுத்த அவர்கள் அஞ்சினர். இவாறு ஒரு மூடப்பட்ட சூழ்நிலையில் இறுக்கமான நிலைக்குள் மக்கள் தள்ளப்பட்டு இருந்தமை புலிகளுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. அவர்களுக் கட்டாய ஆட்சேர்ப்பை தடையின்றி தொடர்ந்தவாறே இருந்தனர்.
(தொடரும்..)
No comments:
Post a Comment